http://i61.tinypic.com/xqc2m0.jpg
Printable View
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
வரலாற்றிலே இடம் பிடித்த புரட்சித் தலைவரின், சாதனைத் திரைப்படமாக 1965ம் ஆண்டிலே வெளிவந்த "ஆயிரத்தில் ஒருவன்" நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் திரையில் வெளியிடப்பட்டு, 175 நாட்களைக் கடந்து மீண்டும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த 175 நாள் வெள்ளி விழா நிகழ்வின் தொகுப்பு, நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்து மகிழ்ந்தேன் என்று சொல்வதைவிட, அங்கே உரையாற்றிய நகைச்சுவை நடிகர் விவேக் புரட்சித் தலைவரைப்பற்றிச் சொன்ன சில புதிய தகவல்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது மட்டுமல்ல, கண் கலங்கவும் வைத்தது என்றால் அது மிகையாகாது.
விவேக் அவர்கள் நல்ல நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல (மிமிக்ரி) பலகுரல் மன்னன் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களிலே அநேகமாக அவர் எல்லா முன்னணி நடிகர்களைப் போலவும் மிமிக்ரி செய்து நம்மை சிரிக்க வைப்பார். ஆனால் இதுவரையிலும் அவர் புரட்சித் தலைவரைப் போல ஒரு படத்திலாவது மிமிக்ரி செய்யவில்லையே என நானும் சிந்தித்ததுண்டு.
அதற்குக் காரணம் நேற்றைய அவரின் உணர்ச்சிக் கொந்தளிப்பான புரட்சித் தலைவர் பற்றிய உரையைக் கேட்டபோதுதான் புரிந்தது. அவரின் உள்ளத்தை ஆக்கிரமித்து வாழும் புரட்சித் தலைவரை அவர் எப்படி கிண்டல் செய்ய முடியும்? விவேக் அவர்களின் உரை அவரது உள்ளத்தின் அடித்தளத்திலே இருந்து எழுந்த உணர்வுகளின் உச்ச கட்டமாகவே இருந்தது. உங்களுக்கு என் வணக்கம் விவேக் அவர்களே!!!
பின்பும் உரையாற்றிய புரட்சித்தலைவரின் ஒப்பனைக் கலைஞராக இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் இன்றைய முன்னணி இயக்குநர் பி. வாசு அவர்கள் மக்கள் திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்த விதம், சத்யராஜ் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்பியல்புகளைக் கூறிய விதம், சரத்குமார் அவர்களும் இதையே சொன்ன விதம், வசனகர்த்தா சண்முகம், மெல்லிசை மன்னர், பி. சுசீலா அம்மா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள், கவியரசுவின் புதல்வர் காந்தி கண்ணதாசன் மற்றும் பலர் ஆற்றிய உரைகளெல்லாமே புரட்சித் தலைவரின் சிறப்பியல்புகளுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தன.
சுமார் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியாமல் ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஆமாம், எப்போதுமே சாதனைகளுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்லாமல், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வாழ்க்கை நெறியை தன் படங்களாலும், பாடல்களாலும், வாழ்க்கையாலும் அறிவுறுத்திய புரட்சித் தலைவரின் புகழ், நேற்றைய நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் கூறியது போல தலைமுறைகள் எல்லாவற்றையும் கடந்து நிற்கத்தான் போகிறது. விவேக் அவர்கள் கூறியது போல, அந்தப் புகழும், சாதனையும் "ஒரு எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான், வேறு எந்த நடிகருக்கோ, கலைஞருக்கோ கிடைக்கப் போவதில்லை".
நிகழ்வில் பங்கு கொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும், அற்புதமான இந்த நிகழ்வை ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த நன்றியும், வணக்கமும்
courtesy net
மக்கள் திலகத்தின் நம்பிக்கையான விசுவாசமானவர் திரு ஆர் .எம் .வீரப்பன் அவர்களின் பிறந்த நாள் இன்று .
1956ல் துவங்கிய நாடோடி மன்னன் படம் தயாரிப்பு முதல் 1977 வரை மக்கள் திலகத்தின் மேலாளராக பணி புரிந்து
எம்ஜிஆரின் வெற்றிகளுக்கு பக்க பலமாக விளங்கியவர் .
1963ல் சத்யா மூவிஸ் என்ற நிறுவனத்தை துவக்கி 6 வெற்றி படங்களை தயாரித்தவர் ..
தெய்வத்தாய் - 1964
நான் ஆணையிட்டால் - 1966
காவல்காரன் - 1967
கண்ணன் என் காதலன் - 1968
ரிக்ஷாக்காரன் - 1971
இதயக்கனி - 1975
அரசியல் உலகில் அவருடைய பங்கும் மகத்தானது . மக்கள் திலகம் அவர்களின் அரசியல் - திரை உலகம் இரண்டிலும் பல வெற்றிகளுக்கு திரு ஆர்.எம் .வீ அவர்கள் படை தளபதியாக விளங்கினார் . அவர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம்
.
திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் புரட்சி தலைவரின் பக்தர் ,
பொன்மனச்செம்மல் ,எம் .ஜி. ஆர்.நற்பணி சங்க ஆலோசகருமான திரு. நீலகண்டன் அவர்களின் மகளுக்கும் ,
திரு.ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் நிர்வாகி )அவர்களின் சித்தப்பா மகனுக்கும் நாளை (10/09/14)சென்னை கொருக்குபேட்டையில் நடைபெற உள்ளது. இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெருந்திரளான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
திருமண அழைப்பிதழின் தோற்றம், மற்றும் சுவரொட்டி
ஆகியன நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/8vrxnc.jpg
இந்த வார தமிழக அரசியல் இதழில் பிரசுரம் ஆன செய்தி.
http://i60.tinypic.com/2cgj3as.jpg