வாசு ஜி
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காமெரா கட் செய்யாமல் ஒரே ஷாட்டில் எடுத்த பாடல் என்பதுதான் இந்தப் பாடலின் தனித்தன்மை. அந்தக் காலத்தில் இந்த அளவு புதுமையாகச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்திருப்பதால் அந்த ஒரே மர செட்டை மன்னித்து விடுங்கள்.
Printable View
பாருங்கள் நண்பர்களே சின்ன கண்ணனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ,பல பெயர்களாம்?இவரை யாராவது கண்டிக்கவா முடியும்?(என்னை தவிர?)
இது ஒரு சாதாரண சுவாரசியம் கூட்டும் உத்தி. அத்தனை பெயர்களும் அவருடையதே (ஆதிராம்) என்று வைத்து கொண்டாலும்,எல்லா பெயரிலும் சிவாஜி ரசிகராகத்தானே இனம் காட்டி கொண்டார்?என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. பன்முக எழுத்து திறன் கொண்ட ரா.கி.ரங்கராஜன் போன்றோர் கடைபிடித்த நடைமுறை உத்தித்தானே?
அன்றைய வாசகர்களுக்கு இதை பற்றி தெரிவிக்கவும் இல்லையே?
தொடரும் தவறுகள்.
பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை இனம் காட்டிய தி.க வின் இளம் எழுத்து மற்றும் நடிப்பு புயல்கள் விவரமற்று முட்டாள்தனமாக மத நம்பிக்கைகளை நாடகம் மூலம் பரப்பினர்.
ரத்த கண்ணீர் என்ற நாடகம் திருவாரூர் தங்கராசு எழுதி, எம்.ஆர்.ராதா நடித்தது. இது பகுத்தறிவு வாதிகள் நடத்திய நாடகமாக அறிய படுகிறது. இதை விட அபத்தம் வேறெதுவும் இல்லை.
1)அநீதியை தட்டி கேளுங்கள் என்கிறது பகுத்தறிவு. எதிராக கொதித்தெழுங்கள் என்பது பகுத்தறிவு. தாயை உதைத்தவனை,மனையாள் கெடுத்தவனை,கெட்ட விஷயங்களில் தோய்ந்தவனை ,விதி தொழு நோயால் தண்டிப்பது படத்தின் கரு.இது மத நம்பிக்கைக்கு ஈடானது.
2)அப்படியே விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் வேசிகளை நாடியவன் வெட்டை நோய், மேக நோய் வர வாய்ப்புள்ளதே தவிர தொழு நோய் வரவே வாய்ப்பில்லை.
3)தொழுநோய் கடவுளின் தண்டனை என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை ஒட்டியது ,இந்த படம் போகும் போக்கு.
ஆனால் ஒரே சீர்திருத்தம் மனைவிக்கு மறுமணம்.
எப்படி எல்லோரும் கவனிக்காமல் விட்டனர்?(தி.க) ஆனால் சுவாரஸ்ய படமே.
Happy Father's Day ! :)
கோபால், குமார் மற்றும் பலர் . இது மதுர கான திரி. இங்கே சண்டை வேண்டாம்
அவரவருக்கு தனிப்பட்ட அஞ்சல் உள்ளதே அங்கே வைத்துக்கொள்ளுங்களேன் உங்கள் சண்டையை.
ஏன் இங்கே வந்து பலரும் உங்கள் வாக்குவாதத்தை படிக்க்வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவு செய்கின்றீர்கள்.
இந்த திரி பாடல் பற்றிய திரி .. ப்ளீஸ் பாடல்களை தொடரவிடுங்கள்
பூச்சாண்டி உஷ்.... சமத்தா சாப்பிடலைன்னா ,அப்புறம் அந்த ஒத்த கண்ணன்கிட்டே பிடிச்சு கொடுத்துடுவேன்.
மதுண்ணா!
நன்றி! இதுவரை எனக்குத் தெரியாது. இப்போது உங்கள் மூலமாக அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி. உங்கள் பதிவைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்த்தேன். உணர்ந்தேன். மன்னிப்பைவிட அப்போதைய புதிய முயற்சிக்கு பாராட்டியே விடலாம். தங்கள் உடல்நிலை எப்படியுள்ளது? இறைவன் தங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நலமுடன் இருக்க ஆசி தருவான். நன்றி மதுண்ணா.
http://www.families.com/wp-content/u...dia/100_01.jpg
ரவி சார்!
'கருவின் கரு' நூறு பதவுகள் அற்புதமாக முடித்து மீண்டும் அரும் சாதனை புரிந்துள்ளீர்கள். அசுர உழைப்பு. எவ்வளவு அருமையான தாய்மை நிறைந்த தகவல்கள்! அதற்கேற்ற பாடல்கள். முத்தாய்ப்பாய் மாணிக்கங்கள், கோமேதகங்கள், பவழங்கள். சாதனை பதிவுகள் என்பது மட்டுமல்ல இவ்வளவு குறுகிய காலத்தில் என்பதும் பெரும் சாதனை.
இரண்டு நாட்களாய் ரொம்ப பிஸி. அதான் கொஞ்சம் லேட்.
தங்கள் பொன்னான உழைப்பிற்கு நன்றிகள் 1000.
நூறுக்கு நூறு மார்க் வாங்கிய தங்களின் 'கருவின் கரு'விற்கு அடுத்து நீங்கள் தரப் போகும் அடுத்த அமர்க்களத்திற்கு பெயர் என்ன?
கலை சார்,
பாராட்டிற்கு நன்றி. ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகளை ரசித்ததற்கும் நன்றி!
//‘நீராழி மண்டபத்தில்’ பாடல் பதிவுக்கும் நன்றி. அந்த பதிவை திரு.எஸ்.வி. எங்கள் திரியில் மீள்பதிவு செய்து, அதை நான் மீண்டும் எடுத்துப் போட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தேன். பார்த்தீர்களா?//
பார்த்தேன் சார். அப்போதே பார்த்து விட்டேன். அதற்கும் தங்களுக்கு என் நன்றி!
கலை சார்,
அழகான பாடலை எடுத்து அதைவிட அழகாக அப்பாடலை அலசியுள்ளீர்கள். 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' படப் பாடல்கள் எல்லாமே அருமை. குறிப்பாக நீங்கள் பதிந்துள்ள இளமை கொலுவிருக்கும் பாடல்.
நீங்கள் சொன்னது போல அப்போதே நீச்சல் குளக் காட்சிகளில் தூக்கல்:)...அதாவது கிளாமர் தூக்கல்தான். உங்கள் குழந்தைப் பாட்டு இணைப்பு சாமர்த்தியத்தையும் ரசித்தேன்.
தாய்மை பற்றி அப்பாடலில் வந்திருக்கும் வரிகளைப் பற்றிய தங்கள் விளக்கமும், அதற்கு தோதாய் ஹிட்லரின் கதையும் அருமை.
நல்ல பாடலை நல்ல கருத்துக்களோடு தந்ததற்கு நன்றி!
From Anarkali(1955)
jeevithame sabalamo........
http://www.youtube.com/watch?v=ltl4zpyX-2c
From Telugu version Anarkali(1955)
jeevithame saphalamu.........
http://www.youtube.com/watch?v=Nmho6PcQ61M
From the Hindi original Anarkali(1953)
Yeh zindagi usiki hai......
http://www.youtube.com/watch?v=1eFso_5-bFc
A song in the same tune from Kaveri
en sindhai noyum theerumaa....
http://www.youtube.com/watch?v=ODjPNvmvHWM
A few weeks back the pomegranate bushes in our backyard started blossoming. Now they are fruits. Hope the birds leave some for us. The blossoms reminded me anarkali meaning pomegranate bloom. Strictly kali in Sanskrit means bud.
Enjoy !
ஒத்த கண்ணன் மொரட்டுப் பய.:) கொலை கூட செய்யத் தயங்க மாட்டான்.:) பாசத்துக்குக் கட்டுப்பட்டவன். கொடுவா எடுத்தா குலை தள்ளிய வாழைகள் கும்பல் கும்பலாய்ச் சாயும்.
புடிச்சிக் கொடுக்க போலீஸ் நண்பன் என்ன பாடு பட்டான்னு பச்சப் புள்ளையும் சொல்லுமே.:)
ஆனா அன்பு... அன்பு ஒன்னுக்குத்தான் கட்டுப் படுவான் ஒத்த கண்ணன். என் உயரில் கலந்த கண்ணன். எங்கள் அண்ணன். நடிப்பின் மன்னன். குணத்தில் அவனே இவன். இவனே அவன்.
தமிழ் திரை உலகில் மறக்க முடியாத தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் நடை பெற உள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர் . தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்திற்கும் கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்துள்ளார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . தமிழ் திரை உலகின் மறக்க முடியாத மனிதர் .
மறக்க முடியாத பாடல்கள் சில
1. ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
2. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
3.காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
4.ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
5.தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
6. தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
7.என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
8.அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
9.மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்
10.எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்
11.கன்னத்தில் என்னடி காயம் -
இதுவண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு -
பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு
12.வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்
13நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
14.மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..
15. நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?
16.ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க் கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க் கணும்
கருவின் கரு - 102
பாகம் 2 - தந்தை
http://i818.photobucket.com/albums/z...psgzqtiic8.jpg
கருவின் கரு - 102
பாகம் 2 - தந்தை
மாணிக்க வாசகர் தன் திருவாசகத்தில் இறைவனை " என் தந்தையே - உனக்கு ஒப்பாக சொல்ல ஒருவரும் இல்லை " கீழ்கண்டவாறு " பிடித்த பத்தில் சொல்கிறார் "
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
தந்தை தாயினும் கருணை உடையவன் - வெளிபடுத்துவதில்லை - எதையுமே ஒரு கடமையாக அவன் எடுத்துக்கொள்வதால் , அவனுக்கு அங்கே எதிர்பார்ப்புக்கள் இல்லை . மகன் , மகள் உயர்வடைய வேண்டும் வாழ்க்கையில் என்பது ஒன்றே அவனுடைய சிந்தனை , செயல்பாடு .. தன்னலம் பார்க்காதவன் . தாயின் பெருமைகளை கூறிய நாம் , தன்னலம் கருதாமல் நம்மை வளர்த்த தந்தையின் பெருமைகளை பாகம் இரண்டில் பார்ப்போம் -- இந்த பாகம் இந்த திரியில் உள்ள எல்லா நல்ல உள்ளம் கொண்ட அனைத்து தந்தையகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்
குமார்,
தேவர் படங்களில் ரசிக்க கூடிய ஒரே அம்சம் (only saving Grace )கே.வீ.மகாதேவன் பாடல்கள் மட்டுமே. எனக்கு பிடித்த பாடல்கள்.
1)காதல் எந்தன் மீதில் என்றால்
2)எவரிடத்தும் தவறுமில்லை
3)என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்.
4)ஆண்டவன் உலகத்தின் முதலாளி
5)சீட்டு கட்டு ராஜா ராஜா
6)வெள்ளி நிலா முற்றத்திலே
7)உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
8)ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
9)காவேரி கரையிருக்கு
10)தொட்டு விட தொட்டு விட தொடரும்
11)கன்னத்தில் என்னடி காயம்
12)தொட்டால் எங்கும் போன்னாகுமே
13)ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்
14)காட்டுக்குள்ளே திருவிழா
ரவி,
வாழ்த்துக்கள். தாங்கள் தந்தை குலத்தையும் மதிப்பதற்கு.
தந்தைகள் போற்ற படுவதில்லை. சகித்து கொள்ளவே படுகிறார்கள் என்பதை பொய்யாக்கிய நடிகர்திலகத்தின் சில படங்கள், சேரனின் தவமாய் தவமிருந்து தவிர தந்தைமையை நாம் போற்றியதேயில்லை. தாய்மை என்பது உள்ளுணர்வு.(Basic Instinct ).தந்தைமை என்பது தியாகத்தால் கட்டமைக்க படுவது. தன் உணர்ச்சிகளை,ஆசைகளை தீய்த்து கொண்டு குடும்பத்துக்காகவே வெந்து மடிந்த பலரை அறிவேன்.
தாய்க்கு நூறு என்றால் தந்தைக்கு நூற்று ஓரு பதிவுகளாவது வேண்டும் உன் கைவண்ணத்தில். ஒரு வரி விடாமல் படிக்க நானிருக்கிறேன்.ஜமாய் ராஜா.
கருவின் கரு - 102
பாகம் 2 - தந்தை
உறவுகள் மாறிக்கொண்டே இருக்கும் - அதை நாம் உணர்வதில்லை - 5 வயதில் மகன் சொல்லுவான் " எங்க அப்பாதான் சூப்பர் அப்பா !" - இதே பாத்து வயதானவுடன் அந்த மகன் சொல்லுவான் " எங்க அப்பா நல்லவரு , அப்பப்ப கத்துவாரு ! " - தன் பதினைந்தாவது வயதில் " அம்மா , உங்க வீட்டுக்காரரிடம் சொல்லிடு , அப்பப்ப என் ரூட் இல் வராரு , மரியாதை இல்லை "
20 வயதில் ----- " எப்படி அம்மா ?1 எப்படி ?! இந்த ஆளப்போய் கல்யாணம் செய்துக்கிட்ட ? 30 வது வயதில் -----" சார் ! நான் என் அப்பாவோட பேசறதில்லை . நான் என்ன செய்தாலும் தப்பு என்கிறார் சார் ! இந்த ஆளோட எவன் பேசுவான் ?"
இதே 40 வயதில் " அப்பா கத்திக்கிட்டே தான் இருப்பாரு ஆனால் நல்லவரு !!" அவனுக்கே 50 வயதாகி விட்டால் சொல்லுவான் " எங்க அப்பா எங்களை எப்படி வளர்த்தார் தெரியுமா ? my daddy is great ! "
எங்க அப்பா கிரேட் என்று 5 வயதில் சொன்னது , திரும்பி வருவதற்கு 45 வருடங்கள் ஒரு மகனுக்குத் தேவைப்படுகிறது - இதுதான் மாற்றம்
நம் தந்தை செய்தவைகள் சரியே என்று நாம் சொல்லும் தருணம் வரும் போது , நாம் செய்வதெல்லாம் தவறு என்று சொல்ல நமக்கு நம் பிள்ளைகள் வந்துவிடுகிறார்கள் !! மாற்றங்கள் என்பது ஒரு கழிவு நீரைப்போல - அந்த நீர் நதியில் கலக்கின்றது - நதி ஓடுவது நின்று விட்டால் பிறகு அது நதி இல்லை , ஒரு சாக்கடைத்தான் ! எந்த மாற்றம் வந்தாலும் நான் பயணிக்கிறேன் என்று இருப்பவன் தான் தந்தை - அவனுக்கு சோர்வு வருவதில்லை ! தோல்வியும் வருவதில்லை .........
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் --- என்ன அழகான பாடல் - ஒரு சிங்கத்தின் கைகளிலே ஒரு குட்டி சிறுத்தை தாலாட்டப்படுவதைப் இங்கே பார்க்கிறோம்
https://youtu.be/ayXXXujt3Fo
திரு கலை - முதலில் பிடியுங்கள் என் பாராட்டை - 800 பதிவுகள் - பாதி பதிவுகள் பலரை பாராட்டவே செலவழித்து விட்டீர்கள் . நவரத்தின வியாபாரம் நான் செய்வதை எப்படியோ கண்டு பிடித்து விட்டீர்கள் - எங்களுக்கு branches கிடையாது - முழு வியாபாரமும் ஹைதராபாத் இல் தான் - நீங்கள் வந்தால் 20-30% தள்ளுபடி தர முயற்ச்சிக்கிறேன் - எல்லா deal உம் cash இல் தான் - கொஞ்ச நாளில் வியாபாரத்தை இன்னும் விவர்தி செய்து துபாயில் தங்கி விடலாம் என்று யோசனை ......
சார் , நவரத்தினங்களை உயர்த்துவது அதன் தனிப்பட்ட குணங்கள் - இவைகளைப்பற்றி சொல்லாவிட்டால் அதைவிட அன்னை உயர்ந்தவள் என்று சரியாக என்னால் சொல்லமுடியாமல் போய்விடுமோ என்ற ஒரு பயத்தில் நவரத்தினங்களை அதிகமாக விவரித்தேன் அவ்வளவு தான் - படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி
வாசு - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - நீங்கள் உற்ச்சாகப்படுத்தவில்லை என்றால் என்னால் ஒரு பதிவாவது இங்கு போட்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே !
திரு கோபால் - மிகவும் நன்றி - நல்ல பதிவுகளை நீங்கள் பாராட்டிய தவறியதே இல்லை . ஒருவித பயத்துடன் தான் என் பதிவுகளை இங்கு இடுகிறேன் - உங்கள் அலசலில் என் பதிவுகள் தடையாக வந்து விடக்கூடாதே என்றுதான் .... "படிக்காத மேதை " என் அலசலை மீண்டும் பதிவிட்டதற்க்கும் என் மனமார்ந்த நன்றி .
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்காக - "திரையில் பக்தி" தொடரவேண்டும் என்பதற்காக ----
"தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றி வேல் - தெய்வ பக்தி உள்ளவர்க்கு கைகொடுக்கும் வீர வேல் ----"
How God Answers our Prayers?
A True Incident
Dr. Ahmed, a well-known cancer specialist, was once on his way to an important conference in another city where he was going to be granted an award in the field of medical research.
He was very excited to attend the conference and was desperate to reach as soon as possible. He had worked long and hard on his research and felt his efforts deserved the award he was about to obtain.
However, two hours after the plane took off, the plane made an emergency landing at the nearest airport due to some technical snag. Afraid, that he wouldn't make it in time for the conference, Dr. Ahmed immediately went to the reception and found that next flight to the destination was after ten hours. The receptionist suggested him to rent a car and drive himself down to the conference city which was only four hours away.
Having no other choice, he agreed to the idea despite his hatred for driving long distances.
Dr. Ahmed rented a car and started his journey. However, soon after he left, the weather suddenly changed and a heavy storm began. The pouring rain made it very difficult for him to see and he missed a turn he was supposed to take.
After two hours of driving, he was convinced he was lost. Driving in the heavy rain on a deserted road, feeling hungry and tired, he frantically began to look for any sign of civilization. After some time, he finally came across a small tattered house. Desperate, he got out of the car and knocked on the door. A beautiful lady opened the door. He explained the matter and asked her if he could use her telephone.
However, the lady told him that she doesn't have a phone or any electronic gadget but told the doctor that if could come inside till weather improves.
Hungry, wet and exhausted, the doctor accepted her kind offer and walked in. The lady gave him hot tea and something to eat. The lady told him that he can join her for prayers for which dr Ahmed smiled and said that he believe in hard work only and told her to continue with her prayers.
Sitting on the table and sipping the tea, the doctor watched the woman in the dim light of candles as she prayed next to what appeared to be a small baby crib.
Every time she finished a prayer, she would start another one. Feeling that the woman might be in need of help, the doctor seized the opportunity to speak as soon as she finished her prayers. The doctor asked her what exactly she wants from the God and enquired if God will ever listen or listen to her prayers. He further asked about the small child in the crib for whom she was apparently making a lot of prayers.
The lady gave a sad smile and said that the child in the crib is his son who is suffering from a rare type of cancer and there is only one doctor Ahmed who can cure him but she doesn't have money to afford his fee and moreover Dr Ahmed lives in another far off town. She said that God has not answered her prayer so far but said that God will create some way out one day and added that she will not allow her fears to overcome her faith.
Stunned and speechless Dr Ahmed was in tears which were rolling down his cheeks. He whispered, God is great and recollected sequence of events. ....there was malfunction in the plane, a thunderstorm hit, and he lost his way; and all of this happened because God did not just answered her prayer but also gave him a chance to come out of materialistic world and give some time to the poor hapless people who have nothing but rich prayers.
https://youtu.be/JF7lwmfaNTs
கல்யாண மண்டபம் படத்தில் பீ.பீ.எஸ் -சுசிலா இணைவில் (கே.வீ.எம் இசை) ரவிச்சந்திரன் -மாலதி இணையில்.(அசப்பில் ஈ.வீ.சரோஜா மாதிரி இருப்பார்). ரவி ,நடிகர்திலகத்துக்கு அடுத்த தமிழக ஆணழகன். இந்த உடையிலும் அசத்தல். பாட்டுக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசிக்கிறார். படு பாந்தமான பாடல். படமாக்கம். எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.
https://www.youtube.com/watch?v=KwAm_UuufDc
Breathless -Jean Luc Godardt - French -1960.
இவர் ஒரு விமரிசகர்,நடிகர்,சினிமாடோ கிராபர் ,திரைகதையாசிரியர்,எடிட்டர்,இயக்குனர் தயாரிப்பாளர்.(உங்களுக்கு ராஜேந்தர்,பாக்யராஜ் ஞாபகம் வந்தால் டெட்டால் விட்டு குளித்து விட்டு வாருங்கள்)
கோடர்ட் ,தரமான படம் என்ற பழைய கோட்பாட்டை தகர்த்தவர். புதுமை விரும்பி.புது இயக்குனர்களால் சோதனை முயற்சி படங்கள் வர பிரயத்தனம் மேற்கொண்டவர்.இருத்தலியல் (existentialism )மார்க்ஸிஸம் இரண்டிலு ஈடுபாடு கொண்டவர். பிற்கால படங்களில் ஒரு மனிதம் கலந்த போராட்ட முரண்களை மார்க்ஸீய பின்னணியில் அணுகியவர். அரசியலை படங்களில் பேசியவர். அந்த கால நியூ வேவ் படங்களின் முன்னோடிகளான ட்ரூபோ ,ரெஸ்னாய் இவர்களுடன் இணைந்து பிரெஞ்சு படங்களை உலக அளவில் தர படுத்தியவர்.
நாம் பார்த்த ,பார்த்த இருக்கிற உலக இயக்குனர்கள் scorsese ,Tarantino ,Soderberg ,betrolucci ,pasolini ,karvai போன்றவர்கள் இவரால் உந்த பட்டு உருவானவர்களே.
இந்த படம் மைக்கேல் என்ற இளம் குற்றவாளி, கார்திருட்டில் ,ஒரு போலிசை சுட்டு விட்டு ,தப்பிக்கும் ஓட்டத்தில் பேட்ரீஷியா என்ற அமெரிக்க இளம் பெண்ணை (தெருவில் பேப்பர் விற்கும் ,journalism படிக்கும் மாணவி)கண்டு ,அவளால் அவளிருப்பிடத்தில் ஒளித்து வைக்க படுகிறான்.அவன் இத்தாலிக்கு தப்பி செல்ல பண முயற்சியில் இறங்கி, அந்த பெண்ணையும் வச படுத்துகிறான்.(seduction )அவனால் கர்ப்பமாகும் பெண்ணே ,அவனை காட்டியும் கொடுத்து அவன் சாவுக்கு காரணமாகிறாள். கடைசியில் சாகும் போது அவன் சொல்லும் வரிகள் படத்துக்கு முத்தாய்ப்பு.
ஒரு சாதாரண கதையை எடுத்து,அதனை நோக்கமில்லாமல் செலுத்தி,பல வித digressions என்று சொல்ல படும் திருகு வேலைகள் செய்து, புனித நோக்கங்களின் பின்னாலுள்ள நேரத்தின் அர்த்தமின்மை என்பதை புதிய பாணியில்,அலட்டாமல்,சுவாரஸ்யமாக சொன்ன படம். காட்சிகளின் புதுமை,பலம், jump cut என்ற எடிட்டிங் பாணி (இதன் பிறகே பிரபலம் அடைந்தது. சிகப்பு ரோஜாக்கள் ஞாபகம் உள்ளதா).இந்த படத்தை உலக அளவில் பேச படும் படமாக்கியது.
இயக்குனரின் பிற படங்கள் A Woman ,Contempt ,Week End போன்றவை.
ரவி
இறை வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் உள்ளத்தால் தாயின் அன்பிற்கும் பாசத்திற்கும் எள்ளளவும் குன்றாத தந்தையின் பங்கினைப் பற்றிய தங்கள் கருத் தொடர் நெஞ்சில் பெருந்தொடராய் பாதிப்பேற்படுத்தும் என்பதுறுதி.
தொடருங்கள்.
ராஜேஷ்
திரையில் பக்தி தொடரில் அபூர்வமான பாடல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
அபூர்வ கானங்கள்
சிலர் தழுவல் என்பார்கள். சில சமயங்களில் ஒரே மாதிரி எண்ண ஓட்டத்தில் படைப்பாளிகளின் படைப்புகள் அமைந்து விடும் என்பார்கள்.
ஆனால் ஒரே மாதிரி எண்ண ஓட்டங்களுக்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா தெரியவில்லை.
பாடல்கள் அருமையாக உள்ளன. அதை மறுக்க முடியாது.
1. கானல் நீர் படத்தில் பானுமதி அவர்களின் இசையமைப்பில் அவர் பாடிய பாடல்
https://www.youtube.com/watch?v=WKC3N9Ny-6Q
2. காசி திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=KKCK7zpXo8Q
ரவி ஜி
திரையில் பக்தி தொடரும்.
ராகவ் ஜி
ஆம் அபூர்வமான பாடல்களும் தொடரும் .. நன்றி
திரையில் பக்தி -7:
http://www.sruti.com/images/papanasam.jpg
https://upload.wikimedia.org/wikiped...hagavathar.jpg
திரையில் பக்தி என்பது ஒருவேளை இவர்களிடமிருந்து தான் ஆரம்பித்ததோ
ஆம் பாப நாசம் சிவனும் தியாகராஜ பாகதவர் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக்கூட்டணி
எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் பிரபலம்.
அப்படி ஒரு பக்தி ரசம் சொட்டும் பாடல் தான் திரு நீலகண்டர்(1939)’ல் வந்த
சிதம்பர நாதா திருவருள் தா தா என்ற பாடல்
சிவனைப்பற்றி சிவனே எழுதிய பாடல் . இசை வேந்தர் தியாகராஜ பாகவதரின் குரலில் நம்மை பரவசப்படத்தான் வைக்கிறது.
சிதம்பர நாதா திருவருள் தாதா
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன்
சிதம்பர நாதா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
பதஞ்சலியும்
பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும் புலியும்
பதஞ்சலியும் புலியும் பதஞ்சலியும்
பதஞ்சலியும் புலியும் பணியும் குஞ்சித பதனே
குஞ்சித பதனே சஞ்சிதமகலாதா
குஞ்சித பதனே சஞ்சிதமகலாதா
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன்
சிதம்பர நாதா ஆஆஆஆஆ
நன்று தீதும் அறியேன் நொந்தேனே
நன்று தீதும் அறியேன் நொந்தேனே
ஞானமில்லேன் உன்னை நம்பி வந்தேனே
நன்று தீதும் அறியேன் நொந்தேனே
ஞானமில்லேன் உன்னை நம்பி வந்தேனே
மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே
மன்றிலாடும் மணியே மன்றிலாடும் மணியே
மன்றிலாடும்
மன்றிலாடும் மணியே செந்தேனே
வாதா அறுவகைத் தீயில் வெந்தேனே
வாதா அறுவகைத் தீயில் வெந்தேனே
சிதம்பர நாதா திருவருள் தாதா
சித்தமிரங்காதா திருவடியலதொருகதியிலன்
சிதம்பர நாதா ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
https://www.youtube.com/watch?v=aI9AFL7Rg_0
ராஜேஷ்,
சிதம்பர நாதா ஒரு அற்புத பாடல். எம்.கே.டி குரல் வளம் தனி. எம்.கே.டி-பாபநாசம் சிவன்- ஜி.ராமநாதன் இணைவு சங்கீதத்துக்கு கொடை .கர்நாடக சங்கீதம் பரிச்சயமாகாத காலத்திலேயே (பினாட்கட்களின் self taught வகைதான் நான்)இவர்களுடைய சொப்பன வாழ்வில்,அன்னையும் தந்தையும் தானே,தீன கருணாகரனே நடராஜா ,வதனமெ சந்த்ர பிம்பமோ, மன்மத லீலையை போன்ற பாடல்களை அவ்வளவு ரசித்திருக்கிறேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி.
Rajesh,
Good to see MKT songs here. If you want lyrics in a hurry please visit MKT thread in memories of yesteryears section. :)
மிகவும் அருமை ராஜேஷ் . என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் . என்ன குரல் வளம் - இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - சிவன் அவர்களின் " நானொரு விளையாட்டுப் பொம்மையா " பாடலும் மிகவும் பிரசித்தம் . கேட்டுருக்கிண்டீர்களா ?
ராகம் நவரஸ கன்னட தாளம் ஆதி
பல்லவி
நானொரு விளையாட்டு பொம்மையா - ஜகன்னாயகியே உமையே உந்தனுக்கு (நானொரு)
அனுபல்லவி
நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா உந்தனுக்கு (நானொரு)
சரணம்
அருளமுதைப் பருக அம்மா அம்மாவென்றலுருவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுள்ளம் இரங்காதா உந்தனுக்கு (நானொரு)
வரிகள் நம் இயல்பான வாழ்க்கையின் ஒரு எதிரொலி ......
Good Morning :)
http://i818.photobucket.com/albums/z...psnxghyx4v.jpg
கருவின் கரு - 103
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 14
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அதிகமாக அப்பாவுடன் நான் பேசியதில்லை - அவர்கள் திருமணம் செய்துகொண்டு 18வருடங்களுக்குப் பிறகுதான் பிறந்தேன் - என்றுமே அப்பாவிடம் ஒரு வித பயம் . ஏதாவது விவாதித்தால் , உடனே மரியாதை தெரிகிறதா பார் உன் மகனுக்கு - எதிர்த்துப்பேசுகிறான் என்பார் . எல்லாமே எனக்கு அம்மா தான் - கல்லூரியில் , அந்த ஸ்டேட் லேயே முதல் மாணவனாக தேர்வானேன் --- நல்ல பெயருடன் காதலும் கேட்க்காமலேயே வந்தது ---- பானு சந்தித்த முதல் நாளிலேயே அம்மா, அப்பாவை மறக்க வைத்துவிட்டாள் ---காதல் வளந்தது - உள்ளே பயமும் வளர்ந்தது - அப்பாவிடம் எப்படி சொல்வது ? -----
அம்மாவிடம் ஓடினேன் - ஆச்சாரம் மிகுந்தவள் - தன் மருமகளைப்பற்றி அவளை சுற்றி ஒரே பெரிய கற்பனைக்கோட்டையையே கட்டி வைத்திருந்தாள் . ஒரே நிமிஷத்தில் அதைப்போட்டு உடைக்கப்போகிறேன் -- அப்பா ---- கேட்கவே வேண்டாம் - ஒரு பூகம்பத்தை வீட்டுக்குள் ஏற்படுத்திவிடுவார் ---
அம்மாவிடம் மெதுவாக பானுவின் புகைப்படத்தைகாட்டினேன் - ஏதோ கிழித்துப்போட்ட பேப்பரை பார்த்ததுபோல அம்மா அதை பார்த்துவிட்டு ரசம் கொதிக்கிறதா என்று பார்க்க சென்றுவிட்டாள் ---
முதல் முயற்ச்சியே தோல்வி ..... பானுவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தால் ------ ஒருவேளை அம்மாவிற்கு பிடித்து விட்டதென்றால் அப்பாவை அவள் சமாதனம் செய்துவிடுவாள் ----
இரண்டாவது கட்டம் - பானுவை வீட்டிற்கு கூடிக்கொண்டு வந்தேன் அப்பா வீட்டில் இல்லாத சமயத்தில் --- அம்மாவிடம் அறிமுகம் செய்தேன் --- வீட்டுக்கு யார் வந்தாலும் செய்ய படும் அதே உபசரணைகளைத்தான் அம்மா அவளுக்கும் செய்தாள் - பானு சென்ற பிறகு அம்மாவிடம் ஒரு மாறுதலும் இல்லை -- ஒரு பதிலும் இல்லை .சில மாதங்கள் செலவழிந்து விட்டது - பானுவை மறக்க முடியவில்லை - புதிய படிப்பிலும் நாட்டம் இல்லை - இவ்வளவு வருத்தமாக இருந்தாலும் ஏனோ தாடி மட்டும் வளரவே இல்லை .
அம்மாவிடம் இருந்து செய்தி வந்தது - " ராஜன் உனக்கு பெண் பார்த்தாகிவிட்டது - உடனே புறப்பட்டு வரவும் -அம்மா !"
மனம் கணத்தது - என் வாழ்க்கையை என் விருப்பபடி அமைக்ககூடாதா ? அப்பா அம்மா பிறகு எதற்க்காக ??? " என்னவோ கேள்விகள் - விரைந்தேன் வீட்டுக்கு - நான் ஒன்றும் ஒரு கைபொம்மை அல்ல என்று சொல்ல ---அங்கே நான் கண்ட காட்சி --- நிச்சியதார்த்தம் எனக்கும் , என் உள்ளத்தில் இருக்கும் பானுவுக்கும் தான் ---- எப்படி இது ? அப்பா எப்படி ஒத்துக்கொண்டார் ? ஒன்றுமே புரியவில்லை - ஒரு பக்கம் எல்லை இல்லாத சந்தோஷம் , மறு பக்கம் அப்பாவை சரியாக புரிந்துகொள்ளவில்லையே என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை ... என் கதவை யாரோ தட்டினார்கள் -- அப்பா தான் நின்று கொண்டிருந்தார் --- " ராஜன் ஒரு சந்தோஷத்தைப் பெற நாங்கள் 18 வருடம் தவம் இருந்தோம் - உன் சந்தோஷத்தை ஒரு நொடியில் அழித்து விட எப்படி எங்களுக்கு மனம் வரும் ?
உன் வாழ்க்கை என்பது ஒரு காத்தாடியில் கட்டப்பட்ட ஸ்ட்ரிங் யைப்போல , அந்த ஸ்ட்ரிங் யை வெட்டி விட்டால் , காத்தாடி இன்னும் சுதந்திரமாக பறக்கும் , இன்னும் உயரே பறக்கும் -- சற்று நேரத்தில் ஒய்ந்து கீழே விழுந்து விடும் - உறவுகளும் , நமது பண்பாடுகளும் , நண்பர்களும் , குடும்பமும் உன் வாழ்க்கை என்கிற காத்தாடியில் கட்டப்பட்டுள்ள ஸ்ட்ரிங் - அதை நீ நீக்க நினைத்தால் அந்த கீழே விழும் காத்தாடியின் நிலைமை தான் உனக்கும் . நீ காதலிப்பதை தவறாக சொல்லவில்லை - உன் வயது அப்படி -- ஆனால் ஸ்ட்ரிங் காக நாங்கள் இருக்கிறோம் - கவலைப்படாதே !" "Never go away from culture, family, friends and relationships as they help keep you stable while you are flying high."
அப்பா !!--- எவ்வளவு நேரம் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் என்று இன்று வரை கணக்கு போட முடியவில்லை - அப்பா தந்த தைரியத்தால் இன்னும் கீழே விழாமல் மேலே உயர உயர பறந்து கொண்டிருக்கிறேன் ......
https://www.youtube.com/watch?v=OlE0EAbVZcY
கருவின் கரு - 104
பாகம் 2 - தந்தை
இவர் மனத்தில் தான் எத்தனை ஆசைகள் - தனக்கு ஒரு மகன் பிறப்பான் , அவன் தன்னைப்போலவே இருப்பான் --- நல்ல இடத்தில் பிறக்க குழந்தைகளுக்கும் கொடுத்து வைக்க வேண்டும் - அதிகமாக இருக்கும் இடத்தில் பிறந்தால் பெற்றவர்கள் குப்பைத்தொட்டியை நாடும் காலமாக மாறிக்கொண்டு வருகிற இந்த உலகத்தில் அன்பை சொரியும் ஒரு தந்தை கிடைத்து விட்டால் அந்த குழந்தையின் வளர்ச்சியில் குறைவேது ??
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் பொருள் தேடிச் செல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்
ஏழை முகம் பார்த்து சொல்வான்
(எனக்கொரு மகன் பிறப்பான் )
கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
கையில் ஏர் கொண்டு வருவான்
சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
(எனக்கொரு மகன் பிறப்பான் )
https://www.youtube.com/watch?v=DGpjKCDashs
கருவின் கரு - 105
பாகம் 2 - தந்தை
இங்கே பாருங்கள் - இவர் மனம் ஒடிந்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ -- என்று பாடுகிறார் - இரு பாடல்கள் , ஆனால் கருத்து ஒன்றே ! தன் இயலாமை , முடியாமை - இந்த ஆமைகளின் நடுவே அற்புதமாக பிறந்த ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது - காதலில் பெருமை இல்லாத கடமையில் ஈன்ற ஒரு குழந்தையை எப்படி பேணி பாதுக்காப்பது என்ற கவலை ---- இருந்தாலும் சந்தோஷத்தை அவரால் மறைக்க முடியவில்லை - வார்த்தைகளில் வேதனை - உள்ளத்தில் ஒரு இனம் புரியாத ஆனந்தம் - கலந்த நடிப்பு , பாடல் , கருத்துள்ள வரிகள் - இந்த குழந்தையும் புண்ணியம் செய்த குழந்தைதான் இப்படி ஒரு தந்தை கிடைக்க
மண்வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய், கண்மலர்ந்த பெண்மயிலை நான் அடைந்தேன்.. நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம்வரை தாய்மனதை காத்திருப்பேன்.. தங்கமகனே!
https://youtu.be/CSD1juEt_eY
ரவி
தந்தை பாடல்களில் ஊடே நுழைந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பகிர்ந்து கொள்ள தாங்கள் அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.
ஒரு தந்தை தன் பிள்ளையை எப்படியெல்லாம் மனதில் நேசிக்கிறான், அதுவும் சிறு வயதில் தாயை இழந்து தான் வளர்க்கும் பிள்ளையின் மேல் அவனுடைய பாசம் எந்த அளவிற்கு இருக்கிறது.. இது போன்ற சூழ்நிலை பலருடைய வாழ்வில் நேரிட்டிருக்கலாம். சிலரோ அல்லது பலரோ, சந்தர்ப்பத்தின் வசமாகவோ அல்லது தேவைக்காகவோ மறுமணம் செய்வதுண்டு. அப்போது தன் குழந்தையை சிலர் எப்படி வளர்ப்பதெனத் தெரியாமலோ அல்லது எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டோ இருக்கலாம். இது சராசரி ஆண்களின் நிலைப்பாடாக கடந்த காலங்களில் இருந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி எத்தனையோ பேர் தன் உயிருக்குயிரான மனைவியின் மேல் தாங்கள் வைத்துள்ள அன்பின் காரணமாக மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார்கள். அப்படிப்பட்ட தந்தைமார்களின் மனநிலையை சித்தரிக்க இதை விட சிறந்த பாடல் இருக்கவே முடியாது எனக் கூறலாம்.
இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் பொழியும் பாசத்தை அப்படியே உணர்வு பூர்வமாக திரையில் வடித்துள்ள நடிகர் திலகம் தமிழகத்தின் பொக்கிஷம் என்பதற்கு இப்பாடல் மிகச்சிறந்த உதாரணம்.
இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் முக உணர்வுகளைப் பற்றித் தனியாக நடிகர் திலகம் திரியில் Definition of Style தொடரில் பின்னர் காண்போம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வசீகரமான முகத்தை வைத்துக் கொண்டு டூயட், சண்டை என சாமான்யமான விஷயங்களை செய்து வணிக ரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தால் ......
இந்தப் பாட்டு மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வில்லையென்றால் அங்கே மனதே இல்லையென்று பொருள்.
https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM
பாடல் வரிகளே சொல்லி விடும்
நான் பெற்ற செல்வாம் நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம் தேன்மொழி பேசும்
சிங்காரச் செல்வம் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்
தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் நீ
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்
அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
பண்பே அறியாப் பாவியர்கள்
பண்பே அறியாப் பாவியர்கள்
வாழுகின்ற பூமியிது நீ அறிவாய் கண்ணே
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்...
நன்றி யூட்யூப் இணைய தளம்
இதே போன்று தன் பிள்ளையைப் பற்றி மனைவியும் கணவனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இப்பாடலும் தந்தையின் மேன்மையை மிகச் சிறப்பாகக் கூறுகிறது. ஒவ்வொரு வரியும் என்ன அற்புதமான தத்துவத்தைக் கூறுகிறது..
பணம் படைத்தவன் படத்திலிருந்து, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
http://www.inbaminge.com/t/p/Panam%20Padaithavan/
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
11
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'
http://i.ytimg.com/vi/Z9rjDWeGfQM/hqdefault.jpg
பாலா தொடரில் மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்களின் படப் பாடல். பத்மினி பிக்சர்ஸ் 'தேடி வந்த மாப்பிள்ளை'(1970)படத்திலிருந்து.
அக்மார்க் எம்.ஜி.ஆர் டிரேட் மார்க் பாடல். ஒரு வித்தியாசம். பாடகர் திலகத்திற்குப் பதிலாக பாலா.
பெரும்பாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் இன்ட்ரோ பாடல்களை டி.எம்.எஸ் அவர்கள் பாடக் கேட்டு பழகிப் போன காதுகளுக்கு அதுவும் சுறுசுறு பாடலை பாலா பாடிக் கேட்டதில் தனி சுகம் இருந்ததை, இருப்பதை மறுக்க முடியாது. கொஞ்சம் குரல் பொருந்தாமல் இருந்தாலும், தாய்ப் பாசத்தோடு கொள்கைப் பிடிப்பும் உள்ள பாடல் ஆதலால் பாலாவும் சிறப்பாகப் பாடி இந்தப் பாடலை சூப்பர் டூப்பர் வரிசையில் கொண்டு வந்து சேர்த்து விட்டார். எம்.ஜி.ஆர் அவர்களின் மிகச் சிறந்த பாடலாகவும், மிக இலகுவாக அனைவரும் எளிதில் பாடிப் பார்க்கும் பாடலாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் பாடலாகவும், தாயின் பெருமை பேசும் பாடலாகவும் பல சிறப்புகளைப் பெற்று விட்டது இப்பாடல்.
பாலாவுக்கு இன்னொரு வெற்றி. காதல் பாடல்களில் மட்டுமல்ல...பாசத்தோடு கூடிய வீர உணர்ச்சிப் பாடல்களிலும் தன்னால் சோபிக்க முடியும் என்று நிரூபித்த பாடல் இது.
http://i46.tinypic.com/t68411.jpg
எம்.ஜி.ஆர் அவர்கள் இப்பாடலில் வழக்கத்தை மீறிய சுறுசுறுப்புக் காட்டுவார். நீலக் கலர் பேண்ட்டும், சிகப்புக் கலர் பட்டுச் சட்டையுமாக மனிதர் சின்னப் பிள்ளை போல அங்கும் இங்கும் தாவி, ஆடி, ஓடி, சோபாவைத் தாண்டி, மாடிப்படிகளின் பிடிகளிலிருந்து வழுக்கித் தவழ்ந்து, அன்னை வேடம் பூண்டிருக்கும் எம்.வி ராஜம்மாவையும் சுறுசுறுப்பாக்கி பாடலை மேலும் விறுவிறுப்பாக்குவார்.
அவரது கையில் இருக்கும் நீல நிற சூட்கேஸ் அப்படியே Sony Vaio லேப்டாப்பை நினைவூட்டி இந்தக் காலத்திற்கும் பொருத்தமாய் இருப்பது போல் தோன்றுகிறது. பாடலுக்கேற்றவாறு அதிலேயே தாளமும் போடுவது பொருத்தமே.
கல்லூரிப் படிப்பு முடித்து விட்டு வரும் மகன் தாயிடம் தான் அங்கிருந்து வங்கி வந்த பரிசுக் கேடயத்தை உடனே காட்டாமல் கொஞ்சம் ஆட்டம் காட்டி, போக்குக் காட்டி, தாயின் பெருமை எத்தகையது என்பதை தரணிக்கு உணர்த்தி பாடும் பாடல்.
ரவி சாரின் கருவின் கரு நினைவுக்கு வருகிறது.
http://chennai.localtiger.com/images...s/karnan-2.jpg
கலரில் தாய் வேடம் 'ஞான சௌந்தரி'க்கு. கணவர் எடுத்த படத்தில் நாயகனுக்குத் தாய். இவர் கொஞ்சம் உதடுகளை குவித்து சிறுபிள்ளை சாக்லேட் கிடைக்காமல் வெம்புவது போல் அழுவது மிக இயல்பாய் இருக்கும். இரக்கத்தையும் வரவழைக்கும். கர்ணனில் குந்தி தேவியாய் நடிகர் திலகத்துடன் இவர் வாழ்ந்த அந்த வரம் கேட்கும் காட்சி சாகா வரம் பெற்ற காட்சி அன்றோ! இவரைப் பார்த்தாலே குந்தி தேவியாகத்தானே தெரிகிறார்.
வாலி தாயின் பெருமைகளை மகன் விளக்குவது போல அருமையான வரிகளைத் தர, குரலில் பாலா அதைப் புரிந்து கொண்டு இளம் வழுக்கைக்குரலில் இனிமையாகப் பாட, தாய்ப் பாடல் என்றால் அது ஸ்லோவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதியை மாற்றி அதை சுறுசுறுப்பு பாடலாக எம்.ஜி.ஆர் அவர்கள் மாற்றிக் காட்ட, 'மெல்லிசை மன்னர்' எளிமையான, இனிமையான இசை தர, பாடல் ஹிட்ட்டடிக்காமல் வேறென்ன செய்யும்?
http://i.ytimg.com/vi/RvH7gem64nE/hqdefault.jpg
'தேடி வந்த மாப்பிள்ளை' நிஜமாகவே ஒரு ஜாலிப் படம். படம் நெடுக இழையோடும் காமெடி இப்படத்தின் தனிச் சிறப்பு. பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் ரகம். எம்.ஜி.ஆர், ஜெயா, ஜோதிலஷ்மி, (படத்தின் மிகப் பெரிய பலம் இவர்...கொடி கட்டிப் பறப்பார் இந்த 'பிக்பாக்கெட் ராணி' ஹீரோயினை பின்னுக்குத் தள்ளி) அசோகன், சோ, மேஜர் என்று அவரவர்களும் ஜாலியாக பண்ணியிருப்பார்கள்.
'மாணிக்கத் தேரில் மரக்கதக் கலசம் மின்னுவதென்ன' பாடலின் சீரியல் விளக்குகளின் அலங்காரம் இப்போது கூட நம்மை வியக்க வைக்கும்.
(கனவுக்காட்சி மின்சார ஒளி அமைப்பு கே.சாத்தையன், கே.ஆர்.பாலகிருஷ்ணன் என்று தனியாகவே டைட்டில் போட்டு எலெக்ட்ரீஷியன்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்)
அது மட்டுமல்ல... எனக்கு மிக மிகப் பிடித்த தொட்டுக் காட்டவா, (பியானோ இசையில் பித்து கொள்ள வைப்பார் மன்னர்) சொர்க்கத்தைத் தேடுவோம் ... தபலா மாமா டோலக்கு பாட்டி, ('பாடகர் திலகம்' போதை கொண்டவன் குரலில் பரவசம் கொள்ள வைப்பார்) இடமோ சுகமானது, (அடடா! என்ன ஒரு பாடல்! என்ன படமாக்கம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்! ஜோதியே பாதி ஆக்கிரமிப்பு செய்வார்.) அட ஆறுமுகம், ராட்சஸியின் குரலில் 'ஆடாத உள்ளங்கள் ஆட' ('ஆடுவது உடலுக்கு விளையாட்டு' 'குமரிக் கோட்டம்' படப் பாடலை நினைவுபடுத்தும் பாடல். இதில் என்ன கொடுமை என்றால் இணையத்தில் சில தளங்களில் இந்தப் பாடலை 'குடியிருந்த கோயில்' படத்தின் பாடல் என்று தவறாக தகவல் தந்துள்ளனர். 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடலால் இந்தக் குழப்பம் போல. கொடுமைடா சாமி!) என்று இனிக்க இனிக்க பாடல்கள். படம் போவதே தெரியாது.
எம்.ஜி.ஆர் படங்களிலிருந்து கொஞ்சம் பாதை விலகி வித்தியாசம் காட்டும் 'கலகல' மாப்பிள்ளை. கலர்ஃபுல் மாப்பிள்ளை.
இத்தனை அம்சங்கள் இருந்தாலும் தன் தனித்துவக் குரலால் பாலாவும் தன் பங்கிற்கு 'வெற்றி மீது வெற்றி வந்து' அவரைச் சாரும்படி செய்து கொண்டது இன்னும் மகத்துவம் அல்லவா!
ஹேட்ஸ் ஆஃப் பாலா.
http://i.ytimg.com/vi/73Ew2YCWqR4/hqdefault.jpg
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ
பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
உண்ணாமல் இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் பன்னீராகும்
அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
பிள்ளையினால் பன்னீராகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவளால்தான் நனவுகள் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவளால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
https://youtu.be/Z9rjDWeGfQM
Thedi vantha mappillai- One of my favourites also.
என்ன சார் - பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுகிறீர்கள் ? உங்களுக்கு இல்லாத உரிமையா ?? - இந்த பாடலை நாளை போடுவதாக இருந்தேன் - ஆனால் இவ்வளவு அழகாக நீங்கள் வர்ணித்தைப்போன்று கண்டிப்பாக என்னால் எழுதி இருக்க முடியாது ... மாணிக்க கட்டிலை பாகம் ஒன்றில் கவர் செய்து விட்டேன் ..... நன்றி மீண்டும் , இந்த பாகத்தில் பங்கு ஏற்று கொள்வதற்கு .