தினமணி -07/03/2017
http://i64.tinypic.com/21cb0ae.jpg
Printable View
தினமணி -07/03/2017
http://i64.tinypic.com/21cb0ae.jpg
திரு.தம்பாச்சாரி அவர்களின் மகன், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரு.லோகநாதன் மற்றும் திரு.இளங்கோ தம்பதியினர் .
http://i64.tinypic.com/npktac.jpg
Nice to see U all.
Mr.Essvee guided me how to login and access this forum. due to network and computer configuration problems unable to access all these days. thanks Mr.Essvee Sir,
He often sending messages about MGR through whatsapp to me and i am reciprocate/responding . Though both we are staying in bangalore, unable to meet due to distance/work and pre occupation. Hope will meet Mr.Essvee Sir shortly.
மக்கள் திலகத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1972ல் சிங்கப்பூர் அரசின் அழைப்பை ஏற்று அங்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். முத்துராமன், நாகேஷ், செல்வி. ஜெயலலிதா போன்றோருடன் சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தினார். சிங்கப்பூரில் ராணி எலிசபெத்துக்குப் பிறகு புரட்சித் தலைவருக்குத்தான் வாகனங்களை நிறுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மலேசியாவுக்கும் சென்றார். மலேசியா விமான நிலையத்தில் புரட்சித் தலைவரை காண கூட்டம் அலைமோதியது.
சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் சென்றபோது எடுக்கப்பட்ட படம்.
http://i65.tinypic.com/ff937p.jpg
மலேசியா விமான நிலையத்தில் மக்கள் திலகத்தை வரவேற்க திரண்ட கூட்டம். அதுபற்றி மலேசிய பத்திரிகையில் வந்த செய்தி. எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் புரியவில்லை. மலேசிய உச்சரிப்பு என்று நினைக்கிறேன்.
http://i67.tinypic.com/rutx7a.jpg
மக்கள் திலகம் மலேசியா சென்றபோது மலேசிய நடிகர் ராம்லி மக்கள் திலகத்தை வரவேற்றிருக்கிறார். மக்கள் திலகத்தைக் காண ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர். இங்கு போலவே அங்கும் வாகனத்தில் ஏறி மைதானத்தில் மக்கள் திலகம் உலா வந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிய செய்தி.
http://i65.tinypic.com/23koj68.jpg
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் '' 10.3.1972
இன்று 45 ஆண்டுகள் நிறைவு தினம் . மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் ராசியான திரைப்படம் . எம்ஜிஆரின் இளமையான தோற்றம் , சுறுசுறுப்பான நடிப்பு ,கருத்துள்ள கொள்கை பாடல் ,இனிமையான காதல் பாடல்கள் , சூப்பர் சண்டை காட்சிகள் என்று ரசிகர்களுக்கு விருந்த தந்த படம் நல்ல நேரம் .
நல்ல நேரம் - தந்த வெற்றியை தொடர்ந்து 1972ல் எம்ஜிஆருக்கு அவருடைய ரசிகர்களுக்கும் தொடர் வெற்றிகள் .
1. ஏப்ரல் -1972 ..... ராமன் தேடிய சீதை .
2. ஜூன் - 1972 ......நான் ஏன் பிறந்தேன்
3. ஜூலை -1972 பாரத் பட்டம் வெற்றி விழாக்கள்
4. செப்டம்பர் -1972 அன்னமிட்டகை
5. அக்டோபர் 1972 புரட்சி நடிகர் ..மக்களால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
6. அக்டோபர் 1972 .இதயவீணை -1972
இன்னும் சாதனைகள் தொடரும் ......
http://i67.tinypic.com/27xnnso.jpg
கே.ஆர்.விஜயாவை பெண் கேட்கப் போகும்போது ராஜகுமாரன் போல அலங்காரம் செய்துகொண்டு மஞ்சள் நிற உடையில் தங்க நிற தேவதூதனாக மாடிப் படிகளில் மக்கள் திலகம் தாவிக் குதித்து இறங்கி வருவார். அவரை தேங்காய் சீனிவாசன் கண் கொட்டாமல் பார்ப்பார். மக்கள் திலகம் காரணம் கேட்க, தேங்காய் சீனிவாசன், ‘இது அங்கமா? இல்ல தங்கமா..ன்னு பார்த்தேன்’ என்பார்.
நல்ல நேரத்தில் எங்கள் தங்கம்
http://i67.tinypic.com/rtqf51.jpg
http://s16.postimg.org/70hfi0hdt/IMG_3651.jpg
Courtesy- Facebook
விரைவில் வெளியாகிறது
http://i66.tinypic.com/1183zmv.jpg
உலகம் சுற்றும் வாலிபன் மே மாதம் ரிலீஸ் ஆகலாம். அதற்கு முன்னதாகவே ஏப்ரலில் நினைத்ததை முடிப்பவன் ரிலீஸ் ஆகிவிடும் என்ற இரட்டை மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
http://i63.tinypic.com/29qnwgl.jpg
http://s12.postimg.org/rdglcjzzd/IMG_3654.jpg
Courtesy- Facebook
நன்றி - அண்ணன் ஏ.ஆர். ஹூசைன் முகநூல் பக்கத்தில் அவர் நேரில் பார்த்த அனுபவம். ஹூசைன் நமது திரியிலும் உறுப்பினர். சில பதிவுகள் இட்டுள்ளார். இனி அவரின் முகநூல் பதிவு....
1980 புரட்சி தலைவரின் ஆட்சி கலைக்கபட்டதால் அப்பொழுது அதிமுகவினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர் , அப்போது கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர் அதில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது , இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கபட்ட தொண்டர்களை நலம் விசாரிக்க புறப்பட்டு சென்றார் புரட்சி தலைவர் , தஞ்சாவூர் ,கும்பகோணம் , வழியாக பண்ருட்டிக்கு வந்தார் அந்த காலகட்டத்தில் நான் அங்கிருந்தேன்.
போராட்டத்தில் கலந்து கொண்டு முழங்காலில் பலத்த அடிபட்டு பாதிக்கப் பட்டிருந்தார் அதிமுக முக்கிய பிரமுகர் , வழக்கறிஞர் அவர் வீடு இருந்த பகுதி குறுகலான தெரு , தலைவர் வரும் செய்தியை ஆட்டோவில் ஒலிபரப்பு செய்து விட்டனர் உள்ளுர்கட்சியினர் , கூட்டம் கூடிவிட்டது , நான் எப்படியும் தலைவர் வக்கீல் வீட்டிற்கு தான் வருவார் அவரை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் வீட்டின் வாசலிலேயே காத்திருந்தேன் ,மாலை ஐந்து மணியிருக்கும் தெருவினுள் கார்கள் நுழைந்தன ஒவ்வொரு காரின் பின்னே ஒரு கூட்டம் ஓடியது , லோடுவேன்போல் ஒரு வேனில் இருந்து தலைவர் இறங்கினார் , வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி " நான் வருவதை அறிவித்தவர் யார் " என்று தான் ஆட்டோ பிரச்சாரம் செய்தவர் ஓடி சென்று "நான் தான் தலைவரே" என்றார்.
அவரை கோபத்துடன் பார்த்து" நான் பொது கூட்டத்திற்கா வந்திருக்கிறேன்.. இந்த சின்ன தெருவில் அதிகமான மக்கள் கூடினால் அவர்களுக்கு சிரமம் ஏற்படாதா..?" என சொல்லிவிட்டு உள்ளே சென்றார் , பாதிக்கபட்ட வழக்கறிஞரை நலம் விசாரித்து விட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்து இரு கைகளை கட்டியபடி வாசலில் நின்றார் , எதிரே மக்கள்" புரட்சி தலைவர் வாழ்க" என கோஷமிட்டனர்.
தலைவரின் பாதுகாவலர்கள் ஒருவரையொரு கைகளை இணைத்து சங்கிலி போல் அரண் அமைத்து நின்றனர் , அப்பொழுது யாரும் எதிர்பாராதது நடந்தது. கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் தலைவரை நோக்கி பாய்ந்து வந்தான் , சுதாரித்து கொண்ட தலைவர் மாட்டை அடக்கும் வீரர் போல் இடது காலை பின் வைத்து , இரு கைகளையும் முன் பக்கம் விறைப்பாய் வைத்தார். அதற்குள் அவரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் அந்த இளைஞனை அலேக்காக தூக்கி வீசிவிட்டார்.
இதை கண்ண தெரே பார்த்த எனக்கு மெய்சிலிர்த்து விட்டது , தலைவரின் முன்னெச்சரிக்கை தன்மையை நேரில் கண்டேன்.(இந்த சம்பவத்தை தலைவரின் மெய்க்காப்பாளர் திரு.ராமகிருஷ்ணனை சந்தித்த போது நினவு கூர்ந்தேன்)
http://i64.tinypic.com/286uvc6.jpg
நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் புரட்சித் தலைவரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்கள். இடது பக்கம் ஓரம் அண்ணன் ஏ.ஆர். ஹூசைன்.
எந்த சூழ்நிலையிலும் முன்னெச்சரிக்கையாக இருந்து எதையும் சமாளிக்க நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்
http://i64.tinypic.com/2cwu8lh.jpg
1962-ம் வருடம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலம் சென்னை பிளாசா தியேட்டரில் ஒருவாரத்துக்கு தான் நடித்த படங்களை திரையிட்டு அதன் மூலம் கிடைத்த வசூலை தேசப் பாதுகாப்பு நிதிக்காக புரட்சித் தலைவர் கொடுத்துள்ளார்.
இந்தியா நலனுக்காக மட்டும் இல்லாமல் இலங்கை மக்களுக்கும் புரட்சித் தலைவர் உதவி இருக்கிறார். முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்களின் போராட்டத்துக்கு எவ்வளவோ உதவியுள்ளார்.
அதற்கு முன்னால் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை மக்களுக்கு உதவி இருக்கிறார். இலங்கையில் தீவிரவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடோடி மன்னன் படத்தின் வெளியீடு மூலம் கிடைத்த வசூல் நிதியைக் கொடுத்து உதவி இருக்கிறார் எட்டாவது வள்ளல் பெருமான்.
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ.... பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது.
மனிதர்களைக் கண்டு இரங்கும் பொன்மனச் செம்மலின் வள்ளல் தன்மை மொழி, இனம், ஜாதி, மதம், மாநிலம், நாடு ஆகிய எல்லைகளை கடந்தது.
http://i67.tinypic.com/a47in8.jpg
தனியார் தொலைக்காட்சிகளில் கடந்த வாரம் ஒளிபரப்பான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
04/03/2017 - சன் லைப் -வேட்டைக்காரன் -காலை 11 மணி .
முரசு - நினைத்ததை முடிப்பவன் - இரவு 7.30 மணி
05/03/2017
- சன் லைப் - தேடி வந்த மாப்பிள்ளை -இரவு 7 மணி
08/03/2017- சன் லைப் - புதிய பூமி - காலை 11 மணி
09/03/2017 - மெகா டிவி - தாய் சொல்லை தட்டாதே - பிற்பகல் 3 மணி
10/03/2017 - சன் லைப் - நான் ஆணையிட்டால் - காலை 11 மணி
12/03/2017 -- சன் லைப் - பல்லாண்டு வாழ்க - காலை 11 மணி
- முரசு - நீதிக்கு பின் பாசம் - இரவு 7.30 மணி
நேற்று முதல் (10/03/2017) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/ejgd4h.jpg
நேற்று (10/03/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .http://i63.tinypic.com/2mmwccz.jpg
சென்னை மகாலட்சுமியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் "
வெற்றி முரசு கொட்டும் 2 வது வாரம் .
முதல் வார வசூல் ரூ.1,40,000/-என்று திரையரங்க மேலாளர் தகவல் அளித்துள்ளார் .
மறு வெளியீட்டில் சத்யம் சினிமாஸில் 160 நாட்களும், பேபி ஆல்பட்டில் 190 நாட்களும் ஓடி சாதனை புரிந்த காவியம் .
அடிக்கடி ஜெயா டிவியில் ஒளிபரப்பபடும் ஒரே திரைப்படம்
உள்ளூர் கேபிள்கள் வழியாக அடிக்கடி ஒளிபரப்பாகும் திரைப்படம் .
http://i68.tinypic.com/292768m.jpg
நக்கீரன் வார இதழ்
http://i66.tinypic.com/2rdb59x.jpg
புதிய தலைமுறை வார இதழ் -16/03/2017
http://i67.tinypic.com/2rrwd4m.jpg
http://i68.tinypic.com/2ajaqsg.jpg
http://i63.tinypic.com/30lnims.jpg