மூன்று தெய்வங்கள் - தொடருகின்றது
பகுதி 1 - படத்தை பற்றிய சிறப்புக்கள்
1. யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் - பேருக்காக ஒரு ஹீரோ - ஆனால் உண்மையில் ஹீரோ நம் தலைவர் தான் - ஜோடி கிடையாது ( குறைந்தது 50 ஜோடிகள் இருந்தால் தான் நடிப்பேன் - கடைசியில் அவர்களுக்கு அண்ணனாக மாறுவேன் என்று இருந்த நடிகர்கள் நடுவில் இப்படியும் ஒருவர் !!!!)
2. ஸ்ரீதர் இந்த படத்தை பார்த்திருக்க வேண்டும் - அழு மூஞ்சி என்ற சொல்லை தன் அகராதியில் இருந்தே நீக்கியிருப்பார் .
3. படம் போகும் வேகம் ரவி கிரண் பதிவுகளை விட அதிகமா இருக்கும் . மருந்துக்கு கூட போரே அடிக்காது .
4. வசனம் - கோபு - இசை - MSV - direction - Dada Mirasi
5. இந்த படத்தில் தலைவர் , தயாரிப்பாளர் ஒரு கஷ்ட்டத்தில் இருந்ததால் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் - அவருக்கு அதிகமான முக்கியத்தவம் நிறைந்த ரோல்யை , தயாரிப்பாளர் கெஞ்சியும் ஏற்று கொள்ளாமல் , சமமான ( முத்துராமன் , நாகேஷ் ) ரோல்யே எடுத்துக்கொண்டார் - காரணம் மூண்டு தெய்வங்களும் சமமே - இதில் ஒருவர் உயர்ந்தவராக இருந்தாலும் படம் சிறப்புடன் அமையாது என்பது அவரின் கருத்து .
6. படம் எதிர்பார்த்த லாபத்திற்கும் மேலாக ஈட்டி கொடுத்தது - தயாரிப்பாளர் மீண்டும் தலைவரை கெஞ்சவே - ஒரே ஒரு ரூபாயை மட்டும் சம்பளமாக பெற்று கொண்டார் தலைவர் .
7. பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் , தீபாவளி போதும் எங்கும் ஒலி பரப்பப்பட்டது - இன்றும் கேட்கலாம் .
8. அடுத்து அடுத்து வந்த படங்களினால் சிறிதே சோர்வு அடைந்தாலும் - தயாரிப்பாளர்களையும் , distributors களையும் மிகவும் சந்தோஷ படுத்தின படம் இது .
தொடரும்
அன்புடன் ரவி
:):smokesmile: