Originally Posted by
esvee
1972 ஆண்டில் வந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் காவியங்கள் .
1. சங்கே முழங்கு
2. நல்ல நேரம்
3. ராமன் தேடிய சீதை
4. நான் ஏன் பிறந்தேன்
5. அன்னமிட்ட கை
6. இதய வீணை
சங்கே முழங்கு -
மக்கள் திலகம் முருகன் -கிருபால் சிங் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்தார் .
பொம்பள சிரிச்சா போச்சு என்ற கிண்டல் பாடலில் மக்கள் திலகம் லக்ஷ்மியை கிண்டல் செய்யும்
பாடல் அட்டகாசம் .பிரமாதமாக நடனமாடி நடித்திருப்பார் . சிலர் குடிப்பது போல் நடிப்பார் என்ற பாடலில் ஹெலனுடன் நடனமாடி அசத்தியிருப்பார் . நாலு பேருக்கு நன்றி என்ற பாடலில் மௌனத்தாலே நடித்திருப்பார் . தமிழில் அது ஒரு ..... மற்றும் இரண்டு கண்கள் ... பாடலில் வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ..கிளைமாக்ஸ் காட்சியில்
கோர்ட் காட்சிகளில் குறுக்கு விசாரணையில் அசத்தியிருப்பார் . மொத்தத்தில் சங்கே முழங்கு
முழங்கியதின் மூலம் 1972 தொடர் வெற்றிக்கு வித்திட்ட காவியம் .
நல்ல நேரம் .
தேவரின் இமாலய வெற்றி . படம் . மக்கள் திலகம் அறிமுக காட்சியில் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி -இளமை - இனிமை - புதுமை .
இனிய பாடல்கள் - ஜனரஞ்சகமான படம் .
ஓடி ஓடி உழைக்கணும் பாடல் - இளமை துள்ளும் எம்ஜியாரின் வெற்றி பாடல் .
ராமன் தேடிய சீதை .
மக்கள் திலகம் நடித்த இந்த படத்தில் மொத்தம் 45 வித விதமான உடைகளில் தோன்றிய ஒரே படம் .
திருவளர்செல்வியோ
என் உள்ளம் உந்தன் ஆராதனை
நல்லது கண்ணே
முத்தான மூன்று காதல் கீதங்கள் . என்றென்றும் நம் நினைவில் சுழலும் பாடல்கள் .
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படம் .
நான் ஏன் பிறந்தேன்
மக்கள் திலகம் நடித்த குடும்ப சித்திரம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக
நான் பாடும் பாடல் .. நலமாக வேண்டும்
உனது விழியில் எனது பார்வை ..
இரண்டு பாடகள் போதும் படத்தின் வெற்றிக்கு . மக்கள் திலகத்தின் இனிய நடிப்பில் வந்த
குடும்ப காவியம் .
அன்னமிட்ட கை
மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்
மயங்கி விட்டேன் .. உன்னை கண்டு
பதினாறு வயதினிலே
அன்னமிட்ட கை . நம்மை ஆகி விட்ட கை
41 ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .
மக்கள் திலகத்தின் கோல் சண்டை - விறுவிறுப்பாக இருந்தது .
தேர்தல் நேரத்தில் ஒலித்த பாடல் . 2014 தேர்தலில் ஒலிக்கபோகும் பாடல் .
இதயவீணை
மணியனின் நாவல் . இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட படம் .
மக்கள் திலகின் மாறுபட்ட சிகை அலங்காரம் இந்த படத்திற்கு ஸ்பெஷல் .
ஆரம்ப பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான ஜாலி பாடல் . மக்கள் திலகம்
அட்டகாசமாக காஷ்மீர் - காஞ்சிபுரம் பெருமைகளையும் , தன்னுடைய எதிர்கால அரசியல்
பற்றியும் கூறும் பாடல் .பொருத்தமான பாடல் .1972 அரசியல் வெற்றிக்கு பின் வந்த படம் .
1972 ஆண்டடில் மட்டும் ஆறு படங்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்த படைத்த நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்ன வென்று சொல்ல ? காவிய படைப்புகள் .
1972 அரசியலிலும் அறிமுக வெற்றி - படங்களும் வியாபார ரீதியாக அமோக வெற்றி .
நினைவுகளை அசை போட வைத்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு நன்றி .