சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,
மாற்றுத் திரிக்கு பதில் தர வேண்டாம் என்ற தங்கள் ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் அதில் விருப்பம் இல்லை.
ஆனால், சிவந்தமண் திரைப்படத்தோடு நம்நாடு படத்தை ஒப்பிடும்போதுதான் நாம் பதில் சொல்ல வேண்டி வருகிறது. சிவந்த மண் திரைப்படம் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியது என்பதை நான் எங்கே மறுத்தேன்?
கல்கி பத்திரிகையில் இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் தொடர் பற்றி நான் கூறியதை நண்பர் நன்றாக படித்து பார்க்கட்டும்.
//சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.//
இதுதான் நான் கூறியிருந்த கருத்து (நமது திரியின் 323-ம் பக்கம் பதிவு எண். 3227)
நண்பர் கேட்டிருப்பதால் அது என்ன என்பதை இப்போது சொல்கிறேன்.
சிவந்தமண் திரைப்படம் நம்நாடு திரைப்படத்தை விட அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியிருக்கலாம். ஆனால், நம்நாடு திரைப்படம்தான், சிவந்தமண்ணை விட அதிக வசூல் செய்த படம். இதுகுறித்த ஆவணங்களை சகோதரர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அவர்கள் கணக்குப்படியே பார்ப்போம்.
சென்னையில் சிவந்த மண் மொத்த வசூல் 12,32,970.21p (அதாவது 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்த பின்)
சென்னையில் நம்நாடு 4 திரையரங்குகளில் 4 வார மொத்த வசூல் 4,61,728.72p (4 வாரத்துக்கே ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றால் 100 நாட்கள் கடந்த பின் எவ்வளவு வசூல் ஆகியிருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.)
மேலும், நம்நாடு சென்னை சித்ராவில் 21 நாள் வசூல் 84,916.80
சிவந்தமண் சென்னை குளோப்பில் 21 நாள் வசூல் 79,630.74 தான்.
ஏறத்தாழ 5,000 ரூபாய் நம்நாடு வசூல் அதிகம்.
திருச்சியிலும் நம்நாடு 28 நாள் வசூல், சிவந்த மண் 28 நாள் வசூலை விட ஏறத்தாழ 18,000 ரூபாய் அதிகம் உள்ளது.
உடனே, இதெல்லாம் ஒரு ஆதாரமா? நீங்களாக நோட்டீஸ் போட்டுக் கொண்டால் அது ஆதாரமாகிவிடுமா? என்று யாராவது கேட்கலாம். இப்போது எப்படி மதுரை சென்ட்ரல் அரங்கில் மேலாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கேட்டு திரு.லோகநாதன் போன்ற நண்பர்கள் மக்கள் திலகத்தின் பட வசூல் விவரங்களை வெளியிடுகிறார்களோ, அதே போலத்தான் அப்போதும் அன்று தீவிரமாக இருந்த ரசிகர்கள் திரையரங்குகளை தொடர்பு கொண்டு வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொய்யான வசூல் விவரம் சொல்லியிருந்தால் அந்த காலகட்டத்திலும் மாற்று முகாமினர் சும்மா விடுவார்களா?
இல்லை. பொய்தான் என்று சொல்வார்களானால், அவர்கள் இன்று கூட அவர்கள் திரியில் போட்டிருக்கிறார்களே? அந்த வசூல் விவரம் மட்டும் மெய்யா? என்று கேட்க விரும்புகிறோம். அது உண்மை என்றால் இதுவும் உண்மைதான்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஸ்ரீதர் கூறிய விவரங்களை தருகிறேன் என்றேனே.
சிவந்தமண் திரைப்படம், தான் எதிர்பார்த்த அளவு போகவில்லை (100 நாட்கள் ஓடவில்லை என்று ஸ்ரீதரும் சொல்லவில்லை. வசூலைத்தான் அவர் சொல்கிறார்) என்று அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் கூறியுள்ளார். கல்கி பத்திரிகையில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற பெயரில் அவர் எழுதிய தொடரில் இதைக் குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் இதைப் படித்திருக்கலாம். அது நினைவிருந்தால் நடுநிலையான நண்பர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த தொடரை சந்திரமெளலி என்பவர் எழுத்தாக்கம் செய்திருந்தார். பின்னர், அந்தத் தொடர் ‘திரும்பிப் பார்க்கிறேன் ’என்ற பெயரிலேயே புத்தகமாகவும் வந்தது.
அந்த புத்தகம் என்னிடம் உள்ளது. எனக்கு ஸ்கேன் செய்து பதிவிடத் தெரியாது. படங்கள் பதிவிடுவது, வீடியோக்களை தரவேற்றுவது கூட எனக்குத் தெரியாது. ஆனால், அந்த புத்தகத்தின் சில பகுதிகளை எடுத்து இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை கீழே தருகிறேன்.
திரு.சைலேஷ் சார்,
நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும். விவாதம் தேவையில்லைதான். ஆனால், ‘பத்திரிகை செய்தியை நண்பர் பதிவிடவும் அனைவரும் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்’ என்று மாற்று முகாம் நண்பர் கேட்கும்போது பதிவிடாமல் இருக்க முடியாது. அப்படி பதிவிடாமல் இருந்தால் நாம் பொய் சொல்கிறோம் என்று அர்த்தமாகி விடும். அதனால், பதிவிட வேண்டிய நிலைமை.
எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் உலகம் அறிந்த உண்மைகளைக் கூட அந்த நண்பர் ஏற்றுக் கொள்ள மறுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. என் பதிவுகளில் உண்மை தவிர வேறு எதையும் பதிவிட மாட்டேன். ஆனாலும், என்ன ஆதாரம் கொடுத்தால் என்ன? ‘‘திரு. ஸ்ரீதர் அவர்கள் சில லீலைகள் செய்தார். அதை திரு. சண்முகம் அவர்கள் தட்டிக் கேட்டார். அதனால், திரு. ஸ்ரீதர் இப்படி எழுதிவிட்டார்’ என்று அந்த நண்பர் சொல்லி விட்டால் முடிந்தது கதை. (முக்கியமான விஷயம். இந்த தொடர் கல்கியில் வெளியானதும் சரி, அது புத்தகமாக வந்ததும் சரி. 2001-ம் ஆண்டுக்கு முன்புதான்)
அந்த நண்பரைப் பொறுத்தவரை அவரது விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் அவர் நீதிபதியாக இருக்கலாம். ஆனால், எது உண்மை என்பதை முடிவு செய்வதில் நடுநிலையான பொதுமக்கள்தான் உண்மையான நீதிபதிகள். அவர்களுக்கு நாம் சொல்வதில் உள்ள உண்மைகள் புரியும். அதுபோதும்.
எனக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அந்த நண்பர் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரோ? அதனால்தான், அவர் பெருமைகள் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறாரோ? என்று. அப்படி இருந்தால் நேரடியாக சொல்லிவிடலாம். மகிழ்ச்சியோடு வரவேற்க காத்திருக்கிறோம்.
திரு.முத்தையன் அம்மு சார்,
உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எங்களுக்கு நீங்கள்தான் முக்கியம்.
மாற்று முகாம் நண்பர் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதைப் போல, மக்கள் திலகம் பதிவுகளைக் குறைத்துக் கொண்டு அவர்கள் திரியிலேயே அதிகம் பதிவிடுங்கள் என்பது எனது அன்பு கோரிக்கை. நாம்தான் பெருந்தன்மையின் பேரரசரின் வழி வந்தவர்களாயிற்றே? மற்றவர்களுக்கு கொடுப்பதுதான் தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்த பண்பு.
திரு.ஸ்ரீதர் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தகத்தின் விவரங்கள் உள்ள இணையதளத்தின் இணைப்பும் அந்த பகுதியும் அடுத்த பதிவில்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்