நீங்கள் மீண்டும் என்னை இங்கு கூப்பிடும் அளவிற்கு உங்கள் எல்லோருக்கும் தொந்திரவு கொடுத்ததிற்காக , மிகவும் வருந்துகிறேன் - உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவ்வளவு அன்பையும் பரிவையும் நான் எங்குமே சந்தித்ததில்லை - இந்த திரியில் பங்கு கொள்ள நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் -
இது ஒரு பொதுவான திரி - நம் எல்லோர் கவனமும் நம் நடிப்பு கடவுளை எப்படியெல்லாம் வர்ணிக்கலாம் , பூஜிக்கலாம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் அவா .. இப்படிதான் பூஜிக்க வேண்டும் என்று நாம் ஒரு சட்டம் போட்டால் அதில் ஈடுபாட்டுடன் பங்கு கொள்வதில் தடை வரலாம் - மனம் ஒத்துப்போக மறுக்கலாம் - கோபால் , பதிவுகளில் ஒரு தரம் இருக்க வேண்டும் என்று சொன்னதில் எந்த வித மறுப்பும் இல்லை - பிடிக்க பிடிக்க தான் பிள்ளையார் வரும் என்பார்கள் - பதிவுகள் போட போடத்தான் அதன் தரம் உயரும் - அதுவரை இந்த குழந்தையின் கோடுகளை ஒரு ஓவியமாகவும் , இந்த குருடன் வரைவதை ஒரு காவியமாகவும் எடுத்துக்கொள்ளும் படி கோபாலையும் , மற்ற திரியின் நண்பர்களையும் வேண்டி கேட்டுகொள்கிறேன் -
என்னால் யாருடைய மனமாவது புண் பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய sincere apologies - nothing intentional ..
அன்புடன் ரவி