Originally Posted by
pammalar
டியர் பார்த்தசாரதி சார்,
திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது எனது பேறு. தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கலக்கல் நெடுந்தொடரில், லேட்டஸ்ட் பதிவாக வெளிவந்துள்ள "உயர்ந்த மனிதன்" காவியப்பாடலான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடலின் அலசல் அசத்தலோ அசத்தல் ! நடிகர் திலகத்தின் மறைவுக்குப்பின் நடந்த ஒரு அஞ்சலிக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திரு.குமரி அனந்தன் பேசும் போது இந்தப்பாடல்காட்சியைக் குறிப்பிட்டு ஒரு வாசகம் சொன்னார். அது ஒரு வாசகமானாலும் திருவாசகம் போல் என் மனதில் நிலை பெற்றுவிட்டது. அப்படி அவர் என்னதான் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள்?, 'அந்த நாள் ஞாபகம்' பாடலைக் குறிப்பிட்டு. "இப்பாடலில் நடிகர்திலகத்தின் உடம்பில் ஓடுகின்ற நரம்பும் நடிக்கும், அவர் கையில் ஆடுகின்ற பிரம்பும் நடிக்கும்" என்றாரே பார்க்கலாம், அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.
மணியான பாடலைப் பற்றி மணிமணியாக தகவல்களை வழங்கி ஆய்வு செய்தமைக்காக தங்களுக்கு எனது பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.