நன்றி சார்.
Printable View
Meenava Nanban 36th Year post.
http://www.mgrroop.blogspot.in/2013/...nanban-36.html
http://i44.tinypic.com/14nz7s1.jpg
தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
கலை மன்னன்
ஸ்டைல் மன்னன் - அலிபாபாவும் 40 திருடர்களும்
மாடர்ன் தியேட்டர்ஸ் திரு. சுந்தரம் தனது பேட்டியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டையும், அவருடைய நிறத்தையும் காட்டுவதற்காகவே அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தை வண்ணப்படமாக எடுத்தோம் என்றார். அந்த அளவிற்கு நம் எழில் வேந்தன் அழகாகவும், காண்போர் மனம் மயங்குபவராகவும் இருந்தார்.
http://i39.tinypic.com/143lum0.jpg
அதில் மக்கள் திலகம் அணிந்திருக்கும் அரேபிய உடைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த உடைகள் தலைவருக்கு மிகவும் பொருத்தமானதா இருக்கும்..அவர் ஒரு இயல்பான இஸ்லாமியர் போன்றே காணப்படுவார்.. அதற்கு தகுந்தாற்போல் அவர் நிறமும் , பாடி லாங்குவேஜும் இணைந்தே இருக்கும். மேலும் 'அல்லா ஒருவரே எனக்கு முதலாளி', அல்லா மீது ஆணையிட்டு சொல்கிறேன்' போன்ற வசனங்களும், படத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரங்கங்களும் நம்மை பாக்தாத் நகருக்கே அழைத்து செல்லும்.
http://i39.tinypic.com/261oqqd.jpg
எல்லாவற்றிற்கும் மேலாக தலைவரின் வாள்வீச்சு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும். இதற்கு முன்பு, இதே தலைப்பில் ஒரு படம் இருந்தும் மாடர்ன் தியேட்டர்ஸின் இந்த திரைப்படத்தின் நாயகனாக, புரட்சி நடிகராய் இருந்ததால் மட்டுமே, இது அனைவரின் பாராட்டுதலையும், மகத்தான வெற்றியையும் பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தின் உடைகளையும், ஸ்டைலையும் அப்போது தலைவரின் ரசிகர்கள் நிறையபேர் பின்பற்றினர். எனவே, அலிபாபவிலிருந்தே எம்ஜிஆர் ஸ்டைல் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
rare picture
http://i42.tinypic.com/w6xcw2.jpg
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகத்தின் '' அலிபாபாவும் 40 திருடர்களும் '' பற்றிய செய்தியும் மக்கள் திலகத்தின் படமும்
அருமையான பதிவு . நீங்கள் பதிவு செய்த நேரம்
திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில்
''அலிபாபாவும் 40 திருடர்களும் '''
நேற்று முதல் தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
1955ல் வந்த காவியம் 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெள்ளி திரையில் வலம் வருவது
மக்கள் திலகத்தின் சாதனை . .
மக்கள் திலகம் திரி யின் சார்பாக அனைவருக்கும் இனிய
''சுதந்திர தின வாழ்த்துக்கள் ''
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக 15.8.1977 அன்று சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி சிறப்புரைஆற்றினார் .
http://i41.tinypic.com/11cehib.jpg
1977-1987 வரை தொடர்ந்து சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய பெருமை மக்கள் திலகத்திற்கு உண்டு .திரை உலகிலும் , அரசியல் உலகிலும் பல புரட்சிகள் புரிந்து சாதனை படைத்தவர் நம் மக்கள் திலகம் ..
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி நிறைவேற்றிய
பெருமை அவருக்கு சேரும் .
சுதந்திர தினமான இன்று கடந்த காலத்தில் [1977-1987 ] மக்கள் திலகத்தின் சீரிய பணிகளின் வெற்றிகளை நினைத்து பெருமை கொள்வோம் .