ethukkum rathri velaila parkalai :oops:
vidinji pozhachu kadantha nalaikku parkaren.
I want SHOBANA version :?
Printable View
ethukkum rathri velaila parkalai :oops:
vidinji pozhachu kadantha nalaikku parkaren.
I want SHOBANA version :?
sp just give mani chitra thaazhu in you tube you will be able to see it. I saw the whole last part and was really dumbfounded. Definitely miles away than the other 3 versions.
Yeah so was I told.
Not now. Its scary in the night !
Would do it tomm
just the dance is not scary the scenes after that are. In my list I would give shobana the first place followed by vidya balan, jothika and soundharya.
Not seen vidhya balan
I had the same line too
shobhana, jyo and then sowndarya
Other than Malayaalam Vineet would be dancing in all 3 versions. each time a different style of dance. In tamil BN, in Hindi Katak great display, good dancer
பாடல்: காற்றோடு குழலின் நாதமே
படம்: கோடை மழை
பாடியவர்: சித்ரா
http://music.cooltoad.com/music/song.php?id=183233
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம்
யமுனையின் கரையோரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
(காற்றோடு)
வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண்மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழிமூட வேண்டும்
தங்கச் சிலைக்கு அந்திக் கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்
(காற்றோடு)
பாதங்கள் ஜதியிலாடும் தகதிமிதகவென்று
பாவங்கள் விழியிலாடும் தகதகதகவென்று
நயனமாடும் ஒரு நவரச நாடகம்
நளினமாக இனி அரங்கேறும்
சரிக நிசரி நிசரி கரிசரி ரிசநிச
மதநி சககரிரி சசநிநி தகக பரிநிநி
சசநி சசநி தகக பதநி
கார்கொண்ட மழைமேகம் வேர்கொண்டு போகும்
கையோடு உனை வந்து வரவேற்கவே
கனம்கூட இன்று யுகமானதென்ன
மருந்தான நீயே நோயானதென்ன
இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும்
எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்
(காற்றோடு)
In manichitrathazhu sridhar has given wonderful performance.Quote:
Originally Posted by sivank
particularly... he is dancing only as Ramanathan, the lover of nagavalli and not as the lecturer...
but in other versions even the character of the current situation is also dancing...
BTW.. I dont think its vineet in kannada. ( its not clear :noteeth: )
Quote:
Originally Posted by raagadevan
http://music.cooltoad.com/music/download.php?id=291736
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன் மணிச்சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
மலை தோட்ட பூவில் மணம் இல்லை என்று
கலை தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாக தோன்றி நிழல் போல் மறைந்தாள்
இயற்கையுடன் தலைவியை ஒப்பிடும் கவிஞரின் மற்றும் ஒரு பாடல். இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சில:
"தரையோடு வானம் விளையாடும் கோலம், இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்"
தரையுடன் வானம் விளையாடுவதை இடையில் பார்த்தேன், அதாவது, பகல் மற்றும் இரவுக்கு இடையில் வருவது அந்தி பொழுது, அந்த காட்சிதான் என் தலைவின் அழகுக்கு ஈடாக முடியும்.
மற்றொரு பொருள்: நாம் பார்க்கும் பொழுது, தரையும் வானமும் இணைவது போல் இருக்கும், அந்த வடிவம் போன்றது தலைவியின் இடை ( கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ), அதை எனக்கு தருமாறு கேட்டேன் :P
"மறுவீடு தேடி கதிர் போகும் நேரம், மணமேடை தேடி நடை போடும் தேவி"
சூரியன் (கதிர்) காலையில் பிறந்து, மாலையில் பூகுந்த வீட்டுக்கு செல்வதைப்போல், மணமேடையை நோக்கி என் தலைவியும் நடை போடுவாள்.
மற்றொரு பொருள்: நெர்கதிர்கள் (கதிர்) பருவம் எய்து விட்டால், அறுவடை ஆகி நெர்குதிருக்குள் செல்ல வேண்டும். தலைவி அது போல் தயாராக இருக்கிறால் ( தலைவன் பால் கொண்ட காதலால் மறுவீடு செல்ல தயார் ஆகி விட்டாள் )
"ஒளியாக தோன்றி நிழல் போல் மறைந்தாள்" : எனக்கு இந்த வரிகளில் கவிஞர் பின்னால் வரப்போகும் எதையோ உணர்த்துவது போல் உள்ளது. நான் இந்த படம் பார்க்கவில்லை, ஒருவேளை தலைவி தலைவனை பிரிந்து செல்லலாம் :?
:clap: amazzzzing as ever! :)
Nichayamaaga very unique thinking. Kannadasan irunthya romba santhosha patrupaar. than kavithaiyai sariya interpret seyyarathukku. I do accept, ITS NOT EASY to interpret some of his songs :)Quote:
Originally Posted by mgb
We think we know it, BUT WE DONT.
great job :clap:
This is how I understand. (padam AMAZING MOVIE, dont miss the chance next time :) )Quote:
Originally Posted by mgb
_______
anthi pozhuthu sainthu irul varugirathu....
en varugirathu.....endraal...
iyarkai raaNi, malai pookaLai elaam thedi vittu, athil thaan thedum maNam illai endru, thirumba pogiraaL....
oLiyaay (day ) ithuvarai irunthavaL , than vanthu thediyathu agappadavillai ena unarnthu, nizhalaay (anthi saainthu irul kavinthu) maraigiraaL.
or
nizhalai - enbathai sogamaay endrum poruL koLLalaam. (thaan thediya maNam illai enpathaal sogam kavinthu oLimugam vaadich chelgiraaL)
innoru perspective:
The man here, feels malaigaLilum entha oru iyarkai malarilum MANAM ilai, (only his woman has the intoxicating fragrance).
When he proposes to indulge in the same much more, she refuses and wades off.
oLiyaaga avanukku inbam thanthu nizhalaay (avanai sogathil aazhthi) marainthaaL.
or
avaL irukkum neram mattum NIJAM/oliyaay santhoshamaay theriyum nijam.
nijathai sirithE nimidam kaati, nizhalaay adutha nimidam marainthu vitaaL.
or.
avaL oru maayay. tharuvathaaga solli emaatriya maayay. nirantharam illaathavaL. oLi pol 2 nimidam thondri, nizhalaay marainthe ponaaL (avan thevaiyai tharaamaleyE )
ganesh and akka :thumbsup:
prabha.. good ones :) just see the number of options he throws with a single stanza :)
power:
:notthatway:
andha pAttula sOgamE kidaiyAdhu.. :evil:
adhu enakku romba pudicha padam.. ( andha padthula Shivaji character pEr madhu :mrgreen: naan enga veetu grahapravesathukku andha padathula shivaji pottirundha design
shirt ( kutti size ) vaanginden :redjump: )
andha padam tragedy illai.. jolly padam :yes:
"oLiyAga thOnRi nizhal pOl maRaindhAL"
appadinnA dhideernu varum oLi kaNNai mooda vaikkum.. appadi moodina kaNNukuL andha oLiyin uruvam nizhalAga theriyum. But eppavum kaNNai moodikittE irukka mudiyAdhu.. meeNdum thiRandhu pArkarappO oLi kaNNukku sAdhAraNmA Agi irukkum..
But kaNNukku uLLE therinja nizhal maRainju pOyirukkum..
adhu mAdhiri than life-la paLeeernu vandha thalaivi thanuLLE kalandhu vittadhAga thalaivan sollugiRan..
( appAdi.. indha pAttukku ippadi oru kuzhappa viLakkam kodukka mudinjadhE.. hayyaa.. :bluejump:)
ganshu.. adikkAdheenga.. ! already power nAn Bangalore vandhAl adikkaradhA sabadham eduthirukkAngaLAm :(
:D kalakks :DQuote:
Originally Posted by madhu
neenga blore varathukaaga naan adikalai :evil: thappa interpret panna kodathu :P
Madhu , you are correct. I just watched the Aapthamithra version of Ra Ra. It is not VineetQuote:
Originally Posted by madhu
BTW, you are perfectly correct about Sridhar. His character as Ramanathan is worth to be mentioned. The Best dance in all 4 versions.
Beautiful song GaneshQuote:
Originally Posted by mgb
One of my favorites :)
Quote:
Originally Posted by mgb
எவ்வளவு அழகாய் பெண்ணை உவமைப் படுத்தியிருக்கிறார்கள்!
ஒவ்வொரு உவமையும் ரசித்துப் படித்தால், பாடல் இன்னொரு பதம் அதிக சக்கரை சேர்ந்து இனிக்கும்.
எனக்கு நிரம்ப பிடித்த இப்பாடல் ....
மங்கையர் தினத்தையொட்டி இதோ இன்று....
______
http://www.raaga.com/playerV31/index...8434258&bhcp=1
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நடந்தால் ஆறு
எழுந்தால் அருவி
நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி
மணந்தால் மனைவி
பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
காதலி அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும்
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
வண்ண வண்ண பெண்ணே
வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல்
மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
…
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
…
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தேன்கனியில் சாராகி
பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
http://youtube.com/watch?v=B-IHy-2X540Quote:
Originally Posted by Shakthiprabha
Great song :thumbsup:
nice tune and picturisation prabha :)
but enakku lyrics avlo pidikkaadhu.. pennai perumaiyaaga paada vendiya paadalil, andha alavu perumai paduththavillai endru ninaikkiren :)
especially "தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி" could have been written better :)
thalaivanidan pEyaagi nnu ezhuyirukkalaamo :lol2: :shhh:
anyway... :)
:rotfl2:
enakkum migavum piditha lyricsnu solla mudiyaathu...aana indha kaalathila pennai pei, pisaasu, raatchasi, saithaan etc endru paadura idathila indha paattu evalavo thevalaam :oops:
பெண்ணை வருணிக்கும் பல பாடல்களை கேட்கும் பொழுது, கவிஞர் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகையை மனதில் இருத்தி கொண்டு பாடலை எழுதி இருப்பாரோ என்று தோன்றும். அந்த வகை பாடல்களில் என்னை அதிசயிக்க வைத்த பாடல் இது.
காட்சி: நாயகனின் மனம் கவர்ந்தவள் யார் என்று நாயகி கேட்கிறாள். நாயகன் மனதில் நாயகிதான் இருக்கிறாள், ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை. ஏன் என்றால், அவள் மணமாகி, ஒரு பெண்ணுக்கு தாயாகி, ஆனால் கணவனை பிரிந்து இருப்பவள். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் அவன் அவனுடைய காதலை சொல்ல முற்படுகிறான்.
கதாநாயகி : ஸ்ரீவித்யா
இனி வரும் வரிகளை அந்த பாத்திரத்துடனும், நடிகை ஸ்ரீவித்யாவுடனும் பொருத்தி பாருங்கள் :P
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்..
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்...
அதிசய ராகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
மோகம்...... மோகம்...
வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
இசை எனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்..
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மை இலக்கணம் அவளது வேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மை இலக்கணம் அவளது வேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அது என் யோகம்....
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி.. அவள் ஒரு பைரவி..
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்....
அழகிய ராகம்....
அபூர்வ ராகம்..
வசந்த காலத்து மழை துளி போல் தூய்மையானவள்
"இந்திரலோகத்து சக்கரவாகம்" சக்கரவாகம் என்பது ஒரு தேவலோக பறவை.. அதன் கண்கள் மிக மிக அழகாக இருக்கும்.. ஸ்ரீவித்யாவின் கண்களுக்கு இதை விட என்ன சிறந்த உவமை இருக்க முடியும் :P
"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி" சீதையை போன்று கற்பில் சிறந்தவள். ஆனால் அதே சமயம் "மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி" மாதவிக்கு கோவலன் மணிமேகலையை கொடுத்து விட்டு சென்று விட்டான், அந்த நிலையில் உள்ளவள் அவள்.
http://music.cooltoad.com/music/song.php?id=288028
:) :thumbsup: enakku romba piditha/manasai baathikkum paatum kooda
//பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மை இலக்கணம் அவளது வேகம் //
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் :)
:thumbsup:Quote:
Originally Posted by mgb
"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி"Quote:
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி" சீதையை போன்று கற்பில் சிறந்தவள். ஆனால் அதே சமயம் "மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி" மாதவிக்கு கோவலன் மணிமேகலையை கொடுத்து விட்டு சென்று விட்டான், அந்த நிலையில் உள்ளவள் அவள்.
"மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி"
ஒரு புறம், சீதையைப் போல், குடத்தில் இட்ட விளக்காய் அடக்கமாய் ஒளிரும் குடும்பத்து அழகு. இன்னொரு கோணத்தில், மாற்றோனை சுண்டியிழுக்கும் அலங்கார அழகு. ஆபத்தான அழகு.
என்றும் பொருள் கொள்ளலாம்.
:thumbsup:
enakum migavum piditha padal.
mgb,
padalil naditha Kamal, padalai padiya KJY , compose pannina MSV patriyum ungal style il konjam sollungalen
வாவ்...
அழகழகா பாட்டு புடிச்சு அதை விட அழகழகா எக்ஸ்ப்ளெயின் செய்யறிங்களே !
ganshu and power ! handsup... sorry.. thumbsup :noteeth:
வசந்த காலத்தில் இயற்கை தன் பூரண அழகுடன் இருக்கும். அது மலர்களின் பருவம்.. எங்கும் பூவாசத்துடன் தென்றல் வீசும்.. அப்போது மென்மையான மிருதங்கம் போன்ற இடியுடன் சாரல் மழையோ அல்லது திடீர் என்று படபடவென்று அடித்து ஓயும் இன்ஸ்டண்ட் மழையோ மட்டுமே பொழியும்.. அதைப் பொழியும் மேகம் கூட முழுவானத்தையும் மூடாமல் அங்கங்கே நீலத் திட்டுக்கள் தெரியும்படி நகரும்.. இயற்கையை ரசிக்கும் எவரும் அந்த மேகக் கூட்டங்களை ரசிக்காமல் இருக்க முடியாது. இங்கே இந்த நாயகியும் அது போல மனதிற்கு மகிழ்ச்சி தருகிறாளோ ?
இன்னொரு பாடலில் "சக்கரவாகமோ மழையை அருந்துமாம்" என்று எழுதியிருக்கிறார்கள்.. இங்கோ மழை தரும் மேகமே சக்ரவாகமாகத் தோன்றுகிறது கவிஞருக்கு.. ஒருவேளை அது already அருந்தியிருப்பதால்தான் பனி முடிந்து வரும் வசந்த காலத்தில் கூட மழை தருகிறதோ ?
மிதிலையின் மைதிலி...காவிரி மாதவி...
இந்த வரிகள் எழுப்பும் ஒரு கேள்வி !
ஏரின் கொழுமுனையில் கிடைத்ததால் சீதா என்றும், விதேக நாட்டு இளவரசியானதால் வைதேகி என்றும், ஜனகனின் மகள் என்பதால் ஜானகி என்றும், மிதிலைக்கு உரியவள் என்பதால் மைதிலி என்றும் அழைப்பார்கள். இன்னும் அவனிஜா, பூமிஜா என்றெல்லாம் பெயர்கள் இருந்தாலும், சீதாவின் பெய்ரோடு இணைந்து சீதாராமன் என்று ராமனுக்குப் பெயர் இருப்பது போல ராமனுக்காகவே வாழ்ந்த சீதைக்கு அந்த உறவை நினைவுபடுத்த பெயர் ஏதும் உள்ளதா ?
கவிஞர் இன்னொரு பாடலிலும் - ("நான் யார் யார் என்று சொல்லவில்லை from பட்டணத்தில் பூதம் ) "காவிரி சொல்லும் மாதவிப்பெணும்... பாவலர் பாடும் ஜானகிப் பெண்ணும்" என்று இவர்கள் இருவரையும் உவமைப் படுத்திப் பாடுகிறார். அவர் ஏன் கண்ணகியை மேற்கோள் காட்டவில்லை ?
ushaji..
ungaloda review sollungo. hayya.. niraiya ideas and explanations kidaikkudhu :P
Kannaki Amma Voottukku Long Vacation Poittathaala Include Panna Maranthuttaangalaam!! :yessir:
Ennoda view - MSV in composing dhan mudhal idam
next to Srividhya and Kamal
- iruvarum unmaiyil oruvayadhaga irundhalum, indha padathil Sri vidhyavai , kamali vida konjam age aga kaatiyadhil Director in touch theiryaradhu.
Sri vidhyavin KANGAL - Solla vendiyavatrai Ivarin Kangalae pesi vidum....
Kamal - Sollat thevail illai. Naughty boy....
Lyric - Ungalai pola enaku ilaiyamaga solla theriyavillai .....
KJY - Enna oru Bhavam.... Nice.
KJY padiyadhal indha paatu sirapanadhaga agi vittadhu.......
Ennoda alltime favourite film and songs.....
:thumbsup:Quote:
Originally Posted by madhu
என்னுடைய கருத்து:Quote:
Originally Posted by madhu
என்னைப் பொருத்தவரை சீதை பதிவ்ரதா தன்மையுடையவள்.
உயர்ந்தவள். பொறுமையில் பூமாதேவி. பெண்களில் உதாரணமாய் விளங்கக்கூடியவள்.
இனி கண்ணகியை எடுத்துக்கொள்வோம்.
கண்ணகி...சரி...பத்தினி. பதிவ்ரதா தன்மையுடையவள். வேறு? அவள் உண்டு, அவள் கணவன் உண்டு என்று மட்டுமே சிந்தித்து வாழ்ந்த சுயநலமிக்கவள். தன் பதிக்கு தவறிழைத்ததால், அப்பேர்பட்ட பதிவரதா தன்மையுடையவள் இரக்கமற்றவளாகி, ஊரையே எரித்தவள். தயாள குணம், தாயைப் போன்று பேதமற்ற அன்பு பிற உயிர்களிடம் இருந்திருக்கலாம். அவளோ இல்லாது பெற்றவள்.
அதனால் அவள் உதாரணத்திற்கு உரியவள் அல்ல!
ஆனால் எங்கள் காவிரி மாதவியோ (I am her fan :P ) தாசி குலத்தில் பிறந்த மாணிக்கம். சேற்றில் பிறந்த செந்தாமரை. இப்படிப்பட்ட பிறப்பிலிருந்தும், ஒருவனிடம் மட்டுமே காதல் கொண்டு, ஒருவனையே மணந்து, அவன் தன்னை புரிந்து கொள்ளாமல், ஓடிய போது, துறவறம் மேற்கொண்டு, வாழ்வை
அழகாய் வாழ்ந்து காட்டியவள். தயாள குணமுடையவள். பிறரிடம் அன்பு பூண்டவள்
இப்போது சொல்லுங்கள்...
நம் நாயகி, சீதையை போலவும், எங்கள் காவிரி மாதவியைப் போலவும் இருப்பதாய் சொல்வதில் பெருமையா?
அல்லது கண்ணகியைப் போல் இருப்பது பெருமையா?
இப்படிக்கு,
"மாசற்ற மாதவியின் விசிறிகள் சங்கத் தலைவி"
ஷக்திப்ரபா.
SP,
Madhavi patriya ungal views excellent.
madhu.. very true.. spring season showers are always pleasant and a great sight to watch ( my stay in chandigarh helped me in witnessing real and lengthier spring season).. especially in the early evenings, when we can see the rainbow as well :P
coming to kannagi.. she was never considered a stunning beauty by any poet unlike madhavi or mythili.. even ilangovadigal mentions her as erezhaandu kannigai ( 14 year old ) when she gets married and nothing more.. so there is no way poets will compare their heroines with kannagi for beauty.
prabha.. what you say is partly correct. but madhavi was very egoistic.. she thought kovalan will definitely come back to her as he was a slave to her beauty and she didnt even bother to visit him once he left her on an ego issue.. she knew he will suffer for food and clothing ( please remember kovalan had tons of wealth and all of them were transferred to madhavi ).
kannagi was egoistic too.. she was the only daughter of the largest merchant in kaveripattinam.. but she didnt want to approach her dad for any help.. when kovalan was at madhavi's place, it is this ego which prevented her from contacting him.. her ego is reflected in the way she tells the pandya king, that her silambu contains maanicka paralgal ( manickam is costlier than muthu ) unlike his wife's silambu which contained muthu.
both these ladies ego finally resulted in kovalan's death :( aambalainga nilamai sanga kaalaththula irundhe ippadithan pola irukku :( :( be it is arranged marriage or love marriage, eppavume aangal romba paavam :cry:
:yes: :rotfl:Quote:
Originally Posted by mgb
இப்படி காரசாரமா டிஸ்கஷன் நடக்கும்னு தெரிஞ்சுதான் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் அப்படின்னு பேர் வச்சிருக்கார் போல இருக்கு :mrgreen:
பொண்டாட்டி இருக்கும் போது இன்னொரு பொண்ண தேடின கோவலன் மாதிரி பாவமான ஆணும் உண்டோ?
சங்ககாலமா இருந்தா என்ன, இந்த காலமா இருந்தா என்ன, இப்பரிதாபத்துக்குறிய கோவலங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை!!