பாடகர் திலகம் ,கண்ணிய பாடகி குரல்களில் கலந்து கட்டும்
'ஒ மை டியர் டாக்டர் ,வாட் இஸ் தி மேட்டர் '
http://www.youtube.com/watch?v=Ys3KhUC1E6w
Printable View
பாடகர் திலகம் ,கண்ணிய பாடகி குரல்களில் கலந்து கட்டும்
'ஒ மை டியர் டாக்டர் ,வாட் இஸ் தி மேட்டர் '
http://www.youtube.com/watch?v=Ys3KhUC1E6w
ஆயிரம் ஜென்மங்க்ள் முன் ஜென்மத்தில் ஸாரி முன்பாகத்தில் தோய்த்து அலசியாகிவிட்டதே கிருஷ்ணா ஜி.. இருந்தாலும் அடிஷனல் தகவலுக்கு நன்றி
குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்
அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்குப் புரியும்
காட்டுக்கதை வீட்டில் கூட நடக்குது கண்ணா
கடவுள் கண்ணை தீபப்புகை மறைக்குது கண்ணா..
ம்ம் கண்ணதாசன் டிஎம் எஸ் ந.தி..இன் ஜெ.ச..(காப்பி பேஸ்ட்ல ஜெனரல் சக்கரவர்த்தி போஸ்டிங்க் நடுல்ல நிறைய ?? ?? வருதுகிருஷ்ணா சார்)
பாடகர் திலகம் குரலில் 'நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா'
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பும் டி எம் எஸ் அவர்களின் கண்ணீர் குரலும் சேர்ந்து ரசிக்க வைக்கும் பாடல்
http://www.youtube.com/watch?v=x41bJ3dLmD0
வாணியின் அழகிய குரலில் 'அழகிய கிளிகளின் ஊர்வலம் அவசரபட்டால் நடக்காது அடிகடி நீங்கள் ஹோர்ன் அடித்தால் '
அய்யா ஒருவகை மைனர் அடி
ஹரன் அடிப்பதில் மேஜர் அடி
இந்த பாடலின் விடியோ கிடைக்குமா சி கே சார்
தேடிப் பார்க்கிறேன் கிருஷ்ணா சார்.. நன்றி இப்போ படிக்க முடிகிறது
இருந்தாலும் இந்த சாவிக்கொத்து சினிமால மாட்டிக்கிட்டுபட்ட பாட்டிற்கு ஒரு வியாசமே எழுதலாம் :)
சி கே சார்
சமீபத்திய அரண்மனை ஆயிரம் ஜன்மங்கள் உல்டா என்று கேள்வி
உண்மையா ?
https://mathimaran.files.wordpress.c...am-9.jpg?w=640https://mathimaran.files.wordpress.c...-c-1.jpg?w=640
கலாட்ட கல்யாணம் நடிகர் திலகம் 'சாவி' நினைவு உள்ளதா சி கே சார் ?
https://encrypted-tbn2.gstatic.com/i...1n45FCKWvq_7n0
பஞ்சு அருணாசலம், புலமைப் பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன்.
நா. காமராசன் தேனிமாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர். அவ்வூரைச் சேர்ந்த பழங்கவிஞர் கான்முகமது என்பவரிடம் கவிதை இலக்கணத்தைக் கற்றவர். கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியிருக்கிறார். தாம் கல்லூரியில் தமிழ்ப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிற வகுப்பு மாணவர்களும் பேராசியர்களும் கதவு ஜன்னல்கள் எல்லாம் முகமாக நின்று தம் பாடங்களை ஆர்வத்தோடு கவனிப்பார்கள் என்று நா. காமராசன் கூறியிருக்கிறார். முன்னால் சபாநாயகர் காளிமுத்து, எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியவர்களோடு இளமையில் திராவிட இயக்கத்தின் தனித் தமிழ்நாடு கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். அதற்காகச் சிறைசென்றிருக்கிறார். சிறையில் அவர் கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்தார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல், சுரதா, தீபம் ஆகிய பத்திரிகைகளில் அவர் கவிதைகள் எழுதி வெளியிட்டார். தன் இலக்கியத் தாய்வீடு என்று தாமரை இதழைக் குறிப்பிடுகிறார்.
நீதிக்குத் தலைவணங்கு என்னும் திரைப்படம் வாயிலாக நா. காமராசன் திரைப்பாடல் எழுத வந்தார். அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் வெற்றிபெற்ற பாடல்கள் பல.
'கனவுகளே ஆயிரம் கனவுகளே',
'போய்வா நதியலையே',
'விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்',
'ஓ மானே மானே உன்னைத்தானே',
' மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ',
'ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே' – ஆகிய பாடல்கள் அவர் எழுதியவற்றில் கவர்ந்தவை. மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கௌரவத்தோடு,தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்றுகொண்டார். தாம் திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில்
‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார்.
‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’
என்று மனம் வெதும்பிச் சொன்னார்.