Definition of Style 27 & திலக சங்கமம்
அன்னை இல்லம்
http://madrasmusings.com/Vol%2018%20...es/Houses0.jpg
ஆம், அன்னை இல்லம் என்றால் நம் நினைவுக்கு நடிகர் திலகம் வாழுகின்ற இந்த இடம் தான் நம் நினைவில் உடனே தோன்றுகிறது. அந்த அளவிற்கு நம்முள் கலந்து விட்ட அந்த இல்லத்தின் மேன்மை அவருடைய அந்தப் படத்திற்கும் கிட்டியது சிறப்பன்றோ..
http://i1146.photobucket.com/albums/...psa4c925c8.jpg
நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் அன்னை இல்லம் திரைப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அதே போல் ரசிகர்கள் நெஞ்சிலும் இதற்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் தேவிகா தான் சிறந்தவர் என்றும் அதுவரை பத்மினியை சிறந்த ஜோடியாக எண்ணியவர்களும் பந்த பாசம் பாவ மன்னிப்பு படங்களுக்குப் பிறகு தேவிகா வசம் சரணடைந்தவர்களும் ஏராளம் (அடியேன் உட்பட).
இயக்குநர் பி.மாதவன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் அன்னை இல்லம்.
அப்போதையை கால கட்டத்தில் சென்னையிலேயே உயரமான கட்டிடமான 14 மாடி ஆயுள் காப்பீட்டுத்திட்ட அலுவலக்க் கட்டிடத்தின் உச்சியில் உள்ள தளத்தில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடல் காட்சியின் ஒரு பகுதி படமாக்கப் பட்டது. இது அபூர்வமானதாகும்.
சென்னை காஸினோ திரையரங்கில் 100- நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது அன்னை இல்லம்.
இது போன்ற பல சிறப்புகளைக் கொண்ட இத்திரைக்காவியத்தின் கதைச் சுருக்கம்,
(பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு)
Quote:
வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
அந்தோ ?
ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
- அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்
ராஜாமணி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி பாசமலர், குங்கும்ம் படங்களை இணைந்து தயாரித்த, மோகன் ஆர்ட்ஸ் மோகன் மற்றும் எம்.ஆர்.சந்தானம் இருவரும் தனித்தனியே பட நிறுவனங்களைத் தொடங்கினர். அதில் எம்.ஆர்.சந்தானம் தொடங்கிய நிறுவனமே கமலா பிக்சர்ஸ். இந்த கமலா பிக்சர்ஸ் முதல் தயாரிப்பே அன்னை இல்லம். முலக்கதையை தாதா மிராஸி எழுதியிருக்க, திரைக்கதையை ஜி.பாலசுப்ரமணியம் அமைக்க, வசனம் ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். தனி ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் படங்களில் பி.என்.சுந்தரம் பணிபுரிநத முதல் படம். அன்னை இல்லம் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றிய முழுவிவரங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1135586
கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன என்றால் கூடவே திரை இசைத் திலகத்தின் சிறப்பான இசையும் அதற்கு முக்கிய பங்காற்றியது. நடையா இது நடையா பாடல் எந்த அளவிற்கு மிகப் பிரபலமானதோ, அந்த அளவிற்கு விமர்சனத்தையும் சந்தித்தது. குறிப்பாக அந்தக் கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்ய இப்பாடலைப் பாடி, பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது பலருக்கு நினைவிருக்கும்.
ஆனாலும் இரண்டு பாடல்கள் மிகப் பெரும் அளவில் இன்றளவும் புகழ் பெற்று அன்றாடம் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்பப் பட்டுத் தான் வருகிறது. அதில் ஒன்று மடிமீது தலைவைத்து என்ற பாடல்.
இன்னொரு பாடலே இன்றைய விரிவுரைக்கு காரணி. இந்த அளவிற்கு இப்பதிவிற்கு முன்னுரை தரவேண்டியதன் காரணம் பலருக்கு தேவைப்படலாம். இருக்கிறது. எடுத்துக் கொண்ட பாடலின் சிறப்பு அப்படி.
எண்ணிரண்டு பதினாறு வயது
சினிமா ... திரையரங்குகளில் புரொஜக்ட்ரில் 27 ஃப்ரேம்ஸ் ஒரு விநாடிக்கு என அசையும் அளவிலானது. அதே சினிமா, இன்றைய நவீன யுகத்தில், இணைய தளங்களில் மற்றும் நெடுந்தகடு சாதனங்களில் 29.97 அல்லது 30 ஃப்ரேம்ஸ் என்ற வேகத்தில் அசைகிறது. இந்த இரு வேறுபாடுகளுக்கும் காரணம் அவை வீசும் ஒளியின் வேகம், அதனுடன் பயணிக்கும் ஒலியின் வேகம் இவற்றின் அடிப்படையில் இவை வகுக்கப்படுவதேயாகும்.
இந்த அளவினை இங்கு குறிப்பிடக் காரணம், இக்காணொளியின் இப்பாடலின் நீளம் 4.05 நிமிடங்கள். அதில் நடிகர் திலகத்தின் காட்சி இடம் பெறுவது 0.30 முதல் 4.00 வரை. அதாவது 3.30 நிமிடங்கள், அதாவது 210 விநாடிகள். இந்த 210 விநாடிகளில் சராசரி 30 ஃப்ரேம்ஸ் என வைத்துக் கொண்டால், 6300 ஃப்ரேம்ஸ் வருகிறது.
இந்த 6300 ஃப்ரேம்களில் நடிகர் திலகம் தோன்றும ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு காவியம் படைக்கலாம் என்கின்ற அளவிற்கு அவருடைய உடல் மொழி, நடை, உடை அனைத்தும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைலைக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன்.
அதற்கு முன் ஒரு சிறிய Flashback. கடந்த பிப்ரவரி மாதம் நம் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அன்புக்கரங்கள் திரையிட்ட போது ஒரு இளம் ரசிகை, இப்பாடலைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார். குறிப்பாக நடிகர் திலகத்தின் வாயசைப்பிலேயே மொழியின் உச்சரிப்பு வேறுபாட்டைக் கண்டதாக மிகவும் ரசித்துக் கூறினார். இதைப்பற்றிய பதிவுகள் இங்கே மீண்டும் நம் பார்வைக்குத் தர விரும்புகிறேன்.
முரளி சாரின் பதிவு
Quote:
இன்று மாலை நமது NT FAnS சார்பில் திரையிடப்பட்ட அன்புக் கரங்கள் திரைப்படம் நல்ல ஒரு மாலையை பரிசாக தந்தது. ஆழமான உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை நடிகர் திலகத்தின் நடிப்பை ஒரே அலைவரிசை ரசிகர்களோடு சேர்ந்து பார்ப்பது ஒரு சுவையான அனுபவம் என்றால் அந்த சுவைக்கு சுவையூட்டுவது போல் அமைந்தது ஒரு இளம் பெண்ணின் பேச்சு.
நமது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இருபதுகளின் முதல் பகுதியில் இருக்கும் அந்த இளம் பெண் சபையில் ஒரு சில வார்த்தைகள் பேசலாமா என்று அனுமதி கேட்க பேசுங்கள் என்று சொன்னோம்.
சபையோருக்கு தன் வணக்கத்தை சொல்லிவிட்டு ஆரம்பித்த அந்த இளம் பெண் தன் தமிழில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி கூறிவிட்டு பேச்சை தொடங்கினார். காரணம் அந்தப் பெண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பம்பாய் மாநகரத்தில். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கின்றனர். அது மட்டுமல்ல வீட்டில் பேசுவது முழுக்க தமிழில் மட்டும்தான் என்பதோடு நின்று விடாமல் தமிழ படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்க வைத்திருக்கின்றனர். பழைய தமிழ் படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை காண்பித்திருக்கின்றனர். தமிழை அதன் உச்சரிப்பு சுத்தியோடு கற்றுக் கொண்டது நடிகர் திலகதிடமிருந்துதான் என்று பெருமையாக குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.
வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் குடும்பம் என்பதால் திவ்யப்பிரபந்தங்கள், பாசுரங்கள் திருவாய்மொழி முதலியவற்றை கற்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த நேரத்தில்தான் திருமால் பெருமை பார்க்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது. ஆண்டாளைப் பற்றியும் பெரியாழ்வார் பற்றியும் படித்துக் கொண்டிருந்த தனக்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் உருவகப்பட்டது நடிகர் திலகத்தின் மூலமாகத்தான் என்று அந்தப் பெண் சொன்னபோது அரங்கம் கைதட்டி வரவேற்றது. அதே போன்று திருவிளையாடல் ஈசனையும் அந்தப் பெண் நினைவு கூர்ந்தார்.
இறுதியாக அந்தப் பெண் குறிப்பிட்ட விஷயம் அவர் எந்தளவிற்கு கிரகிப்பு தன்மை வாய்ந்தவர் என்பதையும் எத்துனை நுணுக்கமாக காட்சிகளை உற்று நோக்குபவர் என்பதை புலப்படுத்தியது. பொதுவாக தமிழில் ர மற்றும் ற ஆகிய இரண்டு எழுத்துக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பமே இருந்ததாகவும் அது அன்னை இல்லம் படத்தில் வரும் எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காட்சியை பார்த்ததும்தான் தெளிவு கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண் அந்த வரிகளை சொல்லிக் காட்டினார்.
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்
என்ற வரியில் சுற்றி என்ற வார்த்தையில் வரும் ற வையும் சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் ர வையும் எப்படி உச்சரிக்க வேண்டும் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எதை இலகுவாக உச்சரிக்க வேண்டும் என்பதை தன் வாயசைப்பினாலேயே சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம் என்றபோது அனைவரும் சிலிர்த்து விட்டனர். வாய்பிற்கு நன்றி கூறி விடைபெற்றார் அந்தப் பெண்.
அவரின் மனதிலிருந்து நேரடியாக வந்த அந்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த நான் அவரின் பார்வையை சிலாகிக்கும் விதமாக ஒன்றை சுட்டிக் காட்டினேன். அவர் குறிப்பிட்ட அந்த அன்னை இல்லம் பாடல்காட்சியில் அந்த குறிப்பிட்ட வரிகளில் கடற்கரையில் பாறை மீது ஏறி நிற்கும் நடிகர் திலகம் தனக்கே உரித்தான அந்த கையை சற்றே மேலே தூக்கி நீட்டியவாறே பாடுவார். அந்த வசீகரத்தில் அனைவரும் தன்னை மறந்து அவரின் உடல்மொழியைதான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி அவரின் வாயசைப்பை கவனித்த அந்தப் பெண்ணிற்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.
எந்த தலைமுறையையும் ஏன் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரே நடிகன் என்றென்றும் நமது நடிகர் திலகம் மட்டும்தானே!
அன்புடன்
மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...=1#post1207943
அடியேனின் பதிவிலிருந்து..
Quote:
8.2.2015 மாலை மறக்க முடியாத மாலை. தலைமுறைகளைத் தாண்டி நூற்றாண்டுகளைத் தாண்டி, பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல இலக்கண நூல்கள் செய்வதை தன் ஒரே ஒரு வாயசைப்பில் செய்து சரித்திரம் படைத்துள்ளார் நடிகர் திலகம்.
மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். இன்று மாலை அன்புக்கரங்கள் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டபோது வந்திருந்த உறுப்பினர்களில் ஒருவர் இளைய தலைமுறையைச் சார்ந்தவர். அந்தப் பெண்மணி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அவர் அதை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்த போது அது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகி விட்டது.
தமிழின் சிறப்பான வல்லினம், மெல்லினம் இடையினம் இவை மூன்றையும் பாடங்களில் உச்சரித்து வகுப்பறையில் கேட்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் உச்சரிப்பில் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவருடைய உதட்டசைவில் அந்த வேறுபாட்டை அவர் உணர்த்தியிருக்கிறார் என்பதையும் அதை இன்றைய தலைமுறை இளம்பெண் ஒருவர் கவனித்து ரசித்து அதைக் கூறிய போது ஆஹா.. நாம் எவ்வளவு பெரிய மேதையுடன் வாழ்ந்திருக்கிறோம் என மிகப் பெரிய கர்வம் ஏற்பட்டது. வாழ்ந்த வாழ்க்கையின் பயன் பூர்த்தியாகி விட்டது எனத் தோன்றியது.
எண்ணிரண்டு பதினாறு வயது .. இந்தப் பாடலில் ஒரு சரணத்தில் சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் என்ற வரிகளின் போது அவருடைய ஸ்டைலையே பார்த்து ரசித்து மெய் மறந்து கை தட்டியிருக்கிறோம்.
மடையா அதற்கும் மேலே அந்தப் பாட்டில் விஷயம் இருக்கிறது எனப் பொட்டில் அடித்தாற்போல அந்த இளம் பெண் கூறியது இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது.
சுற்றி என்ற வார்த்தையில் வரும் வல்லின ற விற்கு அதற்கேற்பவும், சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் இடையின ர விற்கு அதற்கேற்பவும் நடிகர் திலகம் தன் உதட்டசைவை வெளிப்படுத்தியிருக்கிறார் என அந்தப் பெண் எடுத்துரைத்த போது..
ஓ... எனக் கத்த வேண்டும் போலிருந்தது.. தலைவா என்று உரக்கக் கூறி இறைவனுக்கு நன்றியை மிகவும் பலத்த குரலில் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது..
நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி
அந்த இளம்பெண்ணிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அந்த வேறுபாட்டை நீங்கள் இப்போது கவனியுங்கள்.
இப்பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...=1#post1207958
மேற்காணும் நிகழ்வின் போதே இப்பாடலைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இந்த அடிப்படையிலேயே இப்பதிவின் நீளம் அமைந்து விட்டது.
https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo
இக்காட்சியின் துவக்கத்தில் கவனித்தால் தெரியும். முத்துராமன் கையில் ஒரு பூ இருக்கும். காதலியுடன் உரையாடும் அவரை கலாய்த்தவாறே வருகிறார் நடிகர் திலகம். நாணத்துடன் அவள் ஓடி விட, பதிலுக்கு முத்துராமன் நடிகர் திலகத்தை சீண்டுகிறார். உங்கள் காதல் விவகாரம் எப்படி. என்று. அதுவரை முத்துராமன் கையிலிருந்த பூவை நடிகர் திலகம் வாங்குகிறார். அங்கேயே ஆரம்பிக்கிறது அவரின் ஆளுமையும் ஸ்டைலும். வைப்ரஃபோன் போன்று ஒரு வாத்தியம் இரண்டு மூன்று முறை ஒலிக்க, ஒவ்வொரு முறைக்கும் பூவை உதிர்க்கிறார் நம்மவர். எண்ணிரண்டு பதினாறு வயது என்றவாறே எழுந்து நிற்கிறார். அந்த எழுந்திருக்கும் ஸ்டைலே அசத்த ஆரம்பித்து விடுகிறது. இப்போது, அக்கார்டின் ஆரம்பிக்கிறது. இந்த அக்கார்டின் ஒலிக்கும் போது என்ன ஸ்டைலாக கம்பீரமாக பூவை முகர்ந்தவாறே நடக்கிறார். இப்போது முத்துராமன் எழுந்து பின் தொடர்கிறார். மிகச் சிறப்பான ஒத்துழைப்பை இப்பாடலில் அவர் அளித்திருப்பார்.
முத்துராமன் உரிமையோடு தோளில் கை போடும் போது திரும்பி அவளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். இப்போது தாளம் துவங்குகிறது. இரு கண்களினாலும் பக்கவாட்டில் முத்துராமனைப் பார்த்தவாறே திரும்புகிறார். ஆஹா அந்த திரும்பும் ஸ்டைலை என்ன சொல்ல...உடனே இரு விரல்களைக் காட்டி அவள் கண்ணிரண்டை குறிப்பிடுகிறார். அடுத்த்து ஆஹா... மொத்த திரையரங்கிலும் ரசிகர்கள் இருக்கையிலிருந்து எழுந்து அரங்கத்தின் உத்தரத்தை தலையால் முட்டி விட்டு கீழிறங்கும் அளவிற்கு துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு கண்ணடிப்பு... அதில் ஒரு புன்சிரிப்பு...
இப்போது இரு கைவிரல்களும் பாடலின் தாளத்திற்கேற்ப சொடுக்குப் போட்டவாறே அட்டகாசமான ஒரு நடை... இதை முத்துராமனும் ரசிக்கிறார்.
இப்போது ஈஸ்வரியின் ஹம்மிங்.. ஃப்ரேமின் இடப்புறம் நாயகன் வலப்புறம் நாயகி எனப்பிரிக்கிறார்கள் இயக்குநரும் படத்தொகுப்பாளரும். நல்ல கான்செப்ட். நாயகி நேர்நிலையில் காமிராவைப் பார்த்தவாறு வர அவளை நடிகர் திலகம் பக்கவாட்டில் பார்க்கும் வகையில் காட்சியை உருவாக்கிய விதம் லாஜிக்க்காவும் சிறப்பாக உள்ளது. பார்ப்பதற்கும் ரம்மியமாக உள்ளது. இந்த இடத்தில் ஃப்ரேமில் தனக்கு எதிரே நாயகி உள்ளதாக கற்பனை செய்து நாயகன் பாடுவதாக எடுத்துள்ளார்கள்.
நாயகி இறங்கி வர வர நாயகனான நடிகர் திலகம் ரசித்துக் கொண்டே இருக்கிறார். அவள் அழகாக புடவைத் தலைப்பை இங்குமங்குமாக அசைக்க, உடனே ஒரு ப்ளையிங் கிஸ்... இதையெல்லாம் எங்கள் தலைவர் அப்பவே பண்ணிட்டாராக்கும் .
காதலின் ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக த்த்ரூபமாக வடித்துள்ளனர் இயக்குநரும் நடிகர் திலகமும். தன்னிலை மறந்த நிலையில் முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள் என்கிற சரணத்தைத் தொடங்கும் போது அவள் நினைவாகவே தரையை வெறித்துப் பார்ப்பதும், பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராக அவளை உருவகப் படுத்திப் பார்ப்பதுமாக ... எழுத்தை எந்த அளவிற்கு ஜீவனுடன் வடித்திருக்கிறார் நடிகர் திலகம்... இப்போது இரண்டாம் முறை அந்த டையினை இங்கும் அங்கும் ஆட்டும் நேர்த்தி ... என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல் முத்துராமனைப் பார்த்து தலையாட்டிய வாறே முக்கனியும் சர்க்க்ரையும் என்ற வரியை முதன் முறை பாடுகிறார்.
இப்போது மீண்டும் அந்த வரி. முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி.. அவள் நினைப்பில் லயித்தவாறே தன் டையை முறுக்கிக் கொள்வதும், ஆனந்த்ப் புன்னகை புரிவதும் அப்போது அதற்குள் பல்லைக் கடித்தவாறே சிரிப்பதும்...
இப்போது பாருங்கள்.. கடற்கரை நீர்ப்பரப்பில் ரசித்துப் பாடியவாறே தலையை ஆட்டிக் கொண்டு நடப்பதை.. ஆஹா.. பிறவிப்பயன் அடைந்து விட்டோம் என ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கே அல்லவா செல்கிறார்கள். அதுவும் சும்மாவா, இடது கை சுட்டு விரலால் லேசாக மேலே சுட்டிக்காட்டி விட்டு மடக்கிக் கொள்ளும் ஒய்யாரம்.. உதட்டிலோ சொக்கவைக்கும் புன்னகை..
அந்த நிலையிலேயே அவர் மீண்டும் அவள் நினைவில் ஆழ்ந்து விட, படத்தொகுப்பாளரின் கைங்கரியத்தில் அந்த ஃப்ரேமிலேயே மேலெழும்புகிறாள் நாயகி.
இப்போது இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்து விட்டு நிற்கிறாள். அவள் காலந்தாளாம். இதை அவர் சொல்லிக் காட்டுகிறார். காலளந்த நிலையினில் என் காதலையும் அளந்தாள்.. இந்த வரிகளின் போது அவர் முகத்தைப் பக்கவாட்டில் காட்டுகிறார்கள். அப்போதும் நாயகனின் நினைவு காதலியிடம் தான் என்பதை சித்தரிக்கும் வகையில் பார்வையில் எங்கோ இருப்பது போல பார்வை.
இப்போது அடுத்த வரி, காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ... இந்த வரிகளின் போது தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கும் அழகு..
இப்போது வருகிறது பாருங்கள்.. உலகத்திலேயே சிறந்த நடையழகனின் உன்னத நடையழகு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் மன்மத நடையழகு.. காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் என்ற வரிகளுக்கு அவர் காட்டும் அந்த ஸ்டைல்.. இன்னும் எத்தனை காலம் தவம் புரிந்தாலும் இப்படி ஓர் அழகு சுந்தரனை நம்மால் காண முடியாது என்று நம்மை அறுதியாகக் கூற வைக்கும்.
அதற்குப் பிறகு.. ஆஹா.. அற்புதம்... அந்த படகின் கொம்பைப் பிடித்துக் கொண்டே தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக மிக இயற்கையாக அசைத்து காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் என்ற வரியைப்பாடும் அருமையை...
இது தானய்யா இயற்கை நடிப்பு...
ஆஹா ... ஆஹா.. இப்போது அந்த மணல் முகட்டிலிருந்து பார்வையாளரை நோக்கி நடக்கும் வகையில் காட்சியமைப்பு. இப்போது அவருடைய நடையைப் பாருங்கள்..
இந்த மூன்றாவது சரணம் தான் உச்சம்.. இப்போது ஃப்ரேமின் இடது புறத்தில் நடிகர் திலகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் வலது புறத்தில் நாயகியான தேவிகாவின் நளினமான அசைவுகளும் அவருடைய மனக்கண் முன் நிழலாட, அவள் அதில் விடைபெறுவது போன்ற பாவனை காட்ட அவளுடைய அந்த அழகிய தோற்றம் தந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து அதனை சித்தரிக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு.. அப்போது அங்கு புன்சிரிப்பு...
இப்போது தான் அந்த சரணம்.. மேலே குறிப்பிட்ட அந்த இளம் ரசிகையின் மனம் கவர்ந்த சரணம். முதன் முறை அந்த வரிகளைப் பாடும் போது சற்று லாங் ஷாட்டில் தலைவரின் அட்டகாசமான போஸ். இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்தவாறே பாடுகிறார். சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்.. இதை இரண்டாம் முறை சொல்லும் போது காமிரா அவருடைய முகத்தை க்ளோஸப்பில் கொண்டு வர, இங்கே தான் நடிப்பிலக்கணம் இன்னோர் எடுத்துக்காட்டை இயம்புகிறது. சுற்றி எனும் போது வல்லின ற விற்கான உதட்டசைவையும், சுவர் என்கின்ற போது இடையின ர விற்கான உதட்டசைவையும் வெளிப்படுத்தி தமிழிலக்கண வகுப்பே எடுத்திருப்பார் தலைவர்.
இப்போது சரணத்தின் முடிவில் வரும் வரியான துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம் என்கிற வரி இரண்டாம் முறை வரும் போது..
ஆஹா.. மீண்டும் தியேட்டர் அதிருதே.. கொட்டாய் பிச்சிக்கிட்டில்லே விழுது.. யாரங்கே இனிமே சிவாஜி படம் போடறதாயிருந்தா மொதல்லே ஸீலிங்ஸை ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. இவங்க குதிக்கிறதில்லாம நாமளும் குதிக்கிறோம்.. சீலிங்கே ஆடுதே... என தியேட்டர் உரிமையாளர் கூறுவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாகி விடுகிறதே.. இருவருமே நடந்தோம் என்கிற போது இரு கைகளையும் விரித்து தோளை சிலுப்புகிறாரே..
சும்மாவா முடிக்கிறார் பாட்டை.. நம்மையெல்லாம் கட்டிப்போட்டு விடுகிறாரே.. எங்கோ பார்த்தவாறே தன் இடது கை சுட்டு விரலால் சுட்டிக்காட்டியவாறே உதட்டில் புன்னகையுடன் ஒரு மாதிரி தலையைக் குனிந்து அவர் பார்க்கும் போது..
ஆஹா.. கடவுளே.. நீ உலகத்தில் எத்தனையோ சோதனைகளை மக்களுக்குத் தருகிறாய். எத்தனையோ தொல்லைகள் தருகிறாய்.. சொல்லொணா துயரங்களக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதறகாக எல்லாருமே உன்னை சபிக்கிறார்கள். அதில் நாங்களும் விதி விலக்கல்ல..
ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...