-
இந்த தேர்தலிலும் வழக்கம் போல மக்கள்திலகம் பாடல்கள், புகைப்படங்கள் பங்கு பெற்றிருப்பது எப்பொழுதும் நம் அனைவருக்கும் பெருமையே... பெருமிதமே...ஆளும் கட்சி, எதிர் கட்சி, மற்றும் பிற கட்சிகள் எல்லாம் பொன்மனசெம்மலை நினைவு கூறாமல் உரையை நிறைவு செய்வதில்லை... என்பது அரசியலில் ஈடு பட்டோரும், ஈடு படாதோறும் குறித்து வைத்து கொள்ள வேண்டிய விஷயமாகும்!!!!!!
-
இனிய நண்பர் திரு ஜீவ்
மக்கள் திலகத்தின் சார்பு திரை உலகம் பத்திரிகைளில் வெளிவந்த எம்ஜிஆர் -சிவாஜி படங்கள் இலங்கையில் ஓடிய நாட்கள் பற்றிய பதிவில் நீங்கள் தெரிவித்த திருத்தமும் இணைப்பும் பதிவிட்டதற்கு நன்றி .இலங்கையை சேர்ந்தவரான நீங்கள் தரும் விபரம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் . இருந்தாலும் விளம்பர பதிவு
ஆவணங்கள் ஒன்றுதான் சரியாக இருக்கும் . யூகத்தின் அடிப்படையில் வெறும் வார்த்தைகளால் பதிவிடுவது
உண்மையான ஆதாரமல்ல .திரை உலகம் போன்ற சார்பு இதழ்களில் வந்துள்ள பதிவுகளையும் முழுமையாக ஏற்று கொள்ள முடியாது .
மக்கள் திலகத்தின் பல படங்கள் இலங்கை மண்ணில் சாதனை புரிந்துள்ளது .மறுக்க முடியாத உண்மை .
-
சத்யம் திரையரங்கில் ஆறாவது வாரம் ஆயிரத்தில் ஒருவன் தொடரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . அறிவிப்பு வரும் வெள்ளியன்று நாளிதழில் வரும் என்று நம்புகிறேன்
-
எங்க வீட்டு பிள்ளை' படத்தினை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டு இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது 'கத்தி' படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஜய்யின் நெருங்கிய நண்பர் இயக்குநர் செல்வபாரதி. 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'எங்க வீட்டு பிள்ளை' படத்தினை, எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில் விஜய்யை நடிக்க வைத்து இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி.
இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது 'கத்தி', சிம்புதேவன் படம் என வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருக்கும் விஜய், இப்படத்திற்கு எப்போது தேதிகள் ஒதுக்க இருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.
courtesy the hindu tamil
-
-
P.Susila Watched Aayirathil Oruvan
Posted by Editor on April 16th, 2014
p-susila
எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம் சென்னையில் சத்யம், எஸ்கேப், ஆல்பர்ட் தியேட்டர்களில் 5–வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தற்போது வேளச்சேரியில் பினிக்ஸ் மாலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள லக்ஸ் சினிமாஸ் தியேட்டரிலும் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்பட்டு உள்ளது.
இந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா வந்தார். அவருக்கு ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்த படத்தில் பி.சுசீலா ‘பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘ஆடாமல் ஆடுகிறேன்’, ‘ஞானமோ’ போன்ற பாடல்களை பாடி இருக்கிறார். தியேட்டரில் உட்கார்ந்து கடைசிவரை படத்தை பார்த்தார்.
பிறகு வெளியே வந்த அவர் ஐம்பது வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருகிறது. ஐம்பது வயது குறைந்தது போல் உணர்வும் வருகிறது. டிஜிட்டலில் பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றார்.
இந்த படத்தை ரிலீஸ் செய்த திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கும் ரசிகர்கள் சால்வை அணிவித்தனர்.
சொக்கலிங்கம் கூறும் போது 34–வது நாளாக ஆயிரத்தில் ஒருவன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதன் 50–வது நாள் வெற்றி விழாவை சென்னையில் கொண்டாட திட்டமிட்டு உள்ளோம் என்றார்
COURTESY kOLLYWOOD TODAY
-
MGR and Ajith are among a select four''
Apr 15, 2014
The music of Santhanam's Vallavanukku Pullum Aayudham was launched yesterday evening in a grand event at Chennai's Devi Cinemas. Directors Shankar and Rajamouli headed a big guest list which included Udhayanidhi Stalin among many others. Comedian Mayilsamy was also among the list of speakers at the launch and he made a mark with his frank talk. A small excerpt from his speech is as follows
"I particularly respect and love four people from the industry. They are MGR for the way he propagated good messages to society, Sathyaraj for his speaking skills, Ajith for his frank talk and handsome nature and finally Santhanam for being a good man"
Mayilsamy commended Santhanam for helping a lot of people without publicity and said that he made it a point to attend the launch to re-emphasize Santhanam's good qualities on a public platform.
COURTESY BEHINDWOODS
http://www.behindwoods.com/tamil-mov...-he-loves.html
-
1975- THIRAI ULAGAM
MAKKAL THILAGAM M.G.R IN NINAITHTHATHI MUDIPPAVAN SPECIAL MALAR .
http://i60.tinypic.com/2lue979.jpghttp://i61.tinypic.com/14o3uhi.jpg
-
-