Originally Posted by
mr_karthik
அன்பு பம்மலார் சார்,
வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலையா என்ன..?. 1964-ல் 'கர்ணன்' மகா காவியம் உருவான வரலாற்று ஏடுகளை கொஞ்சமும் எதிர்பாராவண்ணம் கர்ணனின் 101வது நாளன்று வெளியிட்டு திகைக்க வைத்துவிட்டீர்கள். படம் உருவான வரலாறு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது.
படித்தபோது மனதில் தோன்றிய சில ஆதங்கங்கள், சில கேள்விகள், சில ஐயங்கள்....
பேசும்படம் இதழில் இந்த விவரங்கள் வெளிவந்ததை அன்றைய மக்கள் படித்துத்தானே இருப்பார்கள்?. அப்படியிருந்தும், சிறுத்தையை வைத்து வித்தை காட்டியவர் பின்னால் போனார்களே அது ஏன்?.
சென்னை, மதுரை தவிர கோவை, சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, குடந்தையின் அன்றைய ரசிகர்களுக்கு எல்லாம் என்னவாயிற்று, ஏன் இப்படத்தை 100 நாட்களைக் கடந்து ஓடச்செய்யவில்லை?. இதைவிட சாதாரண படங்களையெல்லாம் ஓடச்செய்திருக்கிறார்களே. கர்ணனின் தகுதிக்கு குறைந்த பட்சம் பதினைந்து அரங்குகளிலாவது 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டாமா?.
அப்பன் பாட்டன் பட்ட கடன்களை பிள்ளைகள் தீர்ப்பது போல, தங்கள் அப்பன் பாட்டன் செய்த தவறுக்கு பிள்ளைகள் பிராயச்சித்தம் தேடும் முகமாக இன்றைய இளைய சமுதாயம், அதே கர்ணனை (சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமில்லாத) பெரிய திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓட வைத்து, மறு வெளியீட்டில் யாருக்கும் கிடைக்காத பேரை, பேறை நடிகர்திலகத்துக்கு கிடைக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.
'கர்ணன்' மறு வெளியீட்டின் 100-வது நாள் போஸ்ட்டர்கள் கண்களையும் மனதையும் வருடுகின்றன.