Originally Posted by
rajaramsgi
கரெக்ட்.. கமல் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.
ராஜா சார் மட்டும் என்னவாம்? யுவனோட முதல் கல்யாணத்தை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில வெச்சுட்டு, ஜெயலலிதாவுக்கு பத்திரிகை குடுத்தார். அந்த அம்மாவும் இவரை மாதிரியே தலையை சொறிஞ்சிகிட்டு, அங்க என்னால வர முடியாதேன்னு தான் சொல்லி இருப்பாங்க. அவங்க வரவும் இல்லை. இதுக்காக அவர் இதை எங்கேயும் சொல்லி காட்டலை, பத்திரிக்கையை பிடிங்கிக்கிட்டும் வரவில்லை.
இவர் இங்க கல்யாணத்தை வெச்சுட்டு அங்க கூப்பிட போனது தப்புன்னா, ஜெயகாந்தன் பண்ணதும் தப்பு தான். கமல் பண்ணதும் தப்பு தான். இவிங்க சண்டை தான் ஊருக்கே தெரியுமே?
இருந்தாலும் வைரமுத்து இதை இந்த நேரத்தில் சொல்லி காட்டி இருக்க வேண்டாம். ஜீவா மரணத்தின் போது இவர் துக்கம் விசாரிக்க போன போதே ராஜா சார் ரசிகர்கள் அவர் மீது கொண்டிருந்த காழ்ப்புனற்சிகளை குறைத்திருபார்கள். இப்போது?
எதுவானாலும், ராஜா சார்-ஜெயகாந்தன், ராஜ சார்-கமல் நட்பு நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது.
இந்த பாலா பரதேசி படத்துல கங்கை அமரனுக்கு ஒரு குடுத்துருக்கப்ல. ராஜ சார் வாய்ஸ் மாதிரியே இருக்கு. இது என்ன மாதிரி ட்ரிக்ன்னு தெரியலை. யாரை ஏமாத்தறதுக்கு அவர் பாடின பாட்டை விளம்பரத்துக்கும் குடுத்துருக்குகாங்க என்று தெரியவில்லை. வைரமுத்து மேடையில் நண்டு நரி கதை வேற சொல்லி உயிரை வாங்கினார், கேட்க நல்ல இருந்தது வேற விஷயம். கங்கை அமரன் வைரமுத்துவின் பேரை சொன்னதும், அவர் இவர் பெயரை சொன்னதும் மேடை நாகரீகத்திற்கு மட்டுமா இல்லை நிஜத்திலுமா?