-
30.6.1977
****************
உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகர் , தான் துவக்கிய கட்சியின் தலைவராக ,தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு பெற்று ஒரு மாநில முதல்வராக பதிவேற்ற தினம் . திரை உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் 1947-1977 வரை
30 ஆண்டுகள் திரை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்து ,இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகராக பாரத் பட்டம் பெற்று அரசியல் உலகில் தமிழக முதல்வராக அமர்ந்த இந்த இனிய திருநாள் .
நாடக நடிகராக அறிமுகமாகி , திரை துறையில் படிப்படியாக முன்னேறி , கொள்கை பிடிப்புடன் மக்களுக்கு நல்ல கருத்துக்களையும் , சமுதாய முன்னேற்ற வழிகளையும் , கவலை கொண்டோருக்கு உற்சாகம் கொண்ட பாடல்களையும் , காட்சிகளையும் ,பல புதுமைகளை அறிமுகபடுத்தியும் , வீரமான சண்டை காட்சிகளை இடம்பெற செய்தும் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற செய்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
தன்னை எதிர்த்தவர்களை - தரமின்றி தாக்கியவர்களை , தன்னுடைய போட்டியாளர்களை ,மக்கள் திலகம் தன்னுடைய
அன்பாலும் , நாகரீகமான அணுகுமுறையாலும் எல்லோரையும் வென்றார் .எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது , அரசியல் தெரியாது என்று கேலி பேசியவர்கள் எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - அரசியல் வெற்றிகள் கண்டு அடங்கி போனார்கள் .
http://i57.tinypic.com/10fdp9g.jpg
எம்ஜிஆர் ரசிகர்களின் சபதம் - நிறைவேறிய நாள்
************************************************** *************************
1972
மக்கள் திலகத்தின் திரை உலக ,அரசியல் வரலாற்றில் பிரமாண்ட வெற்றி கண்ட புரட்சி நடிகர் புரட்சித்தலைவராக உயர்ந்த பொன்னான ஆண்டு . மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எடுத்த சபதம் - அடுத்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் . உறுதி எடுத்தோம் - காலம் கனிந்தது - 30.6.1977 அன்று மக்கள் திலகம் முதல்வரானார் .
2014
**************
37 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றிகள் - அரசியல் வெற்றிகள் இன்னமும் தொடர்வதின் மூலம் எம்ஜிஆரின் சக்தி - புகழ் - மக்கள் செல்வாக்கு அறிய முடிகிறது .
உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் மக்கள் திலகத்தை பூஜித்து வருவது பெருமைக்குரியது .
-
courtesy - net
”எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி?” அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த, எம்.ஜி.ஆர் பற்றிய அருமையான தகவல்கள் அடங்கிய நூல் என்று சொல்லலாம். இந்த நூலை வாசித்து நிறைவு செய்கையில் நூலாசிரியரின் உழைப்பு, எம்.ஜி.ஆர் பற்றிய தேடல் அப்பட்டமாகத் தெரிகிறது. நடிகராக இருந்து, பின் அரசியலுக்கு வருவது, தமிழக முதல்வர் ஆவது மிகவும் எளிது என்று நினைக்கும் திரு.விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக் போன்றவர்கள் இந்த நூலைப் படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்களுக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை வந்திருக்காது, தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டு ஆயத்தப் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் ஜெயலலிதா முதல்வராக வந்தது, எம்.ஜி.ஆர் கட்டி வைத்த அதிமுக கட்சி அமைப்பு எனும் கோட்டை வழியாக. அதில் அரசியாக வந்து அமர்ந்து கொண்டார் என்று சொல்லலாம். அதுவே அவரை முதல்வர் பதவிக்கு அழைத்துச் சென்றது.
எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வரலாறு கூறும் பொருட்டு 1970-72 -ல் தன்னைப் பற்றி எழுதினார். அது எந்தளவுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை பேசும் என்பதைவிட அதற்கு பின்பே அவர் தனது வாழ்வில் மிகப்பெரிய திருப்பங்களை எதிர்கொண்டார். உலகிலேயே முதன்முதலில் நடிகர் அரசியலில் பங்கெடுத்து அரசு பதவி வகித்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1966-ல் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரொனால்ட் ரீகன் அவர்கள் மட்டும் தான். அவருக்குப் பின் இந்தியாவில், தமிழ் நாட்டில் 1977-ல் முதல்வராக திரு.எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள். ரீகன் ஒரு பட்டதாரி, எம்.ஜி.ஆரோ மூன்றாம் வகுப்பு வரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா 1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, 1967ல் தமிழக முதல்வரானார், அதற்கு 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் 1972-ல் கட்சி தொடங்கி(அதிமுக பின்னர் அஇஅதிமுக என்று மாற்றிக்கொண்டார்) ஐந்தே ஆண்டுகளில் தமிழக முதவரானார் என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையாகாது.
-
அபூர்வ மனிதர் எம்.ஜி.ஆர்
ஒரு மழை காலத்து குடைபோல சினிமா, தமிழக மக்களின் மீது எப்போதும் கவிழ்ந்தே கிடக்கிறது. ஐம்பதுகளில் சினிமாவை ஆக்ரமித்தவர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் வலுவாக.
எங்களுக்கான தலைவர்களை நாங்கள் தியேட்டர்களில் தேடுவதில்லை என்றார் கேரள நடிகர் மோகன்லால். அரசியல் கலாச்சார பின்னணியில் அந்த கூற்று சரியே. தமிழகத்தில் சினிமாவின் மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு, கலை என்ற ஒன்றை மீறி தனிமனித ஈர்ப்புக்குள்ளானதில் பின்னாளில் கதாநாயகர்களின் களம் மாறியது; காட்சி மாறியது. இந்த இடத்தில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் வரவு முக்கியமானதாகிறது. அவர் வேறு யாருமல்ல எம். ஜி.ஆர்
இன, மொழி உணர்வும், பாரம்பரியமும் கொண்ட ஒரு மாநிலத்தில் அம்மாநிலத்தை சாராத அல்லது அப்படி நம்பவைக்கப்பட்ட ஒருவர், சுமார் 40 ஆண்டுகாலம் கலை, அரசியல் என்ற இருவேறு தளங்களில் வெற்றிகரமாக எப்படி இயங்கினார் என்பது ஒரு இமாலய புதிர். அது ஆழமான ஆராய்ச்சிக்குரியதும் கூட. சினிமா என்ற சக்தி மிக்க ஊடகத்தை, வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல் அதை கைக்கொண்டு உச்சபட்ச வெற்றி கண்டவர்களில் உலகளவில் முதலாமவர் எம்.ஜி.ஆர். ரொனால்டு ரீகனும் இவருக்கு அடு்த்துதான். கலைத்துறையில் அவரது வெற்றிக்கு உழைப்பும், திறமையும் காரணம் என்றால் அரசியலில் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம் மனிதநேயம்.
40களின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வால்டாக்ஸ் சாலையில் நாடக ஒத்திகை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், எப்போதும் அவரே உடன் வருபவர்களுக்கு தேனீர் வாங்கித்தருபவதை குறிப்பிட்டு சகநடிகர் ஒருவர், "ஏன்ணே எப்போதும் நீங்களே ஏன் செலவழிக்கிறீங்க. மத்தவங்களையும் செலவு பண்ண விடுங்களேன்" என்கிறார். சொன்னவரை உற்றுப்பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் பதில் சொன்னார். "எனக்கென்ன புள்ளையா குட்டியா, அதுமட்டுமில்லாம நான், என் அண்ணன்னு எங்க வீட்டுக்கு 2 சம்பாத்தியம். ஆனா இவங்க ஒருத்தர் வருமானம்தான அவங்கவீட்டுக்கு ஆதாரம். அதுதான் நானே செலவு பண்றேன்" என்றாராம். நெகிழ்ந்துபோனார் கசநடிகர். அதுதான் எம்.ஜி ஆர். அவரது வெற்றியின் ரகசியமும் இதுதான்.
தன்னம்பிக்கைக்கு உதாரணமான வாழ்க்கை அவருடையது. வறுமை நாடக உலகிற்கு துரத்துகிறது. அங்கிருந்து சினிமாவை அடையும்போது பிரபல நடிகர்களின் புறக்கணிப்பு. அவற்றை மீறி சினிமா உலகின் தனக்கான இடத்தை தக்கவைத்தபோது காலொடிந்து கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய நிலை. அதிலிருந்து மீண்டு அரசியலிலும், சினிமாவிலும் பிரபலமடைந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம். அரசியலிலும், சினிமாவிலும் வெற்றிகரமாக இயங்கும் ஒருவருக்கு அது எத்தனை மோசமான பாதிப்பு என கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்தும் தன் தன்னம்பிக்கை குலையாமல் மீண்டு முன்பைவிட வேகம் பெற்று இயங்கினார்.
அரசியலில் அவர் பெற்ற வெற்றி யாரும் அணுகிப்பார்க்க முடியாதது. ஏழை மக்களின் மீது அவர் நிஜமான பாசம் கொண்டவராக இருந்தார். வறுமை வாணலியில் வறுத்தெடுக்கப்பட்ட அவர், தன் கடைசிக்காலம் வரை அதை மறக்காமலிருந்தார். சத்துணவு இன்றும் அவர் பெயர் சொல்ல அதுவே காரணம். பல்பொடியும் செருப்பும் அவர் மனிதநேயத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இந்த விஷயத்தில் எதிரிகளாலும் நேசிக்கப்பட்ட அபூர்வ மனிதர் அவர்.
அவரின் இறுதிக்காலம் வரையிலும் மக்கள் அவர் மீது கொண்ட பாசம் குறையாமல் இருந்தது. தமிழகத்தில் வேறு எந்த தலைவருக்கும் வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. ஏழைகளுக்கென தனி நபராக மருத்துவமனை நடத்திய சாதனையாளர் அவர். திரைப்படங்களில் நல்ல நல்ல கருத்துக்களை சொல்வதில் உறுதியாக இருந்தவர். நாடு முழுவதும் ஒட்டப்படுகிற போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் இருக்கட்டுமே என தன் திரைப்படங்களின் தலைப்புகளில் திருடாதே, தர்மம் தலைகாக்கும் என்ற ரீதியிலான நேர்மறையான கருத்துக்கள் இடம்பெற வைத்தார். எதிர்மறையான விஷயங்களை திரைப்படத்தின் மூலம் பரவுவது நாம் கலைக்கு செய்யும் துரோகம் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். பெரிய திட்டமிடல் இல்லாத அவரது சினிமா வாழ்க்கை, அவரது சக அரசியல் கூட்டாளியால் திசைமாற்றிவிடப்பட்டு ஒரு போராட்ட களத்திற்குள் இழுத்துவிடப்பட்டபோது, வெகு சாமர்த்தியமாக அதை கையாண்டார்; வெற்றியும் கண்டார். அசாத்தியமான அந்த வெற்றி, மக்கள் சக்தி அவருக்கு தந்த மகத்தான பரிசு.
அரசியலில் அவரது அணுகுமுறை சில சமயங்களில் கேலிக்குள்ளானதும் உண்டு. மத்தியில் எந்த அரசு வந்தாலும் ஆதரிக்கிறீர்களே? என்ற கேள்விக்கு, "நான் தனி மனிதனல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர். அந்த வகையில் நாட்டின் நலன் கருதி ஆதரிப்பதில் தவறில்லையே!" என்றார் இயல்பாக. பின்பு அவரே ஒரு சமயம் மத்திய அரசை எதிர்த்து ராணுவத்தை சந்திக்க தயார் என வாளை சுழற்றியிருக்கிறார். இப்படி அரசியலில் வளைவும், நிமிர்வுக்கும் உரியவராக இருந்தார். அரசியலில் அதை குறை என்றார்கள் சிலர். ஆனால் குறை சொன்னவர்களின் அரசியல் பங்களிப்பைத்தான் குறைத்தார்களே தவிர, எம்.ஜி.ஆரின் மீதான பாசத்தை குறைத்துக்கொள்ளவில்லை மக்கள்.
தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அவர் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒற்றை வார்த்தையை மந்திரமாக பயன்படுத்தினார். மக்கள் மீது அவர் செலுத்திய அன்பின் மீதான நம்பிக்கை அது. அதுதான் தான் பல்லாண்டு காலம் சேவை செய்த ஒரு கட்சியிலிருந்து தூக்கியெறிப்பட்டபோது அவருக்கு பலமாக இருந்தது. தன் அரசியல் எதிரியான கருணாநிதியுடன் முரண்பட்டு கட்சி துவங்கி ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தன் வாழ்வின் இறுதிப்பயணம் வரை அசைக்க முடியாத முதல்வராக அவர் விளங்கியது அரசியலில் ஆச்சர்யமான நிகழ்வு. மறைந்து 26 ஆண்டுகளானபின்னும் இன்றும் அவரது புகழ் குன்றாமல் இருப்பது மக்களின் மீதான அவரது நேசத்தின் அடையாளம்.
எஸ்.கிருபாகரன்
-
MGR THE REAL SUPERSTAR IN INDIA
http://youtu.be/EIeBwbOKWKQ
-
MGR THE REAL SUPERSTAR IN INDIA
http://youtu.be/VU3uAoc3k5k
-
-
-
Dr. M G Ramachandran
30-06-1977 to 17-02-1980
09-06-1980 to 15-11-1984
10-02-1985 to 24-12-1987
-
30.06.1977
Of the successful candidates, Thiru C. Ponnian (Thiruchencode) secured the largest
number of votes-44,501. Thiru P. Vijayaraghavan of Killiyoor Constituency secured largest
percentage of votes-79.5. Thiru M.G.Ramachandran won the election by the biggest margin
of 29,378 in Aruppukottai Constituency.
-
சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972-ல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
courtesy net