Originally Posted by
kalnayak
ரவி, உங்கள் மனது புண்பட்டிருக்கிறது. உண்மை!!! அதற்காக எழுதாமல் எல்லோரையும் தண்டிப்பது நன்றன்று. பலமுறை உங்கள் பதிவுகளினால் மட்டுமே இத்திரி நிரம்பியிருக்கிறது. நிறைய எழுதக்கூடிய உங்களைப் போன்றவர்கள் விடை பெற்றதினாலேயே இத்திரி அதன் எப்போதுமான வேகத்தையும் உற்சாகத்தையும் இழந்து கிடக்கிறது - உங்களுக்கே தெரியும். நீங்களும் அதையே செய்யலாமா? கருத்து வேற்றுமை இத்திரியின் இயல்பு. மன்னியுங்கள். நீங்கள் எப்போதும் போல் உங்கள் பதிவுகளை தொடருங்கள். உங்களைப்பார்த்தாவது மற்றவர்கள் மனம் மாறக்கூடும்.