மக்கள் திலகத்தின் நடிப்பில் நீரும் நெருப்பும் படம் எனக்கு என்று இல்லை. நம் ரசிகர்கள் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். அதில் அவரது வித்தியாசமான நடிப்பு … பிரமாதப்படுத்தியிருப்பார். கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் வில்லன் நடிப்பு அபாரம். 1971-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நீரும் நெருப்பும் படம் வெளியானது. அப்போது இந்தப் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இதற்கு முன்னால் வந்த மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் பல இடங்களில் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.
நீரும் நெருப்பும் படத்துக்காக ரிக்க்ஷாக்காரன் பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டது. என்றாலும் ஷிப்ட் முறையில் ஓடியபடி பார்த்தால் ரிக்க்ஷாக்காரன் என்ன? மக்கள் திலகத்தின் ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியவைதான். ஆனால், அதையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை.மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட சாதனைகளாலே வெற்றியைப் பார்த்துப் பார்த்து நாம் சலித்துப் போய் விட்டோம். இப்போது 4வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ‘சக்ஸஸ் மீட்’டாம்.
நீரும் நெருப்பும் பிரம்மாண்ட படைப்பு. மக்கள் திலகத்தின் நடிப்பு மனதில் நிற்கும். மணிவண்ணனை சவுக்கால் அடிக்கும்போது தனக்கு வலித்தாலும் மணிவண்ணன் அடிவாங்குவதை நினைத்து வலியை பொறுத்துக் கொண்டே சிரிக்கும் கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் நடிப்பை இப்போதைய நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.
நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு வேடங்களிலும் மக்கள் திலகம் தனி வித்தியாசம் காட்டியிருப்பார் .
கரிகாலனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில்தான் என்ன ஒரு சூழ்ச்சி கலந்த வஞ்சம் கொண்ட பழிவாங்கும் துடிப்பு நிறைந்த வில்லத்தனம்.
http://i67.tinypic.com/sw4uuo.jpg
அதே நேரம் மணிவண்ணனாக வரும் மக்கள் திலகத்தின் முகத்தில் பெருந்தன்மை, உடன்பிறப்பாயிற்றே என்ற பாசம். இப்படி நடந்து கொள்கிறாயே என்ற ஏளனம் கலந்த ஸ்டைலான சிரிப்பு. நம் மனதை ஜிவ்வென தூக்கிச் செல்லும்.
http://i65.tinypic.com/2zfrd5w.jpg
இருவருக்கும் நடக்கும் சண்டையில் தாக்குதலின்போதும் உடன் பிறந்தவனையே அழித்துவிட நினைக்கும் கரிகாலனின் ஆக்ரோஷம்.
http://i68.tinypic.com/2qi7mlz.jpg
முகத்தில் என்ன ஒரு வெறி? வேறு எந்தப் படத்திலும் இந்த பாவனையை மக்கள் திலகம் காட்டியது இல்லை. வில்லத்தனம் நிறைந்த இந்த பாத்திரத்துக்காக காண்பித்தார். பாத்திரத்தின் தன்மையையும் காட்சியையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முக பாவங்களை மக்கள் திலகம் வெளிப்படுத்துவார் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
அதேநேரம், மணிவண்ணனின் தாக்குதல் எண்ணம் இல்லாத தற்காப்புக்காக கத்தியைப் பிடித்திருப்பதையும் உன்னை என்னால் சுலபமாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையின் சிகரமான புன்முறுவல் சிரிப்பு. மணிவண்ணனாக வரும் மக்கள் திலகம் இடது கையிலேயேதான் சண்டையிடுவார். கடைசி வரை படத்தில் இதை சரியான கன்டினியூடியுடன் கடைபிடிப்பார். இந்த ஸ்டில்லிலும் பார்க்கலாம். கத்தியைப் பிடிப்பதிலும் என்ன ஒரு வித்தியாசம்.
http://i66.tinypic.com/2cmsm4p.jpg
இருவரும் மோதும் சண்டைக் காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். மக்கள் திலகம் கத்திப் பேசமாட்டார். கத்தி பேசும். த்ரில்லிங்கை ஏற்படுத்தும் எடிட்டிங். படப்பிடிப்பைக் காண வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா மக்கள் திலகம் சண்டை போடுவதைப் பார்த்து உண்மையான கத்தியிலேயே சண்டை போடுகிறீர்களே? என்று வியந்தார்.
http://i64.tinypic.com/10db7l5.jpg
கரிகாலனும் மணிவண்ணனும் பலப்பரிட்சை செய்யும் காட்சி. இதிலும் கரிகாலன் முகத்தில் ஜெயிக்கும் வெறியும் அதற்கான முழு பலப்பிரயோகமும் மணிவண்ணன் முகத்தில் தன்னம்பிக்கையின் பலமும் தெரியும்.
http://i64.tinypic.com/hs3ts1.jpg
http://i65.tinypic.com/117wvw5.jpg
இதில் ஒரு முக்கியமான ஆச்சரியமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தின் விளம்பர ஸ்டில்லும் இதே போன்று வந்தது. ஆனால், படத்தில் இந்தக் காட்சி இல்லை. கமலஹாசன் நல்ல நடிகர். மக்கள் திலகத்தைப் போலவே மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கியுள்ளார். அதற்காக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் தலைமையில் கமல்ஹாசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரத் விருது பெற்றதில் கமல்ஹாசனுக்கு மக்கள் திலகம் முன்னோடி. ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகம்தான்.
மக்கள் திலகத்தின் ஆற்றலைப் பார்த்து பிரமிக்கும் இன்னொரு விசேஷம். தன் படத்துக்கு நடிப்பது மட்டுமில்லாமல், எல்லா பணிகளையும் அவரே இழுத்துப்போட்டுக் கொண்டு வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காலம். இரண்டு வேடங்களில் ஒரு நடிகர் பலப்பரிட்சை செய்வது போல காட்சி எடுப்பது சிரமம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பலப்பரிட்சை செய்வது போன்ற காட்சியை எப்படி எடுத்தார் என்று வியப்பாக உள்ளது. பாரத் விருது பெற்றதில் மட்டுமில்லாமல், ஆளவந்தான் பட ஸ்டில் காட்சியிலும் கமல்ஹாசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் முன்னோடி!
க்ளைமாக்ஸ் சண்டையின்போது அசோகனின் சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு கரிகாலன் விழுந்துவிடுவார். மணிவண்ணன் அங்கு வந்து அசோகனுடன் தொடர்ந்து சண்டையிடுவார். அப்போது, மணிவண்ணனை கொல்ல குறி பார்க்கும் நடிகர் ஆனந்தனை கரிகாலன் கத்தி வீசி கொல்வார். ஆனந்தனின் கத்தலைக் கேட்டு அசோகனுடன் சண்டையிடும் மணிவண்ணன் கத்தியை தடுத்துப் பிடித்தபடியே யார் கத்துவது என்று திரும்பிப் பார்ப்பார்.
கத்திக் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் கரிகாலனால் பேசமுடியாது. அதற்கு காரணம் நான்தான் என்பதை உணர்த்த முகத்தில் பெருமிதம் பொங்க வசனமே இல்லாமல் கரிகாலன் தனது நெஞ்சை தட்டிக் காண்பிப்பது நடிப்பின் உச்சம்.
http://i63.tinypic.com/adf69w.jpg
நெஞ்சில் தட்டிக் கொள்ளும் உடன்பிறப்பைப் பார்த்து அசோகனின் கத்தியை மடக்கிப் பிடித்தபடி நன்றியும் பாசமும் போட்டியிட மணிவண்ணன் சிரிக்கிறார்.
http://i65.tinypic.com/2ur86ps.jpg
சண்டை முடிந்தவுடன் இறந்து விடும் கரிகாலனை மணிவண்ணன் அணைத்தபடி கலங்கி அழும் காட்சியில் நம் கண்களிலும் கண்ணீர் வரும்.
http://i64.tinypic.com/v7tir9.jpg
படத்துக்கு அசோகனைத் தவிர அந்தக் கண்ணீரும் வில்லன். வழக்கமாக மக்கள் திலகத்தின் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இருக்கும் மகிழ்ச்சி கரிகாலன் இறப்பால் மிஸ்ஸிங். அதனாலேயே எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. பல இடங்களில் ஒன்பது வாரங்கள் ஓடியது. ஷிப்டிங்கை சேர்க்கவில்லை இலங்கையில் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் இந்தியாவில் 100 நாள் இல்லை என்பதால் இதை 100 நாள் பட்டியலில் சேர்க்கமாட்டோம்.
முரடனாக வந்து அன்புக்கு ஏங்கி, காதலில் தோல்வியடைந்து சூழ்ச்சியால் கத்தியால் குத்தப்பட்டு இறக்கும் கரிகாலனை மறக்க முடியவில்லை. மணிவண்ணன் மூடிசூட்டிக் கொண்ட மகிழ்ச்சியை விட கரிகாலன் பாத்திரமும் அதன் முடிவும் இதயத்தை கனமாக்கின. 45 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த கனம் குறையவில்லை.
நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்.