well said joe local plitics plays here NAM NT than kidaithara idarku ellam
DHARMAM VELLUM
Printable View
Dear Joe,
There is Nothing to get worried. TRUST ME JOE,
This is the last term she is in power. By her CUNNING & CHEAP TRICK, Jayalalitha has touched a high voltage current.
LIKE LAST TIME, am mentioning this time also.
Sivaji Silayai Agatra Ninaippadhu Pradhishtai Seidha SIVAN silayai Agatruvadharrku Eedaagum !!!
Padhavi irukkum thimiril idhai seigiraargal !!! KAI MEL PALAN AVARUKKU KOODIYA VIRAIVIL KIDAIKKUM..! THANNUDAYA AZHIVAI IDHAN MOOLAM SAMBANDHAPATTAVRGAL THODANGIVAITHULLAAR...
IDHU KALAIKADAVUL SIVAJI AVARGAL MEEDHU AANAI...!
IDHUDHAAN ENNUDAYA SAABAM...!
RKS
Jayalalthaavudan photo pidithukondulla indha gumbal. EPPOYAA UNGALUKKELLAAM SORANA VARUM...
THAYAVU SENJU SIVAJIYODA GOWRAVATHTHA , PERA ASINGAM PANNAADHEENGADA ..INADROGIGALAA !!!!
THANDHAYAI MARANDHA MOODAR KOOTTAM..!!!
It will happen only in Tamil Nadu. Politicians are playing with fire and they will definitely pay for this.
இனிமேல் வரப்போகும் சில கருத்துகள் இப்படி இருக்கலாம் ..
* யாரோ ஒருத்தர் வழக்கு போட்டதுனால நீதிமன்றம் அரசாங்கத்தை நெருக்கும் போது முதலமைச்சர் என்ன செய்ய முடியும் ?
* ஆட்சி மாறினால் பிரச்சனை வரும் என தெரிந்தும் அந்த இடத்தில் வேண்டுமென்றே வைத்தது கருணாநிதியின் தவறு தானே
* மணிமண்டபத்தில் வைப்பதாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் .. அதில் என்ன தவறு ?
* கருணாநிதியின் பெயரை கொட்டை எழுத்தில் போட்டு அப்பாவி அம்மையாரை கடுப்பேத்தியதால் தானே இவ்வாறு நடந்தது .
* நடப்பவை எல்லாம் அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..இது அதிகாரிகள் மட்டத்தில் எடுத்த முடிவு .
மெரினா பீச் விதவை கோலத்திற்கு தயாராக போகிறது.ஒரு தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அப்பா எதனை வைதேரிச்சல்கள்.எல்லோரும் நல்ல இருங்க
Today's Junior vikatan.
சிவாஜி மணிமண்டபம்... குறட்டை விட்ட நடிகர் சங்கம்... குட்டுவைத்து எழுப்பிய முதல்வர்!
http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4b.jpg
சிவாஜி மணிமண்டபம்... குறட்டை விட்ட நடிகர் சங்கம்... குட்டுவைத்து எழுப்பிய முதல்வர்!
நீ...ண்ட காலமாகக் கிடப்பிலே இருக்கும் திட்டங்களில் ஒன்று நடிகர் சிவாஜியின் மணிமண்டபம். சிவாஜி மணிமண்டபத்தைக் கட்டுவதில் கும்பகர்ண தூக்கம் போட்டுவந்த தமிழக அரசு இப்போது திடீரென்று விழித்திருக்கிறது. ‘சிவாஜிக்கு அரசின் செலவில் மணிமண்டபம் கட்டப்படும்’ என சட்டசபையில் அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா.
சிவாஜி மணிமண்டபம் தொடர்பாக 16-03-2005 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறோம். 17-04-2005, 24-04-2005, 05-10-2005, 01-08-2010, 02-10-2011, 21-04-2013, 22-07-2015 என இதுவரை எட்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். கன்னித்தீவு கதைபோல நீண்டுகொண்டே போகும் மணிமண்டபம் பிரச்னையின் ஃபிளாஷ்பேக்...
2001-ம் ஆண்டு சிவாஜி இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தவந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ‘சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தாருங்கள்’ என கோரிக்கை வைத்தது நடிகர் சங்கம். சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சுமார் 12 கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கத்துக்கு ஒதுக்கி, 2002-ம் ஆண்டு ஆணை போட்டார் ஜெயலலிதா. உடனே ‘அரசு ஒதுக்கிய இடத்தில் நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவோம்’ என சொன்னது நடிகர் சங்கம். தேர்தல் வாக்குறுதி போல நடிகர் சங்கம் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பேச்சு மூச்சே இல்லை. ‘மணிமண்டபம் கட்டும் இடத்துக்குக் குறுக்கே செல்லும் சாலைக்கு மாற்று சாலை அமைக்க ரூ.4.20 லட்சம் செலவாகிறது. அதில் ரூ.2 லட்சத்தை மட்டுமே நடிகர் சங்கம் செலுத்தியிருக்கிறது. அதனால்தான் தாமதம்’ என அப்போது சொன்னது அரசு. அதன்பிறகு 22.4.2005-ல் மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டனர். அப்போது, ‘மணிமண்டபம் கட்ட வரைபடம் தயாரித்தல், நிதி திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காகத் தனியாக குழுவை நியமிக்கப் போகிறோம். இதற்காகப் பிரத்யேகமாக இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம்’ என்றெல்லாம் கலர்ஃபுல் அறிவிப்புகளை வெளியிட்டது நடிகர் சங்கம். எல்லாம் பூமி பூஜையோடு முடிந்துபோனது. ஒரு செங்கல்லைக்கூட இதுவரை வாங்கவில்லை நடிகர் சங்கம். ஜெயலலிதா இடம்கொடுத்தும் அதை அப்போது நடிகர் சங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
http://img.vikatan.com/jv/2015/09/zj...ges/p4a(1).jpg
2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, சிவாஜிக்கு கடற்கரையில் சிலை எழுப்பினார் கருணாநிதி. சிவாஜிக்கு சிலைவைத்த கருணாநிதியே நிச்சயம் மணிமண்டபத்தையும் கட்டித் தருவார் என சிவாஜி ரசிகர்கள் நம்பியிருந்தனர். அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு மணிமண்டபம் அமைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
நடிகர் சங்கத்தின் மெத்தனத்தை ஜெயலலிதாவே உடைத்திருக்கிறார். ‘மணிமண்டபம் கட்டப்படும்’ என்கிற அறிவிப்பை அவர் வெளியிட்டபோது அதைச் சொல்லியிருக்கிறார். ‘‘மணிமண்டபத்தை நடிகர் சங்கமே அமைக்கும் என்றதால், அரசு மணிமண்டபம் கட்ட நடவடிக்கையை எடுக்கவில்லை. ‘மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும்’ என அப்போதே நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கியிருப்பேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. நடிகர் விஷாலும் தன் பங்குக்குச் சீறியிருக்கிறார். ‘நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கி 12 ஆண்டுகள் கடந்தும் மணிமண்டபம் அமைக்கவில்லை. இது நடிகர் சங்கத்துக்கு அவமானம். இதில் இருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ள முடிகிறது’ என சொல்லியிருக்கிறார்.
சிவாஜி சமூகநலப் பேரவை’தான் மணிமண்டபத்துக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘தமிழக கலைக்கு அடையாளமாகத் திகழ்ந்த சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப் போராடுவதே வேதனையாக இருக்கிறது. நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டுவதில் அக்கறை காட்டவில்லை. வெறும் வாய் வார்த்தைகளில்தான் நடிகர் திலகத்தைப் புகழ்ந்து வருகிறார்கள். செயலில் எதுவும் இல்லை. இதற்காகத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நாங்கள் கடிதம் எழுதி வந்தோம். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக மனுக் கொடுத்தோம். நடிகர் திலகத்தை திரைத் துறையும் தமிழக அரசும் கண்டுகொள்ளாததால் கடந்த மாதம் 21-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அரசின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்’’ என்றார்.
‘சிவாஜிக்கு அரசே மணிமண்டபம் கட்டும்’ என்கிற அறிவிப்பை ஜெயலலிதா திடீரென்று அறிவிக்கக் காரணம் என்ன? சிவாஜி சமூலநலப் பேரவை சார்பில் 21-07-2015 அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருமாவளவன், தமிழிசை செளந்தரராஜன் என முக்கிய கட்சித் தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இதன்பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ‘மணிமண்டபத்தை நடிகர் சங்கம் கட்டவில்லை’ என ஜெயலலிதா சொல்லியிருப்பதன் மூலம் சரத்குமார் அணிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். விஷாலின் ரியாக்*ஷனும் அதைத்தான் காட்டுகிறது. சென்னை கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘சிவாஜியின் சிலையை அங்கிருந்து அகற்றலாம்’ என்று சொன்னது அரசு. இதற்கு சிவாஜி ரசிகர்களோடு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு சிலை அகற்றப்படவில்லை.
‘அரசே மணிமண்டபம் கட்டும்’ என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் சிவாஜி சிலையின் நிலைப்பாட்டில் அரசின் முடிவையும் அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
[IMG]http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4.jpg[/IMG]
திறப்புவிழா எப்போது?
திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் கே.என்.நேரு, சட்டசபையில் பேசி சிலை அமைப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு சிவாஜி வாழ்ந்த பகுதியான பாலக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சிவாஜி ரசிகர் மன்றத்தின் செலவில் சிலை வடிவமைக்கப்பட்டு அந்த இடத்தில் நிறுவப்பட்டது. எல்லாப் பணிகளும் முடிந்த நிலையில் திறப்புவிழா மட்டும் நடக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இன்றுவரை திறப்பு விழா காணாமல் கடந்த 5 வருடங்களாகத் துணியால் மூடி கிடக்கிறது சிவாஜி சிலை.
barani,
ஃபோன் வயர் பிஞ்சு சில மணி நேரமாச்ச்சு
தமிழை தமிழாக தமிழால் தமிழ் பேச கற்றுக்கொடுத்த தவப்புதல்வனுக்கு அல்ல ! தமிழ் பண்பாட்டுக்கு அவமானம்!
கை காசை போட்டு நன்றி போஸ்டர் அடித்த ரசிகனே போஸ்டர் ஒட்டிய ஈரம் காய்வதற்குள் உனக்கு கிடைத்த வெகுமதியை பார் - உன் தலைவனுக்கு தமிழகத்தில் கொடுத்த மரியாதையை பார் - பாழாய் போன அரசியல் சாக்கடையால் இந்த தமிழன் படும் பாடை பார் - உன் ஒரு சிலையால் அவர்கள் நிம்மதி கெடுகிறதம்
நல்லா இருங்க
அன்பு நண்பர்களே !
நான் அரசியல்வாதிகளை புகழ்ந்து கவிதை எழுத வேண்டாம், அவர்கள் தங்களுக்குள் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக சிவாஜிக்கு பெருமை சேர்க்கும்
விசயங்களிலும் இடைஞ்சல் செய்வார்கள் என்று நண்பர் ஆதவன் ரவி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்! ஒரு பண்பாளர் தமிழ் கலாசாரம்
அது, இதுவென்று கதை அ ள ந்தார்! நான் சொன்னதுக்கு அர்த்தம் இப்போது புரிந்ததா? கருணாநிதி வெய்த சிலை இருக்க கூடாது என்ற காழ்புணர்ச்சி!
சிவாஜி தமிழ்நாட்டில் பிறக்க என்ன பாவம் செய்தாரோ தெரியவில்லை!
திரு பிரபுவும், திரு ராம்குமாரும் அப்பாவின் சிலை இருந்தாலென்ன எடுதாலென்ன அம்மாவுக்கு சரணம் பாடி சாந்தி வளாகத்தில் multiplex கட்டிக்கொண்டு
சந்தோசமாக இருக்கட்டும் !
Thagudhi illadhavargal naattai aandaal indha naadum naattumakkalum naasamaaidhaan povaargal.
SINDHAI SEYAL ELLAAME FRAUDuthanam..!!!
Idhey idathil irukka adhu enna UYIR THOZHI Silayaa? Saadhharana Sivaji Silaidhaane !!!
500 roobai, sarakku bottle, biriyani potlathirkku vilai pogum thamizh makkal dhaane....endra ninaippu sila ADANGAAPIDAARIGALUKKU. Dharmaththin kaaladiyil indha pidaarigal adanguvadhu urudhi...!!!
VAYIRU ERINDHU SAABAM IDUGIREN..INDHA MANNIN ASAL VITHTHU SIVAJI ENBADHU UNMAYAANAAL INDHA AATCHI MANNODU MANNAAGA POGATTUM. iPPODHU NADAKKUM KAATAATCHIYE IVAGALUDAYA KADAISI AATCHIYAAGA POGAKADAVADHU...!!!!!
RKS
The only reason the statue has to be removed is because it was done by MK. JJ had 5 years to do something for the late legend from 2001 and 2006. She did nothing. I am puzzled as to how people like Kamal and Rajni congratulated JJ for the mandapam. They should have known her sinister motives.
எந்த அப்போனட பணத்தில் எல்லோருக்கும் மணிமண்டபம் கட்டினார்களோ அந்த பணத்தில் தான் பல் நல்ல காரியங்கள் நாட்டுக்கு செய்த நல்ல மனிதர் சிவாஜிக்கும் கட்ட போகிறார்கள்.தமிழென்று நில்லடா தமிலனேன்றும் நில்லடா
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்பது சிவாஜி ரசிகர்களின் கருத்து மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் பொதுமக்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஆனால் அரசின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது. இந்த வாதத்தை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்கலாம் ஆனால் தர்மம், நியாயம், மனசாட்சி உள்ளிட்ட யாராலும் ஏற்க முடியாத நிலைப்பாடாகும். மணிமண்டபம் கட்டப்படும் என்கின்ற அறிவிப்பு நமது உள்ளத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சியை அரசின் நிலைப்பாடு மறக்கடிக்கச் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் சிலையில் தான் விழவேண்டும் என்கின்ற அளவிற்கு பல்வேறு இடங்களில் சாலைகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு தலைவர்களின் சிலைகள் சாலைகளின் நடுவில் தான் அமைந்துள்ளன. அவையெல்லாம் ஏற்படுத்தாத இடைஞ்சலையா நடிகர் திலகத்திற்கென அமைக்கப்பட்டுள்ள சிலை ஏற்படுத்தப்போகிறது.
சிலையை எடுப்பதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் தமிழினத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றும் நடிகர் திலகத்திற்கு இது ஒரு அவமரியாதையாகத்தான் வரலாறு சித்தரிக்கும். அதுதான் உண்மையும் கூட. அப்படி அகற்றித்தான் தீரவேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், அதே கடற்கரை காமராஜர் சாலையில் காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் இடையில், குறிப்பாக காமராஜரின் சிலையை ஒட்டி அதற்கருகிலேயே நடிகர் திலகத்தின் சிலை அமைக்கவேண்டும். மணிமண்டபத்திற்கெனத் தனியே சிலை செய்து வைக்க வேண்டும்.
"நேத்து நான் குடுத்த
முட்டாயெல்லாம் கக்கு" -என
சண்டையிடும்
சின்னப் பிள்ளைகள் போல,
நேற்றுச் சொன்ன
நன்றிகளை
வாபஸ் கோரப்போவதில்லை.
ஆனந்தக் கண்ணீர்
காய்வதற்கு முன்பே
அழ வைத்ததற்காக
கோபப்படப் போவதில்லை.
அப்போது சொன்ன
நன்றியெல்லாம் பொய்யென்று
பொய் சொல்லப் போவதில்லை.
சத்திய வார்த்தைகள் விடுத்து
சாக்கடைப் பேச்சு
பேசப் போவதில்லை.
ஆத்திரமாய்க் காலுதைத்து
அரசியல் சகதியை
அப்பிக் கொள்ளப் போவதில்லை.
அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
ஆதங்கப் பள்ளத்தில்
விழப் போதில்லை.
பொய்யான அனுதாபங்கள்..
போலியான கோபங்கள்..
ரகசியச் சிரிப்புகள்..
முதுகுக்குப் பின் எள்ளி
நகையாடும் முகமில்லா
முகங்கள்..
எதையும் கண்டுகொள்ளப்
போதில்லை.
உத்தமரை நேசிக்கும்
பெருங்கூட்டத்தின் மத்தியில்
ஒரே ஒரு கேள்வி மட்டும்
உண்டு..
நல்லது நடக்குமென்றும்,
அதே இடத்தில் நிலைக்குமென்றும்
நாங்கள் வைத்த நம்பிக்கையை
அகற்றிய பின்
எங்கே வைப்பீர்கள்..?
Sent from my GT-S6312 using Tapatalk
"அரசின் நிலைப்பாடு " .. "நீதிமன்றம் கருதினால்" .. அடங்கப்பா ..உலக நடிப்புடா சாமி !
மணிமண்டபம் கட்டுறாங்கண்ணு சொன்னா 'இதய தெய்வம்' 'புரட்சித் தலைவி' .. சிலையை தூக்குனா நேரடியா பெயர் கூட சொல்லமாட்டாங்களாம் .. அரசு ..நீதிமன்றம் ..
இதே கருணாநிதியா இருந்தா அவர் பரம்பரையையவே இழுத்து வசை பாடியிருப்பார்கள் .
இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ..இதே நடிகர் திலகம் திரியியையே அதிமுக-வுக்கு ஓட்டு கேட்கும் தளமாக மாற்றியவர்கள் தானே .
The happiness of News regarding Mani Mandapam & Veera Pandiya Kattabomman Release vanished yesterday on hearing the news of shifting the statue of NT.Numerous statues of various prominent leaders ,famous personalities are there in Chennai & other places in State , but repeated instances of removing NT statue is really disheartening . Now it is duty of Nadigar Sangam to voice their opinion in this regard.
No national recognition , proper state recognition while acting -for King & God of Acting
As quoted in an article in newspaper on next day of his death - Sivaji Sir's death teaches us how not to treat an actor
This phrase unfortunately in made valid till now
We can only remember the Vasantha Maligai Dialogue ' SILAYAI AGATRA THUNINTHA INTHA SAMRAJYAM MANNODU MANNAGA POGATTUM"
நாங்கதான் அப்பவே சொன்னோம்ல...
மணிமண்டப அறிவிப்புக்காக எல்லோரும் நன்றி மழை பொழிந்தபோதே சொன்னோம்ல..
ஜெயலலிதா புல்லுக்கடியில் பதுங்கியிருக்கும் பாம்பு. அதன் குணத்தைக் காட்டாமல் விடாதுன்னு சொன்னோம்ல..
மணிமண்டப அறிவிப்பே (வெறும் அறிவிப்புதான்) சிலையை அகற்றும் வேலைக்கான முன்னோட்டம் என்று சொன்னோம்ல
சென்னையில் மட்டும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக 143 சிலைகள் இருக்கின்றன. அவற்றை எப்போது அகற்றப் போகிறீர்கள் என்று எந்த நடிகனாவது கேட்டானா?.
இனி எந்த நடிகனாவது மேடையில் சிவாஜி பெயரை சொல்லிப்பார்க்கட்டும்.
சிலைக்கடியில் இருக்கும் கருணாநிதி பெயர் தாங்கிய சிலை திறப்பு விழா கல்வெட்டை மட்டும் அகற்றிவிட்டால் 'போக்குவரத்து இடைஞ்சல்' எல்லாம் காணாமல் போய்விடும்.
திருச்சியில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் அவ்வளவு பெரிய ரவுண்டானா மத்தியில் இன்னும் போர்த்தப்பட்டு இருக்கும் நடிகர்திலகத்தின் சிலையை திறக்க அனுமதிப்பதில் இந்த அரசுக்கு என்ன கேடு?.
ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டு இருக்கும்போது நேற்று ஒட்டுமொத்த சிவாஜி குடும்பமும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து, பாராட்டு, நன்றி.
தாங்கலைப்பா..
"காமராஜர் சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை அகற்றி அதை புதிதாக கட்டவிருக்கும் மணிமண்டபத்தில் வைக்க அரசு உத்தேசித்துள்ளது" என்று அரசு வழக்கறிஞர் சொல்ல..
"மணிமண்டபம் எப்போது கட்டப் போகிறீர்கள்?. அதுவரை சிலையின் நிலையென்ன?" என்று நீதிபதி கேட்க, இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு வழக்கறிஞர் திணறியபடி பதில் சொல்ல இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார்.
நல்ல வேளை, இந்த நீதிபதியாவது "குமாரசாமி" போல இல்லாமல் போனாரே.
Our hopes are with Mr KC and I am confident that he will come out with flying colours in High Court if not
at Supreme Court. Mr KC is the real THALAPATHY.
110-வது விதியின் கீழ் தினமும் பத்து அறிவிப்புகளை பிட் நோட்டீஸ் போல படித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்தில் மேஜைகளை மாற்ற வேண்டிய அளவுக்கு விரிசல்கள். (பின்னே இந்த தட்டு தட்டினால்?)
ஆனால், அறிவித்தவைஎல்லாம் பத்தோடு பதினொன்று என்பதுபோல 110-த்தோடு 111. அவ்வளவே.
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் திரு சந்திரசேகர் சார் ,
சென்னையில் தலைவர் சிவாஜி சிலை அதே இடத்தில் நிரந்தரமாக நீடிக்க வாய்ப்பு உள்ளதா? சட்டப்படி இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தை அணுக,
முடியுமா? தமிழ்நாட்டில் உண்மையிலேயே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நூற்றுகணக்கான அரசியல் தலைவர்களின் சிலைகள் உள்ளன!
அவற்றை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் வாதிட முடியாதா? தாங்கள் சிரமம் பார்க்காமல் சிவாஜி ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு
அன்புடன் வேண்டி கொள்கிறேன் !
நன்றி ! வணக்கம்!
முதலில் 'புதிய தலைமைச் செயலகம்' இடிக்கப்பட முடியாததால் மருத்துவ மனையானது.
'அண்ணா நூற்றாண்டு நூலகம்' கல்யாண மண்டபமாக மாற்ற முயன்று, பூட்டிக் கிடக்கிறது.
'செம்மொழி பூங்கா' பாழடைந்து இப்போது சுடுகாடாக கிடக்கிறது.
இப்படி ஒவ்வொன்றாக துவங்கி இப்போது 'நடிகர்திலகம் சிலை'யில் வந்து நிற்கிறது.
இந்த இரண்டுவார அவகாசத்துக்குள், ஏற்கெனவே கண்ணகி சிலையை இடித்த லாரிக்காரனால் எதுவும் நடக்கலாம்.
சிவாஜி மீது மட்டும் பற்று கொண்ட உண்மையான சிவாஜி ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் !
இனி மேலாவது நாட்டு நடப்பை உற்று பாருங்கள்! சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் எந்த விசயத்தையும் ஜெயலலிதா அம்மையார் செய்ய மாட்டார்!
அவருக்கு சிவாஜி மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் எந்த காலத்திலும் இருந்ததில்லை! நான் கூறும் உண்மைக்கு, கடந்த காலங்களில் நடந்த
சில சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும்! அதை இப்போது கூறி அவருக்கு ஜால்ரா போடும் உண்மை புரியாத உண்மையான சிவாஜி ரசிகர்களின்
மனதினை புண்படுத்த விரும்பவில்லை! சிவாஜி புதல்வர்கள் இருக்கிறார்களே அவர்கள் இன்று அம்மா அம்மா என்று உருகுவார்கள்! நாளை ஆட்சி
மாற்றம் ஏற்பட்டால் பெரியப்பா பெரியப்பா என்று பாசம் கொள்வார்கள்! சிவாஜியின் நடிப்புக்கு மட்டும் நான் ரசிகனல்ல! இந்திய பிரதமராக இருந்தாலும்
தலை வணங்காத அவரின் தன்மானகுணம் எனக்கு அவரின் மேல் பெரிய மரியாதையை ஏற்படுத்தியது! அன்புக்கும் நட்புக்கும் மட்டுமே தலை வணங்கியவர்!
பதவியில் இருக்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் அவர் எவரிடமும் நேசம் பாராட்டியதில்லை!
சிவாஜிக்கு மட்டும் ரசிகர்களாக அவருக்கு மட்டும் தொண்டர்களாக இருப்போம் !
நன்றி !
Moderator's Note : Please stop bringing in political discussions into this thread.
Do restrain yourselves as such discussions has the potential to attract attention from unwanted quarters.
p/s: Hubbers who continue discussing politics will be given leave for a few days, to cool themselves down.