திருச்சி ராமகிருஷ்ணா திரையரங்கில் வசந்த மாளிகை வெளியாவது பற்றி சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டோம். படம் சென்ற வெள்ளியன்று வெளியானது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அண்மையில் சினிமாஸ்கோப்-ற்கு மாற்றப்பட்டு வெளியான DTS பிரிண்ட் அல்ல இது. மாறாக 35 mm-ல் முதன் முதலாக வெளியான போது எப்படி இருந்ததோ அந்த பிரதி.
எந்த பிரதியானால் என்ன அழகாபுரி சின்னதுரையை வசந்த மாளிகையின் சிற்பியை காண மக்கள் திரண்டு விட்டனர். வெள்ளி சனி ஞாயிறு அனைத்துக் காட்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஞாயிறு மாலைக் காட்சிக்கு மிக சிறப்பான கூட்டம். அண்மைக் காலத்தில் ராமகிருஷ்ணா திரையரங்கம் கண்ட பெரிய கூட்டம் என்று திருச்சி வாழ் ரசிகர்கள் சொல்கிறார்கள். இந்த ஒரு வாரத்தில் படத்தை வெளியிட்டவர் கணிசமான லாபம் காண்பது உறுதி என சொல்கிறார்கள்.
திருச்சிக்கு சற்றும் சளைத்ததல்ல கோவை. தம்பி ராகுல்ராம் குறிப்பிட்டது போல சில மாதங்களுக்கு முன்னர்தான் டிலைட் திரையரங்கில் இரண்டு முறை திரையிடப்பட்டது என்னை போல் ஒருவன் திரைப்படம். இப்போது மீண்டும் ராயல் திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. இங்கேயும் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களிலும் மக்கள் ஒவ்வொரு காட்சிக்கும் திரண்டு வந்திருந்தனாராம். தம்பி குறிப்பிட்டது போல் ஞாயிறு மாலை காட்சிக்கு சிறப்பான வரவேற்பு இருந்ததாம்.
திருச்சி மற்றும் கோவையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் படங்களின் மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்.
அனைத்து தகவல்களுக்கும் நன்றி ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
பாசமலர் ட்ரைலர் வெளியிட்டு விழா பற்றிய பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி!