http://i63.tinypic.com/flk23a.jpg
Printable View
மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.
நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.
நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.
நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.
http://i67.tinypic.com/sw4uuo.jpg
அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.
http://i65.tinypic.com/2zfrd5w.jpg
இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg
முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.
http://i66.tinypic.com/2cmsm4p.jpg
இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.
http://i64.tinypic.com/10db7l5.jpg
கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.
http://i64.tinypic.com/hs3ts1.jpg
http://i65.tinypic.com/117wvw5.jpg
இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.
மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!
க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.
கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.
http://i63.tinypic.com/adf69w.jpg
நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.
http://i65.tinypic.com/2ur86ps.jpg
சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.
http://i64.tinypic.com/v7tir9.jpg
படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.
முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.
நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.
தனது திரைப்படங்களின் வசூல் சாதனைகளில் மட்டுமின்றி தனது நுட்பமான நடிப்புத் திறமையிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் பொன்மனச் செம்மல். நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை அணுஅணுவாக ரசிக்க வைத்த சகோதரர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
முகநூலில் பதிவிட்ட வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
நன்றி திரு.செல்வகுமார் அய்யா. மக்கள் திலகத்தின் நுட்பமான நடிப்பை ரசித்து பாராட்டியதற்கு நன்றி. இந்த பாராட்டு முகநூல் திரு.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை சேரும். மக்கள் திலகத்தின் நுண்ணிய நடிப்புக் கலையை ஆய்வு செய்து அளித்த வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை வணங்குகிறேன்.
http://i65.tinypic.com/2zfrd5w.jpg
அவர் தலைவரின் தீவிர பக்தர். 1971-ம் ஆண்டு தினமணிக்கதிரில் வாசகர்கள் கேள்விக்கு மக்கள் திலகம் பதில் அளித்த பதிவை நேற்று போட்டிருந்தார்.
அதில் அவருக்கு பெருமை என்ன என்றால் அப்போது புரட்சித் தலைவரிடம் மூன்று கேள்விகள் இவர் கேட்டு அதற்கு தலைவர் பதிலளித்திருக்கிறார். சில கேள்வி பதில்களை நேற்று பதிந்து விட்டு தான் கேட்ட கேள்வியையும் பதிலையும் பதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் கேட்ட கேள்வியையும் தலைவரின் பதிலையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இப்போது நேற்று அவர் பதிவிட்ட புரட்சித் தலைவரின் கேள்வி பதில் பகுதியை தருகிறேன்.
--------
1970-71ல் தினமணி கதிர் பத்திரிகையில வாசகர்கள கேட்ட கேள்விகள்... அதற்கான எம்.ஜி.ஆர். பதில்கள்...
1.தங்களை படங்களில் நல்ல முறையில் ஆட்டிவைக்கும் இயக்குநர் திரு.ப.நீலகண்டன் என்பது சரியா?
எம்.ஜி.ஆர். பதில்--
என்தாயைத் தவிர வேறு யாராலும் ஆட்டி வைக்கப்படாதவன் நான்.
2.உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன்.தங்கள் சம்மதம் தேவை.
பதில்: என் வாரிசாக வர விரும்புபவர்கள் என் சம்மதத்தை எதிர் பார்க்கவேண்டியதில்லை.என் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் என் வாரிசுகள்தான்.
3.கலை உலகில் நீங்கள் யாரைப் பின்பற்றி நடக்கிறீர்கள்?
பதில்: சில வழிகளில் கலைவாணரை.
4.உள்ளத்தாலும் ,உழைப்பாலும் உயர்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும் என் அன்புக்குரிய மக்கள் திலகமும்தான் என்று நான் நினைக்கிறேன்.தங்கள் கருத்து என்ன?
பதில்: அண்ணாவைப் பற்றிய தங்கள் முடிவு எனக்கு உடன்பாடானது.என்னை அவரோடு ஒப்பிடுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.மன்னிக்கவும்.
5.மனிதனையும் மீறிய சக்தி இருக்கிறதென்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: 1967 ஜனவரி 12ம் தேதிக்குப் பிறகு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே,அது அந்த சக்திக்கு பொருத்தமான உதாரணமாகும்.
என் குறிப்பு:-எம்.ஜி.ஆரின் கேள்வி பதில்கள் சில நாளையும் தொடரும்..நான் அப்போது எம்.ஜி.ஆரிடம் கேட்ட 3 கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களையும் தர இருக்கிறேன்.
----------------------
நன்றி வைத்திய நாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்.
http://i66.tinypic.com/2ughswi.jpg
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். அவரது நெகிழ்ச்சியான அனுபவம் :
நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு நான் சென்றேன் வழியில் ஒரு மூதாட்டி என்னைப் பார்த்து,
‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு ’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் என்னிடம் சொல்லவில்லை...!!!
"எம்.ஜிஆர் என்ற அந்த மாமனிதருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து நான் வியந்தே போனேன் "
பாலசுப்பிரமணியன் அவர்கள் முகநூல் இருந்து.
சென்னையில் அண்ணா தலைமையில் ரிக்சா தொழிலாளர்கள் 6,000 பேருக்கு 1961-ம் ஆண்டு மக்கள் திலகம் தனது செலவில் மழைக்கோட்டுகள் கொடுத்தார். அப்போது புரட்சித் தலைவரை வாழ்த்தி அண்ணா பேச்சு.
நன்றி கே.சங்கர் அஇஅதிமுக சென்னை முகநூல்
http://i68.tinypic.com/11adczm.jpg
" எம்.ஜி.ஆர் அவர்களின் கனிந்த உள்ளத்தின் விளைவாக, கடினமான உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ரிக்ஷாத் தொழிலாளர்கள் மழையில் படும் அவதியினைக் கண்டு அவர்களது துயரைத் துடைக்க 6,000 மழை அங்கிகளை வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சியில், அவைகளை அளிக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்தக் கோட்டு, பிளாஸ்டிக்கிலே செய்ததற்குப் பலவாறு தவறாகப் பேசியதாகத் தோழர் வீரப்பன் அவர்கள் பேசும்போது எடுத்துச் சொன்னார்கள். இந்த மழைக்கோட்டை வாங்கி வழங்கிடும்போது ‘நாமும் ஒன்று போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறதே’ என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அவ்வளவு அழகாக அவைகள் தைக்கப்பட்டுள்ளன.
ரிக்ஷா தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்ணாரக் கண்டவர்கள், இதைப்பற்றிக் குறைசொல்ல மாட்டார்கள். மாற்று அரசியல் கட்சியினர்தான், ‘தேர்தல் காலத்தில் இது நடக்கிறதே’ என்று பயப்படுவார்கள். ஆனால் நாட்டு மக்கள் மனதார வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எம்.ஜி.ஆர் அல்லாமல், அவர்களிலே ஒருவர் இதைச் செய்திருந்தால் பாராட்டுவார்கள் புகழ்பண் பாடுவார்கள். அவர்கள் பாராட்ட வேண்டும் என்பதல்ல ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளை, துயர்களைத் தெரிந்த நாட்டு மக்கள் இதை உணருவார்கள்.
‘பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்
அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று தம்பி எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம்,
(நம்நாடு - 4.12.61)
நன்றி
K Sankar to
அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை (AIADMK-CHENNAI) முகநூல்