http://i1065.photobucket.com/albums/...pszgok2aku.jpg
Printable View
இன்று மகிழ்வான நாள். கிட்டத்தட்ட 40 ஆண்டு கால நட்பில் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழுவில் ஒருவரும் எனது நண்பருமான திரு சீனிவாச கோபாலன் அவர்களின் நட்பு முகநூல் நண்பர் மேஜர் தாசன் மூலம் கிட்டியுள்ளது. சீனிவாச கோபாலன் அவர்கள் இன்று மணி விழா காண்கிறார். பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, அவரிடம் நம் மய்யம் திரியைப் பற்றிச் சொல்லியுள்ளேன். அவரையும் இங்கு பங்கு கொள்ள அழைத்துள்ளேன். வருவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மறக்க முடியாத நாட்கள். அஞ்சல் அட்டையில் நடிகர் திலகத்தின் சாதனைகளை வசூல் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட காலம் நெஞ்சை நெகிழ வைக்கும் நினைவுகள். இன்று போல் வசதிகள் இல்லாத கால கட்டத்தில் இருக்கும் காசையெல்லாம் சேமித்து, நண்பர்கள் சேர்ந்து ஏர் மெயில் வாங்கி கடிதங்களை வெளிநாட்டில் வாழும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
அந்த தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க ஆசை. காலம் கனியும் என நம்புகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
All the Best Sanjay