Originally Posted by pammalar
['சிட்டுக்குருவி' பாடல் போல், நாயகி மட்டும் ஸோலோவாகப் பாட, நாயகன் நடிகர் திலகம் பாடாமல், தன் நடிப்பால் மட்டுமே கலக்கும் பாடல்கள் தான் எத்தனை, எத்தனை. அதிலும் தான் எத்தனை விதம், எததனை ரகம். "புதிய பறவை"யிலேயே இன்னும் இரண்டு இருக்கிறதே, 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. ஆண்டவன் கட்டளையின் "அழகே வா, அருகே வா" என்ன, ஊட்டி வரை உறவின் "தேடினேன் வந்தது" என்ன, நவராத்திரியின் "சொல்லவா கதை சொல்லவா" என்ன, ஆலயமணியின் "மானாட்டம் தங்க மயிலாட்டம்" என்ன, பராசக்தியின் "புதுப்பெண்ணின் மனசைத் தொட்டு போறவறே" என்ன, உத்தமபுத்திரனின் "காத்திருப்பான் கமலக்கண்ணன்", "உன்னழகை கன்னியர்கள்" என்ன, கட்டபொம்மனின் "சிங்காரக் கண்ணே" என்ன, பாகப்பிரிவினையின் "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்" என்ன, படிக்காத மேதையின் "படித்ததினால் அறிவு பெற்றோர்" என்ன, என் தம்பியின் "தட்டட்டும் கை தழுவட்டும்" என்ன, உயர்ந்த மனிதனின் "நாளை இந்த வேளை" என்ன, ராமன் எத்தனை ராமனடியின் "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" என்ன, வசந்த மாளிகையின் "கலைமகள் கைப் பொருளே" என்ன, பாசமலரின் "பாட்டொன்று கேட்டேன்", "மயங்குகிறாள் ஒரு மாது" என்ன...................the list is endless.........எக்ஸ்பர்ட் சாரதா இது குறித்து அலசினால் நன்றாக இருக்கும்.]