Selva,
IBNlive gave the report on her long ago
http://www.ibnlive.com/news/meet-a-d...n/33518-8.html
:)
Printable View
Selva,
IBNlive gave the report on her long ago
http://www.ibnlive.com/news/meet-a-d...n/33518-8.html
:)
Joe,
TM yesterday in Vasantham Central :) (Had missed it in Sun TV and could only watch half the movie yesterday)
I saw the first half in Sun Tv and second half in Vasantham :PQuote:
Originally Posted by crajkumar_be
Oh ! I might have missed this Joe :) Anyway, nethu paarthappoe shock ah irunthathu. Athaan :)Quote:
Originally Posted by joe
oh! I never noticed :( ,But didn't miss it in Sun TV :DQuote:
Originally Posted by crajkumar_be
விஜய் என்ற விஜயன் - தெய்வ மகன்
இரண்டாவது மகன். அவனது தாயை பொருத்த வரை ஒரே மகன். மிக மிக செல்லமாக வளர்க்கப்பட்ட மகன். பொதுவாகவே செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பணக்கார வீட்டு பையன் போல் இல்லாமல்(ராஜேஷ் இங்கே குறிப்பிட்டது போல்) பயந்த சுபாவம் கொண்ட அம்மா செல்லமாக வளர்ந்த ஒரு மேல்தட்டு பிள்ளை.
கதையை பொறுத்தவரை சங்கர் மற்றும் கண்ணன் பாத்திரங்கள் முக தழும்புடன் காட்சியளிக்க, அதற்கு நேர்மாறாக பால் வடியும் முகத்தோடு அழகாக தோன்றுபவர். இந்த பாத்திரத்தை நடிகர் திலகம் வேறு மாதிரி வித்யாசப்படுத்தியிருப்பார். அதாவது ஒரு பெண்மை கலந்த நளினத்தை இந்த பாத்திரத்தில் நாம் பார்க்கலாம். இதன் Body Language வேறுப்பட்டதாக அமைந்திருக்கும். நகத்தை கடிப்பது, நடையில் ஒரு பெண்மை [தன் ஒரிஜினல் ராஜ நடையில் ஒரு சின்ன மாற்றம் செய்திருப்பார். சாரதா இங்கே சொன்னது போல இடுப்பை வளைத்து ஒரு நடை], ஆங்கிலம் கலந்த பேச்சு தமிழ் என்று விரியும்.
இந்த பாத்திரத்தை பொறுத்தவரை லுக் மட்டுமல்ல, படத்திற்கு தேவையான காதல் மற்றும் இளமை காட்சிகளுக்கும் இவர்தான் பொறுப்பு. கதையின் அடிநாதம் பெற்றோர் - மகன் பாசப்பிணைப்பு. அந்த மெயின் ரூட்டில் வராமல் ஆனால் அந்த கதையோடு பின்னி பிணைந்தவாறே பார்ப்பவர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார். இவரை வைத்துதான் பட கிளைமாக்ஸ் நடக்கும்.
நான் ஏற்கனவே இந்த திரியில் பலமுறை சொன்னது போல், இந்த படம் வெளி வந்த காலக்கட்டத்தில் (1969) நடிகர் திலகத்தின் படங்களும் ஒரு Entertainment Based-ஆக மாறி கொண்டிருந்த காலம். ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கும் இந்த பாத்திரம் பயன்பட்டது.
அவர் அறிமுகமாகும் அந்த தூண்டில் காட்சியிலிருந்து அமர்க்களம் ஆரம்பமாகிவிடும். முதலில் கவனிக்க வைப்பது அந்த பேச்சு. நுனி நாக்கு ஆங்கிலம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு கூட ஆங்கிலத்தையே பயன்படுத்துவார். அவர் எந்த அளவிற்கு கேரக்டர் study செய்வார் என்பதற்கு இந்த ரோல் ஒரு உதாரணம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில காட்சிகளை சொல்லலாம். சாதரணமாக வீட்டில் ஒரு திருடனை பார்த்தவுடன் கூட " Thief!Thief" என்றுதான் சொல்லுவார். நம்பியாரிடம் "ஏன்டா, என்னை threaten பண்ணறே? " என்பது, "Thirsty-யாக இருக்கு. ஐஸ் வாட்டர் கொடுங்கடா" என்பது. அம்மாவிடம் (அப்பா இருப்பது தெரியாமல்) "டாடி ஒரு ஜப்பான் பொம்மை. கீ கொடுத்தால் ஆடும்" என்பது, முதலில் JJ-விடம் நடிக்கும் போது ஒவ்வொரு பொய்யிலும் மாட்டிகொள்வது.
தந்தையிடம் நேருக்கு நேர் நின்று பேச அச்சப்படும் கேரக்டர். வளைந்து நெளிந்து அம்மாவின் பின்னால் ஒளிந்து பேசுவது ரசனையான காட்சி. பிஸினஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்பதில் கூட ஒரு ஸ்டைல் (Just a Lakh and Fifty thousand). ஹோட்டல் என்பதைக்கூட ஹோடேல் என்னும் ஆங்கில பாணி உச்சரிப்பு. ஹோட்டலில் நடந்த திருட்டை சரி செய்வதற்காக அப்பாவிடம் பணம் கேட்க வரும் காட்சி. அதில் உணர்வுகளை எப்படி நிமிட நேரத்தில் மாற்றி காட்டுவார். பணம் கேட்கும்போது தயக்கம், தந்தை கோபப்படும்போது பின் வாங்கும் பயம், பிளாங் செக்கை பார்த்தவுடன் உடன் சந்தோஷம், அதற்கு நன்றியாக ஒரு Flying Kiss என்று கலக்கியிருப்பார். தன் ஹோட்டலில் டப்பாங்குத்து ஆடும் JJ-வை அவர் பார்க்கும் பார்வை, பளார் என்று அறைந்துவிட்டு அறைக்கு கூடிக்கொண்டு போய் சத்தம் போடும்போது ஒரு காதலின் possessiveness வெளிப்படும். அந்த காட்சியில் மட்டுமல்ல JJ பார்க்-இல் கண்ணன் பற்றி பேசும் போது வரும் கோபத்திலும் அது தெரியும், ("எனக்கு முன்னாடியே யாரோ ஒருத்தன் புல் புல் தாரா நல்லா வாசிப்பான்னு சொல்லிட்ருக்கே").
மற்ற இரண்டு கதாபாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நம்மை கலங்க வைப்பார்கள் என்றால் விஜய் நம்மை மயங்க வைப்பார்.
Regards
சாரதா,
முக்கியமான அந்த காட்சியை ஏன் எழுதவில்லை என்று கேட்டீர்கள் அல்லவா? நமது நடிகர் திலகம் திரியில் நான் முதலில் அரங்கேற்றம் செய்ததே அந்த காட்சியை வர்ணித்து எழுதியதுதான். இதோ அதற்கான சுட்டி (2 வருடங்களுக்கு முன்னால் எழுதியது)
http://forumhub.mayyam.com/hub/viewt...=490542#490542
தெய்வ மகன் பாராட்டுக்களை குவித்தோடு மட்டுமல்லாமல் மிக பெரிய வெற்றியும் பெற்றது. (இப்போது சிலருக்கு அஸ்தியில் புளியை கரைக்கும்). 05.09.1069 அன்று வெளியான இந்த படம் பின் வரும் திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்தது.
சென்னை -
சாந்தி
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
திருச்சி - பிரபாத்
இது தவிர சென்னை சாந்தியில் தொடர்ந்து 105 காட்சிகள் ஹௌஸ் புல். (First 35 days all shows full).
படம் 100 நாட்கள் ஓடுவதில் என்ன ஆச்சர்யம் என கேட்கலாம். இந்த படத்திற்கு 28 நாட்கள் முன்னால் (08.08.1969) நிறை குடம் ரிலீஸ். இந்த படத்திற்கு 35 நாட்கள் பின்னால் (10.10.1969) திருடன் ரிலீஸ். 63 நாட்கள் பின்னால் தீபாவளி. அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் சிவந்த மண் ரிலீஸ். இவை அனைத்தையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியதே, அதுதான் சாதனை.
அன்புடன்
PS: ஜோ, ஒரு beauty பார்த்தீர்களா? தெய்வ மகன் எல்லாம் ஒரு படமா என்று கேட்டவர்கள் எல்லாம் அன்று சொல்லியிருப்பதை பார்த்தீர்களா?
Dear Murali Sir,
As usual, your write-up on Vijay is great. Right from his introduction scene, where he calls JJ, " Hello Fish", till the end, NT simply steals your heart as Vijay.
BTW, I really enjoyed your FIRST posting in the thread.
Dear friends,
MSVTIMES.COM and Ragapravaham Sundar jointly present
"VINTAGE VISU"
a Grand Music Show
featuring the stunning melodies of the great legend,
"Mellisai Mannar" Sri M S VISWANATHAN.
on APRIL 12, 2008
at 6 pm
at P S HIGHER SECONDARY SCHOOL AUDITORIUM
R K MUTT ROAD
MYLAPORE
CHENNAI 4
Guest of Honour : " Mellisai Mannar" Sri M S VISWANATHAN.
The songs to be rendered in the programme are all great numbers ringing in your inner-soul always, but not generally ventured on stage !
MSVTIMES and SUNDAR bring them on stage now !
our website takes part in it in a small way (may be I shall be presenting a small momento). All NT fans can attend and honour the legend.
Hope you will not miss the event !
With regards
Raghavendran
www.nadigarthilagam.com
[html:078db8c920]
http://www.hinduonnet.com/thehindu/gallery/sg/sg014.jpg
[/html:078db8c920]
http://www.hinduonnet.com/thehindu/gallery/sg/sg014.htm
:thumbsup:
Sorry if it has been posted already !!