பெருமைத் திலகங்கள்!
http://i1170.photobucket.com/albums/...psmbp75m3e.jpg
Printable View
பெருமைத் திலகங்கள்!
http://i1170.photobucket.com/albums/...psmbp75m3e.jpg
CONGRATS KALAIVENTHAN SIR AND CS KUMAR SIR FOR REACHING 800 AND 700 POSTS RESPECTIVELY
http://i1170.photobucket.com/albums/...psxalkxqrl.jpg
மதுரை திருப்பரகுன்றம் - லக்ஷ்மி அரங்கில் நேற்று முதல் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' நடை பெறுகிறது .
தகவல் திரு கே .சாமி - மதுரை
MGR......உழைப்பால் உயர்ந்தவர்,,அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் கதைகள் எல்லாமே நல்ல கருத்துகளை கொண்டது...அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் ,திரைப்பட கதைகள் யாவுமே எழுத்தறிவு பெறாதவர்களை கூட இப்படிதான் வாழ வேண்டும் என்ற உண்மையான வாழ்க்கைக்கு வழிவகுத்தது...சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ..உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே .....கடவுள் இல்லை என்று தோன்றிய தி மு கவில் இருந்து வந்தாலும் எப்போதும் எந்த மதத்தினரையும் புண் படுத்தியதாக தெரியவில்லை.. அரசியலுக்கு வந்தபின் பலதரப்பட்ட சிந்தனைகளை உடைய அரசியல்வாதிகளை சமாளித்து அரசியல் நடத்தினார் அது அவருடைய திறமையாக தான் இருக்க முடியும்....திரைபடங்களில் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொடங்கி வெற்றி கண்டதும் அவருடைய ஆளுமையின் சிறப்பு தான்....தி மு க கட்சி ஆரம்பித்த அண்ணாதுரையின் மிகுந்த நம்பிக்கையுரியவராக திகழ்ந்தார் என்றால் மிகையாகாது....தமிழ்நாட்டு அரசியலில் ...காமராஜர் அண்ணாதுரை ராஜாஜி வரிசையில் இவரும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ..அவருடைய மறைவுக்கு பிறக்கு அந்த வரிசையில் யாரும் இல்லாதது துரதிர்ஷ்டமே ...விமரிசனகளுக்கும் ஆளானவர் ...பிற மொழியை தாய்மொழியை கொண்டவர் என்று அவர் தூற்றபட்ட போதும் நல்லவராக மக்களுக்கு அறியப்பட்டதால் தமிழ் மக்களால் போற்றபடுகிறார்...போற்றபடுவார். ..இலங்கை ...(.கண்டி...)தமிழ் மண்ணிலே பிறந்து,இந்திய தமிழ் மண்ணிலே வளர்ந்து வாழ்ந்து சாதனை படைத்து மறைந்தவர்
எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் மறையவில்லை. அவரது வசீகரமும், புன்னகை தவழும் முகமும், தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டும் என்றும் மறக்க இயலாது. மிக சிறந்த மனிதாபிமானி. அடுத்தவர் பசி பொறுக்காத மனித தெய்வம். தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டுக்காக பாடுபட்டவர். தனது திரைப்படங்கள் மூலம் நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு கூறியவர். அவரது ஒவ்வொரு செயலும் தமிழ் நாட்டு நலனை சார்ந்தே இருந்தது. அவரை போல் இன்னொரு மாமனிதர் தோன்றுவது மிக கடினம். அண்ணா திமுக இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் மங்கா புகழும் அவர் மீது மக்கள் இன்றும் வைத்திருக்கும் அன்பும்தான் காரணம்.
" வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி " மக்களின் மனதில் நின்றவர் யார் ? மறைந்து 25 வருடம் கழிந்தும் இன்றும் இப்படி ஒரு மனிதரை நெஞ்சில் நிறுத்தி கொண்டாடும் அளவுக்கு நன்மைகள் செய்துள்ளார் என்றல் அது மிக பெரிய விஷயம்.. தமிழர் நலனுக்காக உழைத்து இரவா புகழுடன் இன்றும் நம் மனதில் அரியாசனம் இட்டு அமர்ந்திருக்கும் நம் வள்ளலை பற்றி புகல வார்த்தைகளே இல்லை..நான் இந்த அற்புத மனிதரை கண்டது இல்லை..என் பிறப்பிற்கு முன்பே மறைந்து விட்டார்..அவரை காணாத சமுதாயமே இன்று கொண்டாடும் அளவுக்கு மா மனிதர்..நிச்சயம் இன்னும் என் பேரன்,கொள்ளு பேரன் தலைமுறை கூட இவரை கொண்டாடும்..இவரை கன்னல் காணாதது எங்கள் துர்பாக்கியம் ...வாழ்க மக்கள் திலகம்...
இன்றைக்கும் எனது மாமா வேலையில் போகும் போது mgr அவர்களின் புகை படத்தை கும்பிட்டு தான் போவார்... அவர் போட்ட பிச்சை தான் இந்த வாழ்கை என்று சொலுவார்...என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால்.. ஒரு மனிதன் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆனா பிறகும் இவ்ளோ அன்பு வைத்திருகிறார்கள் என்றால் அவர் எப்படி இருந்திருக்க வேண்டும்... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் குழந்தையாகி இருந்து விட்டோம்...நிச்சயம் we miss you sir ..
தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். உண்மை உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும். "பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா" நமது பொன்மனச் செம்மல் அவர்களுக்கு பொருத்தமான வரிகள். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி .... விவசாயி ... இந்த உண்மையான அருமையான வரிகள் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏற்படுத்த வேண்டிய தருணமும் கூட. நமது எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பது திண்ணம்.
மக்கள் திலகம் அவர்கள் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் பாண்டியன் ஹோடேலில் தங்குவார்கள். அங்கு இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும். அவர் கையில் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால் கூட போதும் அதனால் வாழ்வு வளம் பெரும் என்ற நம்பிக்கை. அந்த நமிக்கை வீண் போனதும் இல்லை. தொட்டால் பொன் மலரும் அல்லவா. மக்கள் தோழம இருக்கும் அறைக்கு பல தலைவர்கள் வீட்டில் இருந்து உணவு வரும். காலையில் தயிர் சாப்பிடுவார். அறைக்குள் உணவு பரிமாறும் ஊழியர்களை தன்னோடு அமர்த்தி அவர்களுக்கு உணவு பரிமாறுவார். அவர்களுடன் போட்டோ எடுத்துகொண்டு சரியாக சென்னை சென்றதும் அதை அந்த படங்களை தபாலில் அனுப்பி வைப்பார் அவர் உதவியாளர். மனித நேயம் ...மக்களிடம் அன்பு ..தாழ்மையான குணம் மின்னலென வந்து போகும் கோபம்....கருணை ..சாதாரண ஊழியர்களோடு தோளில் கைபோட்டு பேசும் இயல்பு. மறக்க முடியுமா மக்கள் திலகத்தை. எழுதலாம் பக்கங்கள் போதாது. வாழ்க புரட்சி தலைவரின் புகழ்.
10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுகொள்வார்கள் அவருடைய பொற்கால ஆட்சியை அதனால்தான் தமிழன்னை தொடர்ந்து மும்முறை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது அமரர் எம்.ஜி.ஆர். மட்டுமே மேல பட்டியலிட்ட ஒவ்வொன்றையும் விவரிக்க வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி புத்தகமே போட வேண்டி வரும்..... மிக முக்கியமான ஒன்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த கால கட்டம் (1977-1987) இந்திய நாடு மிக மிக ஏழை நாடு வறுமை பிடியில் சிக்கி தவித்த காலம். 1991 க்கு பிறகு தான் தாராளமயமாக்குதல் எனும் "உலகமயமாக்குதல்" (globalization) கொள்கை மூலமா இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் மூலமாக பல பில்லியன் டாலர் வரவு அரசு கஜானாவுக்கு வந்தது....... ஆனால் அன்று? இன்று ஆயிரம் ருபாய் கிடைக்குது ஆனா 100 பேர் தான் பயன் அடைகிறாங்க ஆனால் அன்று 100 ருபாய் தான் கிடைச்சுது ஆனால் ஆயிரம் பேர் பயன் அடைந்தாங்க...... அடைய வச்சவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஐநா சபையிலே அன்று வியந்து பாராட்டினாங்க எப்படி இந்தியா மாதிரி ஒரு ஏழை நாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திலே தினசரி 65 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சத்துணவு அளிக்க முடிகிறது..... இது எப்படி சாத்தியம்? வியப்புக்குரியவர் எம்.ஜி.ஆர்....
.. (தொடர்ச்சி) 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... 1) முல்லை பெரியாறு நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை 7) மாணவ மாணவியர்களுக்கு இலவச காலனி மிதிவண்டி 8) 108 ஆம்புலன்ஸ் 9) அரிசி விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 10) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 11) உலக தமிழ் மாநாடு 12) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 13) உலக தமிழ் சங்கம் 14) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 15) பெரியார் நூற்றாண்டு விழா 16) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் 17) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 18) கோயில் பூசாரி உதவி தொகை 19) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில உறவுகள் 23) மத்திய அரசு உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு...
"பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியிலே குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் – தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்"... தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்’ என்று வெறுமனே வாய் அசைக்காமல் தமிழ் மொழி காக்க ஆட்சிக்கு வந்தவுடன் அவர்தான், தஞ்சைத் தரணியிலே "தமிழ்ப் பல்கலைக்கழகம்" அமைத்தார். தமிழ் அறிஞர்கள் 100 ஏக்கர் தேவை என்றனர் ஆனால் எம்.ஜி.ஆர். தந்தது 1000 ஏக்கர் நிலம். "உலக தமிழ் சங்கம்" கண்டார், உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது "உலகத்தமிழ் மாநாட்டை" மகத்தான முறையில் நடத்திக் காட்டினார். பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தத்தை அரசு பள்ளிகூடங்கள் வழியாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்..........
Mgr அவர்கள் ஒரு நடிகராக மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான்,ஆனால் நடிகராக மக்களால் மட்டும் நினைத்துக்கொள்ளப்பட்டு இருப்பவர் அல்ல,mgr அவர்களை விட மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களை எல்லாம் மக்கள் இன்னும் நினைத்துகொண்டு இருக்கவில்லை, அந்த நடிகர்களின் ரசிகர்களே அந்த நடிகர்களை மறந்து விட்டார்கள். ஆனால் mgr அவர்கள் அப்படி மறக்கப்படவில்லை.ஆக,mgr அவர்களை மக்கள் மட்டும் பார்க்கவில்லை.mgr அவர்கள் அரசியல்வாதி என சொல்லப்பட்டார்.அவர் அரசியல்வாதி என்பதற்காக அவரை மக்கள் முதல்வராக ஆக்கவில்லை,ஏனன்றால்,அவர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட அரசியல் சாணக்கியம் அறிந்த அரசியல்வாதிகள் பலர் இருந்தார்கள்.ஆனால்,மக்கள் mgr அவர்களைத்தான் முதல்வராக்க விரும்பினார்கள்.ஆக,மக்கள் mgr அவர்களை நாட்டை காக்க வந்த அரசியல்வாதியாகவும் பார்த்து முதல்வராக்கவில்லை என்பதும் தெளிவு. இரண்டாவது முறையாக முதல்வர் ஆக மக்களால் ஆக்கப்பட்டதும்,அவர் முதல்முறை மாநிலத்தை மிக மிக சிறப்பாக ஆண்டார் என்பதற்காவும் அல்ல..ஆக, mgr அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகரல்ல,மிகச்சிறந்த அரசியல்வாதியும் அல்ல,ஆனால்,இன்றளவும்,மக்களால்,அரசியல்வாதிகளால ்,அவர ின் விரோதிகளால்,நண்பர்களால், ஏன் அவர் காலத்தில் வாழாத சந்ததியினர் கூட நினைவு கூறும் ஓர் " சக்தி" ஆக mgr அவர்கள் இருகின்றார் என்றால் அதுதான் mgr , அவர்தான் "மக்கள் திலகம்"
courtesy raja manavalan net
MAKKAL THILAGAM M.G.R.'S GOLDEN RULE.
http://i58.tinypic.com/2d6wgg1.jpg