-
அன்று படிக்காத பாமர ஏழை எளிய ஜனங்கள் மற்றும் என்றுமே (இன்று வரை) அவரை கைவிடாத அவரது சுக துக்கங்களில் துணை நிற்கும் அவரது இரசிகர்கள் (இரத்தத்தின் இரத்தங்கள்) மட்டுமே அவருக்கு துணையிருந்தனர். எம்ஜிஆருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலே அவர் ஒரு முட்டாளாக கருதப்படுவர். இது போன்றதொரு மாயையை தீயசக்தி மற்றும் அவரது சகாக்கள் தங்களது பகீரத ப்ரயத்தனத்தால் அரைவேக்காடுகளின் மனதில் பதிய வைத்திருந்த காலகட்டம். சில படித்த ஜடங்களும் அதை உண்மையென்று நம்பியது தான் வேதனை.
இல்லையெனில் இட ஒதுக்கீட்டில் இந்திய அளவில் மாபெரும் புரட்சியையும், காங்கிரஸுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கும் புரட்சித் தலைவரின் சமநோக்கு திட்டம் செயல்முறைக்கு வந்து இந்தியா மேலும் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்க கூடும். சூழ்ச்சிக்கார கருணாநிதி மற்றும் அவருக்கு துணை போன அரசியல் அறிவே துளியும் இல்லாத சிவாஜி மற்றும் பதவிக்காக ஆலாய்ப் பறந்த சுயநல காங்கிரஸால் நாற்பது ஆண்டுகள் பின்தங்கி இன்று மோடி என்னும் மாபெரும் மனிதரால் மீண்டும் புரட்சி தொடங்கியுள்ளது. பொன்மனச்செம்மலின் கனவுகளான De-Monetisation, Economically backward, creamy layer மட்டுமின்றி சாதி மதம் சார்ந்த ப்ரச்சனைகள், அண்டை மாநில நதிநீர் பங்கீடு, இலங்கை ப்ரச்சனையில் அவர் எடுத்த முயற்சிகள் போல் அண்டை நாட்டுப் ப்ரச்சனைகள் அணுகப்பட்டு அவற்றிற்கு இன்றுகூட அவரது கொள்கைகள் கடைபிடிக்கப் படுமாயின் எல்லாவற்றிலும் சுமுகத் தீர்வு ஏற்படுமென்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இன்று தண்ணீரின்றி தத்தளிக்கும் சென்னை தவமிருந்து காத்திருக்கும் க்ருஷ்ணா நதியை எந்தவித பந்தாவுமில்லாமல் தன்னுடைய சிறந்த நட்பின் வாயிலாக ஜஸ்ட் லைக் தட்டாக ஆந்திராவிடமிருந்து பெற்றுத் தந்தவர். ஹெக்டே போன்ற சிறந்த ஸ்டேட்ஸ்மென்கள் பிக் ப்ரதராக இருந்து எங்களை வழி நடத்துங்கள் என்று சொல்லுமளவிற்கு காவேரி நதி நீர் ப்ரச்சனையை இரு மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கையாண்டவர்.
பின்குறிப்பு: அருணன் போன்றவர்கள் உண்மையை ஓரளவிற்கு ஒளிவு மறைவின்றி எழுதியிருப்பது ஆச்சரியம் தருகிறது............. Thanks wa.,
-
புரட்சித்தலைவர் திரையுலகில்இருந்தவரை எந்தக்கொம்பனாலும் இந்தசாதனையை வெல்லமுடியவேயில்லை என்ற "மதுரைவீரன் "மக்கள்திலகம். எம்.ஜி.ஆர் அவர்களின் சரித்திரசாதனை முழக்கத்தில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும் ......மதுரை எஸ். குமார்.... Thanks wa.,
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
தலைவரின் அபார
திறமையை நிரூபித்த
மற்றுமொரு இனிய தரூணம்
உங்கள் பார்வைக்கு
தமிழ் இந்து நாளிதழ்... 2017ல் வந்தவை..... 3-5-19ன் தொடர்ச்சி.....
எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக்கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்....
‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சாதீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’
என்று ஒரு பாடல் உண்டு.
அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு, திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங்கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக்குள் சென்றுவிட்டார்.
விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.
அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷயத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப்படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறிவையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இருவருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் ஆனார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந்தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....
‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.
தொடரும்...
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி👍🏼........ Thanks fb.,
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு............
மீண்டும் ஒரு சிறப்பு பதிவு
படித்து பாருங்கள்
கொடுத்து சிவந்த கரத்தின் கொடையை
People of our state may admire 'him' as their most cherished actor..no wonder, but what to say.. the people of neighboring state also do the same...!
நடிகர் சத்யராஜ் கூறியது…
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த 'வேட்டைக்காரன்' படம் தான் என்னை தலைவரின் தீவிர ரசிகனாக்கியது. எனக்கு நினைவு தெரிந்து அவரைத் துரத்திப் போய் நேருக்கு நேர் பார்த்தது, கோவைக்கு வந்தபோது தான். சாண்டோ சின்னப்பா தேவரின் மகன் கல்யாணத்திற்கு, தலைவர் வந்திருப்பதாகக் கேள்விப் பட்டதும் நானும் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும் கோவை ஸ்டேன்ஸ் மில் பகுதிக்குப் போனோம். கூட்டமோ கூட்டம். தலைவர் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் காரில் ஊட்டிக்கு படப்பிடிப்புக்கோ என்னவோ கிளம்பி விட்டார். தலைவரைப் பார்க்காமல் வீட்டுக்குப் போவதில்லை என்கிற முடிவுடன் பைக்கில் பின்னால் பறந்தோம்.
நாங்கள் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு, வடமதுரை என்னுமிடத்தில் காரை நிறுத்தி, கண்ணாடியை இறக்கிவிட்டுப் புன்னகையுடன் 'என்ன?' என்று விசாரித்தார்.
"இவ்வளவு வேகமாக பைக் ஓட்டக் கூடாது. ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது? சரி..மெதுவா ஊருக்குப் போங்க…" என்றார். அந்த நேரத்திலும் அவருக்கிருந்த அக்கறையைப் பாருங்க.
பின்னால் பைக் வேகமாக வருவதை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து, வண்டியை நிறுத்தச் சொல்லி, எங்களிடம் அவர் பேசும்போது, அவர் கண்ணில் மின்னிய அந்த சின்சியாரிட்டி அல்லவா அன்று என்னைக் கவர்ந்தது ! அதுதான் அவரது ஹைலைட்.
இதனால் அல்லவோ பின்னாளில் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து, படுத்துக் கொண்டே அவரால் தேர்தலில் ஜெயிக்க முடிந்தது.
அவர் அன்றைக்கு வந்த காரின் கலர் கூட ஞாபகத்தில் இருக்கு. மெரூன் கலர் செவர்லைட் கார் அது.
இப்படித்தான், பின்னாளில் 'அவசரக்காரி' என்றொரு படம் விஜயகாந்தும் நானும் நடித்தது.
மைசூரில் நடந்த அந்த படப்பிடிப்பின் போது ஒரு சுவையான சம்பவம்.
படப்பிடிப்பின் இடைவேளையில், ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஜனங்களிடம் பேச்சு கொடுத்தேன்..
"உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யாரு?"
"ராஜ்குமார் தான் ரொம்பப் பிடிக்கும்" என்றனர்.
"அவரை உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அவரைத் தவிர வேறு யாரைப் பிடிக்கும்?"
"அவருக்கு அடுத்து எம்.ஜி.ஆரைத் தான் ரொம்பப் பிடிக்கும்" என்றனர்.
தலைவரின் ரசிகனான எனக்கு உற்சாகம் பீறிட்டது. "அப்படியா..! அவரைப் பிடிக்கக் காரணம் என்ன ?" என்றேன்.
அவர்கள் சொன்னார்கள்...
"முன்பு 'இதயக்கனி' படப்பிடிப்புக்காக இங்கே வந்திருந்தார். அப்போது நாங்கள் எங்கள் பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக நிதி திரட்டிக் கொண்டிருந்தோம். அப்படியே எம்.ஜி.ஆரிடம் போய் நன்கொடை புத்தகத்தை நீட்டினோம்
பள்ளிக்கூடம் கட்டுவதற்காக நிதி வசூலிக்கிறோம். ஒரு டிக்கட் பத்து ரூபாய். நீங்க ஏதாச்சும் சில டிக்கெட்டுகளை வாங்கிக்கோங்க-ன்னு சொன்னோம்.
எங்கள் கையில் இருந்த நன்கொடை புத்தகத்தை அவர் வாங்கிக்கவே இல்லை. எங்களுக்கு என்னவோ போல் இருந்தது. நடிக்கப் போய்விட்டார். 'என்னடா இவர்…? ன்னு வருத்தப்பட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து அவர் வந்து கேட்டார்,
" என்ன பள்ளிக்கூடம் கட்டப் போறீங்க?" என்று.
"ஆரம்பப் பள்ளிக்கூடம்" என்றோம்.
"என்ன செலவாகும்?" என்றார்.
"ஒரு பத்தாயிரம் ஆகலாம்" என்றோம்.
"இருங்க" என்று சொல்லிவிட்டுப் போனவர் திரும்ப வந்து பத்தாயிரம் ரூபாயையும் மொத்தமாகக் கொடுத்து விட்டார்.எங்கள் ஊர் மக்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"நாங்க நினைத்தது ஒரு 50 டிக்கட் வாங்கிக்குவார்னுதான். ஆனால் அவருக்கு இத்தனை பெரிய மனசு இருக்கும்னு தெரியலை. அன்னிலிருந்து எங்க ஊர் மக்கள் அனைவருக்கும் அவரை ரொம்ப ரொம்பப் பிடித்துப் போய்விட்டது" என்றனர்.
(1964 ல் வெளிவந்த 'வேட்டைக்காரன்' படத்தில், கண்ணதாசன் பாடலை, கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.எஸ்…)
https://youtu.be/_e-ZyZheUGg
நன்றி பரத் வெங்கட்ராமன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி, 👍🏼........... Thanks wa.,
-
பிறந்தநாள் 🎂 💐வாழ்த்து மடல்✒.......
*************************
---- இன்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை தமது 64வது அகவை திருநாளை... குதூகலத்துடன் கொண்டாடி மகிழும் என் பாசத்திற்க்குறிய உடன் பிறவா சகோதரர் திரு. சம்பங்கி GSR (பெங்களூர்) அவர்களே... பெரியோர்கள் சொல்வார்கள்... 16ம் பெற்று பெரு வாழ்வு வாழு (வாழ்க) என்று.
இன்று தாங்கள் 16 பாக்யம் *4 மடங்கு அதிகம் = 64 பாக்யம் (அருங்குணங்கள்) பெற்று , தங்களது குடும்பத்தாரோடு சேர்ந்து கொண்டாடி நீண்டகாலம் வாழ வேண்டும் என்று , கண்கண்ட கடவுள் / இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறேன்.
வாழ்த்த வயதில்லை என்றாலும் , நம்மை ஈன்று பெறவா தாய் எம்ஜிஆர் அவர்கள் தாலாட்டு (இந்த பச்சைகிளிக்கோறு செவ்வந்திப் பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்...... நான் ஆராரோ என்று தாலாட்ட ... இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட ...) பாடி , எங்களையும் பாராட்ட சொன்னதால்...!
நீலக்கடல் அலைப்போல நீடூழி நீர் வாழ்க....!
நெஞ்சமெனும் பஞ்சணையில் நீராடி நீர் வாழ்க....!
காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீர் வாழ்க....!
கடவுள் MGR வாழ்த்துப் பெற்ற ரத்த உறவே நீர் வாழ்க....!
என்று , நானும் எனது குடும்ப உறவுகளும் சேர்ந்து வாழ்த்துகிறோம்💐💐💐 எண்ணற்றப்பேர் தங்களது பெயருக்கு முன்னாள் MGR என்று பெயர் சேர்த்து தலைவர் வழியில் நான்... என்று சொன்னாலும் ,
ஒரு சில நடிகர்களை தவிர்த்து... பல ஒழுக்கசீல பக்தர்களை போல் தாங்களும்... பேர் - புகழுக்கு ஆசைபடாத , கர்வம் கொள்ளாத தூய தொண்டர் / பக்தர் என்பதால் இயற்கையிலேயே சில பொருத்தங்கள் தங்களுக்கு அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.... சகோதரர் திரு. சம்பங்கி (மரியாதை =M) G ( S தவிர்த்தால்) R ஆக... சம்பங்கி MGR என்று... மீண்டும் ஒரு
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை பெங்களூர் (ம)
அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப்பெற்ற,
திருநங்கை. கீதம்மா நாயக் (விளம்பரம் விரும்பாத கொடைவள்ளல் தாய்) பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் திருவண்ணாமலை (ம)
க. ராஜசேகர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி மன்றம் பெங்களூர்....
மு. தமிழ்நேசன் மதுரை
பிரகாஷ் (எ) முருகன்
இவர்களுடன்....
மலேசியா பொன்மனச்செம்மல் கலைக்குழு. ஐயா. மேகநாதன்
&
ஐயா. நெல்சன் முருகன்
ஐயா. சுகுமாறன்
ஐயா. மணிவாசகம்
ஐயா. முத்துரத்தினம்
ஐயா. மதியழகன்
ஐயா. குணா
ஐயா. சிவா / பார்வதி
ஐயா. DK. குமார்
ஐயா. எம்ஜிஆர் ஹரி
ஐயா. பாலசந்திரன்
ஐயா. MG. குமார்
ஐயா. பாரதிகண்ணன்
ஐயா. இளையராஜா
ஐயா. பாலா / புவனேஷ்வரி
இவர்களுடன்....
மலேசியா நளினா
பார்வதி
பத்மினி
கலைவாணி
ஜெயந்தி மோகன்........ Thanks wa., Friends...
-
-
-
-
-