-
30.06.1977 முதலமைச்சர் MGR
1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.
ஜனதாக் கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.
அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.
அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.
தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.
இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.
தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.
மக்கள் முன் மற்றொரு பதிவிப்பிரமாணம்!
1977 – ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று தான் புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும் சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!
ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது மந்தகாசப் புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.
”அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும். உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.
மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.
இதனை எங்கள் மனத்தில் இருத்தி, இலஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
இந்த உயர்ந்த இலட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று தலைவர் உறுதியிட்டுக் கூறினார் புரட்சித் தலைவர்.
அப்பொழுதும் அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!
அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார். புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை
courtesy net
-
இலவச மின்சாரம்
தமிழ்நாட்டில் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஏழை எளியவர்களின் குடிசை வீடுகளுக்கு விளக்கெரிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அறிவித்து உடனடியாக அமுல்படுத்தினார், புரட்சித் தலைவர். அதன் மூலம் 735 இலட்சம் ஏழைகளின் இல்லங்கள் ஒளி பெற்றன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!
பாசனத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 இலட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின்சார இணைப்புக் கொடுக்க ஏற்பாடு செய்தார், புரட்சித் தலைவர். அவர் 10.5 இலட்சம் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவும் வகை செய்தார். இவை தவிர விவசாயிகளின் கடன் சுமை ரூ. 325 கோடியைத் தள்ளுபடி செய்தும் நிவாரணமளித்தார்.
தன்னிகரில்லாத தன்னிறைவுத் திட்டம் ஒன்றை வகுத்தளித்து ரூ. 215 கோடியை அதற்கென ஒதுக்கினார்.
-
தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி
1977 முதல் 1982 ஆம் ஆண்டுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலட்சத்து 28 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய புரட்சித் தலைவர் அரசு, அவர்களுக்கு 95.575 வீடுகளையும் கட்டிக் கொடுத்தது.
-
ஊனமுற்றோர்களுக்கு உதவி
உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காது கேளாதோர் முதலியவர்களுக்கு நல்வாழ்வளிப்பதில் தனி அக்கறையும் பெருங்கருணையும் கொண்டவர், புரட்சித் தலைவர். அவர் தம்முடைய சொத்தில் ஒரு பகுதியையே அவர்களுக்காக எழுதிவைத்த வள்ளலாவார். புரட்சித் தலைவர், தாம் பதவியேற்ற முதல் நான்காண்டுளுக்குள் உடல் ஊனமுற்றோருக்கு 3888 மூன்று சக்கரவண்டிகளை இலவசமாக அளித்தார்; 885 பேருக்குச் சிறிய பெட்டிக் கடைகளை வைத்துக்கொள்ள, மானிய உதவிகளை அளித்தார்.
-
அரிசி விலை குறைப்பு
கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார், புரட்சித்தலைவர். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்த புரட்சித் தலைவர். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
-
வேலை வாய்ப்பு
1977 – ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த மூலதனம ரூ. 850 கோடியாகும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்றனர். 1979 – ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் 5.2 சதவிகிதந்தான். 1982 – ஆம் ஆண்டில் அது 12.1 சதவிகிதமாய் வளர்ச்சியடைந்தது. இது புரட்சித் தலைவர் அரசின் மகத்தான சாதனை ஆகும்.
இது தவிர, மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை அடைந்தது.
1977-78 ஆம் ஆண்டில் தமிகத்தில் 2.424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி, 1983-84 ஆம் ஆண்டில் 3.344 மெகா வாட்டாக உயர்ந்தது.
20 ஆயிரம் இளைஞர்களுக்குச் சுயதொழில் தொடங்க நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டார், புரட்சித்தலைவர்.
-
சத்துணவு திட்டம்
ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் (2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள்) மதியம் ஒரு வேளை சத்துள்ள உணவைப் பள்ளிகளிலேயே சமைத்து வழங்கும் திட்டந்தான் ச்த்துணவுத் திட்டமாகும். அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள 90 இலட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்தனர். அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களை நிருவகித்து உணவு சமைத்துப் படைக்கும் ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ. 100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ. 200 கோடியாகும்.
சத்துணவுத் திட்டத்தை வாழ்த்தி வரவேற்காத தாய்மார்கள் ஒருவர்கூட இரார். எதிர்த்த அரசியல் தலைவர்களும் எவருமிலர்.
-
வீட்டு வசதி
நலிந்த பிரிவு மக்களுக்கு 3 ஆண்டுகளில் 30 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கும்திட்டத்தையும் அமல்படுத்தினார், புரட்சித்தலைவர். அவர் பத்தாவது வகுப்புவரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.50 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்தினார். அதனை மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெற்ற்றுக் கொண்டிருக்கின்றனர்.
வணிகர்களுக்கு ஒரு முனை வரி விதிப்புத் திட்டத்தை அமல்படுத்தி வீண் தொந்தரவுகளிலிருந்து விடுதலை அளித்தார்.
கிராம்ப்புற மக்களுக்குப் போக்குவரத்து வசதி அளிக்கப் புதிதாக 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார். மேலும்-
கிராமக் கைவினைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டம்
விவசாயிகளுக்குப் பயிர்ப் பாதுகாப்பு மற்றும் விபத்து மற்றும் இடர் உதவித் திட்டம்
அரசு ஊழியர்களுக்கு ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஓய்வூதியத்திட்டம்.
தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்.
மீனவர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்
நெசவாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்
நெசவாளர், தீப்பெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர் விபத்து உதவித் திட்டம்.
கட்டடத் தொழிலாளர், கிராமக் கைவினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றோருக்கும் ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வுப் பலன்களும் கிட்ட வழி செய்யும் திட்டம்.
காவலர்களுக்கு தனி வீட்டுவசதிக் கழகம், அமைத்தல்,
காவலர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கம் திட்டம். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.
முதியோர் பென்ஷன் திட்டம்.
உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும், பயிற்சி வழங்கும் வழி தொடர் திட்டம்,
தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தனியாகத் தஞ்சைப் பல்கலைக்கழகம் அமைத்தல்,
பாரதியார், பாரதிதாசனார் பெயர்களில் புதிய பல்கலைக்கழகங்கள் அமைத்தல், முதலிய சாதனைகளைச் செய்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் தாய்க்குலத்தின் நலம் பேணுவதற்காக மேலும் சில நல்வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தினார்
-
எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்
எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் ரிலீசாகி வசூல் குவிகின்றன. தற்போது 4 படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மகாலட்சுமி தியேட்டரில் ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. பிராட்வே தியேட்டரில் ‘வேட்டைக்காரன்’ படமும், பாடி சிவசக்தியில் ‘ரகசிய போலீஸ் 115’ படமும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரில் ‘விக்கிரமாதித்தன்’ படமும் திரையிடப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் வருகிறது.
நிறைய புது படங்கள் ஓரிரு நாட்களிலேயே கூட்டம் இல்லாமல் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர். படங்களை திரையிடும் தியேட்டர்கள் லாபம் ஈட்டுகின்றன. எம்.ஜி.ஆர். படம் ஒவ்வொன்றும் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். கட் அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழாவாக கொண்டாடுகிறார்கள்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் ரசிகர் ராஜ் கூறும் போது, சென்னை தியேட்டர்களில் வருடத்துக்கு 40 எம்.ஜி.ஆர் படங்கள் மீண்டும் ரிலீசாகின்றன. தமிழ்நாடு முழுவதும் 80 படங்கள் வருகிறது என்றார்.
-
எம்.ஜி.ஆர். குணமடைய ஒலித்த வாலியின் பாடல்
எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் நெருக்கமான அன்பு உண்டு. எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தபோது தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் வாலி பாடல் ஒன்று ஒலித்தது.
அதுதான் 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்... உள்ளம் அது உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்' என்ற பாடல்தான் அது.