Originally Posted by
makkal thilagam mgr
50 வருடங்களுக்கு முன்பு ,
சரவணா பிலிம்ஸ் சார்பில், ஜி. என். வேலுமணி அவர்களால் தயாரிக்கப்பட்டு, முதன் முதலாக கே. ஷங்கர் இயக்கத்தில் 11-01-1963
அன்றைய தினம், சென்னை பிளாசா, கிரவுன், மேகலா ஆகிய திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.
அந்த சமயத்தில் -
09-02-1963 அன்று முதல் "கொடுத்து வைத்தவள்" சென்னை காசினோ, மகாராணி, புவனேஸ்வரி ஆகிய அரங்குகளிலும்
22-02-1963 முதல் "தர்மம் தலை காக்கும்" சென்னை சித்ரா, பிரபாத், சரஸ்வதி ஆகிய அரங்குகளிலும்
வெளியிடப்பட்டு, சென்னை நகரின் பிரதான அரங்குகளை நமது இதய தெய்வத்தின் திரைப்படங்களே ஆக்கிரமித்து கொண்டிருந்தன
பணத்தோட்டம் படத்தின் இதர சிறப்புகள் :
1. 18 நாட்களில், குறுகிய கால தயாரிப்பாக, இப்படம் எடுக்கப்பட்டது.
2. பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களை வைத்து அது நாள் வரை தயாரித்து வந்த ஜி. என். வேலுமணி அவர்கள் முதன் முறையாக
இப்படத்தின் மூலம்தான், மக்கள் திலகத்துடன் இணைந்தார்.
3. மக்கள் திலகத்தின் பிற படங்களின் கடுமையான போட்டிக்கிடையே, வெற்றிகரமாக 10 வாரங்களை கடந்து விநியோகஸ்தர்களுக்கு
நல்ல இலாபத்தை ஈட்டு தந்தது.
4. சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள "டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டல்" வளாக திறந்த வெளி அரங்கில்,
வழக்கமாக ஆங்கில திரைப்படங்களை மட்டுமே காண்பித்து வந்த கால கட்டத்தில் முதன் முதலில் காண்பிக்கப்
பட்ட தமிழ் திரைப்படம்.
5. முத்தான ஆறு பாடல்களாகிய -
ஒரு நாள் இரவில் ..... என்கின்ற பி. சுசீலா பாடிய தனிப் பாடலும்,
ஒருவர் ஒருவராய் பிறந்தோம் என்கின்ற கோரஸ் பாடலும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கின்ற தத்துவ பாடலும்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற இனிமையான ஜோடிப் பாடலும்
மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல் என்ற சிந்தனைப்பாடலும்
ஜவ்வாது மேடையிட்டு, சர்க்கரையில் பந்தலிட்டு என்ற போதையேற்றும் பாடலும்
இடம் பெற்ற திரைப்படம்.
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலின் இடையே, சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா என்று பொன்
மனச்செம்மலைப் போற்றி, தமிழுக்கும் அவருக்கும் இருக்கின்ற தொடர்பினை வெளிப்படுத்தி, கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது .
6. மறு வெளியீடுகளிலும் மகத்தான வசூல் சாதனை புரிந்த படம். 1991 ம் ஆண்டில், "அகஸ்தியா" அரங்கில் 6
நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டு சுமார் 64,112 ரூபாய் வசூலித்தது. அதே போன்று, 'வசந்தி' அரங்கில் 7 நாட்களில்
52,466 ரூபாய் வசூலித்தது.
இத்துடன் 1963 ல் வெளியான போது, பிரசுரிக்கப் பட்ட தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டையுடன்
கூடிய கதைச் சுருக்கம், படத்தினை உருவாக்க பாடுபட்ட கலைஞர்கள் விவரம் இணைக்கப் பட்டுள்ளது.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்.