http://www.youtube.com/watch?v=OKjng4PVdwQ
Printable View
பாடகர் திலகம் அவர்களின் மறைவு உலக சினிமா ரசிகர்களுக்கு
மிகப் பெரிய இழப்பு .
பாடகர் திலகத்தின் குரலால் ஒரு சமுதாய புரட்சியே ஏற்பட்டது .
'' மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் ''.
பட்டுகோட்டையார் - கண்ணதாசன் - வாலி அவர்களின் வைர வரிகளுக்கு மக்கள் திலகமும் பாடகர் திலகமும் உயிர் கொடுத்தனர் .
உயிர் கொடுத்த இருவரும் உடலால் மறைந்தாலும் உள்ளத்தால் என்றென்றும் வாழ்வார்கள்
அதே போல் நடிகர் திலகத்தின் எல்லா பாடல்களுக்கும் உயிர் தந்தவர் . .
எம்ஜியார் -சிவாஜி - டி எம் எஸ் மூவரும் மூன்றெழுத்து
மூவேந்தர்கள் .என்றென்றும் இவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் . வாழ்வார்கள் . வாழப்போவார்கள் .
http://www.youtube.com/watch?v=nYvDUJdRjrM
டி.எம்.எஸ். அவர்கள் பாடிய முதல் திரைப்பாடல்
சரித்திர புகழ் பெற்ற '' திண்டுக்கல் ''-
மக்கள் திலகத்தின் அரசியல் பாதையில் ''மகுடம் '' சூட்டிய நகரம் .
2013 - மக்கள் திலகத்தின் புகழுக்கு இன்னுமொரு சாதனை புகழ்
விரைவில் சூட்டப்பட உள்ளது .
விரைவில் ..............
http://i41.tinypic.com/1533cjs.jpg
May TMS soul rest in peace.
மக்கள் திலகம் அவர்களின் ''சந்திரோதயம் ''
http://i43.tinypic.com/sawjh2.jpg
இன்று 26-5-2013
47 வது ஆண்டு நிறைவு விழா .
27-5-1966 அன்று
http://i44.tinypic.com/2yvq4ux.jpg
சென்னை
கெயிட்டி - 89 நாட்கள்
பாரத் - 70 நாட்கள்
மேகலா - 92 நாட்கள்
ஸ்ரீனிவாசா - 70 நாட்கள் .
http://www.youtube.com/watch?v=Bp8kuO1Dq-o
டி.எம்.எஸ். அருமையான பாடகர். அருணகிரி நாதர், பட்டினத்தார் , கல்லும் கனியாகும் போன்ற படங்களில் நடித்துள்ளார். கல்லும் கனியாகும் அவரது சொந்தப் படம். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்று மூன்று துறைகளிலும் வெற்றி கண்ட டி.எம்.எஸ். அவர்கள் கல்லும் கனியாகும் படத்தில் பாடி நடித்த காட்சி இதே உங்களுக்காக.
http://www.youtube.com/watch?v=qDktQua5pOc
டி.எம்.எஸ். என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட டி.எம்.சௌந்தரராஜன் நேற்று மூச்சுத் திணறலால் காலமானார். திரையுலகில் சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் பணியாற்றி பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி தனிப்பெரும் சாதனை படைத்தவர் டி.எம்.எஸ். கிருஷ்ணவிஜயம் படத்தில் ராதே உனக்குக் கோபம் ஆகாதடி என்ற பாடல் மூலம் அறிமுகமாகி 1991 ஆம் ஆண்டு ஞானப்பறவை படத்தில் ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே என்ற பாடல் தனது கடைசி பாடல்வரை தனித்துவமான குரல் வளத்தால் தனி இடம் பிடித்தவர் டி.எம்.எஸ். தனது 91ஆம் வயதில் இயற்கையோடு இரண்டறக் கலந்தாலும் தமிழ் உலகம் உள்ளவரை அவரது குரல் நிலைத்திருக்கும். மலைக்கள்ளன் படத்தில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் தான் மக்கள் திலகத்திற்கு அவர் பாடிய முதல் பாட்டு. மக்கள் திலகத்தின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை நூற்றுக்கணக்கான பாடல்களை மக்கள் திலகத்திற்காக பாடி மக்கள் திலகத்தின் குரலாகவே வாழ்ந்தவர் டி.எம்.எஸ். பின்னால் வெளியான அவசர போலீஸ் 100 படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் அவரது குரலில் வெளிவந்தவையே. இடையில் சில காலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோரின் பாடல்களுக்கும் திறம்பட நடித்து மக்கள் திலகம் அவர்கள் அந்தப் பாடல்களுக்கு உயிரூட்டினார் என்றாலும் டி.எம்.எஸ். அவர்களது குரலில் எம்.ஜி.ஆர் பாடல்கள் வரும் போது அதில் வரும் உற்சாகமே தனி. குறிப்பாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற பாடல் எம்.ஜி.ஆரின் குரலாகவே ஒலிக்கும். கொஞ்சமும் பேதம் தெரியாது. கம்பீரமான வெண்கலக் குரலால் ரசிகர்களை எல்லாம் கட்டிப்போட்ட டி.எம்.செளந்தரராஜன் அவர்களது தாய் மொழி சௌராஷ்டிராவாக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தப் பிழையும் காண முடியாது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம். ஜெயா டிவியில் டி.எம்.எஸ். அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது. அதற்காக மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டத்தில் கூட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதை எதிர்பார்க்கிறோம்.
எனது பார்வையில் மக்கள் திலகம் டி.எம்.எஸ். கூட்டணியில் வந்த டாப் 20 பாடல்கள்
1. அச்சம் என்பது மடமையடா
2. தூங்காதே தம்பி தூங்காதே
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
5. ஒரு தாய் மக்கள் நாமென்போம்
6. தாயில்லாமல் நானில்லை
7. கண் போன போக்கிலே கால் போகலாமா
8. உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
9. நேருக்கு நேராய் வரட்டும்
10. உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
11. ஆண்டவன் உலகத்தின் முதலாளி
12. கனிய கனிய மழலை பேசும் கண்மணி
13. புத்தன் ஏசு காந்தி பிறந்தது
14. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
15. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
16. தரைமேல் பிறக்க வைத்தான்
17. நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
18. நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
19. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை
20. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
பம்மலாரின் இரண்டாவது வெளியீடு மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
Everyone like Jaishankar can give their top song list. It is very difficult to finalize 10 or 20.
I had the opportunity to hear TMS programme for a temple festival in June 1992. People thronged to watch him and his songs. Unforgettable day.
In that programme the most claps came for the song MGR's Naan Aanai Ittal (Enga Veetu Pillai) and for NT it is for Engay nimmathi (Puthiya Paravai) and Yarukkaga (Vasantha Maligai).
Vinod Sir can you tell me the reason why Chandrodayam did not reached 100 days though the movie had a good story, great dialogs and memorable tunes.
MGR and Sarojadevi visit to Srilanka.
http://i125.photobucket.com/albums/p...ps563029c2.jpg
from Ashokumar in facebook.
http://www.youtube.com/watch?v=y2K79...oyugAw&index=2
http://www.youtube.com/watch?v=yK7cw...b57AwzhGoyugAw
THANKS TO MR.KUMAR RAJENDRAN FOR UPLOADING THIS RARE VIDEO. I REQUEST HIM TO POST THE SAME VIDEO WITH ORIGINAL AUDIO
20 பாடல்களை வரிசை படுத்துவது கடினம். இருந்தாலும்:
01. என்னும் எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
02. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
03. நான் அனைஇட்டல் அது நடந்து விட்டால்
04. சிரித்து வழ வேண்டும்
05. மனுஷனை மனுஷன்
06. உன்னை அறிந்தால்
07. கண்ணை நம்பாதே
08. உழைக்கும் கரங்களே
09. தூங்காதே தம்பி தூங்காதே
10. தாயில்லாமல் நானில்லை
11. பட்டது ராஜாவும்
12. தாயகத்தின் சுததிரமே எங்கள் கொள்கை
13. தட்டுங்கள் திரகபடும்
14. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை
15. கண் போன போக்கிலே கால் போகலாமா
16. உன்னை பார்த்து இந்த உலகம் சிரிகிறது
17. அங்கே சிரிபவர்கள் சிரிக்கட்டும்
18. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
19. ஆடலுடன் படலை கேட்டு
20. நான் செத்து பொழைச்சவன் டா
இனிய நண்பர் திரு ரூப்
மக்கள் திலகத்தின் சில படங்கள் 12-14 வாரங்கள் வரை ஓடி 100 நாட்களை எட்ட முடியாமல் அரங்கை விட்டு எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது .அரங்கு ஊழியர்களுக்கு போனஸ் - விநியோகஸ்தர்கள் ஊழியர்களுக்கு போனஸ் . விளம்பர செலவுகள் - விழா செலவுகள் போன்ற பொருளாதார நிலையினை கொண்டு அவ்வாறு செய்தார்கள் .
மேலும் மக்கள் திலகத்தின் படங்கள் 12 வாரங்கள் தமிழகமெங்கும் முதல் வெளியீட்டில் ஏற்படுத்தும் வசூலும் , பின்னர்'' சி '' சென்டரில் ஏற்படுத்தும் வசூலும் - உடனுக்குடன் மறு வெளியீடுகள் தொடர்ந்து வெளியிடுவதாலும் அவரின் படங்கள் தயாரிப்பாளர்கள் .- விநியோகஸ்தர்கள் - அரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரும் லாபத்தை தந்தன .
மக்கள் திலகத்தின் படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாத ஒரு சில படங்கள் பல முறை மறு வெளியீடுகள் மூலம் லாபத்தை கொடுத்துள்ளன .
படம் 100 நாட்கள் ஓடவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கம் கொண்டிருந்தாலும் படத்தின் தரம் - தொடர் ஓட்டம் - வசூல்
மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் எல்லாமே ''வெற்றி '' படங்களே .
எனக்கு பிடித்த டிஎம் எஸ் பாடல்கள் .
வெள்ளி நிலா முற்றத்திலே ......
நல்ல நல்ல நிலம் பார்த்து ......
கடலோரம் வாங்கிய காத்து ...
என் உள்ளம் உந்தன் ஆராதனை ....
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ...
ஒரு பக்கம் பாக்குறா ..........
அச்சம் என்பது மடமையடா
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை..
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி......
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை .
..சொல்லி கொண்டே போகலாம் . பாடகர் திலகம் பாடிய மக்கள் திலகத்தின் எல்லா பாடல்களுமே தேன் அமுதம் .
சமீபத்தில் சில பதிவுகள் நடிகர் திலகத்தின் திரியில் தேவையற்ற சலசலப்பினை ஏற்படுத்தி சிவாஜி-எம்.ஜி.ஆர். ரசிகர்களிடயே வீண் சச்சரவினை ஏற்படுத்துவது போன்று இடப்பட்டு சிறு சலனத்தை உண்டாக்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இருவருமே அமரத்துவம் அடைந்து விட்டவர்கள். தமிழ்த் திரையுலகை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கக் கூடிய சக்தி இவர்கள் இருவரின் திரைப்படங்களுக்கு மட்டுமே உண்டு. அது மட்டுமின்றி இரு தரப்பிலும் இரு திலகங்களையும் மதிப்பவர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி அந்த நல்லெண்ணத்தைத் தங்கள் உழைப்பிலும் காட்டி வருகின்றனர்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாய் இருவரைச் சொல்லலாம். திரு பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தர், தமிழ்த் திரையுலகின் ஆவணத் திலகம் என்று கூறும் அளவிற்கு தமிழ்த் திரையுலக வரலாற்றை அறிந்து வைத்திருப்பவர். எம்.ஜி.ஆர் அவர்களின் நிழற்படங்களின் தொகுப்பாக பம்மலார் வெளியிட்டிருக்கும் மலர் இது வரை இல்லாத புது முயற்சி. அதே போன்று அதற்கு நல்ல வரவேற்பினைத் தாங்கள் அளித்துள்ளீர்கள். தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
இதற்கு சற்றும் குறைவில்லாத, சொல்லப் போனால் சற்று கூடவே, தன் நல்லெண்ணத்தைத் தன் செயலில் காட்டியுள்ளது உரிமைக்குரல் நிறுவனம். சிவாஜி ரசிகர்கள் நிறையப் பேர் பார்த்திராத திரைப்படங்களை நெடுந்தகட்டில் வெளியிட்டு மனதைக் கொள்ளை கொண்டு விட்டது உரிமைக்குரல் நிறுவனம். குறிப்பாக எங்கள் தங்க ராஜா, எந்தக் காலத்திலும் வசூலை வாரிக் குவிக்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். அதனைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது உரிமைக்குரல் நிறுவனம் வெளியிட்ட காணொளி நெடுந்தகடு. அது மட்டுமின்றி முதல் வெளியீட்டில் இருந்ததாய் கருதப் பட்ட சிற்சில குறைகளையும் களைந்து மறு வெளியீட்டில் மிகுந்த தரத்துடன் அப்படத்தின் நெடுந்தகட்டனை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் மனதிலும் அமர்ந்து விட்டது உரிமைக்குரல் நிறுவனம். அது மட்டுமா, தாயே உனக்காக, உலகம் பல விதம், ஸ்ரீ வள்ளி போன்ற அபூர்வமான படங்களையும் வெளியிட்டு இந்தப் படங்களைத் தற்போது பார்க்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது உரிமைக்குரல் நிறுவனம்.
உரிமைக்குரல் நிறுவனத்திற்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும். இது வரை இந்த நெடுந்தகடுகளைப் பற்றி அறிந்திராத சிவாஜி ரசிகர்களுக்காக அவற்றின் முகப்புகள் இங்கே நிழற்படங்களாக.
எங்கள் தங்க ராஜா
http://i872.photobucket.com/albums/a...overs/etr2.jpg
http://i872.photobucket.com/albums/a...rs/etrfrfw.jpg
தாயே உனக்காக மற்றும் உலகம் பல விதம்
http://i872.photobucket.com/albums/a...TUPVCovefw.jpg
ஸ்ரீ வள்ளி
http://i872.photobucket.com/albums/a.../SriValliF.jpg
http://i872.photobucket.com/albums/a.../SriValliR.jpg
நானறிந்து உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் இவை. இவையன்றி வேறு ஏதாவது இருந்தாலும் அதனை நண்பர்கள் யாராவது வைத்திருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சில அபூர்வமான நடிகர் திலகத்தின் படங்களை நாங்கள் மிகவும் ஆவலுடன் காணக் காத்திருக்கிறோம். அவற்றில் ஒரு சிலவற்றின் பட்டியல் இதோ
1. பெற்ற மனம்
2. அவள் யார்
3. நல்ல வீடு
4. கண்கள்
5. மனிதனும் மிருகமும்
6. பூங்கோதை
7. வளர் பிறை
இன்னும் இது போன்று மேலும் உள்ளன. இவற்றையும் உரிமைக்குரல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வெளியிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
உரிமைக்குரல் நிறுவனம், பல அபூர்வமான பழைய படங்களை நெடுந்தகடாக வெளியிட்டு தமிழ்த் திரையுலகிற்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெற உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நாடக திரைப்பட நடிகர் திரு A.R ஸ்ரீனிவாசன் அவர்களுடன் எம்ஜியார் அவர்கள். (Rare photo)
http://kumarsrinivas004.files.wordpr...r-s-m-g-r1.jpg
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
இரு திலகங்களின் புகழையும் இரு ரசிகர்களும் பக்குவமாக பதிவிட்டு வருவது ஒரு நல்ல மாற்றமே . எதிர்காலத்தில் இந்த நிலை தொடரந்தால் பரஸ்பர நட்புறவு
மேலும் வளர்ந்து மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக விளங்கிட வாய்ப்புண்டு .
ஒரு சிலரின் விரும்பத்தகாத பதிவுகள் - நிச்சயம் எல்லா நேரத்திலும் வரும் - போகும் ..அதை பற்றி கவலை பட வேண்டாம் .
இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அபூர்வ படம் .
வாசு சார் மிக்க நன்றி
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
இன்று ஆசிய ஜோதியின் நினைவு நாள்
http://i1318.photobucket.com/albums/...psfc0e8a54.jpg
சந்திரோதயம் திரைப்படம் நூறு நாள் ஓடாவிட்டாலும் மறு வெளியீட்டில் நல்ல ஓட்டம் கண்டது.
திரு மாசனம் சார்
மக்கள் திலகம் நடித்த சந்திரோதயம் படம் மிகவும் வித்தியாசமான படம் .
பத்திரிகை செய்தியாளராக நடித்திருந்தார் .
பத்திரிகை வியாபார நோக்கத்தில் அதன் ஆசிரியர் நேர்மையற்ற முறையில்
நல்ல படத்தை தாக்கியும் பணம் தருபவர்களின் படத்தை தூக்கியும் விமர்சனம்
செய்யும் அநீதியின் செயலை மக்கள் திலகம் தட்டி கேட்கும் காட்சி அருமை .
ஒரு பெண்ணின் திருமணம் நின்று விட்டால் - அதனை தவறான முறையில்
சித்தரிக்கும் ஆசிரியரின் போக்கினையும் மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சி
அருமை.
நல்ல கதை அம்சம்
இனிய பாடல்கள்
என்று எல்லா அம்சங்கள் நிறைந்த படம் '' சந்திரோதயம் ''.
நான் இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் ஐயா அவர்களை பார்க்க 3.9.2006 அன்று அவர் இல்லம் சென்றிருந்தேன். என்னுடன் எனது அன்பு நண்பர் Thiru.Rohinikumar அவர்களும் வந்திருந்தார் அப்பொழுது மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றத்தின் (திருப்பூர்) சார்பாக எனது தலைமையில் அதுவரை செய்த பொது நலப் பணிகளை தொகுத்து (புகைப்படங்கள், பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்) எடுத்து சென்று காண்பித்தேன். அனைத்தையும் பார்வையிட்டு பார்வையாளர் கையெழுத்து என்ற பகுதியில் அவர் கைப்பட எழுதிய பாராட்டு குறிப்பை இங்கு பதிவிட்டுள்ளேன்.அதை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அப்பொழுது அவருக்கு வயது 86. அந்த வயதிலும் அவரின் கையெழுத்து மிக அழகாக உள்ளதை கவனியுங்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://i43.tinypic.com/33cc6py.jpg
இனிய நண்பர் திரு ரவி சார்
பாடகர் திலகம் ''ஆட்டோகிராப் '' மிகவும் அருமை .
அவரின் பாராட்டு உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ''
Thank u Mr.Masanam and Mr.Vinod.
நேற்று பெங்களூர் ''காந்திநகர் '' சட்டமன்ற முன்னாள் அதிமுக உறுப்பினர் திரு முனியப்பா அவர்களின் மகளின் திருமண வரவேற்பு சிறப்பாக நடைப்பெற்றது .
பெங்களூர் மனித தெய்வம் மக்கள் திலகம் எம்ஜியார் மன்ற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
சென்னயிலிருந்து பேராசிரியர் திரு செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு அயாத் - திரு பாபு -திரு ராஜ் [உரிமைக்குரல் ஆசிரியர் ] மற்றும் அனைத்து கட்சி நண்பர்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.
சென்னை திரு சி .எஸ். குமார் [ மூத்த மக்கள் திலகத்தின் ரசிகர் ]
அவர்களின் இனிய 61 வது பிறந்தநாள் பெங்களூரில் அவரது
இல்லத்தில் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது .
மக்கள் திலகத்தின் சென்னை ரசிகர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார் - - திரு அயாத் - திரு பாபு -திரு ராஜ் [உரிமைக்குரல் ஆசிரியர் ] மற்றும் பெங்களூர் நண்பர்களும் வந்திருந்து திரு குமார் அவர்களை வாழ்த்தினார்கள் .
From facebook
ஒரு மாமனிதர் இருந்தார்!
கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
வாழ்க நீ எம்மான்…!
டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
MGR speech in Bharath Award function conducted in Chennai.
https://soundcloud.com/kumar-rajendr...irudhu-vizha-2
Uploaded by Kumar Rajendran.
அபூர்வ நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர்.
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...40367771_n.jpg
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...99750220_n.jpg