-
வெச்ச குறி தப்பாது !
கதாநாயகிக்கும், வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் வெறும் பெயருக்கு கதாநாயகனாக இருந்து வந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 1951ல் வெளியான 'மர்மயோகி' முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கதாபாத்திரத்தின் பெயர் கரிகாலன். நாட்டில் அக்கிரமக்காரர்களிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும்
'ராபின்ஹ¥ட்' போன்ற கதாபாத்திரம்.
"கரிகாலன் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை" என்று ஏழை ஜனங்கள் சொல்ல சொல்ல அறிமுகமாவார் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்னாளில் மிக பலமான பின்புலச் சக்தியாக அமைந்த 'ஏழைப் பங்காளன்' இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்ட படம் மர்மயோகி. கதை வசனம் மு.க.
"கரிகாலன் வெச்ச குறி தப்பாது. குறி தப்புமென்றால் குறியே வைக்க மாட்டான் இந்த கரிகாலன்" - என்ற இப்படத்தில் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. இன்றைய 'பஞ்ச் டயலாக்'குகளுக்கெல்லாம் முன்னோடி.
ஆனாலும் இதற்கடுத்தும் எம்.ஜி.ஆருக்கு பெரியதாக படங்களில்லை. 1952ல் அந்தமான் கைதி, என் தங்கை, குமாரி என்று 3 படங்கள் தான். சொல்லி கொள்கிறார்போல்
கதாபாத்திரங்களுமில்லை.
அந்த சூழ்நிலையில், அறிஞர் அண்ணாவை முதன்முதலாக நேராக சந்தித்த எம்.ஜி.ஆர், 1953ல் முறைப்படி திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார்.
1947லேயே கருணாநிதியின் சிநேகிதத்தால் திராவிட இயக்கத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினாலும், அந்த இயக்கத்தில் எம்.ஜி.ஆர் தன்னை இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் சுமார் 6 ஆண்டுகள். அதுவும் 1949ல் தி.க.வில் இருந்து
பிரிந்து திமுக கட்சி உருவாகி 4 ஆண்டுகள் கழித்தே எம்.ஜி.ஆர். அக்கட்சியில் சேர்ந்தார்.
இதே எம்.ஜி.ராமச்சந்திரன் தான், முன்பு ஜாதிய மேலாதிக்கத்தைச் சாடியும்- வைதீக சடங்குகளை விமர்சித்தும் அறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிக்க மறுத்தவர்.
ஆக, நிலவரத்தை தூர இருந்தபடி கண்காணித்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் சமயோசிதமும், அதே சமயம் எந்த ஒரு நகர்த்தலும் தன்னை எவ்வகையிலும் காணாமல் செய்து விடக்கூடாதென்கிற அதீத கவனமும், முன்யோசனையும் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆருக்கு இருந்து வந்திருக்கிறதெனலாம்.
' மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும்அவரெடுத்த முடிவுகள் சோடை போனதேயில்லை' என்று இன்றளவுக்கும் கொண்டாடப்படும் அவரது புத்திசாலித்தனத்துக்கு , திமுகவில் சேர அவர் எடுத்த முடிவே மிகச் சரியான உதாரணம்.
வெகுஜனக் கட்சியாக செல்வாக்கு கூடிக் கொண்டிருந்த திமுகவில் இணைந்த பிறகு எம்.ஜி.ஆரை சுற்றி வலுவான அரசியல் இமேஜ் பின்னத் தொடங்கி விட்டது. திமுக தலைவர்கள் மேடைகளிலும் எழுத்துகள் மூலமாகவும் உருவேற்றி வந்த தமிழ் மொழி, தமிழர்களின் காதல், வீரம் ஆகியவற்றின் திரை பிம்பமாக அக்கட்சி அபிமானிகளுக்கு தோன்றலானார். எம்.ஜி.ஆரின் தோற்றப் பொலிவும், உடற்கட்டும், லாவகமான வாள்வீச்சுத் திறனும் அவரை திரையில், சேரன் செங்குட்டுவனாக, குலோத்துங்க சோழனாக, திமுக மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி வந்த புறநானுற்று வீர இளவரசனாக ரசிகர்களால் உணரச் செய்தன. ஒரு கட்டத்தில், இல்லாதோருக்கு அள்ளித் தரும் 'கலியுக பாரிவள்ளல்' என்கிற ஒளிவட்டமும் அவருக்கு பின்னால் சுழன்றது.
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-
-
எஸ்வி சாரும் புரட்சி நடிகர் எம்ஜியார் என்ற இருவரும் மட்டுமே அதிக பதிவுகளை செய்து இந்த திரியை நடத்தி கொண்டுலீர்கள்..எங்கே போனார்கள் மற்றவர்கள்..தலைவர் எல்லாவற்றையும் பார்துகொண்டுளார்..
http://i65.tinypic.com/2q99bn6.jpg
தலைவர் அன்றே சொல்லியிருகிறார்..
பொன்போருளை கண்டவுடன் வந்தவழி மறந்து விட்டு
கண்மூடி போகிறவர் போகட்டுமே..
என்மனதை நானறிவேன் என் உறவை நான் மறவேன்
எது வானபோதும் ஆகட்டுமே..
நன்றி மறவாத நல்லமனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்...
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள் இடுவதில் மூத்தவரான திரு. எஸ். வி. சார் முதலிடத்திலும், நான் இரண்டாவது இடத்திலும் இருப்பதற்கு பாராட்டுக்கள்
தெரிவித்த நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி.
ஆனால், தாங்கள், தங்களின் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், நள்ளிரவிலும் கூட மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகு, வீரம், கம்பீரம், காதல், பாசம், போன்ற தோற்றங்களையும், ஸ்டைல், மற்றும் மிடுக்கான ஸ்டில்களை பதிவு செய்வதில் வல்லவராக உள்ளீர். உங்களின் பதிவுகளின் பாணியே தனி. அதனை எவராலும் கடைப்பிடிக்க இயலாது.என்பது திண்ணம்.
தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள் செய்வதில், தாங்கள் மூன்றாவது இடத்தில் இருப்பினும் , தங்களின் ராக்கெட் வேக பதிவுகள் அனைவரையும் அசரவைக்கும் வகையில் , வெகு விரைவில் சிகரத்தை அடைய
நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
முத்தமிழ்க் காவலரின்
எண்ணிலா நவரச காட்சிகள் நாளும் தரும்
எம் தலைவன் புகழ் பாடும்
முத்தையன் சார்
அன்புத் தலைவன் புகழ் பேசும் வண்ண மலர்கள்
பதிவுகள்
-
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களின் பதிவுகளான , பயாஸ்கோப், மற்றும்
ஜியாவுதீன் குறிப்புகள் அபாரம்.
சினிமா, அரசியல், தனி வாழ்க்கை, மக்கள் செல்வாக்கு, ஒட்டு வங்கியை தக்க
வைத்துக் கொள்ளுதல், எதிரிகளை துவம்சம் செய்யும் விதம், பகைவனுக்கும்
கருணை காட்டும் பாங்கு, மத்திய அரசுடன் அணுகுமுறை, பொதுமக்கள் விஷயத்தில் தனி அக்கறை, விளம்பரம் ஏதும் இன்றி செய்த எண்ணற்ற உதவிகள்,
கொடைகள் (வீட்டில் உலை வைத்து விட்டு , தாராளமாக அரிசி எதிர்பார்த்து
செல்லும் ஒரே இடம் எம்.ஜி.ஆர். தோட்டம் - நடிகர் சோ குறிப்பிட்டது ), உலக சினிமா சரித்திரத்தில் , சினிமாவின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களில்
தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் போன்ற பல அருமையான
பெருமையான சாதனைகளை நிகழ்த்தியவர் உலக அளவில் மக்கள் திலகம்,
பொன்மன செம்மல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்று கூறினால்
மிகையாகாது.
-
http://s27.postimg.org/ilawozjj7/121...44158572_n.jpg
ஏழிசைவேந்தர் டி எம் சௌந்தரராஜன் அவர்களும் மக்கள் திலகமும், பாடல் ஒலிப்பதிவுக்கூடத்தில்
-
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.
கோவையில் ,ராயல் - நினைத்ததை முடிப்பவன், டிலைட் -தேடிவந்த மாப்பிள்ளை
வெற்றிகரமாக 2 வது வாரம் , மற்றும் வசூல் விபர தகவல்களுக்கு நன்றி.
புதிய படங்களே ஒரு வாரம் ஓட திணறும் இந்த கால கட்டத்தில், பல முறை
பல அரங்குகளில் திரையிடப்பட்டும், தொலைக்காட்சிகளில் பல முறை ஒளிபரப்ப
பட்டும் இந்த சாதனைகளை நிகழ்த்த , நிருத்திய சக்கரவர்த்தியும், திரையுலகின்
அன்றும், இன்றும் , என்றும் ஒரே வசூல் சக்கரவர்த்தியான மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களால் மட்டுமே முடியும் என்பது மீண்டும் நிரூபணம் .
கோவையில் ஓடி முடிய வசூல் விபரத்தை பின்னர் தெரியபடுத்தவும்.
மதுரை - மீனாட்சி பாரடைஸ் - நினைத்ததை முடிப்பவன் பதிவுகளுக்கும் நன்றி.
ஆர். லோகநாதன்.
-
-