சரிதான். ஊர் கூடி வடம் இழுத்து தேரை சரியாக வலம் வர செய்வோம். என் பங்கிற்கு, முதலில், வருடம் ஒரு படம் தேர்ந்தெடுத்து , முழுதாய் ஆய்வுகள் எழுதுவேன். எல்லோரையும் வர வேண்டும் ,பதிவுகள் இட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.
Printable View
சரிதான். ஊர் கூடி வடம் இழுத்து தேரை சரியாக வலம் வர செய்வோம். என் பங்கிற்கு, முதலில், வருடம் ஒரு படம் தேர்ந்தெடுத்து , முழுதாய் ஆய்வுகள் எழுதுவேன். எல்லோரையும் வர வேண்டும் ,பதிவுகள் இட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.
விரைவில் எதிர்பாருங்கள்,
பம்மலாரின் இரும்புத்திரை .
சதீஷ் மற்றும் வாசுதேவனின் சவாலே சமாளி.
The other name of dedication = Nadigar Thilagam
Happy Christmas
http://www.youtube.com/watch?v=Iuhj3EIBepM
Dear Mr. Mohan,
Very good analysis, i was very happy viewing your feedback about Kumki, the raising star your son, infact proved that our N.T. Legend will live long. Hats off to you to take N.T. to the next generation.
I'm from Bangalore and I'm adherent fan of N.T. I highly appreciate your views/thoughts about Kumki.
My best wishes to your son....
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Mr.Guruswamy,
Thank you very much for your feed back sir.
I am also staying in Bangalore.My second son Nikhil is also likes NT movies.
He is born & brought up in MUmbai and now in Bangalore studying in DPS.
During Karnan 100 days function at Satyam he was interviewed by Dinamalar
and openly said to the media that all todays actors including Kamal & Rajani are
copying from NT.
Shivaji Mohan
Dinathanthi - Madurai - 26-12-2012
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
Mr K Chandrasekaran Sir,
Best wishes for the success of the function and you are doing great service in propagating
the glory of our NT.
ஏவிஎம் Sound Zone Annual Sales-ல் வைத்து இளைஞர் ஒருவர் அறிமுகமானார் என்று எழுதியிருந்தேன். அவருடன் நடந்த சில சுவையான உரையாடல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் அவர் அறிமுகமான விதம்.
ஹாலில் குவித்து வைக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் டிவிடிகளை குறிப்பாக பழைய படங்கள அதில் நடிகர் திலகத்தின் படங்களை நான் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த இளைஞர் எதிர்பாராதது படம் இருக்கிறதா என அங்குள்ள விற்பனையாளரிடம் கேட்க அந்த sales man வந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் அன்னையின் ஆணை பற்றி கேட்க அது இருக்கும் இடத்தை நான் சுட்டிக் காட்டினேன். 30-35 வயதுக்குட்பட்ட இளைஞர் இவ்வகைப்பட்ட படங்களை பற்றி விசாரித்து வாங்கும் போதே அவரை கவனிக்க ஆரம்பித்த நான் அவருடன் பேச்சு கொடுக்க, பழைய படங்களின் மீது அதிலும் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் எனபது அவர் பேச்சில் தெரிந்தது. பல நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவர் கேட்க நான் தெரிந்தவற்றை சொல்ல அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இருவரும் வெளியே வந்தோம். பொதுவாக பேச்சு வந்த போது இணையம் பற்றியும் பேச்சு வர, நான் நமது Hub பற்றி குறிப்பிட்டேன். அவர் உடனே தெரியும் என்று சொல்லி விட்டு நமது நடிகர் திலகம் திரியை படித்திருப்பதாக சொன்ன அவர் அண்மையில் தியாகம் பற்றி எழுதியிருப்பதை பற்றி குறிப்பிட, அதை எழுதியது நான்தான் என்று சொன்னவுடன் அவருக்கு ஒரே சந்தோஷம். காரணம் அவரும் மதுரையை சேர்ந்தவர்தானாம். அனால் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு வந்து விட்டார்களாம். ஆனாலும் மதுரை பற்றி அந்த தியேட்டர்களைப் பற்றி படிக்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வந்ததாக சொன்னார். அவர் தந்தையார் வெகு காலம் மதுரையில் இருந்ததாகவும் அவரும் நடிகர் திலகத்தின் ரசிகர் என்றும், தன் தந்தையார் மூலமாகவே நடிகர் திலகத்தின் படங்கள் தனக்கு அறிமுகமானதையும் குறிப்பிட்டார்.
பள்ளி கல்லூரி மற்றும் தற்போதைய வேலைப் பற்றியெல்லாம் பேசினோம். திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். சார் சாதனை என்றால் என்ன? அவர் என்ன அர்த்தத்தில் கேட்கிறார் என்பதை புரிந்து கொள்ள நீங்கள் எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள் என நான் திருப்பி கேட்டேன். அதற்கு அவர் இந்த வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்பவை எல்லாம் சாதனையாகி விடுமா? என்று அவர் கேட்க நிகழ்பவை எல்லாவற்றையும் அப்படி சொல்லிவிட முடியாது. ஆனால் எதை அடிப்படையாக வைத்து சொல்கிறோம் என்பதில்தான் பயன்படுத்தப்படும் வார்த்தையின் உண்மையான மதிப்பு இருக்கிறது என குறிப்பிட்டேன். இளைஞர் சொன்னார் நீங்கள் எழுதும் போது மதுரையின் சாதனையாளர் என்று குறிப்பிடுகிறீர்கள். அது என்ன அடிப்படையில் என்பதை தெரிந்துக் கொள்ளவே கேட்டேன் என்றார். அவருக்கு நான் சொன்ன பதிலின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.
நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் முதல் கால் நூற்றாண்டை எடுத்துக் கொண்டு எனது பதிலை சொன்னேன் காரணங்கள் சில. ஒரு கலைஞன் எப்படி சாதித்தான் எனபதற்கு 25 வருடங்கள் ஒரு அளவுகோல். இரண்டாவது காரணம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய தலைமுறை பரபரப்பாக நுழைந்த ஒரு காலகட்டம் 1977 -78 என்பதாலும் அந்த கால அளவை குறிப்பிட்டேன். இனி என் பதில்கள்.
1. ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 2 படங்கள் வெள்ளி விழா ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே மொத்தம் மூன்று முறையும் முதல் கால் நூற்றாண்டிலேயே 2 முறையும் செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1959
வீரபாண்டிய கட்டபொம்மன் - நியூசினிமா -181 நாட்கள்
பாகப்பிரிவினை -சிந்தாமணி - 216 நாட்கள்.
1972
பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182 நாட்கள்
வசந்த மாளிகை - நியூசினிமா - 200 நாட்கள்.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
2. ஒரே நாளில் வெளியான ஒரே கதாநாயக நடிகரின் 2 படங்களும் 100 நாட்கள் ஓடுவது என்ற நிகழ்வை செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1970 அக்டோபர் -29 -தீபாவளி
சொர்க்கம் -சென்ட்ரல் -100 நாட்கள்
எங்கிருந்தோ வந்தாள் - ஸ்ரீதேவி - 100 நாட்கள்.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
3. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் தியேட்டரில் ஒரு கதாநாயக நடிகர் நடித்த மூன்று படங்கள் 100 நாட்களை கடப்பது என்ற நிகழ்வை செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1952 - பராசக்தி - 112 நாட்கள்
1960 - படிக்காத மேதை - 116 நாட்கள்
1964 - கர்ணன்- 108 நாட்கள்.
தங்கம் தியேட்டரின் 42 வருட சரித்திரத்திலேயே [1952 -1994] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
[1952 -ம் ஆண்டு திறக்கப்பட்ட தங்கம் தியேட்டர் 1994-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது]
4. ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1964
கர்ணன் - தங்கம்
பச்சை விளக்கு - சிந்தாமணி
கை கொடுத்த தெய்வம் - சென்ட்ரல்
நவராத்திரி - ஸ்ரீதேவி.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
5. ஒரே கதாநாயக நடிகர் - ஒரே இயக்குனர். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ப/பா வரிசை படங்களில் தொடர்ந்து 8 படங்கள் நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1958 - பதி பக்தி - கல்பனா
1959 - பாகப்பிரிவினை (216 நாட்கள்) -சிந்தாமணி
1960 - படிக்காத மேதை - தங்கம்
1961 - பாவ மன்னிப்பு -சென்ட்ரல்
1961 - பாச மலர் -சிந்தாமணி
1961 - பாலும் பழமும் -சென்ட்ரல்
1962 - பார்த்தால் பசி தீரும் -சென்ட்ரல்
1962 - படித்தால் மட்டும் போதுமா -நியூசினிமா
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணி மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறது. இதன் பெயர் சாதனை.
[அதிலும் 1961-ம் ஆண்டு மட்டும் 3 படங்கள்.இது தனி சாதனை]
6. ஒரே திரையரங்கில் ஒரே கதாநாயக நடிகர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து 444 நாட்கள் [இதில் ஒரு முழு calender வருடமும் அடங்கும்] ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
அரங்கம் -ஸ்ரீதேவி
படங்கள்
1970 அக்டோபர் 29 முதல் 1971 பிப்ரவரி 5 வரை - எங்கிருந்தோ வந்தாள்
1971 பிப்ரவரி 6 முதல் 1971 மார்ச் 25 வரை - தங்கைக்காக
1971 மார்ச் 26 முதல் 1971 ஜூலை 3 வரை - குலமா குணமா
1971 ஜூலை 3 முதல் 1971 அக்டோபர் 17 வரை - சவாலே சமாளி
1971 அக்டோபர் 18 முதல் 1972 ஜனவரி 14 வரை - பாபு
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
7. நடிகர் திலகம் நடிக்க வந்த பிறகு அதிகமான நாட்கள் மதுரை மாநகரிலே ஓடிய கருப்பு வெள்ளை திரைப்படம் -பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.
8. நடிகர் திலகம் நடிக்க வந்த பிறகு அதிகமான வசூலை மதுரை மாநகரிலே ஈட்டிய கருப்பு வெள்ளை படம் பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182 நாட்கள் - Rs 5,61,495.20 p.
1952-க்கு பிறகு மதுரை மாநகரின் 60 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1952 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
9.இவற்றுக்கெல்லாம் முத்தாய்பாக 1952 முதல் 1978 வரை நடிகர் திலகம் நடித்த 48 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன. அவற்றுள் வெள்ளி விழா படங்களும் 150 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழாவை நூலிழையில் தவற விட்ட படங்களும் அடங்கும். இன்னும் சொல்லப் போனால் 90 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய பல படங்களை [தங்கப்பதுமை, வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி, ராஜ ராஜ சோழன் மற்றும் மன்னவன் வந்தானடி போன்றவை] நாம் கணக்கில் சேர்க்கவில்லை.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] முதல் கால் நூற்றாண்டிலேயே இத்தனை 100 நாட்கள் படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் மட்டுமே. வேறு எந்த கதாநாயக நடிகரும் அவர்களின் திரைப்பட வாழ்க்கையை முழுமையாக எடுத்துக் கொண்டால் கூட மதுரை மாநகரில் இத்தனை 100 நாட்கள் படங்களை கொடுத்ததில்லை. இதன் பெயர் சாதனை.
[மதுரையில் 1952 முதல் 1978 வரை 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய நடிகர் திலகத்தின் படப் பட்டியல் தனி பதிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது].
இவை மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை புரிந்தவர் நடிகர் திலகம் என்பதையும் [ஒரு நடிகர் நடித்த ஒரு படம் தொடர்ந்து 120 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆவது போன்ற,175 நாட்கள் மட்டும் ஓடி அதிக வசூல் செய்தது போன்ற, அதிகமான படங்கள் 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ் புல் ஆவது போன்ற ] அவருக்கு கூறினேன். மறு வெளியீடுகளின் சாதனைகளெல்லாம் இதில் வரவேயில்லை.
இப்போது சொல்லுங்கள் நடிகர் திலகத்தை மதுரையின் சாதனையாளர் என்று சொல்லுவதில் ஏதேனும் தவறிருக்க முடியுமா என்று நான் கேட்க அந்த இளைஞர் பிரமித்துப் போய் நிற்கிறார். சார் அவரை இதுவரை ஒரு கிரேட் actor என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது என்றார். நான் சொன்னேன் இதைதான் நண்பர் சுவாமிநாதன் ஒரு திரியின் தலைப்பாகவே [Nadigar Thilagam -The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor] வைத்திருக்கிறார் எனபதை சுட்டிக் காட்டினேன்.
During our conversation since he showed interest in Cricket, I told him to check the career graph of NT and that would resemble Sachin's career. It will be consistent with the milestones being achieved at frequent intervals. Whereas the likes of Ponting and Mathew Hayden had a purple patch for a few years time during which time they scored heavily but otherwise it was just ordinary stuff. That made him understand more clearly on what I was talking about.
(தொடரும்)
அன்புடன்
மதுரையில் 1952 முதல் 1978 வரை நடிகர் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல்.
1952
1.பராசக்தி - தங்கம் - 112
1954
2.மனோகரா - ஸ்ரீதேவி - 156
1958
3.உத்தம புத்திரன் - நியூசினிமா - 104
4.பதி பக்தி - கல்பனா - 100
5. சம்பூர்ண ராமாயணம் - ஸ்ரீதேவி - 165
1959
6. வீரபாண்டிய கட்டபொம்மன் - நியூசினிமா - 181
7. பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216
1960
8. படிக்காத மேதை - தங்கம் - 116
9. விடி வெள்ளி - சிந்தாமணி - 100
1961
10. பாவ மன்னிப்பு - சென்ட்ரல் - 141
11. பாச மலர் - சிந்தாமணி - 164
12. பாலும் பழமும் - சென்ட்ரல் - 127
1962
13. பார்த்தால் பசி தீரும் - சென்ட்ரல் - 110
14. படித்தால் மட்டும் போதுமா - நியூசினிமா - 100
15. ஆலய மணி - சென்ட்ரல் - 100
1963
16. இருவர் உள்ளம் - நியூசினிமா - 100
1964
17.கர்ணன் - தங்கம் - 108
18. பச்சை விளக்கு - சிந்தாமணி - 105
19. கை கொடுத்த தெய்வம் - சென்ட்ரல் - 108
20. நவராத்திரி - ஸ்ரீதேவி - 108
1965
21. திருவிளையாடல் - ஸ்ரீதேவி - 167
1966
22. மோட்டார் சுந்தரம் பிள்ளை - கல்பனா - 100
23. சரஸ்வதி சபதம் - ஸ்ரீதேவி - 104
1967
24. கந்தன் கருணை - நியூசினிமா - 125
25. ஊட்டி வரை உறவு - சென்ட்ரல் - 114
1968
26. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132
1969
27. தெய்வ மகன் - நியூசினிமா - 100
28. சிவந்த மண் - சென்ட்ரல் - 117
1970
29. ராமன் எத்தனை ராமனடி - நியூசினிமா - 104
30. சொர்க்கம் - சென்ட்ரல் - 100
31. எங்கிருந்தோ வந்தாள் - ஸ்ரீதேவி - 100
1971
32. குலமா குணமா - ஸ்ரீதேவி - 100
33. சவாலே சமாளி - ஸ்ரீதேவி - 107
1972
34. ராஜா - சென்ட்ரல் - 101
35. பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182
36. வசந்த மாளிகை - நியூசினிமா - 200
1973
37. பாரத விலாஸ் - சென்ட்ரல் - 100
38. எங்கள் தங்க ராஜா - நியூசினிமா - 103
39. கெளரவம் - சிந்தாமணி - 100
1974
40. வாணி ராணி - நியூசினிமா - 112
41. தங்கப்பதக்கம் - சென்ட்ரல் - 134
42. என் மகன் - நியூசினிமா - 101
1975
43. அவன்தான் மனிதன் - சென்ட்ரல் - 105
1976
44. உத்தமன - நியூசினிமா - 105
1977
45. தீபம் - சிந்தாமணி - 100
46. அண்ணன் ஒரு கோவில் - நியூசினிமா - 100
1978
47. அந்தமான் காதலி - சினிப்ரியா - 100
48. தியாகம் - சிந்தாமணி - 175
(தொடரும்)
அன்புடன்
அரசியல் பற்றி பேச்சு வந்தது. எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த அந்த இளைஞர் தமிழகத்தின் பழைய வரலாறு பற்றி கேள்வி கேட்டார். நீண்ட காலம் தொடர்ந்து முதல்வர் பதவி வகிப்பது பற்றி பேச்சு வந்தது. தொடர்ச்சியாக அதிக காலம் முதல்வர் பதவி வகித்தது பெருந்தலைவர்தான் என்றேன்.அவருக்கு ஆச்சரியம். நான் அப்படி கேள்விப்படவில்லையே என்றார். நான் சொன்னேன் ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 9 1/2 ஆண்டுகள் தமிழக முதல்வர் பதவி வகித்தது பெருந்தலைவர்தான் என்பதை அவருக்கு கூறினேன்.1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முதல் 1963-ம் ஆண்டு அக்டோபர் 2 வரை அவர் முதல்வராக இருந்தார். ஒரு நாள் கூட நடுவில் இடைவெளி விழாமல் இத்தனை நீண்ட காலம் வேறு யாரும் தமிழகத்தில் முதல்வராக பணி புரியவில்லை என்ற உண்மையை சொன்னேன்.
அப்போது முன்பே பேசிக் கொண்டிருந்த சாதனை பற்றி குறிப்பிட்ட நான், தமிழக அரசியலில் பெருந்தலைவர் ஏற்படுத்திய சாதனையைப் சுட்டிக் காட்டினேன். தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று பொது தேர்தலில் நின்று அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி புரிந்து [அதாவது சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவோ அல்லது தள்ளி வைக்காமலோ] மீண்டும் தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றிகரமாக மீண்டும் ஆட்சி அமைத்த ஒரே தலைவன் பெருந்தலைவர் மட்டும்தான். 1957 பொது தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி கண்ட அவர் 5 வருடங்களை நிறைவு செய்து 1962 பொது தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கடந்த 65 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. சுருக்கமாக சொன்னால் தனது ஆட்சியின் சாதனைகளையும் மேன்மைகளையும் முன்னேற்ற திட்டங்களின் செயல்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தி வாக்கு சேகரித்த ஒரே தலைவன் பெருந்தலைவர் மட்டுமே. அந்த மனிதன் நடத்திய அரசின் செயல்பாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களித்ததன் விளைவுதான் அந்த வெற்றி. இன்னும் சொல்லப் போனால் பெருந்தலைவர் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை அவர் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை வழி நடத்திக் கொண்டிருந்தவரை திராவிட கட்சிகளால் அவரை வெற்றிக் கொள்ள முடியவில்லை. 1963-ல் K-பிளான் என்னும் தான் வகுத்த திட்டத்திற்கு ஏற்ப பதவியை துச்சமென மதித்து முதல்வர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் டெல்லி சென்ற பிறகுதான், அங்கே பிரதமர்களை உருவாக்கும் கிங் மேக்கர் என்ற நிலையில் அவர் அகில இந்திய அரசியலில் கவனம் செலுத்த, இங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் மக்களையும் எளிதில் உணர்ச்சி வசப்படுத்த கூடிய மொழி பிரச்சனையும் பாகிஸ்தானோடு ஏற்பட்ட போரினால் உண்டான உணவு தான்ய பற்றாக்குறையும் மற்றும் வேறு சில விஷயங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திராவிட கட்சிகள் வெற்றி பெற்றதை அவருக்கு விளக்கினேன்.
அந்த இளைஞர் [அவர் பெயர் அபிஷேக்] இந்த தகவலகளையெல்லாம் கேட்டவுடன், சார், இந்த உண்மைகளை எல்லாம் ஏன் யாருமே சொல்லவோ எழுதவோ செய்யவில்லையே என்று கேட்டார். நான் சொன்னேன் இன்றைக்கு media-வில் [electronic/print] பணி புரியும் 90- 95 சதவீத நபர்களுக்கு தமிழக/இந்திய வரலாறே தெரியாது. அது அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் இல்லை ஸ்போர்ட்ஸ் ஆகட்டும் ஒரு பத்து வருட காலகட்டத்தில் நடந்தவற்றை மட்டுமே அறிந்து வைத்திருப்பவர்கள்தான் பெரும்பான்மையோர். வரலாறு தெரிந்த ஒரு சிலரும் இதையெல்லாம் எழுதுவதில்லை. காரணம் பெருந்தலைவரையோ நடிகர் திலகத்தையோ பற்றி உண்மையாக எழுதுவதால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது? அதே நேரத்தில் மற்றவர்களை வானளாவ புகழ்ந்தால் அவர்களுக்கு தேவைப்படும் benefit கிடைக்கும் என்றேன். இளைஞர் புரிந்து கொண்டார்.
இரவு வெகு நேரமாகி விட்டதால் அந்த இளைஞர் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறி பிரியா விடை பெற்று சென்றார்.அவர் காரணம் மீண்டும் ஒரு trip down the memory lane போய் வர நேர்ந்தது. இங்கே அவற்றை பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.
அன்புடன்
Quote:
saradhaa_sn
Senior Member Veteran Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Jul 2005Location: ChennaiPosts: 2,180
Originally Posted by Mahesh_K
Saradhaa madam,
திரு. சின்ன அண்ணாமலை கவியரசர் கண்ணதாசனின் உறவினர், சுதந்திரப் போராட்ட வீரர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். அவரது 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற புத்தகம் வியப்பூட்டும் பல குறுந்தகவல்கள் அடங்கியது - நான் சிறு வயதில் படித்து வியந்திருக்கிறேன். இங்கே ஒப்பீடு செய்யப்பட்டிருப்வர்களை விட நிச்சயம் சிறந்தவரே. கல்கண்டு விமர்சனம் எதன் அடிப்படையில் அமைந்து என்று புரிந்து கொள்ள முடியவில்லை. Organising skills குறைவாக இருந்திருக்கலாம். தேசியவாதியான அவர் இந்த விஷயத்தில் திராவிட இயக்கதவருடன் போட்டியிட முடிந்திருக்காது என்பதுதானே தமிழகத்தின் யதார்த்தம் -அன்றும் இன்றும்.
மகேஷ்...
திரு சின்ன அண்ணாமலை ஒரு தேசியவாதி, இலக்கியவாதி, தியாகி என்பதிலெல்லாம் எந்த ஐயமும் இல்லை. அதுபோன்ற பின்புலங்கள் திரு. முசிறி புத்தனுக்கு இல்லை என்பதும் உண்மை.
ஆனால் இங்கே ஒப்பீடு செய்ய எடுக்கப்பட்டிருக்கும் ஒரே அளவுகோல்.....
சின்ன அண்ணாமலை - சிவாஜி மன்றத்தலைவர்
முசிறிபுத்தன் - எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர்
என்பது மட்டுமே.
நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கும் படங்கள் மட்டும் திரு எம்.ஜி.ஆர் படங்களாயிருந்திருந்தால் ஆர்.எம்.வீரப்பன், முசிறிபுத்தன் போன்றோரின் பெருமுயற்சியால் 100 நாள் மற்றும் வெள்ளிவிழாப்படங்களாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த விஷயத்தில் 'நம்ம ஆட்கள்' கொஞ்சம் மாற்று கம்மிதான். ரசிகர்களிடம் இருந்த உத்வேகம் தலைவர்களிடம் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நடிகர் திலகம் பாகம் 6 .....பக்கம் 83
இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருக்கிறது
Quote:
#961
Mahesh_K
Senior Member Regular Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Mar 2010Posts: 239
NT ரசிகர் ஒருவர் கொடுத்த தகவல். 70களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( போஸ்ட் கார்டில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.
10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம்.
இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மற்றும் சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க" இரன்டும் தானாம். இவை இரண்டுமே NT + S.P.B யின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1983க்குப் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சக்தி குறைக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கேட்பது நின்றுவிட்டது.
ஒரு உபரி தகவல் - இதே நிகழ்ச்சியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த மற்றொரு பாடல் இளையராஜா இசையமைத்த "ஓரம்போ..ஓரம்போ" என்ற பாடல். அதாவது T.M.S அவர்களால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை ( between Ilayaraaja and TMS) ஏற்படுத்திய பாடல்.
(நடிகர் திலகம் பாகம் 6......பக்கம் 97)
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்ணடும் ஒரு முறை சங்கிலி படத்தில் இடம் பெற்ற
நல்லோர்கள் வாழ்வை காக்க ....... என்ற பாடல் பல வாரங்கள் ஏன் மாதக்கணக்கென்று சொல்லலாம்
இசை அணித் தேர்வில் முதல் இடத்தில் இருந்து வந்தது
ஒருவாரம் தடீரென இப்பாடல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு
தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது (ஏதோ உள் சதி நடை பெற்றிருக்கிறது)
முதல் இடத்தில் இருக்கும் ஒரு பாடல் திடீரென கடைசி இடத்திற்கு செல்லுமென்று
யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள்கூட அதனை ஏற்றுக்கொள்ளவில்லை
இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு சென்று பின்னர் வெளியேற்றப்பட்டிருந்தாலும்
அதனை உண்மையென ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அங்கே நடந்தது சதி சதி சதி
எல்லா இடங்களிலும் அண்ணனின் பேர் புகழை சதிமூலம்தான் வீழ்த்தபார்hதிருக்கிறார்கள்
Mr Murali Sir,
The way in which you put your views abount the Box Office success of
NT's Film is amazing. The TN people are paying the price by replacing the
Perunthalaivar Rule. No development, nothing and only selfish politics
as well as Jalra Kootam.
We are fortunate enough to have you in this Hub for your excellent work
in propagating the glory of our NT.
டியர் முரளி சார்,
மதுரை சாதனை குறித்த தங்களுடைய தகவல்கள் அருமை. தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல பெருந்தலைவர் பற்றியும் நடிகர்திலகம் பற்றியும் உண்மைத் தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. தாங்களாகவே, தவறாக சித்தரித்து எழுதவும், பேசவும் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை.
No doubt about that. The year 2012 belongs NT's Mega Hit Karnan only.
Recently saw "Maragatham" in dvd for the first time. It was a big disappointment. Throughout the film only Padmini, S. Balachander, T.S. Durairaj & Balaiah appeared in most of the scenes and it was almost a cameo for NT. Any other ordinary actor could have played NT's character and i wonder why he choose to act in this film (Political reasons ???? Murasoli Maran ???? Not sure.)
Contrary to above post, there are so many characters which ONLY OUR NT could have given dignity & immortality. One such character is Narahsimmachari in Paritchaikku Neramachu (telecasted in Sun Life a few days back). My God!!! just terrific. In most of the scenes i was just chocked and my eyes were filled with tears....not because of the background or the impact of the story but simply because of this great actors performance and performance alone !!! Amazing....thalaivar's simmakural, his gestures and entire screen presence was all enough to do the magic.
I remember watching the film at Roxy theatre, Purasawalkam (now, Saravana Stores has come up in that place) during my school days. But, watching the film now was thoroughly a new experience. As a fan, it was a pleasure watching Narahsimachari roaring on the screen. Thanks Sun Life.
Murali sir, just finished reading Thaygam part 1.
Right from the ambiguity to release either Balaji's film or Muktha's (clearly highlighted VCS's upper hand, authority and dominance), acquiring the rights of the malayalam film, concern about nativity etc., and till the the successful completion on 119 days at Chintamani, your information-filled write up made for interesting read.
Details about films of other actors, films which had super hit songs, even hindi films (details like opening of new theatres Shakthi Sivam etc., was very interesting to read )and our own NT's other films ...just amazing write up...i think you must have covered almost all the films which got released during that period. Another testimony for your extra-ordinary memory power.
I was well aware that Thyagam was a super hit film (my father-in-law used to say) but to know that in spite of all those hurdles, Thyagam emerged victorious was great news. Thank you sir.
I wish i could share my views more elaborately here, but due to time constraint i couldn't. Will sure talk about it in details once we meet in person.
It was a very interesting article sir. Will catch up with part II soon.
Dear fans,
"Ooty varai Uravu" started playing in Balaji theatre @ brick kiln road, purasawalkam, from y'day - daily 3 shows. Any plans for tomorrow ???
Malaimalar - Chennai - 29-12-2012
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
Malaimurasu - Chennai - 29-12-2012
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
Thanks Vasudevan Sir, Chandrasekar sir, Sivaa and Mohan.
Mohan,
I am happy that you were able to get into the skin of the Thiyagam post [if I could call it that way] and thanks again for highlighting the points. Seen your pm.
Regards
Mr. MURALI SRINIVAS,
Amazing writeup about the glorious period of Thiyagam. This is the difference between you and others.
I am sure none of the hubbers eloborate this much about the situations during the period of the movie releases. You know the magic of taking all of us to the exact period and to munch the sweet memories about them.
Your knowledge about the past, your extraordinary memory power and the way you are nerrating them are really awsome.
No doubt you are the asset of Shivaji sir's forum, and sure nobody can come near you, except Pammalar.
More and more please in very future.
Mr. MURALI SRINIVAS,
Your Video shop experiences are very interesting.
Your definition for the word SAADHANAI and the exgamples given from Shivaji sir's movies are wonderful.
The list of Shivaji sir's films which have crossed 100 days and Silver Jubilee in MADURAI is excellent. (very celeverly you have covered his achivements from 1952 to 1978, the period of which MGR was also in the field. so nobody can claim Shivaji acheived only after MGR left). How talented you are.
Real way of fame spreading of Shivaji, you are doing from the very beginning of this forum. GREAT.
Wishing you and your family Happy new Year.
Let the new year brings you more
happiness, creativity and energetic life.
நண்பர் ஆதிராம் அவர்களுக்கு,
என்னை பாராட்டுகிறேன் என்ற பெயரில் நமது நடிகர் திலகம் ரசிகர்கள அனைவரும் வருத்தம் கொள்ள செய்யும் வகையில் நீங்கள் எழுதியது சரிதானா? ஒருவர் போல் மற்றொருவர் எழுத முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த திரிக்கு வரும் முன்னரே இதை முன்னெடுத்து சென்ற ஜோ, எழுத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அனைவரையும் கவர்ந்த சாரதா, மனதில் தோன்றுவதை மறைக்காமல் எழுதும் கார்த்திக், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் சுயமாக எழுதும் நெய்வேலி வாசு [பாதுகாப்பு படப்பிடிப்பு, சந்திப்பு ஓபனிங் ஷோ மற்றும் வசந்த மாளிகை நினைவலைகள்], பாடல்களை அலசுவதில் ஒரு முனைவர் பட்டமே கொடுக்கலாம் என அனைவராலும் பாராட்டப்படும் சாரதி, அதிரடி எழுத்து மன்னன் கோபால், விழாக்களையும் முக்கியமான நிகழ்வுகளையும் உடனே நிழற்படமாக பதியும் ராகவேந்தர் சார், பலவிதமான சமூக நற்பணிகளை நடத்தி அதை இங்கே பதிவிடுவதன் மூலம் நடிகர் திலகத்தின் பெயரால் நடக்கும் நற்பணிகளை உலகறிய செய்யும் சந்திரசேகர், யாழ் நகரில் நடிகர் திலகத்தின் சாதனைகளை மட்டுமல்ல சேலம் மாநகரத்திலும் அவரின் சாதனைகளை இங்கே பதிவு செய்யும் சிவா, சசிதரன், ராதாகிருஷ்ணன், மூத்த ரசிகர் ராமஜெயம், இப்போது அவ்வளவாக பதிவிடாவிட்டாலும் முன்னர் தன் நுணுக்கமான விமர்சனத்தால் அனைவரையும் கவர்ந்த மோகன் (ரங்கன்), நடிகர் திலகம் நடித்த படங்களின் online சுட்டிகள் மற்றும் அழகான புகைப்படங்களை தந்துக் கொண்டிருக்கும் சதீஷ், நெல்லை அனுபவங்களை சுவைப்பட எழுதிய கிருஷ்ணாஜி, நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்தியோ, இல்லை வீண் வாதமோ வந்தால், அதை லாவகமாக எதிர்கொண்டு நகைச்சுவை இழையோட பதிலுக்கு பதில் கொடுத்திருந்த நண்பர் மகேஷ், அழகான தமிழில் பதிவிட்ட காவேரி கண்ணன் மற்றும் சிவாஜி தாசன், ஆனந்த், சிவாஜி செந்தில், மோகன் சுப்ரமணியன், குருசுவாமி முன்பு வெகு ஆர்வமாக பதிவிட்டுக் கொண்டிருந்த ஷிவ், இப்போது அதே ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் சித்தூர் வாசுதேவன், அற்புதமாக எழுதக் கூடிய ராகேஷ், முன்பு active-ஆக எழுதிக் கொண்டிருந்த tacinema, சிவன்K, சற்று அதீதமாய் உணர்ச்சிவசப்பட்டாலும் நடிகர் திலகத்தின் மேல் அதீத அன்பு கொண்ட சுப்ரமணியன், இளமையின் துடிப்போடு நடிகர் திலகத்தின் படங்களின் விமர்சனங்களை பதியும் ராகுல்ராம், நமது NOV மற்றும் எழுத்து சித்தர் பிரபுராம், மற்றும் நான் இங்கே குறிக்க விட்டுப் போன ஏதேனும் நபர்கள் [அவர்கள் மன்னிக்க] இப்படி பலர் இந்த திரியில் பெரும் பங்காற்றியிருக்க என்னை மட்டுமே முன்னிறுத்தி நீங்கள் எழுதியது பலரையும் [நான் உள்பட] வேதனைப்படுத்தியிருக்கிறது.
நீங்கள் சொன்ன ஒரே ஒரு விஷயத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். அது அருமை நண்பர் சுவாமி பற்றி சொன்னது. நாங்கள் எவ்வளவோ எழுதலாம். ஆனால் அந்த எழுத்துகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியது சுவாமி அவர்கள் பதிவிட்ட ஆவணங்கள்தான். அவரின் பங்களிப்பு அசாத்தியமானது.
ஆகவே பாராட்டுங்கள் அனைவரையும் என கேட்டுக் கொண்டு
அன்புடன்
Wishing All The Hubbers A Very Happy And Prosperous New Year 2013!
Let this New Year bring all health, wealth and glory to everyone.
Like 2012, let 2013 also see the glorious spectacle of NT films hogging the limelight and being right there at the top!
Regards
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.
முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.
யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.
வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.
அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Dear Friends,
Wish you all a very happy and prosperous New Year.
Regards,
R. Parthasarathy
Dear Mr. MURALI SRINIVAS,
I gone through the detailed reply given by you, mentioning the participation and contributions of EACH & EVERY hubber here, by mentioning more than 50 names. This is our MURALI sir.
My respect on you increases day by day and by your each and every post.
But you see, the 'one' hubber who blamed me that I am admiring only you and Pammalar, he admired the contribution of only one hubber in his post, leaving other's contributions as 'ambo'.
That is the difference between you and others, and my openion is the same 'You and Pammalar' are matchless, and in fact Mr. CHANDRASEKHAR too, by his public services.
இந்த மன்றத்தில் நடிகர் திலக்கத்தின் முதல் திரி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருபவன் என்ற முறையில் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன்..
நடிகர் திலகத்தின் திரி என்பது முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதற்கும் , தொடர்ந்து அவர் நினைவை அசை போடுவதற்கு ஏற்ற இடமாக பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ளது .பல்வேறு கால கட்டங்களில் பலர் இங்கே பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள் .. காலச்சுழற்சியில் தனி மனித சூழ்நிலைகளின் காரணமாக பலர் தொடர்ந்து நடைபோட முடியாமல் சென்றிருக்கிறார்கள் .மீண்டும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் வந்து தங்கள் பங்களிப்பை தொடர்ந்திருக்கிறார்கள் ..மாறி மாறி பல பேர் வந்து சென்றாலும் நடிகர் திலக்கம் திரி என்ற இந்த தேர் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது ..காரணம் தேரை இழுப்பது தேரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்துக்காக மட்டுமே , தேரை இழுத்துச் செல்லும் நம் ஒவ்வொருவருக்காகவும் அல்ல என்ற புரிதல் மிகபெரும்பான்ன்மையான பேருக்கு இருந்ததாலேயே இது சாத்தியப்பட்டது .
இங்கே அவரவருக்கு அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பு , நேரம் பொறுத்து அற்புதமான பங்களிப்பை பலர் வழங்கி வந்திருக்கிறார்கள் ..அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதி சந்தேகம் இல்லை .அற்புதமான ஒரு எழுத்துப் பங்களிப்பின் போதோ , ஆவண வழங்கலின் போதோ , தகவல் பகிர்தலின் போதோ அதற்காக அவர்களை பாராட்டுவது , நன்றி நவில்வதும் கண்டிப்பாக இயல்பான ஒன்று .அதையும் யாரும் எள்ளளவும் குறை சொல்ல முடியாது . ஆனால் பிரச்சனை ஆரம்பிப்பதே பாராட்டுகளில் ஒப்பீடுகளும் உயர்வு நவிற்சி உச்சங்களும் மலிந்து விடும் போது தனி மனித ஈகோவும் எதிர்பார்ப்பும் முளைத்து விடுவது இயல்பு .
உதாரணத்துக்கு நம்முடைய முரளி சாரை எடுத்துக்கொள்வோம் . எத்தனை எத்தனை ஆண்டுகளாக அற்புதமான பங்களிப்பை அளித்து வருகிறார் . நான் உட்பட அவரை பாராட்டி மகிழாதோர் இல்லை . அவர் சிறப்பான இடுகை ஒன்றை தரும் போது அதற்காக "நன்றி முரளி சார்" என்றோ "மிகச் சிறப்பான எழுத்து .அருமை" என்றோ பாராட்டுவது போதுமானது .. அதை விடுத்து "முரளி சார் ..உங்களைப் போல எழுத உலகத்தில் யாருமில்லை " என்றோ "எழுத்துலக திலகமே " "ரசிக உலகின் உச்சமே" என்றோ அவரே கூச்சப்பட்டு நெளியும் வகையில் சொன்னால் அதை அவரே விரும்ப மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . எனவே இத்தகைய உச்ச பட்ச உயர்வு நவிற்சிகளை தேரிலே வைத்து நாம் இழுத்துக்கொண்டிருக்கும் நடிகர் திலகத்துக்கு மட்டும் சூட்டி , தேரை இழுக்கும் இழுப்போரிடையே இவர் முதல்வர் , இவர் இரண்டாமவர் என குறுக்குசால் ஓட்டாமல் இருப்பது நலம் .
(அப்படியென்றால் இவர் (நான்) இப்படித் தான் சொல்கிறார் . இதைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என வழக்கம் போல பொழிப்புரையும் தீர்ப்பும் வழங்கினாலும் எனக்கொன்றும் இல்லை ..எனக்கு தேரும் தேரில் இருக்கும் நடிகர் திலகமும் தான் நோக்கம் , இங்கு நல்ல பெயர் வாங்குவதோ அல்லது தனி நபர்களை தூக்கிப்பிடிப்பதோ அல்ல .நன்றி)
I totally agree with the views expressed by Mr Joe.
ஆதிராம் சார்,
ஒரு சின்ன விண்ணப்பம். திரி என்பது ஆராய்ச்சி கூடமல்ல. பொதுவில் ஒரு விஷயத்தில் நாட்டம் கொண்டவர்கள் கூடி விவாதித்து பரிமாறி கொள்ளும் இடம்.எப்போதும் எல்லா விஷயங்களும் ,எல்லோரிடமிருந்தும் புதுசாக வர முடியாது.ஆனால் எல்லோரும் பரிமாறி கொள்ளும் போது ,ஓரிரண்டு புதுசாக அக படும். அத்தோடு ,புதிது புதியதாய் பார்வையாளர்கள் வருவர். அவர்கள் ,பழைய பாகங்களை முழுதாக படிப்பார் என்றும் சொல்ல முடியாது.அப்போது ,எந்த விஷயமாயினும்,அவர்களுக்கு சுவையானதாகவே இருக்கும். யாரையும் திட்டி, விமரிசித்து, அவர்களை திரியிலிருந்து விரட்ட வேண்டாமே ப்ளீஸ்.
எல்லோர் பங்களிப்பையும் வர வேற்போம். நல்லதை பாராட்டுவோம். மற்றவற்றிற்கு, மௌனியாய் இருத்தல் நலம்.
அன்புள்ள நண்பர்களே,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வேலை நிமித்தமாகவும் உடல் நிலை காரணமாகவும், ஒரு இடைவெளி விழுந்து விட்டது.
சீனியர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்திரன் போன்றோர் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
திரு. ராகவேந்திரன் அவர்களின் நிழற்படப் பதிவுகளும் 3-d பதிவுகளும் மிக நன்றாக இருந்தன.
திரு. முரளி அவர்கள் வழக்கம் போல எளிய மற்றும் சுவாரஸ்யமான ஈர்ப்புடன் தியாகம் மற்றும் மதுரை மாவட்ட நினைவலைகளை அற்புதமாக எழுதியிருந்தார்.
அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர். அண்மையில், கெளரவம் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" பாத்திரத்தில் அவரது நடிப்பை வேறு கோணத்தில், ஒரு ஹப்பர் அற்புதமாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
திரு. சந்திர சேகர் அவர்களைப் பற்றியும் அவரது சமூகத் தொண்டினைப் பற்றியும் போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.
திரு. ராகுல் ராம் அவர்களின் ஆய்வுகளும் மிகவும் சுவையாக இருந்தன.
திரு. கோபால் அவர்கள் மறுபடியும் "இரும்புத் திரை" பட ஆய்வு மூலம் துவங்கி இருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. நடிகர் திலகம் வைஜெயந்தி மாலா ஜோடிப் பொருத்தம் அற்புதமாக அமைந்து, துரதிர்ஷ்ட வசமாக சொற்ப படங்களுடன் முடிந்தது. ஒரு சோலை வனத்தில், இருவருக்கும் நிகழும் இரு சந்திப்புகள் மிகவும் சுவையாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கும். தொடருங்கள்.
சிலரது பெயர் விட்டுப் போயிருந்தால், தயை கூர்ந்து மன்னிக்கவும்.
திரு. பம்மலார், திரு. வாசுதேவன் (நெய்வேலி) மற்றும் மற்ற சீனியர்களின் வருகை இந்தத் திரிக்கு மேலும் சுவையும் சுவாரஸ்யமும் கூட்டும்.
இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி