https://www.facebook.com/groups/8002...67333/?app=fbl.......
Printable View
அந்த கருப்புநாளும் விடிந்தது..நம் மன்னன் ரசிகர்கள் தலையில் இடியாய் அந்த செய்தி விழுந்தது.
1967 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நம் தலைவரை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்க வந்த எம்.ஆர்.ராதா துப்பாக்கி கொண்டு சுட்டு விட்டார் என்ற செய்தி நாடு எங்கும் தீயாய் பரவியது.
திரையுலகம் அதிர்ந்தது. தலைவர் சிகிச்சைக்கு சேர்க்க பட்ட மருத்துவமனை குலுங்கியது....சில சினிமா நெஞ்சங்கள் குளிர்ந்தன... இதோடு ஒழிந்தார் எம்ஜியார் என்று மகிழ்ந்தனர் மனதுக்குள்.
திமுக அரசியல் கட்சி இதை பயன் படுத்தி ஆட்சிக்கு வந்தது முதலில்... மீண்டு வருவாரா மீண்டும் திரையில் தோன்றுவாரா நடிக்காவிட்டாலும் பரவாயில்லை நம் வாத்தியார் பிழைத்தால் போதும் என்று உண்மை நெஞ்சங்கள் விரும்பின.
யாருக்கும் நம்பிக்கை இல்லை...இதை சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. காலத்தை வென்ற காவிய நாயகர் இதிலும் மீண்டு வந்தார். என்னடா இது மாண்டவன் மீண்ட வரலாறு இது என்று எதிரிகள் திகைத்தனர்.
அதுதான் வாத்தியார். கழுத்தில் பாய்ந்த குண்டால் குரல்வளம் போனது. வெண்கல குரலில் பேசிய நம் தலைவர் குரல் சிதைந்து போனது.
அசரவில்லை வாத்தியார் . மீண்டு வந்து தனக்கு சிகிச்சை அளித்த குரல்வள நிபுணர்கள் துணையுடன் சாதித்தார். பாதி ராத்திரி எழுந்து போய் அலைகடலில் நின்று முயற்சித்தார்....கொடி கட்டி பறந்த தன் திரை உலக வாழ்வில் தான் குலைந்த குரலில் பேசுவதை இந்த தமிழ் உலகம் ஏற்குமா என்று யோசித்தார்.
இடையில் நின்ற சத்தியா மூவீஸ் காவல் காரன் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்...குரலுக்கு எடிட்டிங் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்காமல் தானே மீண்டும் பேசி நடித்தார்.
பார்த்தேன் சுசீலா பார்த்தேன்....என்று குண்டடி பட்ட பின் அவர் படத்தில் பேசிய முதல் வசனத்துக்கு எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆயிற்று திரை அரங்குகளில்.
50 வயதில் தான் திரை உலகில் தான் புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவோமா என்ற கவலை இல்லாமல் மீண்டும் மின்ன தொடங்கினார் வாத்தியார்.
என் ரசிகர்கள் விரும்பினால் தொடர்ந்து நடிப்பேன் என்றார். காவல்காரன் படத்தை தொடர்ந்து வெளிவந்த விவசாயி, ரகசிய போலீஸ் 115, தேர்த்திருவிழா, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன்..... சொல்லிக்கொண்டே போகலாம் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள்.
அதுக்கு அப்புறம் தான் விஸ்வ ரூபம் எடுத்தார் வாத்தியார்...வரலாறு நமக்கு சொந்தம்..
குண்டு துளைக்க முடியாத நம் இதயக்கனியை வண்டு துளைத்து விட்டது என்று தூக்கி எறிந்த அந்த மண்டு கூட்டதுக்கும் உணர்த்தினார் வாத்தியார்.
ஏன் என்றால் அவர் எல்லா மதத்துக்கும் ஆன இறைவனின் செல்ல பிள்ளை...மக்கள் அவர் பக்கம் என்றும்.
வாழ்க எம்ஜியார் புகழ் தொடருவேன்.நன்றி.
பின் குறிப்பு.
சம்பவங்களுக்கு பின் எம் .ஆர்.ராதா. அவர்கள் ☺️ நான் தான் சுட்டேன். என்று ஒரு படத்தை தயாரிப்பதாக ஒரு விளம்பரம் அந்த காலத்தில் விட்டார் விரைவில் அந்த விளம்பரத்தோடு சந்திப்போம். நன்றி......... Thanks.........
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981 - 1
புரட்சித் தலைவர் அவர்களின் கருணை உள்ளத்துக்கு மேலும் ஒரு ஆதாரம்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு வண்ண மலர். மலர் ஒன்று தயாரிப்புச் செலவு ரூ.250/=. அதன் விலை ரூ.55/= மட்டுமே மாநாட்டின்போது விற்றவில்லை ரூ.35/= மட்டுமே!!!
வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டன.
என்னிடம் ஒரு பிரதி உள்ளது!!!!........ Thanks SB., Sir...
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981- 2
மதுரை காமராஜ் பல்கலைக்கழக வளாகத்தில் "தொல்காப்பியர் அரங்கத்தில்" ஜஸ்டிஸ் எஸ்.மகாராஜன் அவர்கள் பிரதிநிதிகள் வரவேற்றார். மேலும் உலக தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் நோக்கங்கள் பற்றி பேசினார்.
இந்த மாநாட்டில் சுமார் 221 ஆராய்ச்சி கட்டுரைகள் திட்டமிடப்பட்டது, சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
அப்படி எவ்வளவு சிறப்பு. எல்லா புகழும் தமிழுக்கும், புரட்சி தலைவருக்கும் மட்டுமே......... Thanks...
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981 - 3
விழாவில் ஐந்து அரங்குகள் இசைக்கு நாட்டியம் மற்றும் நாடகம் நடைபெற ஏற்படுத்தப்பட்டது.
புரட்சித் தலைவியின் "மதுர நாயகி", டாக்டர் பத்ம சுப்ரமணியம், விஜயந்திமாலா, சுதாரணி ரகுபதி, ஸ்வர்ணமுகி அவர்களின் நாட்டியம். திரு. ஆர் எஸ்.மனஓர் அவர்களின் ஒட்டக்கூத்தர் நாடகம், கடையெழு வள்ளல்கள் ......
அதுமட்டுமா எம்.எஸ், பலமுரளிகிருஷ்ணா, லால்குடி ஜெயராமன், சின்னமௌலானா, குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு, சீர்காழி, பாடகர் திலகம் டி.எம். கச்சேரி என்று மாநாடு அசத்தலா அசத்தல்!
சிலம்பாட்டம், களரி, சேவல் சண்டை, கத்தி சண்டை, மான் கொம்பு சண்டை.குத்து சண்டை என்று மாநாடு சிறப்பாக நடந்தது!
எல்லா புகழும் புரட்சி தலைவருக்கே. ......... Thanks...
https://i.postimg.cc/x1QDhQfR/d2674b...c9963b2593.jpg
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் குமுதம் இதழில்
எதிர்பார்ப்பு தான் எல்லாம் துயரத்துக்கு காரணம் - EXPECTATION IS THE CAUSE OF MISREY...
நடிகன் என்பவர் என்றுமே "எதிர்பார்த்து" நடிக்கக்கூடாது!!!
அவர் மற்றும் அவரது ரசிகர்களை பொறுத்தவரையில் அவர் சிறந்த நடிகரா இருக்கலாம். ஆனால் அரசு ஒரு குழு அமைகிறது அவர்கள் மக்கள் மனதில் "இடம் பிடித்தவர்" தான் சிறந்தவர் என்று தேர்தெடுப்பது தவறா?
1970's இல் ஒரு நடிகர் தமிழக அரசின் "சிறந்த நடிகர்" பரிசை தான் பேரமட்டும் என்று சொன்னாராம். கட்சி கண்ணோட்டத்துடன் நடக்கிறது, பரிசு அவர்கள் கட்சி காரர்களுக்கு கொடுக்கட்டும் என்றும் கண்துடைப்பு தனக்கு ஒத்துவராது என்றும் அவர் பேசியதாக தகவல்.
இவர் 1993's இல் "சிறந்த துணை நடிகர்" பரிசு மத்திய அரசு கொடுத்தபோது அப்படியே செய்தார்!!!
எங்கள் நாடோடி மன்னனுக்கு பதிலாக வேறு படம் போனதே அப்போது அரசியல் தானோ? நயாகரா கௌரவ மேயர் அதுவும் அப்படித்தானா???
எங்கள் புரட்சித் தலைவருக்கு சிறந்து நடிகர் குறித்து "சர்ச்சை" [ சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் பின்பு நாங்கள் அப்படி சொல்லவில்லை என்றார்கள்] .........வந்தபோது என்ன எழுதினர் என்ன செய்தார். அதன் பெயர் தான் தன்னம்பிக்கை.
எதிர்பார்ப்பு தான் எல்லாம் துயரத்துக்கு காரணம். இது எல்லோருக்கும் பொருந்தும்.......... Thanks.....
இந்த வாரம் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "நினைத்ததை முடிப்பவன்" சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் ஏ.சி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் "குடியிருந்த கோயில் " கோவை டிலைட் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் "சிரித்து வாழ வேண்டும்" நெல்லை ரத்னா கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்" திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......... மதுரை.எஸ் குமார்......... Thanks.........
நண்பர்கள் கவனத்திற்க்கு!
எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் நடிக்கும் போது தனக்கென்று தனியாக ஒரு பாணியை வைத்திருந்தார். கொள்கையை கடைப்பிடித்து வந்தார். தாம் நடிக்கும் ஒவ்வொரு படத்திலேயுமே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நல்ல நல்ல கருத்துக்களை பாடல்கள் மூலமாவும் வசனங்களின் மூலமாகவும் சொல்லி வந்ததோடு நிற்கவில்லை!.
தம்முடன் பனியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் ஏன்?.....இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கும் கூட நல்ல அறிவுரைகளை சொல்லி அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு பெரிய மகானாவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். இது எல்லோருக்குமே தெரியும். எந்த காலகட்டத்திலும் கீழ்மட்டமான செயல்களுக்கு இடம் தர மாட்டார். யாரையும் செயல்படவும் விடமாட்டார்! சினிமாக்காரர்களுக்கு கூட " நல்ல தரமான படங்களை எடுக்கச்சொல்லி பல மேடைகளில் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.
இப்போது உள்ள புதிய தலைமுறையினர் சினிமாவையும், சின்னத்திரையில் வரும் சீரியல் நாடகங்ளையும் கூட சீரழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில ் இப்போது எடுத்துகொண்டிருக்கும் சினிமாவிலும் சீரியலிலும் தமிழ் கலாச்சாரத்தையே தேடவேண்டியதாகிவிட்டது. தமிழ் கலாச்சாத்தையும், பண்பாட்டையும் கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு பாட்டைக்கூட கேட்க முடியவில்லை! கதாநாயகன் லுங்கியுடனும் தாடிமீசை, பரட்டை தலையுடனுமே அழகான பெண்களுடன் டூயட் பாடல் காட்சியில் நடித்துவிடுகிறான். பார்பதற்க்கே படு கேவலமாக இருக்கின்றது!. ....பழைய படத்திலுள்ள பாடல்களும் சரி, படங்களும் சரி இந்தக்காலக்கட்டத்திலும் மக்களுக்கு பொருத்தமானதாகத்தான் இருக்கின்றது. எம்ஜிஆர் பாடல்களை நீங்கள் பழைய நடிகர்கள் பாடல்களில் ரீமேக் செய்யுங்கள். அதற்க்கு எந்த தடையும் யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் இப்போது உள்ள கீழ்த்தரமான சினிமா பாடல்களுடன் நம் தலைவரை கனவிலும் கூட சேர்த்து பார்க்காதீர்கள்! எம்ஜிஆர் என்கிற பாத்திரம் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். காலத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள அது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல!
அது நிறைகுடம்! எப்போதும் !! எப்போதுமே தலும்பாது, குலுங்காது, கொட்டவும் கொட்டாது.
உலகம் உள்ளவரை ...ஒரே எம்ஜிஆர்தான் ...நிகரானவர் எவருமில்லை! இருக்கவும் முடியாது........... Thanks..........
நூறாவது (100) காவியம், திரைப்படம்......"ஒளி விளக்கு" அட்டகாசமான படைப்பு ... 20-09-1968 - 20-09-2019 வெளியான திருநாள் இன்று... பிற நடிகர்கள் நடித்த 100 வது படத்திற்கும் மக்கள் திலகம் 100 வது காவியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு... தலைவர் காவியம் உடலோடும்... உயிரோடும் சம்பந்தப்பட்ட காவியம் என்றால் மிகையாகாது... தலைவர் உடல்நலம் சரியாக இல்லாமல் நேரத்தில் இந்த காவியமும்... இதில் இடம்பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்களினாலும் தனித்துவமும், அமரத்துவமும் பெற்றது... அப்புறம் மிக முக்கியமான ஒன்று இன்று வரையிலும் முறையான மறு வெளியீடுகள் காண்பதும் வசூல் அள்ளி வழங்கும் நயத்திலும் இதற்கு ஈடு இணையில்லை... மற்றும் இப்பொழுதும் 51 ஆண்டுகள் ஆனாலும் திரையரங்க விநியோக உரிமைகள் "ஒளி விளக்கு" காவியத்தை வாங்கி மீண்டும் வெளியிட போட்டா போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் சர்வதேச அளவில் வேறு என்னத்வ
எந்தவொரு நடிகர்கள், நடிகைகள் படத்துக்கும் அமையவில்லை என்பதே புரட்சி நடிகர் அவர்களின் பெருமை... மாண்பை பறைசாற்றும்......... Thanks.........
எம்.ஜி.ஆரின் ஏழு மணி நேர உண்ணாவிரதம்
(ஜூனியர் விகடன்: 16.02.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் நிறைவடைந்தது......... Thanks.........
ஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி.......... Thanks...........
*பச்சைக்கிளி முத்துச்சரம்*
மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லி விடுவார்கள்.
“என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.
உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகை தான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர்.
25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரைப் புகழும் வரிகள் வரும் போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.
உலகம் சுற்றும் வாலிபன் வெளி வந்து 46 வருடங்கள் ஆகி விட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!
பகிர்வு......... Thanks..........
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
இன்று செப்டம்பர் 21-ம் தியதி
இதே தினத்தில் தான் 1956-ம் ஆண்டு
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படமான " தாய்க்கு பின் தாரம் " வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.
சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
தாய்க்கு பின் தாரம்’ படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி வரும். ரொம்ப பிரபலமான தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்துலே வந்த ரொம்ப தத்ரூபமான காட்சி அது.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........... Thanks...........
http://cinemapokkisham.com/although-...gr-vijai-talk/.......... Thanks ......
"தாய்க்கு பின் தாரம்" 1956ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றி கண்ட மக்கள் திலகம் அவர்களின் 3 காவியம்... இதில் இடம்பெற்ற காளைமாட்டு சண்டை காட்சியை ஆதாரமாக கொண்டே முரசொலி நாளிதழின் logo அடையாளம் இடம் பெற்றதாக அப்பொழுது கருத்து நிலவியதாம்... Thanks.........
MGR வாழ்க
இந்த படம் முகநூலில் வந்தது இதை பதிவுசெய்த கழக தொண்டன்
ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு எடப்பாடியின் படத்தை பெரிதாக போட்டு விட்டீர்களே என்று கண்டித்துள்ளார்
இதுதான் முற்பகலில் செய்தவினை
அண்ணா திமுகவே ஆரம்பித்தவர் எம்ஜிஆர்
இரட்டை இலை சின்னத்தை நமக்கு தந்தவர் எம்ஜிஆர்
உலகத்திலேயே பல முதலமைச்சர்கள் உருவாக்கிய தனிப்பெரும் சக்தி எம்ஜிஆர்
எம்ஜிஆர் அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான் ஏழை மக்கள் அவர் மேல் உயிரையே வைத்திருக் கின்றார்கள்
வள்ளலாகவும் வாழ்ந்து மறைந்தார்
எம்ஜிஆர் பெயரைச் சொன்ன காரணத்தினால் நாங்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தோம்
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன்
அவர் மரணம் அடையும் வரை
எம்ஜிஆருக்கு கட்டவுட் வைப்பது கிடையாது
எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு வைப்பது கிடையாது
எம்ஜிஆரை பற்றி அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் புகழ்ந்து பேசக் கூடாதுஎன்று வாய்மொழி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் தர மறுத்து விட்டார் ஜெயலலிதா
எம்ஜிஆரின் விசுவாசமுள்ள மூத்த கட்சி நிர்வாகிகளை புறக்கணித்தது
இதையெல்லாம் நினைக்கும் போது
அண்ணா திமுகவை அடிபட்டு உதைபட்டு வளர்த்த எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிகிறது
அது போன்ற ஒரு நிகழ்வு
நீங்கள் பார்க்கின்ற படத்தில் ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு உள்ளார்கள்
ஆகவே ஜெயலலிதாவும் ஆதரவாளர் தன் வயித்தெரிச்சலை கொட்டி இந்தப் பதிவைப் போட்டிருந்தார்
,அந்தப் படத்தை எடுத்து இப்பொழுது உங்களிடம் நான் பதிவு செய்துள்ளேன்
முற்பகலில் செய்த வினை........... Thanks.........
வணக்கம் ... மதுரையில் பேனர் தடைசெய்யப்பட்டுள்ளது . பேனரையே போஸ்ட்டராக்கி "நினைத்ததைமுடிப்பவன்" புரட்சித்தலைவரை வரவேற்ற மதுரை தலைவரின் பக்தர்கள்... நன்றி மதுரை.எஸ் குமார்... Thanks...
அடுத்தவரை அழித்து நாம் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் வரவே கூடாது. ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற தனி ஜீவன் ஒவ்வொன்றுமே விலை மதிப்பற்றது தான், இதில் சாதி மத பேதம் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் கிடையாது, அதை விலை பேசவும் முடியாது என்று சொன்ன "உலகம் சுற்றும் வாலிபனி"ன் உன்னத தத்துவத்துடன் நட்புறவுகள் அனைவருக்கும் நற் காலை வணக்கம்........ Thanks...
இதுபோன்ற காட்சிக்கு காட்சி பஞ்ச்சுக்கு பஞ்சமே இல்லாத, இன்றுவரை யாருமே எட்டமுடியாத உயரத்திலிருக்கும் உன்னத திரைக்காவியம், "உலகம் சுற்றும் வாலிபன் " கூடிய விரைவில் உங்கள் இருப்பிடத்திற்கே வர இருக்கிறது. அது வரை இடைவேளை .......... Thanks...
உலகினில் ஒரே எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து நமது தானைத்தலைவன்
ஆமாம்... ஆந்திரா எம்.ஜி.ஆர்., ntr, கன்னட எம்.ஜி.ஆர்., ராஜ்குமார், கேரள எம்.ஜி.ஆர்., பிரேம் நசீர், வடநாட்டு எம்.ஜி.ஆர்., தர்மேந்திரா, இலங்கை எம்.ஜி.ஆர்., காமினி பொன்சேகா, மலேசிய எம்.ஜி.ஆர்., ராம்லி, அப்புறம் அமெரிக்க எம்.ஜி.ஆர்., ரொனால்ட் ரீகன்...இவ்வளவு பெரும் சிறப்புகள் நமது MGR., க்கு........... Thanks wa., Groups...
‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.
கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.
பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.
ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.
தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.......... Thanks.........
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’
-................ Thanks.............
*தமிழர்களின் ஒளிவிளக்கு**
வருகிற 23/11/2019 அன்று மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலத்தில் ப்யூகிட் மெர்டஜாம் பகுதியில் உள்ள" ஆயிரத்தில் ஒருவன் " "இதயக்கனி "எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 102 வது மனிதநேய பிறந்த நாள் விழாவும், மன்றத்தின் 10 ம் ஆண்டு விழாவும் மாலை 4.00 மணி முதல் இரவு 11.30 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதில் அறியப்படுகிற உண்மை யாதெனில், உலகெங்கும் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழர்களை ஒன்று சேர்த்து விழாக்கோலம் பூனவும், அவர்கள் வேறுபாடுகளைக் களைந்து குடும்பத்துடன் ஆடிப்பாடி மகிழ்கின்ற நிகழ்வின் பொருளாகவும் இன்றுவரை எம்.ஜி.ஆர்., மட்டுமே இருந்து வருகிறார். ............
நீரில் அமிழ்த்தப்படுகின்ற காற்றடித்த பந்து எப்படி சீறி மேலெழுப்புகின்றதோ அதுபோலவே, அவரது புகழை மறைக்கவும் மறக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியுற்றுள்ளன. இன்றும் ஒரு சாதாரண உழைக்கும் தமிழ் வர்க்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அவர் ஒருவர் மட்டுமே விளங்கிக் கொண்டிருப்பது விந்தையல்ல, வாழ்ந்த காலத்தில் அவர் விதைத்து விட்டு சென்ற நற்பண்புகளான கொடையுள்ளம், கருணை, அனைவரையும் ஏற்றத்தாழ்வின்றி அன்பு செலுத்தியது மற்றும் சத்தியம் என்கிற விதை தான். அது, இன்று விருட்சமாக வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகம் தோறும் தழைத்தோங்கி இருக்கின்றது.
மலேசியா மட்டுமின்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில் அவருக்கென்று அமைந்துவிட்ட நிரந்தரமான தனியிடத்தை யாராலும் மாற்ற இயலாது. உலகெங்கும் அவருக்காக இதுபோன்ற விழாக்கள் ப்ரதிபலன் ஏதும் எதிர்பார்க்காத ஒரு கூட்டத்தினரால் உண்மை அன்பின் வெளிப்பாடாக மட்டுமே அனைத்து தரப்பினராலும் (இதில் ஏழை, பணக்காரன் மேல்சாதி கீழ்சாதி எல்லாமும் அடக்கம்) ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எம்ஜிஆர் விழாவாக மட்டும் பார்க்காமல் தமிழர்கள் ஒன்று கூடும் விழாவாகவும் கருதவேண்டும். ஏனெனில், அந்தந்த ப்ராந்தியங்களில் வாழ்கின்ற தமிழர்கள் குடும்பத்துடன் ஒன்றுபட்டு செயல்படுவதால் அவர்களுக்குள்ளே உள்ள நட்பையும், உறவையும் பலப்படுத்தி செம்மையாக்குகின்றது.
இதுபோன்ற விழாக்களில் பொதுவாகவே பிறமொழி கலப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டு தமிழிலேயே நடத்தப்படுவதால் அவர்களின் ஒற்றுமையுடன் சேர்ந்து தமிழும் வளர்ச்சி அடைகிறது. விழாவில் நடத்தப்படுகின்ற பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் இளம் தலைமுறையினர் பங்கேற்க ஊக்குவிக்கப் படுகின்றனர். விவாத மேடை மற்றும் பட்டிமன்றங்களில் மட்டுமே சீனியர்கள் பங்கேற்கின்றனர். எம்ஜிஆரின் திரைப்பட பாடல்கள் மற்றும் கருத்துச் செறிந்த வசனங்கள் விழாவில் முக்கிய பங்கு வகித்தாலும் அதன் மூலம் தமிழ் வளர்கிறது, தமிழர்கள் பயனடைகின்றனர். இளம் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் இது போன்ற விழாக்களின் மூலம் அறிமுகமாகி தங்களுக்குள்ளே நட்பை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகின்றது.
புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயமும் எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியே கொள்ளாமல் அவர் ஒருவரை மட்டுமே பொதுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது உண்மைக்கு என்றுமே தோல்வி கிடையாது என்ற கூற்றை உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் காவல் தெய்வம் எம்ஜிஆரென்றால் அது மிகையல்ல.
மனிதனாகப் பிறந்து மஹானாக உருவெடுத்து இன்று காக்கும் தெய்வமாக விளங்கும் எம்ஜிஆரின்உண்மை பக்தனாக இருப்பதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றேன்.
இவண் எம்ஜிஆர் பக்தன் க சந்திரசேகர்.
✌✌✌............ Thanks.........
மதுரை - சென்ட்ரல் சினிமா DTS., புரட்சித்தலைவர் நடித்த " நினைத்ததை முடிப்பவன் "
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சியில் அரங்கம் நிறைந்தது ... மகிழ்ச்சியில் ... ரசிகர்கள் ...........நன்றி ...மதுரை.எஸ் குமார்............. Thanks.........