http://i63.tinypic.com/2h2hvtw.jpg
நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் அநாயசமான வி்த்தியாச நடிப்பு பற்றிய பதிவுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
Printable View
http://i63.tinypic.com/2h2hvtw.jpg
நீரும் நெருப்பும் படத்தில் மக்கள் திலகத்தின் அநாயசமான வி்த்தியாச நடிப்பு பற்றிய பதிவுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
ரிக்ஷாக்காரனின் வெற்றி பவனிக்கு முடிவே கிடையாதோ என்று தோன்றுகிறது. புரட்சித் தலைவர் படங்களுக்கு மறு வெளியீடு என்பதே கிடையாது. பெட்டிக்குள் போய் மறுபடியும் வெளியிட்டால்தானே மறுவெளியீடு?. தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊரில் அவரது படங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அப்புறம் எப்படி மறுவெளியீடு என்று சொல்லமுடியும் என்று தோன்றுகிறது.
சென்னையில் ரிக்ஷாக்காரன்.
கோவையில் பல்லாண்டு வாழ்க.
நமக்குத் தெரிந்து இந்த வாரம் இரண்டு படங்கள். தமிழகத்தின் மூலைமுடுக்குளில் எங்கெல்லாம் மக்கள் திலகத்தின் படங்கள் ஓடுகிறதோ?
பணத்தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் காமதேனுவாய் பணத்தை அள்ளிக் கொடுக்கும் மக்கள் திலகத்தின் படங்களை விடுவதற்கு விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் மனசு வருமா என்ன?
தினத்தந்தி -03/12/2016
http://i64.tinypic.com/2lt575w.jpg
http://i66.tinypic.com/6oms09.jpg
தர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக கடந்த ஞாயிறு (27/11/16)
சென்னையில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாள்
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்.
http://i64.tinypic.com/2qu17wn.jpg
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (03/12/2016) மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியின் நுழைவு சீட்டு
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை (04/12/2016) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியின் நுழைவு சீட்டு
http://i65.tinypic.com/2nukl7r.jpg
தமிழ் இந்து -02/12/2016
http://i66.tinypic.com/zk60ep.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 16/12/2016 முதல் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நினைத்ததை முடிப்பவன் "
தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயமாக வெள்ளித்திரைக்கு வருகிறது .
http://i68.tinypic.com/11r6usg.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
முகநூலில் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் 1971-ம் ஆண்டு தினமணிக்கதிரில் புரட்சித் தலைவரிடம் 3 கேள்விகள் எழுப்பி அதற்கு புரட்சித் தலைவர் பதில் அளித்திருக்கிறார். அதை முகநூலில் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் பதிவிட்டுள்ளார். அதை இங்கு பதிவிடுகிறேன்.
******************
http://i65.tinypic.com/16a48qu.jpg
எம்.ஜி.ஆர்.-வாசகர் கேள்வி பதில் சிலவற்றை நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தேன்.அதன் தொடர்ச்சியாக இன்று நான் தலைவரிடம் கேட்ட(தபால் மூலம்தான்) 3 கேள்விகளையும் அவற்றிற்கு தலைவரின் பதில்களையும் பதிவு செய்கிறேன்.
என் கேள்வி 1.
இறைவன் தன் பிரதிநிதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் தாயை நியமித்திருக்கிறார் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
எம்.ஜி.ஆர். பதில்:
இல்லை.ஏனெனில் இறைவனே தாயாக இருப்பதால்.
என் கேள்வி 2.
தாய்தான் தெய்வம் என்றால், அந்த தாயாகிய தெய்வம் நம்மை இடையில் தவிக்கவிட்டு செல்வதேன்?
எம்.ஜி.ஆர். பதில்:
நம்முடைய திறமையிலும்,உழைப்பிலும்,பண்பிலும் கொண்ட நம்பிக்கையால்.
என் கேள்வி 3.
பல சேவைகளிலும் சிறந்து விளங்கும் தாங்கள், தங்கள அன்னையின் பெயரில் கல்லூரி அமைக்க நிதி உதவி அளித்து, கல்வித்தொண்டு செய்வீர்களா?
எம்.ஜி.ஆர். பதில்:
என் வருமான வரி பிரச்சனை தீர்ந்தவுடன்,நான் முதலில் செய்வது அந்த பணியாகத்தான் இருக்கும்.அதற்கு என் அன்னை அருள்வார் என்று நம்புகிறேன்.
என் குறிப்பு:-
நான் கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது,தினமணிக்கதிரில் எம்.ஜி.ஆர். கேள்வி-பதில் வந்த போது நான் ஒரு போஸ்ட் கார்டில் நான் கேட்ட 3 கேள்விகளுக்கும் தலைவர் பதிலளித்ததை பத்திரிகையில் படித்தபோது எனக்கு தலை கால் புரியவில்லை. இதை வாழ்வில் எனக்கு கிடைத்த பேறாக கருதுகிறேன்.நீண்ட காலத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர்.கேள்வி பதில்கள் சமீபத்தில் புத்தக வடிவில் கண்ணதாசன் பதிப்பகத்திலிருந்து வெளியாகி உள்ளது.அப்புத்தகத்தில் என் கேள்வி பதில்கள் 167வது பக்கத்தில் வெளியாகியுள்ளன.
http://i66.tinypic.com/2899d76.jpg
******************
நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல்