இன்று மக்கள் திலகத்தின்
புகழ் பாட புதிய மாத இதழ் - மதுரை மாநகரில் வெளியிடப்படவுள்ளது.
ஒளிவிளக்கு
https://s32.postimg.org/f8qq71v79/Mail.jpg
Printable View
இன்று மக்கள் திலகத்தின்
புகழ் பாட புதிய மாத இதழ் - மதுரை மாநகரில் வெளியிடப்படவுள்ளது.
ஒளிவிளக்கு
https://s32.postimg.org/f8qq71v79/Mail.jpg
நெஞ்சம் மறப்பதில்லை -8: எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சினை வந்ததேன்?
ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் பன்முகம் கொண்ட கலைஞர், கதை வசனகர்த்தா, பத்திரிகையாளர், ஸ்டுடியோ அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர்.
இவரது திரையுலக வாழ்க்கை 1941ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. முதல் படமாக 'மதன காமராஜன்' படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து 'நந்தனார்', 'ஒளவையார்', 'மிஸ் மாலினி', 'சம்சாரம்', 'மங்கம்மா சபதம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'மோட்டார் சுந்தரம்பிள்ளை', 'இரும்புத்திரை' போன்ற படங்களை கருப்பு வெள்ளையில் தயாரித்தார்.
இவரால் அதிகபொருட்செலவில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட 'சந்திரலேகா' படம்தான் இவருக்கு நலல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல இயக்குனரும் இவரே.
இந்தச் சூழ்நிலையில்தான் திரைப்படத் துறையில் சிலமாற்றங்கள் ஏற்பட்டன. கருப்பு வெள்ளை படம் எடுத்தவர்களெல்லாம் கலரில் படத்தை எடுக்கத் தொடங்கினார்கள். அப்படி எடுப்பதை பெருமையாகக் கருதினார்கள்.
எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கும் கலரில் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் தன்னை வைத்து கருப்பு வெள்ளைப் படங்களை தயாரித்தவர்களுக்கெல்லாம் கலரில் எடுப்பதற்கு, தானே முன்வந்து கால்ஷீட் கொடுத்து உதவினார். ஜி.என்.வேவலு மணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனத்தை 'படகோட்டி' படத்தை கலரில் எடுக்க வைத்தார். தன்னை வைத்து அதற்கு முன் எந்தப் படமும் எடுக்காத ஏவிஎம் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்து அழகான கலரில் 'அன்பே வா' படத்தைத் தயாரிக்க வைத்தார்.
விஜய வாஹினி நிறுவன பேனரில் 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நடித்தார்.கருப்பு வெள்ளையில் எம்.ஜி.ஆர். அவர்களை நாயகனாக வைத்து அதிகம் படங்களை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அவருடைய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்து, 'நல்ல நேரம்' படத்தை கலரில் எடுக்க வைத்தார்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் முதன்முதலில் நடிகராக அறிமுகமான 'சதிலீலாவதி' படத்திற்கு கதைவசனம் எழுதிய எஸ்.எஸ்.வாசன். இப்பொழுது எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து கலரில் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்தார் அதற்கான கதைகள் தேடப்பட்டன. இறுதியில் இந்தியில் வெளிவந்த தர்மேந்திரா, மும்தாஜ், மீனாகுமாரி நடித்த 'பூல் அவுர் பத்தார்' என்ற படத்தைத் தேர்வு செய்தார்கள்.
எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் படத்தைப் போட்டு காண்பித்தார்கள் திருடன், குடிகாரன், எல்லோரும் பயப்படுகின்ற அளவிற்கு முரடன், அவன் வாழ்கின்ற பகுதியில் யாருக்கும் அவனிடம் பழக்கமில்லை. அவனைப் பார்த்ததும் அனைவரும் பயந்து ஓடினார்கள். போலீசும் திருடன் என்பதால் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. திருடப்போன இடத்தில் ஒரு விதவைப் பெண்ணைப் பார்க்கிறான், வீட்டிற்கு அழைத்து வருகிறான். அவளை இறுதியில் திருமணம் செய்துக் கொள்கிறான். இடையில் திருட்டுக் கும்பலில் இருக்கும் ஒரு பெண் அவனைக் காதலிக்கிறாள்.
இப்படி போகிறது இந்தப்படத்தின் கதை.
படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். தமிழுக்கு ஏற்ற சில மாற்றங்களும், தன் படத்திற்கே உரித்தான சில கருத்துக்களையும் சொன்னார்.
சிறுவனாக இருக்கும்போது பசிக்காக திருடப் போனவன் திருடனாகி விட்டான். அதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தான். சில சுயநல கூட்டத்தினர் அவனை தங்களது தேவைகளுக்காக தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவனை உண்மையில் காதலித்துக் கொண்டிருந்தாள். திருடப்போன இடத்தில் ஆபத்தில் இருந்த ஒரு விதவைப் பெண்ணை காப்பாற்றி அழைத்து வருகிறான். அவளை சகோதரியாக நினைக்கிறான். அவளும் அவனைத் திருத்த முயற்சிக்கிறாள். அந்த ஊரில் திடீரென்று நடக்கும் தீவிபத்திலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றுகிறான். அப்பொழுது தீவிபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுகிறான். ஊரேஅவனைப் புரிந்துக் கொண்டு காப்பாற்ற முயற்சி செய்கிறது. கடவுளிடம் பிரார்த்தனை செய்து பாடல்களையும் பாடுகிறார்கள். இப்படி எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கின்றவகையில் சிலமாற்றங்கள் செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
அதன்படி படத்தின் திரைக்கதை வசனகர்த்தா கே.சொர்ணம் அதற்கான வேலைகளில் இறங்கினார். ஆரம்பத்தில் மாற்றங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் ஒத்துக் கொண்டதால் படப்பிடிப்பு ஆரம்பமாகியது.ப டத்திற்கு 'ஒளிவிளக்கு' என்று பெயர் வைத்தார்கள்.எம்.ஜி.ஆர்.அவர்களும் 'ஒளிவிளக்கு' படத்தை தான் நடிக்கும் படங்களின் பட்டியலில் 100வது படமாக அறிவித்தார்.
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்.சொன்ன மாற்றங்களை ஏற்றுக் கொணடவர்கள் பின்னாளில் கதைப்படி படத்தை முடிப்போம் என்று முரண்டு பிடித்தார்கள். அதனால் தொடர்ந்து நடந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நின்றது. பிறகு இரு தரப்பினரும் கலந்துப் பேசியதால் சமரசம் ஆகி படப்பிடிப்பும் தொடர்ந்தது.
எம்.ஜி.ஆர். இதில் குடிகாரனாக நடித்திருப்பதால், அதை மறுத்து குடிப்பது தவறு என்பதை அவரே பல வித தோற்றத்தில் வந்து பாடி நடித்து விளக்குகின்ற வகையில்,
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?
இல்லை...நீதான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு அகலும்...'
என்ற ஒரு பாடல்காட்சியைப் படமாக்கிச் சேர்த்தார்கள்.
அதே போல் கதைப்படி எம்.ஜி.ஆர்.தீவிபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்காக போராடுகின்ற போது,
'இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...
உள்ளமதில் உள்ளவரை
அள்ளி தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால்
மண்ணுலகம் என்னாகும்..'
என்றுஊர்மக்கள்ஒன்று கூடிப் பிராத்தனை செய்து பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியையும் படமாக்கிச் சேர்த்தார்கள்.
இந்தப் பாடல் காட்சிகள் கதைப்படி, எம்.ஜி.ஆர்.விருப்பப்படி படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. படத்திற்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட இந்தப் பிராத்தனைப் பாடல்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது நலம்பெற்று வரவேண்டுமென்று உண்மையிலேயே உலகம் முழுவதும் மக்களால் பாடப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பாடல் இது.
இந்தப் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகும் போது எல்லா தியேட்டர்களிலும் உண்மையிலேயே கையிலே கற்பூரம் ஏற்றிக் வைத்துக் கொண்டு ரசிர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள், அவற்றின் தயாரிப்பாளர்களோடு முரண்பாடு ஏற்பட்டு இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கிடையில்தான் தயாராகி வெளிவந்திருக்கின்றன. இதற்கு காரணம் அவரை வைத்து படம் எடுக்க வருகிறவர்களில் பலர் கதைப்படி படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ கதைப்படி என்பதை விட கருத்துப்படி என்பதற்குதான் முக்கியத்துவம் தருவார்.
தனது படத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கு நல்ல கருத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார். எதிர்மறைச் சிந்தனையை யாரிடமும் தன் படம் உருவாக்கிவிடக் கூடாது என்பதில்தான் அதிக அக்கறை அவருக்கு. அனைவருக்கும் பிடிக்கின்ற வகையில் ஜனரஞ்சகமாகவும் எடுக்க வேண்டுமென்று விரும்புவார்.
இதில் முரண்பாடு வரும்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு விடும். படம் வெளிவந்ததும் அது அள்ளித்தரும் வசூலைப் பார்த்ததும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதே தயாரிப்பாளர் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு ராமாவரம் தோட்டத்தில் வந்து நிற்பார் !
Courtesy : http://mlife.mtsindia.in/nd/?pid=169...து போக்கு&pag=HPAGES&anam=Oneindia&pi=5&rgn=tn
மாற்று திரியில் ஒருத்தர் நம்பளைப் பாத்து அரைவேக்காடு கால்வேக்காடு என்று திட்டி எழுதலாமா? என்று கேட்கிறார். அப்பிடி போடு. ஞாயமான கேள்வி கேட்டாருய்யா. அவரது கவனகத்துக்காக.
அரைவேக்காட்டு ஆட்கள், முட்டாள்கள், உளறல்கள் ( மாற்றுத் திரி பதிவு.நம்பர். 1828)
நம்பளைப் பார்த்து கேள்வியை கேட்பவரீல் இருந்து ஒருபக்கம் எல்லாரும் காமராஜரை புகழுவார்கள். அதே நேரம் காமராஜரை ‘சுத்தமாக தலமை குணம் இ்லலாத அரசியல்வாதி’‘அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்’ ‘தமிழகத்தின் நலன்களை புறக்கணித்தவர் (சபாஸ்) ‘இரண்டும் கெட்டான் அரசியல் ஞானசூனியம்’ ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்’ என்று அவர்கள் திரியில் காமராஜை திட்டி (அவர்கள் திரி பதிவு நம்பர் 1838) பதிவு போடுவார்கள். (பொளைச்சு போகட்டும் என்று கடைசியிலே நல்ல மனம் என்று பாராட்டு)
நம்பளைப் பாத்து பொய்யர்கள் என்று அடிக்கடி அந்தப் பக்கத்திலே இருந்து சொல்லுவார்கள். பத்து நாள் முன்னாடி சொன்னது இன்னும் அப்பிடியே இருக்கு.
நம்பளைப் பாத்து அரைவேக்காடு என்று எழுதலாமா? நெறியாளர் ஒன்றும் சொன்னதாக தெரியலை என்று கேள்வி கேட்கும் ஞாயபதிகள், தங்கள் திரியை படிக்கிறதே இல்லை போல இருக்குது. நாம்பளாவது இரண்டு திரியையும் படிக்கறோம். ஆனால், அவர்கள் நம்ப திரியை மட்டும்தான் படிக்கிறாங்க போல இருக்கு.
தங்கள் திரிய கூட படிக்காமல், மக்கள் திலகம் அந்த அளவுக்கு அவங்களை ஈர்ப்பு செய்கிறார். இதே மாதரி எப்போதும் உங்க திரிய படிக்காமல் எங்க திரிய மட்டுமே படியுங்கள்.
மிகவும் நன்றி.
http://i63.tinypic.com/5drp50.jpg
‘‘என்னை ஏய்ப்பதற்கும் சாய்ப்பதற்கும் யார் நினைத்தும் ஆவதில்லை வீண்தான்’’
_ ஊருக்கு உழைப்பவன் படத்தில் புரட்சித் தலைவர்.
http://i63.tinypic.com/sox2pv.jpg
மக்கள் திலகத்துடன், அவரை துதி பாடி, அவரின் புகழை துணிச்சலாக எந்த மேடையிலும் பேசும் தைரியம் படைத்த, நன்றி மறவாத நல்ல நடிகை திருமதி லதா அவர்கள்
இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள் .
http://i67.tinypic.com/r9hd10.jpg
பொன்மனச்செம்மலே!
என்
பொழுத்து புலரக்
கூவிய சேவலே!
உனக்கென்று
நான் எழுதிய
முதல் வரியில்தான்
உலகுக்கு
என் -
முகவரி
தெரிய வந்தது!
என் கவிதா விலாசம்..
உன்னால்தான் -
விலாசமுள்ள
கவிதையாயிற்று!
இந்த நாட்டுக்குச்
சோறிடு முன்னரே
என் -
பாட்டுக்குச்
சோறிட்டவன் நீ!
என்னை
வறுமைக் கடல்மீட்டு..
வாழ்க்கைக் கரை சேர்த்த
படகோட்டியே!
கருக்கிருட்டில்
என்
கண்களில் தென்பட்ட
கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை
நீ பாடிய பிறகுதான்
நாடு பாடியது...
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது!
இல்லையென்று
இரப்போர்க்கு
இல்லையென்று
சொல்லாதவன்...
இன்று -
இல்லையென்று போனான்...
இனி நான் -
யாரைப்பாடுவேன்...?
புரட்சித் தலைவனே!
நீ
இருந்தபோது -
உன் அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...
இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து -
நாடு அழுதது!
வைகை யாறும்
பொன்னி யாறும்
வற்றிப்போகலாம்;
நீ
வற்றாத
வரலாறல்லவா!
கலைத்தாயின்
தலைமகனே!
கோட்டையில்
கொலுவிருந்தால் மட்டும்
நீ
'சி.எம்' அல்ல...
கோடம்பாக்கத்திலும்
கர்ஜித்துக்கொண்டிருந்த
சீயம் தான்!
இன்று
படத்தை நிரப்பப்
பலர் இருக்கிறார்கள்;
உன் இடத்தை நிரப்பத்தான்
எவருமே இல்லை!
நான்
மனிதர்களில் -
நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆனால்,
நடிகர்களில்
நான் பார்த்த
முதல் மனிதன் நீதான்!
அதனால்தான்...
நீ
நோயுற்ற போது -
தங்களது
வாழ்நாட்களின் மிச்சத்தை
உன் கணக்கில்
வரவு வைத்துவிட்டு -
எத்துணையோ பேர்
தங்கள் கணக்கை
முடித்துக்கொண்டு
தீக்குளித்தார்கள்!
என்
இதய தெய்வமே!
உன்
இறப்பில்
நான்
இரண்டாவது முறையாக
என்
தாயை இழந்தேன்!
இனி -
நான் யாரைப் பாடுவேன்...!
எம்.ஜி.ஆர் இறந்த போது கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது.
தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாறு நூலான, 'கடல் தாமரை'யில், தி.முத்துகிருஷ்ணன் எழுதியது:
'எனக்கு ஒரு ஆசை உண்டு. தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; அவருக்கு, நான் மாலை அணிவித்து, மகிழ வேண்டும். அவர், என்னை, 'வாழ்க...' என்று, வாயார வாழ்த்த வேண்டும்...' என்று எம்.ஜி.ஆர்., போற்றி புகழ்ந்து பேசிய, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின், 32வது நினைவு தினம், வரும் ஜூலை, 21ம்தேதி வருகிறது.
எம்.ஜி.ஆர்., எங்கே இப்படி பேசினார், இன்னும் என்னவெல்லாம் பேசினார் என்பதை அறிந்து கொண்டால், அவர், தினமலர் நாளிதழ் மீதும், ஆசிரியர் டி.வி.ஆர்., மீதும் வைத்திருந்த அன்பையும், மரியாதையையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மார்ச், 13, 1984ல், தினமலர் நாளிதழின் ஈரோடு பதிப்பை, துவக்கி வைத்து பேசுகையில், 'திருநெல்வேலி பதிப்பு, தினமலர் நாளிதழை படித்த போது, சென்னையில், தினமலர் பதிப்பை கொண்டு வர வேண்டுமென்று, அதன் நிருபரிடம் கூறினேன். சென்னையில் இருந்து, தினமலர் நாளிதழ் வெளி வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
'சில நேரங்களில், மற்றவர்களிடம் இருந்து கிடைக்காத தகவல்களை, தினமலர் நாளிதழ் மூலம் தெரிந்து கொண்டதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும் பத்திரிகை. அப்பணியை சிறப்பாக செய்கிறது தினமலர் நாளிதழ்.
'நல்ல தமிழில், சீரிய கருத்துகளை கூறும் தினமலர் நாளிதழுக்கு, 'மலர்' என்று பெயர் வைத்தது, மிக பொருத்தமானது. தினமலர் இதழில், குழந்தைகள் பட கதை ஒன்று வெளி வருகிறது. அப்பட கதைகளை, என் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காட்டி, படிக்க வைக்கிறேன். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு மற்றும் பாசம் ஆகியவற்றை உணர்த்த வேண்டும்.
'அந்த வேலையை, தினமலர் நாளிதழ் செவ்வனே செய்கிறது. 'இவ்வளவு படங்களுடன் பத்திரிகை வெளியிடுகின்றனரே...' என, தினமலர் நாளிதழ் மீது, பலருக்கு பொறாமையும், 'நம்மால் இது போல செய்ய முடியவில்லையே...' என்ற இயலாமையில் கோபமும், கவலையும் அடைகின்றனர். மேலும், ஞாயிற்றுகிழமை தோறும் வெளிவரும், வாரமலர் இதழ் பார்த்து, பலரும் அது போல தர ஆரம்பித்துள்ளனர். இப்படி பல சிறப்புகளுடன் வரும், தினமலர் நாளிதழ் எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
http://i65.tinypic.com/ff05eq.jpg
வள்ளலே!
எங்கள் வாழ்வே!!
http://i67.tinypic.com/2vazk1d.jpg
உயிரே!
எங்கள் உணர்வே!!
https://s32.postimg.org/c8o29fpol/IM...717_233106.jpg
ஒளிவிளக்கு மாத இதழ் வெளியிட்டபோது -
நடிகர் செந்தில் - இயக்குனர் T.P.GAJENDIRAN - Senior journalist major Dasan - Madurai s.s.Ramakrishnan.
21.8.2016
சென்னை - தேவிபாரடைஸ் அரங்கில் மக்கள் திலகத்தின் ''ரிக்ஷக்காரன் '' டிஜிட்டல் டிரைலர் வெளியீடு
நன்றி - திரு கிருஷ்ணகுமார் - கோவை