-
ஆலயங்களுக்கு கொடை செய்தார்.. தேச பாதுகாப்பிற்காக கொடை செய்தார்.. இயற்கை சீற்றங்களுக்காக கொடை செய்தார்.. ஏழை எளியோர் கல்விக்காக கொடை செய்தார்.. சுதந்திர போர் தியாகிகளுக்கு கொடை செய்தார்.. மதிய உணவு, சத்துணவு திட்டங்களுக்காக கொடை செய்தார்.. இப்படி இலைமறைவாக அவர் செய்த கொடை வரலாறு மறக்காதிருக்கும்.. அவர் நன்கொடை என்றும் விரயமானதில்லை.. அவர்தான் நடிகர் திலகம்...
Thanks Joe
-
சிவாஜிக்கு துரோகம் செய்தவர்கள், சிவாஜியின் பெருமையை உணராததவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. சிவாஜி திமுகவில்இருக்கும்போது அண்ணா கண்டுகொள்ளவே இல்லை, எம்சியார் காங்கிரசைவிட்டு, திமுகவிற்குவந்தபின்அண்ணா சிவாஜியை மறந்தேவிட்டார். சப்பானியாக இருந்த திமுகவை பராசக்தி, மனோகரா மூலம் எழுந்து நடக்கச்செய்த சிவாஜியை உதாசினப்படுத்தியதால் ஒன்றரைவருடத்தில் உலகைவிட்டே போய்சேர்ந்தார். சிவாஜியின் திறமையையும் புகழையும்கண்டு பொறாமைப்பட்ட எம்சியார், விளம்பரம்தேட கிழவிகளை வலியசென்று கட்டிப்பிடித்து போஸ்கொடுத்து போலிகவர்ச்சியைக்காட்டி ஆட்சியைப்பிடித்தார்,என்னபிரயோசனம் பத்துஆண்டுகளில் பறந்துவிட்டார் விண்ணுக்கு!. 1960ல்காமராஜர்துவங்கிய சத்துணவுதிட்டத்திற்கும்,1962ல்யுத்தநிதிக்கும் 1964ல்சுனாமியால் அடித்துச்சென்ற பாம்பன்பாலவிபத்தின் நிவாரனத்திற்காகவும் லட்சக்கணக்கில் பொருளுதவி வழங்கிய சிவாஜியை கஞ்சன் எனவசைபாடிய ஜெயலலிதா இறுதியில் எழுபத்துஐந்துநாட்கள் எழுந்திருக்கமுடியாமலே இயற்கைஎய்தினார். அவரைமருத்துவமணையில் பார்க்கவந்தவர்கள் சாப்பிட்ட இட்லிக்கான செலவுமட்டுமே ரூபாய்ஒருகோடி!.ஜெயலலிதாவுடன்சேர்ந்துமக்கள்சொத்தைகொ ள்ளயடித்து சொத்துசேர்த்த சசிக்கு பெங்களூரில் கம்பிஎண்ணும் பணி...கலைஞரோ, சிவாஜியை உற்றநன்பர் எனக்கூறிக்கொண்டே உள்ளுக்குள்புழுங்கினார் இறுதிநாட்களில் சக்கரநாற்காலியிலேயே நகர்ந்துநகர்ந்து காலம்சென்றார். கலைஞரால்ஒரேநன்மை சிவாஜிக்குசிலைவைத்தது!....அதையும் இந்தகாமெடிஅரசு தூக்கிவிட்டது.மெரினாவே அவர்களுக்குமட்டும்தான் சொந்தம்போலும்!. இதற்கு காலம் விரைவில் பதில்சொல்லும்!!!.
Thanks fb
-
சிவாஜி ஒண்ணே ஒண்ண கொடுக்காத கஞ்சன்... அது என்ன தெரியுமா.. தன்னை பாராட்ட பணம் கொடுக்காததுதான். புகழை விரும்பாத காமராஜர் பின்னால் போனதுதான்.
-
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
-
பல தடவைகள் பதிவிட்டு அறிந்த செய்தியாக இருந்தாலும் இதனை அறிந்தும் அறியாத அறிவிலிகளும் இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளட்டுமே.......
கர்ணன் - the original
அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
வான்நிலா விஜயகுமாரன்
-
1967 ல் தான் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே,
அந்தத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை வளர்ந்து வந்துக் கொண்டிருந்த திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது,
அந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப் படுவது எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்டது தான்,
நடிகர் திலகம் காங்கிரஸ் கட்சிக்காக முழு அளவில் பிரச்சாரம் செய்தார்,
திமுக வெற்றி பெற்று இருந்தாலும் கூட காங்கிரஸ், திமுக கட்சிகள் பெற்ற வாக்குகள் என பார்த்தோம் என்றால்
காங்கிரஸ்- 62,93,378 ஆகும்
திமுக - 62,30,556 ஆகும்
திமுக கூட்டணி கட்சிகள் 15 லட்சம் வாக்குகளை பெற்று இருந்தன,
எப்படி இருந்தாலும் அந்தத் தேர்தலில் நடிகர் திலகம் எதிரிக் கட்சியைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகளை வாங்கிக் கொடுத்தார் என்பதை வரலாற்றில் கவனிக்கப் படாத ஒன்றாக இருந்து வருகிறது
-
படம் சொல்லும் கதை..............
நடிகர் திலகம் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார்........
காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்................
வாகனம் செல்ல முடியாத அளவுக்கு அது மிகவும் குறுகிய அளவுள்ள தெரு (சந்து) எனவே
வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்...............
ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார்.......
நடிகர் திலகம் வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்........
ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்......
தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார்.....
கண்களில் ஆனந்தக் கண்ணீர்........
அண்ணே வாங்கண்ணே என்கிறார்........
அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்...அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள்....
தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள்.......
டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார்...அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள்...........
இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள்.......
அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க என்று சொல்கிறார்... ............
உடனே தன் மனையாளை பார்க்கிறார்.......
தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள்.............
வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்...................
தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு நடிகர் திலகமும் கமலாம்பாளும்....................
(இந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்று கூடுதல் தகவல் அளிக்கிறார்....மதிப்புக்குரிய அண்ணன் கொடிக்குறிச்சி முத்தையா அவர்கள்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...35&oe=5ED01B2B
Thanks Joe
-
மதுரைக்குநடிகர்திலகம்
சிவாஜிகணேசன்அவர்கள்.
எவ்வளவோஉதவிகள்செய்துள்ளார்.
என்பதுயாவரும்அறிந்ததே!
அதுபோல்அதிதீவிரரசிகர்களும்
மதுரையில்அதிகம்.
தெருவுக்குநான்குசிவாஜிமன்றம்.
இருக்கும்அப்போது!
அப்படிஇருந்தகாலத்தில்அதாவது
1964ம்ஆண்டுமதுரையில்
சரஸ்வதிதொடக்கப்பள்ளி.ஒன்று
இருந்தது.
அப்பள்ளியில்500பிள்ளைகளுக்குமேல்
படித்துகொண்டிருந்தது.
1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளி
திடீரெனஇடிந்துவிழுந்தது.
அப்பள்ளியில்படித்தஏராளமான
பிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கி
கிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்
அடைந்தது.அதுஅரசாங்கம்
சிறுஉதவிமட்டுமேசெய்ததாக
தகவல்.
ஆனால்நடிகர்திலகம்கேள்வி
பட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்ட
போது7படங்கள்.
வரமுடியாதகாரணத்தால்
தனதுமகள்சாந்தியைஅழைத்து
நிதிகொடுத்துவரசெய்தார்.
எவ்வளவுதெரியுமா?
4.00000.
இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.
அய்யனின்பெயரைசொல்லி!
ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்
37சமாதிகள்இருக்கின்றன.
அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.
இத்தகவலைசொன்ன
சொக்கலிங்கம்பிள்ளை.
அவர்தங்கையையும்இடிபாட்டில்
மரணம்அடைந்தவர்.
மதுரையில்பழையவர்க்குதெரியும்.
மறைக்கப்பட்டஉண்மை.
தர்மபிரபுசிவாஜியின்கொடையை?
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...43&oe=5ECDACF8
Thanks Joe
-
சிவாஜி அரசியலுக்காக பொய் பேசியதில்லை யார் வயிற்றிலும் அடித்ததில்லை இருந்த இடத்திற்கு துரோகம் செய்ததில்லை வாழ்க்கையில் நடிக்கவில்லை கிழவியைக் கட்டிப் பிடித்ததில்லை நன்கொடை கொடுத்துவிட்டு எனக்கொரு செம்மல் பட்டம் கொடுங்கள் என்று கேட்கவில்லை யார் மனதையும் நோகடித்ததில்லை அடுத்தவர் மனைவியை களவாடியதில்லை பத்திரிகையாளர்களை மிரட்டியதில்லை தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்நடிகைகளின் திறமைகளைக் கெடுத்ததில்லை தன்னை வள்ளல் என்றோ உத்தமர் என்றோ தான் நடிக்கும் படங்களில் பாடலோ வசனமோ எழுதச் சொல்லவில்லை மேடைகளில் இமேஜ் பார்ப்பதில்லை மதுக்கடைகள் திறக்க ஆதரவாய் இருந்ததில்லை 30 வயதிலேயே வயோதிக வேடத்தில் நடித்தவர் தேச மண்ணை நேசித்தே வாழ்ந்தவர் வயதான பிறகு வாலிபன் என்று சொல்லிக் கொண்டதில்லை இறுதிவரை நல்ல குடும்பஸ்தனாக வாழ்ந்தவர் உதாரண புருஷனாக வாழ்ந்தவர்
Thanks fb
-