MAY 01 இதய தெய்வம் அவர்களின் திருமணநாள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f5&oe=5ECEF694
Printable View
MAY 01 இதய தெய்வம் அவர்களின் திருமணநாள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f5&oe=5ECEF694
இன்று 01/05/2020 - காலை 11.30 மணிக்கு zee திரையில், உழைப்பாளர்களை மைய படுத்தும் கதை களம். ¶
நடிகர்திலகம் நடித்த - 'இரும்புத்திரை' - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், வைஜந்திய மாலா, சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர் திலகத்தின் திருமணநாள் இன்று May 01
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5ED0A1EC
பாசமலர் தொடர்பான முந்தைய பதிவில் படம் பார்க்க நானும் நண்பரும்.சென்றதும் தியேட்டரில் அன்று மகளிருக்கான சிறப்பு காட்சியாக பாசமலர் ஆகி விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினோம் எனச் சொல்லியிருந்தேன், வேண்டுமானால் அன்று இரவுக் காட்சி பார்த்திருக்கலாம் ஆனால் நாங்கள் ஹாஸ்டலுக்கு வந்து சேர வேண்டும் முப்பது வருடங்களுக்கு முந்தைய ஹாஸ்டல் கட்டுப்பாடுகளை சொல்லவே தேவையில்லை,
மறுநாள் திங்கள் அன்றைய மாலைப் பொழுது எப்போது வரும் என்ற சிரமம் எல்லாம் தெரியாமல் முதல் நாள் கிடைத்த நண்பர் இன்று அமையாமல் நான் மட்டுமே பாச மலரை பார்த்து அழுதேன்,
காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம், எந்தக் காட்சியில் அழுதேன் என்று ரீ வைண்டிங் பார்த்தோமானால் கன்னத்தில் துப்பாக்கி வைத்து தேய்த்துக் கொள்ளும் சீனிற்கே அழுதிருக்கிறேன், துப்பாக்கியை வைத்துக் கொண்டு கௌபாய் என டுமீல் டுமீல் என சுட்டுக் கொண்ட படங்களை ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன், நமது தலைவர் துப்பாக்கியின் முனையில் கண்ணீரை துடைத்துக் கொள்கிராரே? பாசத்தை
துப்பாக்கி முனையில் யார் காட்டுவார்கள்? என சிந்தனை பறக்கத் தான் செய்தது,
மற்ற காட்சிகளையெல்லாம் எப்படி விவரிப்பது, பாச மலர் பார்ப்பவர்களுக்கு ஒரு சௌகரியம் கிடைத்தது, தங்களது சொந்த பந்த சோக சமாச்சாரங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர கொண்டு வந்து படம் பார்க்கும் போது கொட்டித் தீர்த்துக் கொள்வார்கள் போல, பாசமலர் ஒவ்வொருவரின் வீட்டு அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து போனதால் தானே அறுபது ஆண்டுகளாக பாசமலர் உதாரண மலராகவே இன்று வரையிலும் நீடிக்கிறது,
தொடர்ந்தார் போல காட்சிகள், அந்த சூழலில் நான் கூட ஜெமினி அவர்களை திட்டத்தான் செய்தேன், அந்தக் கிழவியை என கூச்சல் போடுவோர் மத்தியில் நானும் சேர்ந்து கொண்டேன்,
பார்த்து ரசித்த மொத்த காட்சிகளை பற்றிய விவரங்களை வேறு ஒரு பதிவில் தொடரலாம்,
இப்போது எனக்குள் இருந்த பழைய பாசமலர் தொடர்பான கணக்கை எடுக்கிறேன்,
முன்னர் டூரிங் கொட்டகையில் எத்தனையோ நடிகர் திலகம் படம் பார்த்த போதெல்லாம் " பாச மலர் " எப்போது வரும் எனக் கேட்டதுண்டு, ஸ்கூல் பசங்க கேள்விக்கு அப்போதைய ஆபரேட்டர்கள் பதில் சொல்வார்களா என்ன?
போஸ்டர் ஒட்டிய அண்ணன்மார்களே ஏகத்துக்கும் பந்தா காட்டுவார்கள், அதனால் பாசமலரைப் பற்றிய எண்ணம் நீடித்த காலமெல்லாம் கடந்து இப்போது பாசமலர் பார்த்தாயிற்று,
இப்போது கல்லூரி காலம்
விடுமுறை வந்ததும் வழக்கமாக ஊருக்கு வந்து நண்பர்கள் ஏராளம், அப்போது இளைய திலகம் பிரபுவின் சின்னத்தம்பி பட்டிதொட்டியெல்லாம் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது, ஒரு ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு போகிறோம் என்றால் ஏறும் பேருந்து முதல் நிற்கும் பஸ் நிறுத்த டீ கடை, பேருந்து நிலையம் என சின்னத் தம்பி பாட்டுத்தான் கேட்கும், நம்ம ஊருக்கு அருகிலுள்ள ஊரின் டூரிங் கொட்டகையில் சின்னத் தம்பி, நாங்க ஒரு படையோடு தான் படம் பார்க்கும் பழக்கம், அன்றும் எங்கள் குரூப்போடு சின்னத் தம்பி பார்த்த கையோடு ஆப்பரேட்டரிடம் பாச மலர் படத்தை போடுங்கையா என்ற பேச்சுக்கு மதிப்பு கொடுத்த ஆபரேட்டர் டூரிங் கொட்டகையில் அன்று முதலாளி இருந்ததால் அவரிடமே நேரிடையாக எங்களை அறிமுகம் செய்து விஷயத்தை விவரித்தார்,
அந்த முதலாளி "தம்பி சிவாஜி படமெல்லாம் ஓடி ஓடி பிலிம் ரோலெல்லாம் பழசாயிடிச்சு, சரி பழைய ரோல் தானே கொஞ்சம் ரேட்டையாவது கம்மியாக் கொடுக்கிறார்களா? அதுவும் கிடையாது,
இதோ சின்னத் தம்பி 15 ஆயிரம் ரூபா ஒரு வாரம் ஓடினா போதும் , ஓட்டுவதில் எந்த சிரமமும் கிடையாது,
ஆனா சிவாஜி படங்கள் இப்பவும் 9ஆயிரம் 10 ஆயிரம் என இருக்கிறது, அதுவும் நீங்க கேட்கிற பாசமலர் 10 ஆயிரத்துக்கு கீழ கெடைக்காது
நாங்க கொண்டு வந்தாலும் ஆபரேட்டர் பெரிய ரிஸ்க் எடுப்பாரு, கொஞ்சம் அறுந்தாலும் நீங்க போடும் கூச்சல் கொஞ்சமாகவா இருக்கும்",
நாங்கள் ரொம்பவே சோர்ந்து போனதை கவனித்த சினிமா கொட்டகை முதலாளி "இன்னமும் ரெண்டு வாரம் பொருங்க புதிய பிரிண்ட் உத்தமன் வருது, தீபாவளி யைக் கொண்டாடுங்கோ என்றார்
சொன்னபடியே தீபாவளியும் வந்தது உத்தமனும் வந்தது
வெடியாய் வெடித்து வசூலையும் குவித்தது,
இன்று 01-05-2020
நடிகர் திலகத்தின் மண நாள் கொண்டாட்டம், மே தின நாள் முன்னிட்டு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் காலை 10 மணிக்கு "பாச மலர்"
பார்த்து மகிழ்வோம்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bd&oe=5ED254A1
Thanks Sekar Parasuram
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...32&oe=5ED1C2AD
Thanks Ramesh Prabhu
கூட்டம் சேர்க்க அன்றைய திமுகவில் இருந்த போது மேடைகளில் எம்ஜிஆர் எப்படி எல்லாம் பேசியிருக்கிறார்??
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...07&oe=5ECF998D