https://scontent-yyz1-1.xx.fbcdn.net...f3&oe=5A753E27
Printable View
69 க்கும் 71 க்கும் வித்தியாசம் தெரியாமல்
குழம்பிப்போய்விட்டார் அங்கே
Sundar Rajan
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...c3&oe=5A6F69EC
Sundar Rajan ·
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
1983ம் ஆண்டு நமது நடிகர்திலகத்தின் நடிப்பில் வெளியான இமைகள் படபிடிப்பில் எடுத்த அருமையான புகைப்படம் உங்கள் பார்வைக்காக.
இந்த ஆண்...டில் திரையுலகில் ரஜினி, கமல் ஆகியோர் கோலோச்சி இருந்த நேரம்.
ஆனால் என்றும் நமது நடிகர்திலகத்தை வெல்ல யாரும் இல்லை என்பதை இந்த வருடமும் நிரூபித்தார்.
ஆம்,
1983ம் வருடம் 7 படங்கள் வெளிவந்தன.
14.01.1983 பெஜவாடா பொப்புலி (தெலுங்கு) 100 நாள்
26.01.1983 நீதிபதி 175 நாள்
14.04.1983 இமைகள் 70 நாள்
18.06.1983 சந்திப்பு 175 நாள்
12.08.1983 சுமங்கலி
24.09.1983 மிருதங்க சக்கரவர்த்தி 100 நாள்
04.11.1983 வெள்ளை ரோஜா 100 நாள்
இதில் 100நாள் காண வேண்டிய இமைகள் திரைப்படம் சந்திப்பு திரைப்படம் வெளிவந்ததினால் 100 நாள் காணவில்லை.
கலையுலகில் அன்றும் இன்றும் எப்போதும் எவராலும் வெல்ல முடியாத ஒரே சக்தி நமது மக்கள்தலைவர் சிவாஜி தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா..
Vasudevan Srirangarajan
நன்றி திரு சேரன் அவர்களுக்குநடிகர்திலகத்தின் ராசியால் உயர்ந்தவர்கள்...
1. AVM நிறுவனம் சிவாஜியை வைத்து பராசக்தி எடுத்தபின்னர் காணாமல் போகவில்லை.. எண்ணிலடங்கா படங்கள் எடுத்து மிகப்பெரிய நிறுவனம் ஆனது
2) பீம்சிங் என்ற இயக்குனர் சிவாஜியை வைத்து படம் எடுத்து முதல் படத்திலேயே தெருவுக்கு வரவில்லை காணாமல் போகவில்லை.. தொடர்ந்து "ப" வரிசையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத்தந்தார்
3) K.பாலாஜி அவர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து அனைத்தும் வெற்றிப்படங்களாக தந்தார். ஏழையாகி நடுத்தெருவில் நிற...்கவில்லை.
4) சிவாஜியை ஒருநாள் மேயராக கெளரவித்த நியூயார்க் நகரம் அழிந்துவிடவில்லை
5) சிவாஜியுடன் ஜோடியாக நடித்த பத்மினி, கேஆர் விஜயா, வாணிஶ்ரீ, ஶ்ரீப்ரியா ஶ்ரீதேவி என எல்லா நடிகைகளும் நன்றாகவே இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
6) சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனம் எழுதிய எந்த படங்களும் ஓடாமல் போனதில்லை. மாறாக சிவாஜி பேசியதால் மட்டுமே அவர் வசனம் புகழ்பெற்றது
7) சிவாஜி கட்டிவைத்த நடிகர்சங்கம் அடுத்தநாள் இடிந்து விழுந்துவிடவில்லை. இன்றும் நடிகர்களுக்கான அடையாளமாய் திகழ்கிறது
இப்படி அவரின் ராசியையும் அவரால் உயர்ந்தவர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்
அவரை நம்பாமல் கெட்டவர்களும் அவரின் நேர்மையை சோதித்து கெட்டவர்களும் பரப்பிய வீண் பொய்தான் இந்த ராசி விவகாரம். அரசியலில் அவர் வெற்றியடைய முடியாதது மக்கள் போலிகளை நம்பி ஏமாறத்தொடங்கிய காலம்.. நல்லவர்களை அடையாளம் காணத்தெரியாமல் கைவிட்டார்கள் அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்..
சிவாஜியைப்போல நல்லவர்களுக்கு ராசியான மனிதரை தலைவரை பார்க்கமுடியாது இனி ஒருவர் பிறக்கப்போவதுமில்லை...
Moorthy Vadamalai
என் தம்பி ஸ்டைல். இந்த மாதிரி ஒரு ஸ்டைலும், அழகும் முன்னாளிலும் இன்னாளிலும் இதுவரை யாருக்கும் வரவில்லை, இனிவரும் பின்னாளிலும் யாருக்கும் வராது, ஆண்டவனால் படைக்கமுடியாது, படைக்கவும் மாட்டார், முடியாதென்பது அவருக்கும் தெரியும்.
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...2a&oe=5A7A9589
Murali Srinivas
திருடன்
10.10.1969 அன்று வெளியாகி இன்றைக்கு 48 வருடங்களை கடந்து பயணிக்கும் நம் மனம் கவர்ந்த திருடன் பற்றி சில குறிப்புகள்.
சிறு வயதில் அனாதையான சிறுவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில சமூக விரோதிகளால் திருடனாகப்பட்டு அவன் வளர்ந்து வாலிபனாவது வரை அந்த தொழிலை தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. விடுதலையாகும் அவன் திருந்தி வாழ நினைக்கிறான், அதற்கு அவனை பயன்படுத்திய கூட்டமும் சமூகமும் எதிர் நிற்க அதை சவாலாக ஏற்று வேலை செய்து தனக்கென ஒரு குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு வாழும்போது மீண்டும் பழைய கூட்டம் அவன் வாழ்வில் தலையிட, அவனை பின்தொடரும் போலீஸ் அவனுக்கு தொல்லை கொடுக்க எப்படி சிக்கலிலிருந்து மீள்கிறான் என்பதுதான் சுருக்கமான கதை.
தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.
என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.
இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதிலும் குழந்தையை கடத்தும் காட்சியில் வரும் சண்டைக் காட்சி அலப்பறையாக இருக்கும்.
படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது எட்டு வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.
கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.
தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.
கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும் தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.
1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.
ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.
2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.
சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள்.
3.என் ஆசை என்னோடு- சுசீலா.
படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.
4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.
பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.
தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. ஆனால் தெலுங்கு படமே Once a thief என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். நடிகர் திலகம் என்றைக்குமே இமேஜ் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இந்த படத்தின் டைட்டில்.
பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.
இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். நடிகர் திலகத்தை வைத்து action படமா என்று சிலர் தடுத்த போது பிடிவாதமாக நடிகர் திலகத்தை ஒரு ஸ்டைலிஷ் action ஹீரோவாக ரசிகர்களுக்கு பிடித்த முறையில் அவரை present செய்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாறினார். ஆனால் தான் நிச்சயிக்கும் பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அதே பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.
நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continuous House full Shows விளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.
சென்னையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.
ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம்
படங்களின் ஓட்டம் பாதிப்பு.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் சென்னையில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.
கவரிமான் (06.04.1979) வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை 03.05.1979 அன்று வெளியிட்டார்.
வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.
சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.
இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜ மரியாதை வெளியான 11 நாட்களில் வெளியானது.
இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.
ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள்.
மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.
சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.
ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன், தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/-
.
இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.
மதுரையில் படம் ஸ்ரீதேவியை ரிலீஸ். படம் வெளியான மூன்றாம் நாள் (12.10.1969) படத்திற்கு மதியக் காட்சி போனோம். தர்மம் எங்கே பட விமர்சனத்தில் ஸ்ரீதேவி நீள வாக்கில் அமைந்த அரங்கம் என்பதை சொல்லியிருப்பேன். அது மட்டுமல்ல திரையரங்க வாசல் கேட் முதல் அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நீளமான வளாகம். படம் முடிந்து வரும்போது அடுத்த காட்சிக்கு நிற்கும் வரிசையை கவனிக்கிறேன். போய்க் கொண்டேயிருக்கிறது. கிட்டத்தட்ட வாசல் கேட் வரை வரிசை. மறக்கவே முடியாது. [அந்த வரிசையின் நீளத்தை முறியடித்தது சவாலே சமாளி வரிசை. அதையும் தாண்டியது தர்மம் எங்கே வரிசை]. முன்பே சொன்னது போல் சற்று இடைவெளி கிடைத்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.
மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.
அன்புடன்
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...da&oe=5A430797
Puvai Srr
தொன்னைக்கு நெய் ஆதாரமா இல்லை நெய்க்கு தொன்னை ஆதாரமா என்பது போல சிவாஜியால் கருணாவின் வசனமா இல்லை கருணாவின் வசனத்தால் சிவாஜியா என்று ஒருவர் முன்னொரு சமயத்தில் கேட்டிருந்ததாக சமீபத்தில் படித்தேன். அதற்கான விடை எனக்கு சிறுவயதிலேயே தெரிந்திருந்தாலும் அது நேற்றைய முன்தினம் உறுதி செய்யப் பட்டது. ஏதோ ஒரு சானலில் நடிகர் சிவகுமார் கருணா எழுதிய சாம்ராட் அசோகன் வசனத்தைப் பேசிக் காண்பித்தார். அதைப் பார்த்த போது சிவாஜி the great, எப்படி அதே வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. It is Sivaji, Sivaji only Sivaji!
T.N.Radhakrishnan
வசந்தமாளிகை படத்தில் மயக்கமென்ன பாடலுக்கு முன்பு வாணிஸ்ரீக்கு அந்த மாளிகையைச் சுற்றிக்காட்டியபடியே தன் காதலை விவரிப்பார். அந்த வசனம் மிகச் சாதாரண வசனம். ஆனால் கொஞ்சுகிற, குலவுகிற, தன் காதலை வெகு உணர்ச்சியோடு எடுத்து வைக்கிற பாவனைகளோடு அழகு உச்சரிப்பில் அந்தச் சாதாரண வசனத்தை மெனக்கேட்டு மெருகேற்றும் விதம் இருக்கிறதே - அடா அடா அடா- கேட்பதற்கு நம் காதுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன தெரியுமா? எல்லோரும் வசனத்தை வெறுமனே உச்சரிப்பார்கள். சிவாஜி மட்டும்தான் ஒரு musical sense சேர்த்துக் கொடுப்பார். மதிப்பிற்குரிய Puvai Srr குறிப்பிட்ட சத்ரபதி சிவாஜி வசனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாராவையும் ஒவ்வொரு பாணியில் - ஒவ்வொரு சந்தத்தில் பேசுவார். "அதோ புரந்தர்" எனும்போது ஒருவிதமாய், "போகாதீர்கள்-படைபலம் அதிகம்" எனும்போது ஒருவிதமாய் - "நான் என்ன அரசியல் தெரியாதவனா ஹஹ்ஹஹா - ராஜதந்திரம் அறியாதவனா- ஹஹஹ்ஹ - " எனும்போது ஒரு விதமாய் - பேசும் பாணியை மாற்றி மாற்றி - பேசுவதே ஓர் இசை போல அவர் செய்து , அதாவது அவர் மட்டுமே செய்து காண்பித்ததால்தான் அந்த வசனங்களெல்லாம் சாகாவரம் பெற்று நம் நெஞ்சக் கூட்டில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டன.
Meenakshi Sundaram
அன்பார்ந்த #நடிகர்திலகவிசுவாசிகளே
திரு.சேகர் பரசுராம்சார் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இன்றைய இளைஞிகள் சிவாஜி மணிமண்டபத்தில் அன்னாரது திருவுரச்சிலை முன் செல்பி எடுத்ததை.பார்க்கவே கண்கொள்ளாக்காட்சி.அதையொத்த ஒரு நிகழ்வினை இங்கே உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. நான் மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குப்பின் உள்ள ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.தினமும் மகாலை சுற்றிப்பார்க்க வெளியூர் வாசிகள் வருவார்கள்.போன சனியன்று சில கல்லூரி மாணவிகள் அவ்வ...ழியே செல்லும்போது என்னிடத்தில் வந்து (மகாலை ஒடிய டீ கடையில் தினமும் டீ குடிப்பது வழக்கம்) மதுரையில் சிவாஜி மணிமண்டபம் இல்லையா என்று கேட்டனர் நான் இல்லை சென்னையில் இப்போதுதான் கட்டியுள்ளார்கள் என்றேன்.பின்னர் அவர்களிடம் சிவாஜிசாரைப்பற்றித்தெரியுமா எனக்கேட்டேன, இல்லை அவ்வளவாக தெரியாது முன்னாள் நடிகர் என்று தெரியும் என்றார்கள்.அவரைப்பற்றிச் சொல்லுங்களேன் என்றனர். நானும் இதுதான் சந்தர்ப்பம் என்று நம் திலகத்தின் வரலாற்றை எனக்குத் தெரிந்தவரை சொன்னேன் அ வர்களுக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு சிறந்த நடிகரா என்று கூறிவிட்டு கட்டாயம் சென்னை செல்லும் போது மணிமண்டபத்தை பார்க்கிறோம் என்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.அதிலும் அவர்கள் என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.அதை அவர்களிடம் கேட்டு வாங்கக்கூட மறந்துவிட்டேன்.அவ்வளவு ஆனந்தம் எனக்கு. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நம் அய்யன் இன்றைய தலைமுறையிரையும் கவர்ந்து விட்டார் என்பதுதான். எனவே ஊடகங்களோ அல்லது யாராலும் நம் திலகத்தின் புகழை அழிக்கவோ களங்கப்படுத்தவோ தகுதியில்லாவர்கள்.இன்னும் வருங்காலத்திலும் அன்னாரின் புகழ் ஓங்கும் என்பது திண்ணம்.நன்றி
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...36&oe=5A3C9D30
vaannila vijayakumaran
"அரசியலை ஒரு கருவியாக வைத்துக் கொண்டும், சினிமா உலக செல்வாக்கைச் சேர்த்துக் கொண்டும், உங்களைப் ' பிழைக்கத் தெரியவில்லை ' என்று சிலர் குறை கூறுகிறார்களே... அதற்க...ு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள் " என்று பிரபல பத்திரிகை ஒன்றில் வாசகர் கேட்ட கேள்விக்கு நடிகர்திலகம் சொன்ன பதில் என்ன தெரியுமா? "என் திறமையையும், புகழையும் தவறான காரணங்களுக்கு பயன் படுத்த எனக்குத் தேவையுமில்லை..எனக்கு அவசியமுமில்லை.." என்பதுதான் அது.. அதே பகுதியில், நடிப்புத் திறமையைத் தவிர உங்களிடம் குடிகொண்டிருக்கும் இன்னொரு திறமை எது? என்று வேறொரு வாசகர் கேட்ட கேள்விக்கு, "நான் ஏமாறுவதிலே திறமைமிக்கவன் " என்றும் பதில் அளித்திருந்தார்.
Vasudevan Srirangarajan
இயக்குநர் சேரன் அவர்களுக்கு தங்களின் சிவாஜி கணேசனின் ராசி பலன் பற்றிய பதிவுக்கு முதலில் என் பாராட்டுகள்.
அத்துடன் கூடுதலாக சில தகவல்களை பதிவு செய்திட விரும்புகிறேன்.
தயாரிப்பாளர் பாலாஜி "அண்ணாவின் ஆசை" எடுத்து அனைத்து சொத்துக்களையும் இழந்து நடிகர் திலகம் காலில் தன் மகனுடன் அன்னை இல்லத்தின் போர்ட்டிகோவில் விழுகிறார். நடிகர் திலகம் என்ன என்று விசாரிக்க "நாளை என் சொத்துக்களை கோர்ட் ஜப்தி செய்ய இருக்கிறது" என்று கண்ணீர் விடுகிறார். "நான் என்ன செய்ய வேண்டும் என நடிகர் திலகம்" க...ேட்க, அதற்கு பாலாஜி "நீங்கள் என் அடுத்த படத்தின் நாயகன் என்ற விளம்பரம் பத்திரிக்கைகளில் கொடுக்க என்னை அனுமதித்தால் போதும். என் சொத்துக்கள் திரும்பிவிடும்" என்கிறார்.
சரி என்கிறார் நடிகர் திலகம். "தங்கை" பட விளம்பரங்கள் வர இழந்த சொத்துக்கள் திரும்புகின்றன. அதன்பின் பாலாஜிக்கு ஏற்றம்தான். ஆனால் ஒன்று நடிகர் திலகத்திடம் இறுதிவரை நன்றி மறவாமல் இருந்தவர் பாலாஜி என்பது குறிப்படத்தக்கது.
முனைவர். கா.வெ.சே. மருதுமோகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறும் அவரது கலைப்பணிகளும்- ஓர் ஆய்வு
Raj Raj
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...20&oe=5A6E97A8
நடிகர் திலகம் குறித்து
நாகேஷ் சொன்ன காமெடி கமெண்ட்....
Vasudevan Srirangarajan
·
நன்றி திரு சேரன் அவர்களுக்குநடிகர்திலகத்தின் ராசியால் உயர்ந்தவர்கள்...
1. AVM நிறுவனம் சிவாஜியை வைத்து பராசக்தி எடுத்தபின்னர் காணாமல் போகவில்லை.. எண்ணிலடங்கா படங்கள் எடுத்து மிகப்பெரிய நிறுவனம் ஆனது
2) பீம்சிங் என்ற இயக்குனர் சிவாஜியை வைத்து படம் எடுத்து முதல் படத்திலேயே தெருவுக்கு வரவில்லை காணாமல் போகவில்லை.. தொடர்ந்து "ப" வரிசையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத்தந்தார்
3) K.பாலாஜி அவர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து அனைத்தும் வெற்றிப்படங்களாக தந்தார். ஏழையாகி நடுத்தெருவில் நிற...்கவில்லை.
4) சிவாஜியை ஒருநாள் மேயராக கெளரவித்த நியூயார்க் நகரம் அழிந்துவிடவில்லை
5) சிவாஜியுடன் ஜோடியாக நடித்த பத்மினி, கேஆர் விஜயா, வாணிஶ்ரீ, ஶ்ரீப்ரியா ஶ்ரீதேவி என எல்லா நடிகைகளும் நன்றாகவே இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
6) சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனம் எழுதிய எந்த படங்களும் ஓடாமல் போனதில்லை. மாறாக சிவாஜி பேசியதால் மட்டுமே அவர் வசனம் புகழ்பெற்றது
7) சிவாஜி கட்டிவைத்த நடிகர்சங்கம் அடுத்தநாள் இடிந்து விழுந்துவிடவில்லை. இன்றும் நடிகர்களுக்கான அடையாளமாய் திகழ்கிறது
இப்படி அவரின் ராசியையும் அவரால் உயர்ந்தவர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்
அவரை நம்பாமல் கெட்டவர்களும் அவரின் நேர்மையை சோதித்து கெட்டவர்களும் பரப்பிய வீண் பொய்தான் இந்த ராசி விவகாரம். அரசியலில் அவர் வெற்றியடைய முடியாதது மக்கள் போலிகளை நம்பி ஏமாறத்தொடங்கிய காலம்.. நல்லவர்களை அடையாளம் காணத்தெரியாமல் கைவிட்டார்கள் அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்..
சிவாஜியைப்போல நல்லவர்களுக்கு ராசியான மனிதரை தலைவரை பார்க்கமுடியாது இனி ஒருவர் பிறக்கப்போவதுமில்லை...
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...47&oe=5A6F4DC5
Vaannila Vijayakumaran
ஒருமுறை மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் படத்திற்கு விமர்சனம் எழுதிய குமுதம் வாரஇதழ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்ததாம்... " ஜெய் கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது சிவாஜி அ...ளவு! " என்று.
திருவருட்செல்வர் படத்திற்கு விமர்சனம் எழுதிய THE HINDU நாளிதழ், "ஆயிரம் முகம் கொண்ட ஒரே நடிகர் சிவாஜிதான்! "என்று எழுதியதாம்.
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...bd&oe=5A871374
Sundar Rajan அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மக்கள்தலைவரின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நமது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்ப...ட்டு வருகின்றது.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாசமலர்,
சென்ற வாரம் கோவை ராயலில் சிவாஜி வாரம்,
தற்போது நாளை 13.10.2017 வெள்ளி முதல் சேலம் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜா.
சேலம் வாழ் அன்பு இதயங்களே, கலையுலக ராஜாவை வரவேற்க தயாராகுங்கள்,
சேலம் என்றும் சிவாஜி கோட்டை என்பதை நிரூபியுங்கள்.
உங்கள் ஆரவாரம் கேட்டு விண்ணிலிருக்கு நம் மக்கள்தலைவர் பரவசமடையட்டும்.
Vasu Devan
'மன்னவன் வந்தானடி' சண்டைக் காட்சி ஸ்டில் புதிர் விளக்கம்.
புதிர் ஸ்டில் ரொம்ப அற்புதமான ஸ்டில். நான் ரொம்ப ரசித்து போட்ட தலைவரின் ஸ்டன்ட் காட்சி ஸ்டில்.
நடிகர் திலகம் 'ஸ்டைல்' சந்திரமோகனாக சுகுமாரியை நம்பியாரின் ரகசிய இடத்திலிருந்து மீட்டு கொடைக்கானலுக்கு இட்டு செல்வார். அங்கே ஒரு அட்வகேட் வீட்டிற்கு சுகுமாரியை உயில் சம்பந்தமாக அழைத்து செல்வார். ஒரு சின்ன சுவாரஸ்யம் இந்த இடத்தில். அட்வகேட் வீட்டின் கேட்டில் என்ன பெயர்ப்பலகை இருக்கும் தெரியுமா? 'கே.எஸ்.குற்றாலிங்கம்' பி.ஏ.பி.எல்.என்று பெயர்ப் பலகையில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
(கே.எஸ்.குற்றாலிங்கம் அவர்கள்தான் பொன்னூஞ்சல், அவன் ஒரு சரித்திரம், ஊருக்கு ஒரு பிள்ளை போன்ற தலைவர் நடித்த படங்களைத் தயாரித்தவர் என்பது நமக்குத் தெரியும்தானே! சிவக்குமார் நடித்த 'பெருமைக்குரியவள்' படத்தைத் தயாரித்தவரும் இவரே. இவர் படங்களுக்கு நடிகர் திலகம் பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்து விடுவாராம். அவ்வளவு நட்பாம் குற்றாலிங்கம் அவர்கள் திலகத்திற்கு. காங்கிரஸ் தீவிரவாதியும் கூட) வக்கீலாக வருபவர் கோகுல்நாத். அதாங்க...என் 'முரட்டுப் பயலை' கட்டிப் போட போராடிய பாதிரியார்.
ஒரிஜினல் உயில் நடிகர் திலகத்திடம் போய் விட்டதை கோகுல்நாத்திடம் அறிந்து நம்பியார் கொதித்து, வீட்டில் ரகசிய இடத்தில் சுகுமாரியுடன் இருக்கும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் ஒரு அடியாளுடன் இந்த சண்டைக் காட்சி.
வெகு அருமையான சண்டைக் காட்சி. தலைவரோ லைட் பச்சை கலந்த ப்ளூ கலரில் அம்சமான கோட்டுடன், எவரும் எட்ட முடியாத அழகுடன் அப்படியே ஜொலிப்பார். வெற்றுடம்பு முரட்டு அடியாளுடன் அவர் ஸ்டைலாக மோதுவது நமக்கு கொள்ளை விருந்து. இந்த சண்டைக் காட்சியில் சில இடங்கள் ரொம்ப சுவாரஸ்யம் அளிப்பவை.
1. ஒரு கட்டத்தில் அந்த அடியாள் கை மடக்கி நடிகர் திலகத்தை நோக்கி வரும் போது திலகம் அருகில் கிடைக்கும் இரும்பு ராட் ஒன்றை எடுத்து அவனை அடிப்பார். அந்த ராட் அந்த அடியாள் கையில் பட்டு வளைந்து விடும். அதைப் பார்த்துத் திகைக்கும் நடிகர் திலகம் கொஞ்ச நேரம் ஒன்றும் செய்வதறியாது திகைத்து அண்ணாந்து மேல் நோக்குவார். மேலே ரூஃபில் அலங்கார சரடு விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். (கிட்டத்தட்ட கிணற்று சொரடு வடிவம் போல பெரிதாக) அது கட்டப்பட்டிருக்கும் கயிற்றை திலகம் அவிழ்த்து விட்டுவிட, அது சரியாக அதன் கீழே நிற்கும் அந்த அடியாளின் தலையைப் பதம் பார்க்க, நமக்கு உற்சாகம் பீறிடும். இந்த உத்தி அருமையாய் இருக்கும்.
2 .தலையில் சரடு விளக்கு விழுந்ததும் அதை எதிர்பார்க்காத அடியாள் அது விழுந்த அதிர்ச்சியில் வாய்பிளக்க, நடிகர் திலகம் படுஸ்டைலாக அங்கிருக்கும் சாத்துக்குடி பழம் ஒன்றை கரெக்ட்டாக தூக்கி எறிய, அந்தப் பழம் அடியாள் பிளந்த வாய்க்குள் தஞ்சம் புகுவது செம கலாட்டா. அந்தப் பழம் எறியும்போது நடிகர் திலகத்தின் வாயைப் பார்க்க வேண்டுமே! அவ்வளவு அம்சம்.
3. அதன் பிறகு நடக்கும் மோதலில் நடிகர் திலகம் படுத்தும், புரண்டும், எதிரிக்குத் தண்ணி காட்டியும் அற்புதம் நிகழ்த்துவார். லாங் ஷாட்களில் மட்டும் டூப் உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் சில ஷாட்களில் நடிகர் திலகம் அந்த டூப்பையே மிஞ்சி விடுவார் பாருங்கள். அதான் டாப்போ டாப்.
'மெல்லிசை மன்னரி'ன் பின்னணி கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் நோக்கிப் பயணிக்கும். ஆர்ப்பாட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். அற்புதமான இந்த சண்டைக் காட்சியை அமைத்துக் கொடுத்தவர் நடிகர் திலகத்தின் பின்னாளைய ஆஸ்தான ஸ்டன்ட் இயக்குனர் ஏ.டி.வெங்கடேஷ் அவர்கள்.
நடிகர் திலகத்தின் இரு கால்களும் வசமாக எதிரியின் கழுத்தில் மாட்டிக் கொள்ள, அப்படியே அவரைத் தூக்கி அடியாள் பந்தாட, டூப்பே இல்லாமல் அற்புதம் நிகழ்த்தியிருப்பர் மன்னவர். காற்றில் பறப்பது போல அந்தரத்தில் பிடி இல்லாது பறந்து, அங்கிருக்கும் உத்திரம் ஒன்றை பிடித்து பிடித்து எகிறுவது அருமை.
4. இப்போதுதான் அசர வைக்கும் ஸ்டில் காட்சி. அப்போது எவரும் செய்யாதது. கொஞ்சமும் யாரும் எதிர்பார்க்காதது. நடிகர் திலகம் தன்னுடைய அசாத்தியத் திறமையால் நம் யாவரையும் அசர வைப்பது. ஒரு சில வினாடிக் காட்சிகள்தான். திலகம் கீழே தரையில் படுத்தவாறு அந்த ஸ்டன்ட் மேனின் கழுத்தை தன்னுடைய கால்களால் கிடுக்குப் பிடி போடுவார். போட்டவர் அப்படியே வலதும் இடதுமாக, அந்த அடியாள் கழுத்தை லாவகமாக ஒருமுறை, தன்னுடைய கால்களால் அப்படியும் இப்படியும் திருப்பி, பின் போஃர்ஸாக இடப்பக்கம் விசிறி வீசுவார். அடடா!
இந்த ஒரு காட்சி உங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்றுதான் அந்த ஸ்டில்லையே ஆனந்தமாகப் பதிவிட்டேன் புதிராக.
அப்படி கால்களால் பிடி போட்டு வீசும் போது மிக அழகாக அந்த சாதுர்யத்தையும், சாமர்த்தியத்தையும் அந்த முகம் காட்டும். ஒரு செகண்ட்...ஒரே ஒரு செகண்ட்... ஏன் அது கூட இல்லை.. அந்த கால் கிடுக்கிப்பிடி லாவகம், அதற்கேற்ற அந்த முகபாவம்...அலட்சியம்...கவனம் என்று 'மன்னவன்' ரகளையான ரகளை.
அவரைப் போலவே அவரது இந்த சண்டைக் காட்சியும் வெகு அழகு. நேர்த்தி அண்ட் ஸ்டைல்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ca&oe=5A8509A2
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...93&oe=5A3F3CCD
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6b&oe=5A72071F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ef&oe=5A3B14C6
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6e&oe=5A43B6AA
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...11&oe=5A3E8ADF
Abdul Razack
நடிகர் திலகத்தின் அதிக படங்கள் மறு வெளியிட்டில் வர வேண்டும் இன்றைய தலைமுறை தவறான வழியில் போகாமல் இருக்க அவரது படங்கள்தான் நேர்வழி காட்டும் முதல் வெளியிட்டில் பார்த்தவர்கள் இயற்கையிலே சிவாஜி ரசிகர்கள் அவர் திரையுலகில் கோலோச்சிய காலத்திலே ரசிகர்களாக இருந்தவர்கள் இன்று எப்படியும் 60 வயதை நெருங்குபவர்கள் ஆனால் மறு வெளியிட்டில் பார்ப்பவர்கள் ரஜினி கமல் வந்த பிறகும் சிவாஜியை ரசித்தவர்கள் அது தான் ஆச்சரியம் வயதும் 40ல் இருப்பவர்கள் இன்றைய தலைமுறை குழந்தைகள் தாத்தா பாட்டி சொல்வதை கேட்பதற்கே வாய்ப்பு இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள் காரணம் கூட்டு குடும்பம் இன்று இல்லை இந்த சூழ்நிலையில் அடுத்த தலைமுறைக்கும் அவரது படங்கள்தான் கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று காட்டும் அவர்களிடம் சிவாஜியை கொண்டு சேர்ப்பவர்கள் 40 வயதில் இருப்பவர்கள் தான் அதனால் மறு வெளியிட்டில் பார்க்கும் ரசிகர்கள்தான் சிறந்த பாக்யவான்கள் என்று சொல்கிறேன்....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...63&oe=5A6EA63B
sekar parasuram
நடிகர் திலகத்தின் எவரும் எட்ட முடியாத சாதனைகள்!
1975 ஆம் ஆண்டு வரை மலேசிய டெலிவிஷன் ஒளி பரப்பில் மலேயா மொழி சப் டைட்டிலுடன் நடிகர் திலகத்தின் 60 திரைப் படங்கள் ஒளி பரப்பு செய்யப்பட்டது,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ad&oe=5A8723B2
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dd&oe=5A413A0F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...cc&oe=5A7E6D61
Vaannila Vijayakumaran
கீழே இடம் பெற்றிருக்கும் பட விளம்பரத்திற்கும் நீங்கள் படிக்கப்போகும் செய்திக்கும் துளியும் தொடர்பில்லை... ஆனால், படத்ததலைப்பிற்கும் ஐயனுக்கும் தொடர்பிருக்கிறது...
நடிகர்திலகத்தின் இளமைப்பருவம் முதல் இனிய நண்பராய் விளங்கியவர் திரு.சாமிநாதன் அவர்கள். நடிகர்திலகம் சென்னைக்கு வந்து, சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும், அந்த நண்பரை உடையலங்காரம் செய்பவராக மாற்றி தன் அருகிலேயே வைத்துக் கொண்டார். எப்போதும் ' சாமிநாதா! சாமிநாதா!' என்று அழைத்துக் கொண்டேயிருப்பார். அவரும் கூப்பிட்ட குரல...
ுக்கு ஓடி வருவார்.
எதிர்பாராமல் அந்த நண்பருக்கு வாதநோய் வந்து படுத்த படுக்கையானார். எத்தனை லட்சங்கள் செலவழித்தாலும் என் நண்பனை நான் காப்பாற்றியே தீருவேன் என்று பல உதவிகள் செய்தார். அவரும்அதை நன்றியுணர்வோடு ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு கல்யாணப் பருவத்தில் ஒருமகள் இருந்தாள்.அந்த மகளின் திருமணத்தை கண்குளிரப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது அவர் லட்சியம்.அந்த ஆசையை நிறைவேற்ற மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் நண்பர் சாமிநாதன் எதிர்பாராமல் காலமாகிப் போனார்.
அவரின் உடலைப் பார்த்து நடிகர்திலகம், ' இனி சாமிநாதா என்று யாரை அழைப்பேன் ' அழுது புலம்பினார். அதைக் கண்டு சாமிநாதன் துணைவியாரும் பிள்ளைளும் கதறி அழுதனர். அந்தக் காட்சி அன்றைக்கு அப்பகுதியில் வாழ்ந்த அத்ததனை மக்களின் கண்களையும் குளமாக்கி விட்டது.
திருமணம் ஆக வேண்டிய இஇளம் பெண்ணும் கதறி அழுததைக்கண்டு யாருக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாத நிலையில் நடிகர்திலகம் தன்னைத் தேற்றிக் கொண்டு ஆறுதல் சொன்னார்.
தனது நண்பரின் மகளுக்கு குறித்த முகூர்த்தத்தில்தானே தந்தையைப் போல் முன்நின்று, சகல செலவுகளையும் தானே செய்து திருமணம் நடத்தி வைத்தார்.
தன்னொடு இருந்த நண்பர்களுக்கு ' உடுக்கை இழந்தவன் கைபோல' நட்பின் இலக்ககணமாய், வழிகாட்டியாய் விளங்கியவர் நடிகர்திலகம்.
ஆம். ஐயனுக்கு பூப்போல மனசு.
கதைவசனகர்த்தா திரு. பாலமுருகன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...( படித்ததில் பிடித்தது)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2e&oe=5A7654E7
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
Sriranga Raju KJ ஆனால் அதை விளம்பர படுத்தி அரசியல் ஆதாயம் கொண்டதில்லையே..
............
Venkatesh MP Kamath அதுதான் சிவாஜி
.................·
am Manian வாழ்க அண்ணன் புகழ்
.........
Vasudevan Srinivasan எனக்கு தெரிந்து நடிகர் திலகம் நடிப்பதாக விளம்பரம் செய்து கைவிடப்பட்ட இன்னும் இரு படங்கள் ஊர்ப்பெரியவர், அருட்பெருஞ்ஜோதி
...........
ajantha Rathinam இடக் கைக், கொடுப்பது, வலக்கைக்கு, தெரியாது
..........
Radhakrishnan K Karnanaga nadithathodu vari vazhanguvathilum pirarukku thuyar thudaippadhilum karnanaga vazhndhavar namadhu nadigar thilagam sivaji avarkal
...........
Jeyasankararaj Rajapandian இபபடிபட்ட சிங்கத்தின் ரசிகனாஇருப்பதில் பெருமை கொள்கிறேன்
............
Sundar Rajan தெய்வ மகன்
.................
Radhakrishnan Surulivelu நடிகா்திலகம் தான் செய்த உதவிகளை மற்றவா்களைப் போல் விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை .
...............
Sowri Rajan உத்தமன்
..............
·
Chandrasekaran Muniyandiapillai மனிதரில் மாணிக்கம் நம் ஐயன்
.......
Rajendiran Rajendiran விளம்பரம் தேடா உத்தமன்....
Vasu Devan
நாளை 13.10.2017 வெள்ளி முதல் சேலம் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜா.
தகவலுக்கு நன்றி சுந்தரராஜன் சார்.
அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். 'ராஜா'! இந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! செய்தியைப் பார்த்ததும் இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!
இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் 'ராஜா' ரசிகர்களுடன் ஆப்பிள் மாலைகளுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 56. ஆனால் 'ராஜா' மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (ராஜாவாக யாரோ சிவாஜியாம். அவருக்கு அப்போது வயது 44 ஆம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.)
ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே. அவன் எடையே 45 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி? அவனுடைய அந்த ஹேர் ஸ்டைல் இருக்கிறதே! நெற்றியின் முன் மொத்தக் கற்றையாய் புரளும் கண் கொள்ளா அழகு. அந்த வசீகர வதன முகம். மன்மதன் இவன் அழகைக் கண்டு எங்கோ வெட்கி ஓடி விட்டானாம். அவன் கண்கள் 'துறுதுறு'வென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? கண்களை அங்குமிங்கும் உருட்டி நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?
லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? வைரங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வைராக்கியம் பிடித்தவளையும் தன் வலையில் விழ வைக்கும் சாமார்த்தியக்காரன். 'கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை' கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?
இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே 'டபக்'கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். எதிரியை சரியாக ஆழம் பார்ப்பான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிறுவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும். 'யேய்! என் பெயர் ராஜா' என்று கூறி முடிவாக எதிரிகளை உதைத்து அனுப்புவான்.
இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் 'ராஜா'வின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஐந்து பூதங்களுமே இவனுடைய ஐந்து அடிக்கும் அடக்கமாகி இவனுக்கு அடிமைகள். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! 'ராஜா' அறிமுகமாவதே ஜெயிலில்தான்.
வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.
இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
தீராத விளையாட்டுப் பிள்ளை. இவனுக்கு 'இரண்டில் ஒன்று' எப்போதும் தெரிய வேண்டும்.
கோட், பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்கப்பட்டுப் போகுமாம்.
இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி! எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி நடந்தபடியே காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன்.
தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டு பரீட்சித்தால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். 'ராஜா' என்பான் அப்புறம் 'இல்லை' என்பான். 'சேகர்' என்பான். கவர்ச்சிக் கள்ளன்.
திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். கொள்ளைக்கார கும்பலை மடக்கும் போது, தன் ஜோடியிடம் கூட தான் யாரென்று வாயால் சொல்லாமல் 'நான் ஒரு போலீஸ்தான்' என்று ஒரு சிறு தலையசைவில் துப்பாக்கி கொண்டு ஜாடையில் காட்டுவான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே. சூதுவாதுகளை அவை கொண்டே வெல்வான்.
சகோதரன் என்று தெரியாமல் அவனுடன் துள்ளித் துள்ளி கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கார்ப் அழகாக காற்றில் பறக்க, இவன் மோதும் போது கடல் அலைகளைவிட ஆர்ப்பாட்ட சப்தம் அரங்கங்களில் எழும். 'ராஜா.... ராஜா இல்ல' என்று அங்கேயும் மாறி மாறி உதைபட்டு பின் உடன்பிறந்தவனை உதைப்பான். உணர்ந்ததும் உற்சாகம் கொள்வான்.
வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாச கிளைமாக்ஸ் போர் 'குருஷேத்திரப் போர்' போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.
தன் தாயைக் கொடுமைப்படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான். தாயைத் துன்புறுத்தியவனை அதே முறையில் துன்புறுத்தி இன்புறுவான்.
அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம். அவனின் இந்த அற்புதப் படைப்பை அவனே வியந்து வியந்து பார்த்து மீண்டும் வியப்பானாம்.
இவன் மனங்களை மட்டுமா கொள்ளையடித்தான்? பணங்களையும் கொள்ளையடித்தான். ஆம்! வசூலிலும் இவன் எவருமே நெருங்க முடியாத 'ராஜா'தான். பாரடைஸ் இன்னும் சொர்க்கபுரியானது. இவன் அழகு உருவத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.
இவனை எதிர்த்த கூட்டம் கூட இவன் ஸ்டைலில், அழகில் மயங்கி இவனை ஒளிந்து ஒளிந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தது.
இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன்.
அவன்தான் எங்கள்
எவர்க்ரீன் 'ராஜா'.
எங்கள் இதய 'ராஜா' மீண்டும் சேலத்தில். சந்தோஷம் 'கல்யாணப் பொண்ணு' போல கரை புரண்டு ஓடுகிறது மனதில். சேலம் செய்த புண்ணியத்தை நாளை முழுமையாக அனுபவிக்கப் போகிறது.
தன்னுடைய குணங்களால் மனதைக் கொள்ளை கொண்ட நம் ஸ்டைல் ராஜாவின் ஆட்சி நாளை சேலத்தில். சேலம் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
('ராஜ' சேவை தொடரும்)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...31&oe=5A7BD387
Jayasankar Jai\
குலமா குணமா!
இத்திரைப்படம் திரு கே எஸ் கோபால
கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில்
வெளி வந்த வெற்றி திரைப்படம்.
சிவாஜியின் இனையாக பத்மினி...
சிவாஜியின் தம்பியாக ஜெய் சங்கரும்
அவரின் மனைவியாக வாணிஸ்ரீயும்
வானிஸ்ரீயின் தந்தையாக நம்பியாரும்
நடித்த படம். வில்லன் நம்பியார் சிவாஜி
குடும்பத்தின் மொத்த சொத்தும் தன்
மகள் மற்றும் மருமகனுக்கே கிடைக்க
வேண்டும் என மகளுக்கே தெரியாமல்
சில தில்லுமுல்லுகள் செய்து பாகப்பிரிவினைக்கு ஏற்பாடு செய்து
விடுவார்.
சிவாஜி வீட்டில் இருக்கும் ஆபரணங்கள்
பாத்திரங்கள் நகை நட்டுக்கள் சொத்து
பத்திரங்கள் என அனைத்தும் வீட்டின்
பெரிய ஹாலில் கொண்டு வந்து
வைக்கப்படும்.கிராம முக்கியஸ்தர்கள்
மற்றும் உறவினர்கள் கூடியிருக்க
எல்லாத்தையும் இரண்டாக பிரிக்கலாங்களா
என அவர்கள் கேட்க சிவாஜி எல்லாரும்
வந்தாச்சா என கேட்பார்.அவர்களும் ஆமாம்
என்பார்கள்.சொத்தை பிரிச்சாச்சு இரண்டுல
இது வேணுமோ எடுத்துக்க சொல்லுங்க
என்று சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில்
கம்பீரமாக அமர்ந்துவிடுவார் இறுக்கமான
முகத்துடன்.
யாருக்கும் ஒன்றும் புரியாது.ஏன் படம்
பார்க்கும் நமக்கும் ஒன்றும் புரியாது.
கிராம மக்கள் இன்னும் எதையும்
பிரிக்கிலிங்களே அப்புறம் எப்படி
இரண்டுல ஒன்னு எடுத்துக்க சொல்றீங்க
என்று கேட்பார்கள். அதுக்கு சிவாஜி
எல்லாம் பிரிச்சாச்சி புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என
கூறுவார்.பத்மினி ஜெய்சங்கர் ஊர்மக்கள்
அனைவரும் ஏதும் புரியாமல் முடித்து
கொண்டிருப்பார்கள்.நமது அண்ணலோ
இறுக்கமான முகத்துடன் கண்களை உருட்டி
தன் தம்பி எதை எடுக்கப்போகிறான்
என்று தவிப்புடன் இருப்பார் அவனுக்கு
புரிந்ததோ இல்லையோ என்று.
இந்த நேரத்தில் வாணிஸ்ரீ ஜெய்சங்கரை
அழைத்து உங்க உங்களுக்கு நிஜமாகவே
புரியலயா என கேட்ப்பார்.அவர் புரிய வில்லை என்று சொல்ல அதற்க்கு
வாணிஸ்ரீ நல்லா கவனிங்க ஒருபக்கம்
உங்க குடும்பத்தோடு எல்லா சொத்தும்
இருக்கு.
இன்னொரு பக்கம் உங்க அண்ணன்
உக்காந்திருக்காரு
அதனால உங்களுக்க் சொத்து வேணுமா
இல்ல அண்ணன் வேணுமான்னு
கேக்கிறாரு புரியுதா.
போங்க எமக்கு அண்ணன் தான்
வேணுமுன்னு அவர் கால்ல போய்
விழுங்க என்று சொல்வார்.
அதுக்கப்புறம் கேக்கனுமா
உணர்ச்சி மயமான காட்சிக்கு
வசனம் அதிகம் பேசாமலே உம்மென்று
அமர்ந்திருந்தே அப்ளாஸ் வாங்கி விடுவார்
நமது நடிகர் திலகம்.இந்த படத்திலே
எமக்கு மிகவும் பிடித்த காட்சி இது.
என் வயது ரசிக நண்பர்கள் கண்டிப்பாக
பார்த்திருப்பார்கள் இந்த படத்தை.
See more
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fc&oe=5A7EE32E
Aathavan Ravi
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...70&oe=5A867135
Sekar Parasuram
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...22&oe=5A3DF3A9
Vaannila Vijayakumaran
கர்ணன் - THE ORIGINAL
அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் ந...டத்தப்பட்டது.
வீட்டுக்குப் பின்புறம் ஒரரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது.விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழைப் பிடித்துக்கொண்டது.
அக்கம் பக்ககத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்பும் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
....................
கொடை கொடுத்தும் கஞ்சன் என பெயர் வாங்கியவர்
சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே
Lakshmankumar Rajunaidu
1965ல் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் முத்திரை பதித்த திருவிளையாடல் படம் வெளிவந்த போது கல்கி பத்திரிகை விமர்சனம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a2&oe=5A858FFD