அன்பு நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பொது நலத் தொண்டுகளைப் பற்றியும் தேசிய இயக்கத்தில் இருந்த போது நாடெங்கும் அவர் அமைத்துத் தந்த ஏராளமான படிப்பகங்கள், அதே போல் திறந்து வைத்த பொது கட்டிடங்கள், கொடி மரங்கள், கல்வெட்டுக்கள், அரங்குகள் உள்ளிட்ட வற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணற்ற நற்செயல்களை நாடு முழுதும் ஏராளமான கல்வெட்டுக்கள் இன்றும் பறை சாற்றிக் கொண்டுள்ளன. அவர் ஒரு நடிகர் மட்டும் என்பதோடு நிறுத்தி விடாமல் இந்த நாட்டில் தேசியம் தழைத்தோங்க வேண்டும் நாட்டுப் பற்றில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்ற முனைப்போடு நமது ரசிகர் மன்றங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள் மூலமாக செய்துள்ள காரயங்களுக்கு இந்த கல்வெட்டுக்களே அத்தாட்சி. எனவே இதன் மூலம் நாம் அனைத்து ரசிகர்களையும் தாழ்மையுடன் வேண்டுவது, தயவு செய்து ஆங்காங்கே தாங்கள் இருக்கும் பகுதியில் எந்தெந்த கல்வெட்டில் நடிகர் திலகத்தின் பெயர் காணப் படுகிறதோ அதனையெல்லாம் நிழற்படமாக இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இது கடினமாக இருக்காது. ஏனெனில் கிட்டத் தட்ட அனைத்து கைப்பேசிகளிலும் காமிரா இருக்கக் கூடும். எனவே இதனை ஒரு தவமாக மேற்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என வேண்டுகிறேன்.,
தொடக்கமாக, நமக்கு கிடைத்த ஒரு நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன். புதுச்சேரி ராஜா திரையரங்கினை 1968ம் ஆண்டு நடிகர் திலகம் தலைமையில் அப்போதைய ஆளுநர் அவர்கள் திறந்து வைத்த படத்தை இங்கே காணலாம்.
http://i872.photobucket.com/albums/a...NRAJAPONDY.jpg