http://i1065.photobucket.com/albums/...psxcav4q2j.jpg
Printable View
எல்லோரும் விரைவில் நலம் பெற நானும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும்
பிரார்த்திக்கின்றோம்.எனது மகளும் மனைவியும் இன்றுதான் சென்னையில் இருந்து
மதுரை திரும்பு கின்றனர்.போன் கிடைக்காத தால் யாரையும் தொடர்புகொள்ள முடியாவில்லை.எனக்கும் டென்ஷன்.டிவியில் செய்திகளைநேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.முரளி சார் மற்றும் ஜெயக்குமார்,அம்பத்தூர் சுப்பிரமணியன்
அவர்களிடம் மட்டும் தான் நலம் விசாரிக்க முடிந்தது.
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் என்ற நமது தலைவரின் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து
எல்லோரும் பாடுவோம்.
தரிசனம்-2.
------------
தாவணிக் கனவுகள்.
----------------------
தொடர்கிறது...
---------------
தேசம்-
சிலருக்குப் பெயராயிருக்கிறது.
சிலருக்குத் தன்னையும், தனது
பெருமைக்குரிய அடையாளங்களையும் இணைத்துக் கட்டிய கயிறாயிருக்கிறது.
கனவிலும் நாட்டையே நினைக்கும் நம் கேப்டனைப்
போன்ற ஒரு சிலருக்குத்தான்,
தேசம்... உயிராயிருக்கிறது.
-----------------
காற்றோடு கதை பேசிப் பறக்கும் நம் தேசியக் கொடிக்கு
வணக்கம் சொல்லும் பொருட்டு
உடல் விறைத்து நின்று,
கம்பீரக் குரலில் "ஜெய்ஹிந்த்"
சொல்லும் நம்மவரை ஒரு
பாமரக் குரல் தொந்தரவு செய்கிறது.
எதிரே வெட்ட வெளியில் ஒரு
திண்டின் மேல், ஒரு கூரை கூட
இல்லாமல் காற்றாட அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு, மணியடித்து
மந்திரம் பாடும் பூசாரியின்
குரலே அது.
"பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு
நான் தருவேன்.
கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத்
தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா."
ஔவையாரின் கடவுள் வாழ்த்து.
உடை என்கிற பேரில் வெறும்
கோவணம் மட்டுமே அணிந்திருக்கும் அந்தப்
பூசாரிதான், நம்மவரின் கொடி
வணக்கத்தை இடையூறு
செய்து பாடிக் கொண்டிருக்கிறான்.
'பிள்ளையார் என்ன வரி தப்பாமல் கவனித்துக் கொண்டா இருக்கிறார்?' எனும்
நினைப்போ..என்னவோ..?
'கோலம் செய்' என்கிற
வார்த்தையைப் பாடவே இல்லை.
"ஷட் அப்" என்று ஒரு ஓசை மிகுந்த அதட்டல்.. நம் கேப்டனிடமிருந்து.
தூக்கி வாரிப் போடுகிறது..
கோவணப் பூசாரிக்கு(ம்). பயத்தோடு திரும்பிப் பார்ப்பவனைப் பார்த்து கேப்டன்
ஆத்திரமாய்க் கேட்கிறார்.
"இங்க நான் என்னய்யா
செஞ்சுக்கிட்டிருக்கேன்னு
நினைக்கிறே? இங்க நான்
என்ன செய்யிறேன்?"
அது, சும்மா ஒரு கேள்வியல்ல.
"உன்னைப் போல், பிறரைப்
போல்.. சராசரி மனிதன், தினமும் வழக்கமாகச் செய்யும்
வெகு சாதாரண செயல்களில் ஒன்றை நான் செய்யவில்லை. நாட்டைப் போற்றும் முக்கியமான கடமையைச் செய்கிறேன்." என்கிற பெருமிதமும், கர்வமும் தொனிக்கும் கேள்வி அது.
மேலும், கீழும் பார்த்து விட்டு
கோவணப் பூசாரி
சொல்கிறான்... "கொடி ஏத்துறீங்க."
கேப்டனின் அடுத்த கேள்வி
ஏவுகணை, பூசாரியைத்
துளைக்கிறது.
"என்ன கொடி... துணி காய
வைக்கிற கொடியா?" கேள்வியில் கலந்திருக்கும்
கேலி, அந்தக் கோவணப் பூசாரியை மையமாக வைத்து
தேசத்திற்கு மரியாதை செலுத்தாதோரையெல்லாம்
தாக்குகிறது.
"தேசியக் கொடி. National flag.
இதை ஏத்தும் போது என்ன
செய்யணும் தெரியுமா?"
கோவணப் பூசாரிக்குப் புதிது,
புதிதான கேள்விகள்..அதுவும்
அவனுக்கு அறிமுகமே இல்லாத கேள்விகள்..
"பாலும்,தேனும், பருப்பும்னு
திங்கிற பொருளாப் பாடுறியே..
தேசிய கீதம் தெரியுமா உனக்கு?"
சளைக்காமல் கேப்டன் கேட்கும் கேள்விகளால் சலித்துப் போன கோவணப்
பூசாரி, "என்ன எழவோ.. என்னென்னமோ கேக்குறானே?" என்கிறான்.
"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
யாருன்னு தெரியுமா உனக்கு?"
கேப்டன் விடுவதாயில்லை.
கோவணப் பூசாரி ஒரு விநாடி
ஆழ்ந்து யோசித்து விட்டுச்
சொல்கிறான்.. " போசு, பக்கத்துத் தெருவுல பொட்டிக்
கடை வச்சிருக்காருங்க. அவர
நமக்குத் தெரியுமுங்க. ஆனா..
நேதாஜி, சுபாசு.. அவங்க ரண்டு பேத்தையும் நமக்குப்
பழக்கமில்லீங்க."
அந்தப் பாமரப் பூசாரியினுடைய பொது அறிவுத் திறனை விட, அவனது
கோவணம் பெரியது.
இந்தப் பதிலால் திடுக்கிட்டுப்
போனது கேப்டன் மட்டுமல்ல.
நாமும்தான்.
மிகப் பெரிய மாளிகையொன்றில், ஒருத்தர்
எந்த அறையில் இருக்கிறார்
என்பது மற்றவருக்குத் தெரியாமல்.. ஒரு குடும்பமே
வசிப்பது எத்தனை அபத்தமோ..
அத்தனை அபத்தமானது..
இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் பற்றி, இந்த தேசத்திலேயே இருப்பவர்கள்
அறியாதிருப்பது.
இயக்கம், எழுத்து, நடிப்பு என
திரு.கே.பாக்யராஜ் பல துறைகளிலும் முத்திரை பதித்தவரென்றாலும், எழுதுகிற
பாக்யராஜ் எனக்குப் பிடித்தமானவர்.
"எமனுக்கு வாகனம் எதுன்னு
கேட்டா எருமைக்கடான்னு
சொல்லத் தெரியுதுல்ல..
தேசத்துக்காக உயிர் விட்ட
ஒரு தியாகியினுடைய பேர்
தெரியாது உனக்கு?"
- திட்டித் தீர்க்கும் கேப்டன்,
பூசாரியின் கையிலுள்ள மணியைப் பார்க்கிறார்.
"அது என்ன மேன்.. மணி?"
"புள்ளையாருக்கு அடிக்கிறதுக்குங்க."-பெருமையாய்ச் சொல்கிறான்
பூசாரி.
"என்ன அடிக்குறதுக்கு.. அந்தாளுக்கென்ன காது செகுடா? "
-இப்படியெல்லாம் பேசி நடிப்பதற்கு நிறைய தைரியம்
வேண்டும். நடிப்பதற்காக
எதையும் செய்யத் துணியும்
ஒரு வீரம் வேண்டும். நடிகர்
திலகத்திடம் அவைகள்
இருந்தன.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு 19
வருடங்களுக்கு முன்னால்,
இப்போது யாரை "அந்த ஆளு"
என்றாரோ.. அவருக்குத்
தந்தையாக "திருவிளையாடல்"
புரிந்தவர்தானே இவர்?
"நீயும் பரம்பரை, பரம்பரையா
அடிக்கிறேல்ல.. என்னிக்காவது ஒரு நாள் வந்திருக்காரா?
Country brutes ..
தெய்வத்து மேலே வைக்கிற
பக்தியைக் கூட தேசத்து மேலே
வைக்கிறதில்லே. கீப் கொயட்.."
-என்று சொல்லி விட்டு,
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும்
குழந்தையை மிரட்டுவதைப்
போல் வாயோடு விரல் வைத்து
"உஷ்" என்று அடக்கும்
பாவனை-
அவரது நடிப்புப் புத்தகத்தோடு
வழங்கப்பட்ட சந்தோஷ
இணைப்பு.
-------------------------------
கோவணப் பூசாரியின் சத்தம்
ஒடுக்கி விட்டு, கொடி பார்த்து
விறைப்பாய் நின்று, கம்பீரமாய்
சல்யூட் செய்து, 'ஜெய்ஹிந்த்'
சொல்லும் போது...
நமக்குத் தோன்கிறது...
கேப்டன் சிதம்பரமாக நம் கண்
முன்னே "ஜெய்ஹிந்த்" சொன்னவர்தானே, நடிகர் திலகமாகவும் நம்மிடையே
தோன்றி "ஜெய்ஹிந்த்" சொன்னது?
"ஜெய்ஹிந்த்"
- அந்த வார்த்தைதானே நடிகர்
திலகத்தின் ஒவ்வொரு மேடைப் பேச்சையும் முடித்து
வைத்தது?
அதுதானே.. எங்கள்
தேசபக்தியைத் துவக்கி
வைத்தது?
(...தொடரும்...)
சரியாந செம்மட்டி அடி...Quote:
மிகப் பெரிய மாளிகையொன்றில், ஒருத்தர்
எந்த அறையில் இருக்கிறார்
என்பது மற்றவருக்குத் தெரியாமல்.. ஒரு குடும்பமே
வசிப்பது எத்தனை அபத்தமோ..
அத்தனை அபத்தமானது..
இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் பற்றி, இந்த தேசத்திலேயே இருப்பவர்கள்
அறியாதிருப்பது.
அவருடைய அந்த ஒரு வார்த்தை ...1967ல் ஒரு சுனாமியையே தாங்கிய சக்தி வாய்ந்த மந்திரமாயிற்றே...Quote:
"ஜெய்ஹிந்த்"
- அந்த வார்த்தைதானே நடிகர்
திலகத்தின் ஒவ்வொரு மேடைப் பேச்சையும் முடித்து
வைத்தது?
அதுதானே.. எங்கள்
தேசபக்தியைத் துவக்கி
வைத்தது?