மிகவும் சுமாரான பிரிண்டில் மோசமான நிலையில் உள்ள தியேட்டரில் புதுச்சேரியில் எங்க வீட்டு பிள்ளை வசூல் சாதனை..எங்கள் தங்கம் எங்கு இருந்தாலும் மாணிக்கம்தானே...
http://i48.tinypic.com/2en811w.jpg
Printable View
மிகவும் சுமாரான பிரிண்டில் மோசமான நிலையில் உள்ள தியேட்டரில் புதுச்சேரியில் எங்க வீட்டு பிள்ளை வசூல் சாதனை..எங்கள் தங்கம் எங்கு இருந்தாலும் மாணிக்கம்தானே...
http://i48.tinypic.com/2en811w.jpg
ரசிகனின் ரசனைக்கு விருந்து படைத்த வள்ளல் மக்கள் திலகம் .
திரை படத்தை காண வரும் ஒரு வரை , தனது படத்தில் இடம் பெறும் நடிப்பு ,கதை , வசனம் , பாடல்கள் , வீரம் , கருத்துள்ள காட்சிகள் ,மூலம் மனம் கவர்ந்து நிரந்தர ரசிகனாக மாற்றிய பெருமை மக்கள் திலகதிற்கு உண்டு .
1950 துவக்கம் முதல் அவர் நடித்த படங்கள் ராஜா -ராணி கதை என்றாலும் , சமூக படங்கள் என்றாலும் மக்களிடையே ஒரு மாபெரும் வரவேற்பு இருந்தது .
தியாகரஜ பாகவதர் - பியு சின்னப்பா இருவரின் கலை உலக ஆட்சிகாலம் முடிந்த பின்னர்
ராஜகுமாரி
சர்வதிகாரி
மர்மயோகி
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
என்தங்கை
அந்தமான் கைதி
ஜெனோவா
என்று தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்று புகழ் பெற்று பல படங்களில் நடித்து வந்தார் நமது மக்கள் திலகம் .
ரசிகர்களும் மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் வாள் வீச்சு , சிலம்பம் , கம்பு போன்ற பாரம்பரியம் மிக்க தமிழ் கலாசாரத்தின் வீர விளையாட்டுகளை கண்டு மகிழ்ந்து தீவிர ரசிகர்களாக மாறினார் .
அதே போல கருத்துள்ள படங்களில் மட்டும் நடித்து புரட்சிகரமான தன்னுடய நடிப்பால்
புரட்சி நடிகர் என்ற அளவிற்கு உயர்ந்து ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக குடியேறினார் .
ஆரம்ப நாட்களில் வறுமை போராட்டம்
வளரும் நாட்களில் நாடக உலகில் எதிர் நீச்சல்
கலை உலகில் 1936- 1947 வரை 11 வருடங்கள் கடும் போராட்டம்
1947- 1950 வரை தன்னுடய அயராத உழைப்பின் மூலம் பல தொடர் வெற்றிகள்
1950 - 1977வரை 27 வருடங்கள் கடுமையான உழைப்பினால் பல நடிகர்கள் - தயாரிப்பாளர்கள்
இயக்குனர்கள் அனைவரையும் தன பக்கம் ஈர்த்த சாதுரியம் .வருடத்திற்கு வருடம் தொடர் வெற்றி படங்கள் . வெள்ளிவிழா படங்கள் .
தமிழ் படத்தில் ஒரு சிறய பாத்திரத்தில் தோன்றி ,கதாநாயகனாக மாறி , பின்னர் தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக வாழ்ந்து , இந்திய சினிமா வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து
நிஜ வாழ்வில் மக்கள் நாயகனாய் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி புரிந்து உலக வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பொன்மனச்செம்மல் எம்ஜியார் என்று பெருமை பட்டு கொள்ளும் ரசிகர்கள் இன்றும் அவர் நினைவாகவே எல்லோர் இதய கோட்டையில் வாழ்கிறார் .
chandrodhayam -1966
makkal thilagam in superb acting and very nice scenes .
thanks to mgr rasigan http://youtu.be/9VVDqhDvcl8
MAKKAL THILAGAM FAMOUS SONG
THANKS GOLD TREAT
http://youtu.be/Hr_9PZ4GWZQ
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று சொன்னபடி வாழ்ந்த மகான் எம்.ஜி.ஆர் அவர்கள். தனது அனுபவங்களை மற்றவர்கள் பின்பற்றி நடக்கும் வகையில் புத்தகமாக எழுதுவது ஒரு வகை, ஆனால் வாழும் போது வள்ளாக, மகானாக, நேர்மையாக வாழ்ந்து, வாழ்ந்த பின் ஒருவரைப்பற்றி பல்வேறு புத்தகங்கள் வந்தால் அவரது வாழ்வு எத்தகைய ஒரு அருமையான வழிகாட்டியாக மக்களுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதராணமாக இருக்கும். எம்.ஜி.ஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற பத்திரிக்கை தொடரை படித்ததை தவிர அவர் எழுதிய புத்தகத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதிய நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒர் அனுபவ பெட்டகம், வாழ்க்கைப்பாடம். அந்த புத்தகங்கள் போதும் எம்.ஜி.ஆரது வாழ்வின் மகத்துவம் பற்றி, உன்னதம் பற்றி அறிந்து கொள்ள, நமது வாழ்வை செப்பனிட அது ஒர் கால கண்ணாடி.
படித்தவர்கள் பக்குவப்பட பகவத்கீதை, பைபிள் மற்றும் குரான். ஆனால் பாமரரர்கள் பக்குவப்பட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து. ஆம் வாத்தியார் என்று கோடிக்கணக்கான தமிழர்கள் அழைத்த ஒரு அறிவார்ந்த பெட்டகமாக திகழ்ந்து, சினிமாவால் சீர் திருத்தம் செய்யமுடியும், சினிமாவால் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று சாதித்து காட்டி, தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று லட்சோப லட்சம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, நல்வழிப்படுத்திய ஆசான் எம்.ஜி.ஆர்.
18 வயதில் பாதை மாறும் இளைஞர்களை, கொள்கையோடு வாழ் என்று இலட்சியத்தை ஆழ் மனதில் விதைத்த உன்னத தலைவன் எம்.ஜி.ஆர். அப்படி ஒருவனாக உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ளவதில் நான் பெறுமை அடைகிறேன்.
இந்தியா மிக வேகமாக முன்னேற வழி என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் சொல்கிறார் ? முதலாளித்துவம், சுயநலம், பதவிப்பித்து, சாதிவெறி, பணபலம், லஞ்சம் முதலிய தடைக்கற்களை நீக்க வேண்டும் என்று தெளிவாக தீர்க்கமாக கூறினார் எம்.ஜி.ஆர். என்ன ஒரு தேசியப்பார்வை அவருக்கு.
அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, தமிழ் சமுதாயம் ஒரு அறிவார்ந்த இந்திய சமுதாயமாக மாற வேண்டும் என்று திட்டங்களை தீட்டினார். அதாவது, மாணவர்கள் பள்ளியில் இடை நிற்றலை தமிழகத்தில் குறைக்க வேண்டுமென்றால், பள்ளியில் சத்துணவு போடவேண்டும், அதற்காக பிச்சை எடுத்தாவது அந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று அதிகாரிகளின் எதிர்ப்பை, மற்றவர்களின் எள்ளி நகையாடலை எதிர்த்து புறந்தள்ளி, வெற்றிகரமாக நிறைவேற்றினார். இன்றைக்கு உலகம் போற்றும், ஐக்கிய நாடுகள். பின்பற்றும் திட்டமாக உருவாக்கினார் அதனால் தமிழக பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்தது. இடைநின்றவர்களை தனது சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக மாற்றினார். அறிவொளி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி படிக்க வாய்ப்பு கிடைக்காத பெரியோர்களையும், தாய் மார்களையும் கற்றவர்களாக மாற்றினார். 1980களிலே தமிழகத்திலே நடைபெற்ற அறிவுப்புரட்சியான அறிவொளி இயக்கத்திலே பணியாற்றினேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு 2005ல் மத்திய அரசாங்கம் நியமித்த தேசிய அறிவுசார் கமிஷன், நமது இந்தியாவின் மேற்படிப்பு படிப்போர் சதவீகிதத்தை 2020க்குள் 20 சகதவீகதமாக மாற்றவேண்டுமென்றால், அதற்கு 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும் என்ற கண்க்கிட்டுள்ளார்கள். ஆனால் 1980களிலே, 25 வருடங்களுக்கு முன்பாக அவர் விதைத்த விதை இன்றைக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் ஒரு என்ஜினியரை உருவாக்க காரணம் யார் என்றால், அது எம்.ஜி.ஆர்தான். அவர் உண்மையிலேயே, அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவர் என்றால், தொலைநோக்கு பார்வை கொண்ட எம்.ஜி.ஆர்தான்.
1962 இந்தியா ? சீன போரின் போது முதல் யுத்த நிதியை அளித்து தனது தேசியப்பற்றை உணர்த்தியவர் எம்.ஜி.ஆர். தனுஷ்கோடி புயலின் போது அரசின் நிதியுதவியை விட முன்னால் சென்றது எம்.ஜி.ஆர் தானே. நதி நீர் என்பது தேசிய சொத்து, இதில் என்ன பங்காளி சண்டை என்று குண்டுராவ் வீட்டுக்கு சென்று தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் தான் உன் வீட்டில் தண்ணீர் கொடுப்பேன், என்று சட்டத்தால் முடிக்க முடியாததை தனது தலைமைப்பண்பால், தனது அன்பால் செய்து காட்டினாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர்.
தமிழகம் வறட்சியை சந்தித்தபோது, ஒரு நாள் காலை முதல் மாலை வரை உட்கார்ந்த இடத்தை விட்டு ஒரு நிமிடம் கூட எங்கும் செல்லாமல் உண்ணாவிரதம் இருந்து அரிசியை கேட்டு பெற்று அரிசிப்பஞ்சம் தீர்த்தாரே அவர் தான் எம்.ஜி.ஆர்.
தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து இன்றைக்கும் இணக்கமாக, பிரச்சனை அதிகம் இல்லாமல் தண்ணீர் வரவழைத்தாரே அவர் அல்லவா எம்.ஜி.ஆர்.
இலங்கை தமிழர்களினின் வாழ்க்கைக்கு ஒர் ஆதாரமாக இருந்து, அனைத்து வழிகளிலும், அன்றைய பாரத பிரதமர் இந்திராவுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தி வலிமை சேர்த்தாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர். இன்றைக்கும் ஒவ்வொரு தமிழ்ர்களும் தலைநிமிர்ந்து நடக்க காரணமாக ஆதார சுருதியாக, அடிப்படையாக இருந்தவர் அல்லவா எம்.ஜி.ஆர்.
ஒரு மாநில முதலமைச்சர் எப்படி ஜனநாயக நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று செயலில் நடத்திக்காட்டியவர் எம்.ஜி.ஆர். ஒரு மாநில முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை சாகும்வரை முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆருக்கு தான் இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது. மறைந்த பின் இந்தியா பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவப்படுத்தியது. வாழ்ந்து மறைந்து பின்பும், இன்றைக்கும் தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக, இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான்.
இந்தியாவில் மட்டுமல்ல, அவரது திறைமையையும், மனிதப்பண்பையும் மதித்த பல்வேறு உலக நாடுகள் கவுரவித்தது என்றால் அவர் எம்.ஜி.ஆர் ஒருவர்தான். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வாழ்கிறார்.
25 ஆண்டுகள் மட்டுமல்ல, எப்படி 2200 ஆண்டுகள் கழித்தும் திருக்குறள் உலக பொது மறை நூலாக இருக்கிறதோ, அப்படி பல்லாயிறம் ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆர் தமிழர்களின் வாழ்வில் ஒரு சரித்திரமாக மாறி நம்முடன் இருப்பார். எப்படி காந்திஅடிகளுக்கு 70 நாடுகளில் சிலை அமைத்து போற்றப்படுகிறாரோ, அவருக்கு அடுத்து எம்.ஜி.ஆரின் புகழ் உலகம் முழவதும் ஒங்கி ஒலிக்கும்.
எம்.ஜி.ஆர் கனவை நனவாக்க வேண்டும் என்றால். ஒர் அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தன்னை அறிந்து தனது தனித்தன்மையை ஒவ்வொரு இளைஞர்களும் வெளிக்கொணர வேண்டும். இளைஞர்களின் மனதில் லட்சிய விதையை விதைக்க வேண்டும். நம்பிக்கையுடைய, தைரியமான, நேர்மையான, விவேகமான, வீரமான தமிழ் இளைஞர்களை உருவாக்கி, அவர்களுக்கு தமிழ்பற்றையும், தேசப்பற்றையும் ஊட்டி வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, தமிழ்நாடு வளர்ந்தால் தான் இந்த தேசம் வளரும் என்ற நம்பிக்கையோடு, தனி மனிதனை விட இந்த நாடு பெரியது என்ற எண்ணத்துடன் இன்றைய இளைஞர்கள் அறிவார்ந்த முறையில் வளர அனைந்து எம்.ஜி.ஆர் மன்றங்களும், இதயக்கனி மாத இதழும் பாடுபட வேண்டும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னபடி, ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, அனுபவம் என்கிற நெருப்பில் போட்டு, தெளிவு என்கிற சம்மட்டியால் அடிக்கப்பெற்று, பகுத்தறிவு என்ற ஆயுதமாக வெளிவந்தால், அந்த ஆயுதம் என்ற இதயம் நிச்சயமாக எதையும் தாங்கி விடும்.
நாடு வளம் பெற வேண்டும், இல்லாமை அகல வேண்டும், சோம்பல் விலக வேண்டும், உழைத்து வாழ வேண்டும், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற எண்ணம் வேண்டும், மேடு பள்ளம் இல்லா சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். விவசாயம் மீண்டும் செழிக்க கூடிய வழிமுறை செய்யப்பட வேண்டும், தமிழக நதிகளை இணைத்து நீர் வழிச்சாலை அமைத்து எம்.ஜி.ஆர் சொன்னபடி என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை நீட்ட வேண்டும் வெளிநாட்டில் என்ற கனவை நனவாக்க மட்டுமல்ல, தண்ணீரும், மின்சாரமும் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழகத்தை மாற்ற வேண்டும். தொழில் வளர ஏற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, எரிசக்தி சுதந்திரம் பெற்று, நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் உலக தரத்தோடு உருவாக்க நமது மக்கள், இளைஞர்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து உயரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலகத்தில் உள்ள யாருக்கும் தமிழர்கள் அறிவால், தன்மையால், அன்பால், நேர்மையால், உழைப்பால், அடுத்தவர்களை மதிக்கும் பண்பால், அமைதியை விரும்புவதில், விவேகத்தால், மொழியால், ஜனநாயகத்தை பேணிக்காப்பதில், நாட்டின் வளர்ச்சியை, லஞ்சம் இலாவண்யம் இல்லா சமூகத்தை, குடிப்பழக்கத்திற்கு ஆளாகாத ஒரு சமூகத்தை, மேடு பள்ளம் இல்லா சமூகத்தை, நாம் யாரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணமில்லா சமூகத்தை, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றமில்லா சமூகத்தை அமைத்து, தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த குணங்களை கொண்ட இளைஞர்களை தலைவர்களாக உருவாக்க இதயக்கனியும், எம்.ஜி.ஆர் மன்றங்களும் பாடுபடவேண்டும். அப்படி பட்ட சூழ்நிலையை நாம் அனைவரும் உருவாக்க பாடுபட்டால், எம்.ஜி.ஆர் கண்ட கனவு கண்டிப்பாக நனவாகும்.
Former president abdhul kalaam speechread by his p.a at delhi mgr's birthday function -2013
courtesy - idhayakkani