http://i64.tinypic.com/2lnj14z.jpg
Printable View
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!
ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்?
அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?
கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’
ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.
அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?
பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.
எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.
கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.
காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி,
“அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.
காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.
“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.
அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.
அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!
இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டி நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.
கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.
எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?
“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!
கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.
இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.
வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.
பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.
தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.
“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!
கனகு சுப்பிரமணியத்தை பாராட்ட வேண்டும், பேச வேண்டும் என்று உங்கள் மனசு துடிப்பது தெரிகிறது…
இதோ அவரது அலைபேசி எண்: 96009-87811
Courtesy: The Hindu... Thanks Friends...
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கியதே #MGR தான்..!
'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...!
''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள்.
30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, அப்போதைய தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி.
டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.
இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன.
1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார்.
அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது.
இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.
1978-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த பின்பு, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்தவரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார்.
ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!
ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றி வைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’ வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப் பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனிமேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!
எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப் போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!
நன்றி : ஜூனியர் விகடன்-17-04-2011
#இன்றையதலைமுறைக்குஎம்ஜிஆர்... Thanks Friends.. 👌
மீண்டும் நடக்காத செய்திகள் போட்டு தங்களது அபிமான நடிகர் பற்றி இன்னோரு திரி நெறியாளர் என சொல்லி கொண்டு தப்பான தகவல் தந்திருந்தும் தமிழ் இந்து நாளிதழ் நிர்வாகம் அதை சரி பார்க்காமலே வெளியிட்டுள்ளனர், அதை அவர்கள் பார்த்து படித்து அற்ப சந்தோஷம் காணவே முடியும்... வேறு எதையும் சாதிக்க சாத்தியமில்லை, இதை உணர்ந்தால் சரி...
சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளில் முதல் முறையாக அரசு விருந்தினராக மக்கள் திலகம் அவர்கள் தான் அந்த அரசுகளால் அழைக்கப்பட்டார், அப்புறம் 1959- 60 ஆண்டுகள் வாக்கில் மதுரை நகராட்சியாக தான் இருந்தது, பின்பு புரட்சி தலைவர் ஆட்சியில் தான் மாநகராட்சியாக உருவாக்க பட்டது... மேலும் சில பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் பாவம்...