http://i62.tinypic.com/2iran7m.jpg
இதயக்கனி - ஏப்ரல் மாத இதழ்.-பதிவுகள் நாளை தொடரும்......!
Printable View
http://i62.tinypic.com/2iran7m.jpg
இதயக்கனி - ஏப்ரல் மாத இதழ்.-பதிவுகள் நாளை தொடரும்......!
திரை யுலகைப் பற்றி மக்கள் ரசனை குறித்து
மிகத் தெளிவான கருத்து கொண்டிருந்தவர்
புரட்சி நடிகர் அவர்கள்.
திரைப்படம் என்பது பொழுது போக்கு
அம்சத்திற்கானதேபாடுபட்டு பல்வேறு
துயருக்கிடையில் அவதியுறும்
பாட்டாளி மக்கள் கொஞ்சம் இளைப்பாறிப்
போகும் இடம்திரைப்படம் எனப்தில்
அவர் திட்டவட்டமாக இருந்தார்
கலை கலைக்காவே என்கிற ஓரத்திற்கும் போகாமல்
கலை மக்களுக்காகவே என்பதையும் மறக்காமல்
அதே சமயம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல்
தனக்கென ஒரு புதிய பாணியை அவர்
அமைத்துக் கொண்டதால்தான் கடைசிவரையில்
திரைப்படத்துறையில் முடி சூடா மன்னனாகவே
இருக்க முடிந்தது
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருக்கும் சாகஸம்
இருக்கும்படியாகவும்
அதே சமய்ம் காதல் தாய்ப்பாசம்
ஏழைகளிடம் பரிவு கொள்ளுதல்
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வெற்றி உண்டு
பொய்யும் பித்தலாட்ட்டமும்
இறுதியில் தோற்றே தீரும் முதலான
விஷயங்களை மிக நேர்த்தியாகக் கலந்து
ஒரு புதிய பாணி கதைகளைக் கொண்ட
படங்களைத் தொடர்ந்து
கதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்
மிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்
அடங்கி இருந்தது .
ஒளிவிள்க்கு படத்தில் புரட்சி நடிகர் முத்து என்கிற
திருடனாக நடித்திருப்பார்.அவர் ஜெயிலில்
இருந்து வந்த சமயம் அவர் இருப்பிடத்தை
ஒட்டி இருக்கும் குழந்தைகள் அவரை அனபுடன்
சூழ்ந்து கொள்வார்கள்.எம் .ஜி ஆர் அவர்கள்
அருகில் இருந்த தள்ளுவண்டிக்காரனிடம்
அனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொல்லி
நூறு ரூபாய் நோட்டைத் தருவார்.அவன் எடுத்துக்
கொடுத்துக்கொண்டிருக்கும் போதே
குழந்தைகளின் பெற்றோர் "திருடனிடமா
வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் "என குழந்தைகளை
அடித்து இழுத்துப் போவார்கள்.வியாபாரம்
ஆகாத சோகத்தில் தள்ளுவண்டிக்காரன்
நூறு ரூபாய் நோட்டைத் திருப்பித் தருவான்
அந்த சமயம் தியேட்டரில் ஒரு ரசிக்ரின் குரல்
"டேய் எங்கள் தலைவருக்கு கொடுத்ததை
திருப்பி வாங்கிப் பழக்கமில்லை "எனஓங்கி ஒலிக்கிறது
அவன் சொன்னது போலவே வேண்டாம்
வைத்துக் கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு
எம்.ஜி ஆர்.நடக்கத் துவங்கிவிடுகிறார்
தியேட்டரில் விசில் சபதம் காதைப் பிளக்கிறது
காவல்காரன் என்கிற படத்தில் ஒரு அருமையான
சண்டைக் காட்சி.ஒரு முரடனை அடிக்கும் போது
அவன் விலக தலைவரின் கை கண்ணாடி பீரோவை
உடைத்துக் கொண்டு செல்லும் .
கண்ணாடி உடைந்து சிதறும். நாம் அவர் கை என்ன
ஆகி இருக்குமோ என நினைக்கும் சமயம்
அவர் கையைக் கவனிக்காமல் கையில்
கட்டியிருக்கிற கடிகாரம் சரியாக ஓடுகிறதா
எனப் பார்ப்பார்.அதே சமயம் அவரைத் தாக்க
அவர் அறியாமல் பின்னே ஒருவன் வருவான்
தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்
அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான்
அவன் சொல்லி முடிப்பதற்குள் தலைவர்
திரும்பாமலே அவனுக்கு ஒரு டிஸும் விடுகிறார்
தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.
இப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்
அவர் மிகவும் நெருங்கிவிட்டதாலும்
தன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு
தேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)
சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை கொள்வது
மற்றபடி எந்தக் காட்சி என்றாலும்
முன்னிலை என்றால் முன்பக்கம் கைகாட்டுவது
படர்க்கை என்றால் பின் பக்கம் கைகாட்டுவது
உண்மை நேர்மை முதலான விஷயங்களுக்கு
நெஞ்சைத் தொட்டுக் காட்டுவது.,
அம்மா அண்ணா முதலானவைகளுக்கு கை கூப்புவது
காதல் காட்சியில் லேசாக உதட்டைச் சுளித்து
விஷமப் புன்னகை பூப்பது,
கோபம் எனில் பற்களைக் கடிப்பது
அழுகை என்றால் எதையாவது வைத்து
முகத்தை மறைத்துக் கொள்வது அல்லது
தூணில் மறைந்து கொள்வது
மற்றபடி அனைத்திற்கும் கைகளை இரண்டு புறமும்
மிக நேர்த்தியாக விரிப்பது மட்டுமே போதும்
என்பதில் மிகச் சரியாக இருந்தார்
கதைக்கும் அவரது ரசிகர்களுக்கு அதுவே
போதுமானதாகவே இருந்தது
அவரும் ,கதையும் ,.இசையும் ,பாடலும்
ஒவ்வொரு படத்தில் ஏற்றுக் கொள்ளும்
மாறுபட்ட கதாபாத்திரமும்
புத்தம் புதிய இளமையான கதா நாயகிகளும்
அவர் படத்தின் பால் எப்போதும் ஒரு
அதிக ஆர்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன
courtesy - net
அன்று
http://i58.tinypic.com/2eldpxy.jpg
1965 எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழா நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி - ரத்னா
இன்று
2015
http://i62.tinypic.com/72fwub.jpg
எங்க வீட்டு பிள்ளை பொன்விழாவில் சரோஜாதேவி - ரத்னா
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களுக்கு கலை இயக்குனராக சிறப்பாக பணியாற்றியவர் திரு அங்கமுத்து எழுதிய சொக்க தங்கம் புத்தகத்தில் இடம் பெற்ற சில அபூர்வ படங்கள் .
http://i57.tinypic.com/14l4pz9.jpg