NEED AN INFO!!!
Any idea if they are planning to perform any where in TEXAS.... CONFUSED IF I HAVE TO PLAN FOR SANJOSE OR WAIT FOR THE TEXAS CONCERT....
I DONT WANT TO MISS THIS OPPORTUNITY....
Printable View
Good suggestion. I have the Grado SR60i ..but the SR80i is probably a better buy for $20 more. But these are open backed and others will be able to hear what you are listening. My main one now is the - Ultimate Ears Triple-fi 10. I have them reshelled .. that is molded to the shape of my ears by an after-market company. I have replaced the detachable cables with silver ones and I listen using the Teclast T-51 mp3 player. Yesterday, I was listening to pazhassi rAja (usually flacs but this was mp3) using my triple-fi ..awesome bass after the reshelling. These must the most melodious kind of music with the most aggressive/loud percussion.
Kiru... yes SR80i is even better. Looks like UE is not an ear canal type phones, right? I do have the older Shure E5C which are in-canal type phones. They were quite awesome in replicating the sound and did provide good sound isolation. I have used them quite a bit during my work related travel. Over the time, I lost interest in them and they are collecting dust at the moment.
From Raja Sir's Official Facebook Page, Pics taken at Canada concert venue
http://sphotos-h.ak.fbcdn.net/hphoto...96663397_n.jpg
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto..._3239349_n.jpg
http://sphotos-b.ak.fbcdn.net/hphoto...70234904_n.jpg
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...47679396_n.jpg
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...58774673_n.jpg
There was a promo for the Canada concert in Vijay TV yesterday made of Idhayaththai Thirudathe title score practice sessions. Lovely it was.
Why still suspense about SPB performing in Toronto or not? they keeping it as suprise for the fans?
Vijay TV Ad for the Concert
http://www.youtube.com/watch?v=Caja7IicSwc
https://www.facebook.com/permalink.p...34639536665363
http://www.twitlonger.com/show/jm2mkq
இளையராஜா : எதிர்பார்ப்பும் எதிர்த்தரப்பும்
(நன்றி: மாமூலன்)
உங்கள் நண்பரை, வட்டத்தை, உற்றாரை விரைலைச் சொடுக்கிக் கேளுங்கள் ’இளையராஜா வாறாராமே?’ நான் இப்படிக் கேட்டவற்றிற்குப் பல பதில்கள்.
பதில் 1: ‘ஓமாம். கண்டிப்பாக போகவேணும்.’
பதில் 2: ‘வாழ்நாளில் கிடைக்காத வாய்ப்பு. நாம் தமிழ்நாட்டுக்கே போனாலும் அவரை நேரில் பார்ப்பதோ, அவரது நிகழ்ச்சியைப் பார்ப்பதோ கிடைக்காது.’
பதில் 3: ‘பிள்ளைகளைக் கண்டிப்பாகக் கூட்டிக்கொண்டு போகவேணும். அதுகள் வளர்ந்தபின் சின்னவயசில நாங்கள் இவரைப் பார்த்திருக்கிறம் என்று பின்னால் நினைத்துப் பெருமைப்படுவார்கள்.’
பதில் 4: ‘வாழ்நாளில் ஒரு சந்தர்ப்பம். நான் கிரெடிட் காட்ல ரிக்கற் எடுக்கிறேன். முன் வரிசையில் இருந்து பாப்பம். வா மச்சான்.- இது நண்பர்.’ (நண்பருக்குத் தெரியாது முன்வரிசை ரிக்கற் எல்லாம் வித்து முடிந்த கதை!)
பதில் 4: ஏலுமெண்டால் ஒரு 100 ரிக்கற் ஒண்டாய் வாங்குங்கள். நாங்கள் ஒரு குழுவாய் சென்று ஒன்றாய் இருந்து பார்ப்போம்.
இந்த இசை நிகழ்ச்சி ரொரன்ரோவுக்கு வந்த பின்னணி ஒன்றும் புதுமையானது அல்ல. தமிழர்கள் யாராவது அமெரிக்காவில் பெருஞ் செலவு செய்து ஓர் நிகழ்ச்சி நடத்தினால் கனடாத் தமிழர்களைத் துணைக்களைப்பார்கள். செலவைப் பங்கிடலாமே என்பதும் வரும் வாயப்பைப் பயன்படுத்தலாமே என்பதும் இதன் நோக்கம். கனடாவுக்கு யாராவது வந்தாலும் இவ்வாறு அமெரிக்காவுக்கு செல்வது வழக்கம்.
இதற்குப் பல உதாரணங்கள் சொல்லாம். ஒவ்வொரு தடவையும் அமெரிக்காவின் ‘ஃபெற்னா’ (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு) நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கனடாவுக்கு வருவார்கள். இது 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதைப்போல கனடாவில் வரும் திரை நட்சத்திரங்கள் முதற்கொண்டு இலக்கியவாதிகள் வரை அமெரிக்காவுக்குச் செல்வார்கள்.
மிக அண்மையில், இந்தக் கிழமை இங்கே ஓர் பெரும் இலக்கிய மாநாட்டுக்கு வந்திருக்கும் திரு. நித்தியானந்தன் (முன்னாள் யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்) அமெரிக்கா சென்று அதன்பின்தான் அங்கிருந்து லண்டன் திரும்புகிறார்.
இதைப்போலவே இளையராஜாவும் வருகிறார். அவர் எப்படி வருகிறார் என்பது இங்கே முக்கியமல்ல. அவர் இங்கே வருவது எவ்வளவு முக்கியம் என்பதுதான் புரிந்துகொள்ளப்படவேண்டியது
உண்மையில் இளையராஜாவை ரொரன்ரோவுக்கு அழைத்துவரும் இந்தத் தமிழர்களை நாம் வாழ்த்தவேண்டும்.
ஆனால் அதைவிட்டுவிட்டுச் சில தமிழ்நாட்டுக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இளையராஜா வரவைத் தடுக்கவேண்டும் என்கிறார்கள். அவரகளுக்குச் சில ரொரன்ரோ வாசிகள் தாளம்போடுகிறார்கள்.
ஏன்?
அது தான் ஆச்சரியக் குறி!
எதிர்க்கத் தொடங்கியது தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சியின் கிளை. அதிலிருந்து நாலே நாலுபேர் போய் எதிர்ப்புக் கொடி பிடிக்கிறார்கள். பின்னர் காரணம் கண்டுபிடிக்கிறார்கள். இது நவம்பர். மாவீரர் மாதமாம். நவம்பர்மாதம் முழுவதும் தமிழர் செத்தவீடு கொண்டாடவேண்டுமாம்.
ஐயா! அம்மா! நானும் ஈழத்தின் தேசிய விடுதலைக்காய் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் மிகவும் மிகவும் மதிப்புடன் நினைவுகூருகிறேன். அவர்களுக்கு ஈடாக யாராகமுடியும். ஆனால் இப்படி இங்கிருப்பவர்களைப்போலப் போலியாய் அல்ல.
இருக்கும் தமிழர்களில் நவம்பர்மாதத்தில் பிறந்தவர்கள் பிறந்தநாள் கொண்டாட மாட்டார்களா? அதுவும் ஏன். எனக்குத் தெரிந்த அந்தக் காலத்தில் புலிகளின் துணைப் பணிகளில் ஓடியாடித்திரிந்த…இன்னும் இங்கே இருக்கின்ற ஒருவரின் குடும்பம் 2009 மார்ச் மாதம் கடைசிக் கிழமையில் ஓர் 60 ஆவது பிறந்தநாளை பெரும் ஆடம்பரத்துடன் கொண்டாடியது. தண்ணி. ஆட்டம்.பாட்டம்.
இங்கே இந்த இளையராஜா எதிர்ப்புக்களில் ஓடித் திரிபவர் ஒருவர் இந்த நிகழ்ச்சிக்கு முழு விளம்பரதாரராகக் கேட்டதாயும்…அது கிடைக்காமல் பிறருக்குப் பங்கிட்ட கோபத்தில் இப்போது எதிர்ப்புக் குழுவுடன் சேரந்திருப்பதாயும் மற்றக் கதை.
இந்த எதிர்ப்பை ஏற்பாடு செய்த சீமான் (நாம் தமிழர் கட்சி) மட்டும் என்ன! வன்னியில் மக்கள் செத்தொழிந்துகொண்டிருக்கும் கடைசி நேரத்தில், உக்கிரமாகப் போர் தொடங்கிய நேரத்தில் அதைக் காசாக்கும் நோக்கத்தில் ‘தம்பி’ என்று ஓர் சக்கைப் படம் எடுத்தார். அதில் நடிப்பதற்குத் தமிழர்களைப் பற்றிச் சற்றேனும் சிந்திக்காத சாம்பார் ஒன்றைக் கதா நாயகநாக்கினார்.
கதாநாயகி யார் தெரியுமா? ஓர் சிங்களப் பெண். சிங்களப் பெண் நடிக்கக்கூடாதா? அல்லது இப்படிச் சொல்வதால் நான் ஓர் இனவாதியாகச் சித்தரிக்கச் சிலருக்கு ஆசை வரலாம். மாவீரர் மாதத்திலேயே எங்கோ இருக்கும் கனடாவில் ஒன்றும் நடக்கக்கூடாது என்னும் உங்களுக்கு ஏன் ஓர் தமிழ்ப்பெண் கிடைக்காமல் போனார் என்று கேட்பதற்காகவே கேட்கிறேன்.
உண்மையில் நடப்பது என்னவென்றால் சீமான் போன்றவர்களின் தரமில்லாத படங்களுக்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிடுகிறார். அதனால் இவர்கள் கொஞ்சம்பேர் சேர்ந்துகொண்டு தமிழநாட்டில் இளையராஜாவை எப்போதும் எதிர்க்கிறார்கள். இவர்கள் அங்கேயிருக்கும் தங்கள் சினிமாப் பிழைப்பைக் கொண்டுவந்து இங்கே இருக்கும் புலம்பெயர் தமிழர் வாயிலும் திணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டுச் சினிமாவில் எதற்கெடுத்தாலும் புலம்பெயர் மக்கள்தான் கண்ணில் படுவார்கள். அவர்கள் பிழைப்பிற்கும் நாம்தான் சண்டைக்கும் நாம்தான் என்று ஆகிவிட்டது.
இந்த இளையராஜாவின் இசையினால்தான் உண்மையில் இன்றும் பலர் மனநிலை பிசகாமல் இருக்கிறார்ககள். புலம்பெயர் உலகத்தில் மாடுபோல உழைக்கும் மனிதர் உறங்குவது இளையராஜாவின் இசையில்தான். ஆறுதலுக்கு மனதை வருடும் இசையைத் தமிழர்களுக்குப் பழக்கி அதை உணர்ந்து உருகிக் கேட்கவைத்த இளையராஜாவை நேரில் காண்பதைத் தமிழர் விரும்புகிறார்கள். அதைத் தங்கள் சுய லாபத்திற்காக எதிர்ப்பவர்களை நாம் என்ன செய்யலாம். இவர்கள் இடியப்பக் கடைநடத்தினால் அதை சாப்பிடாமல் புறக்கணிக்கலாம். ஆனால் இவர்கள் புலம்பெயர் தமிழர் ரத்தத்தில் அல்லவா வணிகம் செய்யப் பழகி இருக்கிறார்கள்!
இதைவிட உள்ளரசியல்களும் நிறைய இருக்கின்றன. அவற்றைத் தேவை வந்தால் அடுத்த வாரம் எழுதுவோம்.
ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறேன்.
மாவீர் நாளைக்கூட ஒரே இடத்தில் ஒன்றாகக் கொண்டாட முடியாத ஒற்றுமையற்று நாமிருக்கிறோம்.
மாவீரர் வாரம்கூட கடைப்பிடிக்கமுடியாமல் கடைசிவரை இரண்டு மூன்று பிரிவாகச் சண்டையிட்டுக் கொள்பவராக நாமிருக்கிறோம்.
மாவீர்மாதம் என்று கிளப்பிவிடும் சுயலாபத்துக்கு வரும் வியாபாரிகளையாவது அடையாளம் கண்டு விலக்கி வைப்போம்.
மற்றுமொன்றையும் சொல்லி வைக்கலாம்.
கனடாவில் இருக்கும் நாம்தமிழர் கட்சியின் நான்கு தொண்டர்களுக்குள்(குண்டர்கள் அல்ல) மோதல். யார் பெயரியவர் என்று சீ மானுக்குக் காட்டுவதில். அதில் போட்டி போட்டுக் கொண்டு இளையராஜாவின் நிகழ்ச்சியைப் பகடைக்காயாக்குகிறார்கள்.
ஆனால் இளையராஜாவோ அந்தக் காலத்திலேயே தமிழருக்கு ஆதரவாக நிதி திரட்டும்போது நிறையவே உதவி செய்திருக்கிறார்.
என்ன செய்வது ரி.ராஜேந்தரை சிறந்த இசையப்பாளராக விரும்பியவர்கள் ஆசிரியர்களாக இருக்கும் இடத்தில் இப்படியும் நடக்கலாம்.
தடைசெய்யவிரும்பினால் இவர்கள் நவம்பர் முதல்வாரம் அய்ரோப்பாவில் நடக்கும் நிதி திரட்டும் இலங்கைப் பாடகர் நிகழ்ச்சியைத் தடுக்கலாம்.
இன்னும் சில நாட்களில் இளையராஜா-ரஹ்மானுக்கு என்று அர்ப்பணிப்பு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது அதைத் தடுக்கலாம்.
அல்லது அமெரிக்காவிலும் அதே காலத்தில் இளையராஜா நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதையாவது தடுங்கப்பா!
ஆனால் பாதி ரிக்கற் இப்போதே விற்றுத் தீர்ந்துவிட்ட, இளையராஜாவின் முகத்தைக் காண மக்கள் துடிக்கும் நிகழ்ச்சியைத் தடுக்க…..
எனது முகப் புத்தக நண்பர் கேட்டது போல, இளையராஜா வருவதனால் என்ன மூன்றாம் உலக யுத்தமா வரப்போகிறது. தமிழ்மக்கள் இசைகேட்டு இன்பாமாய்த்தான் இருக்கப்போகிறார்கள். ஏனப்பா இப்படிப் புழுங்குகிறீர்கள்?
- மாமூலன்