இன்றைய ஸ்பெஷல் (81)
இன்றைய ஸ்பெஷலை 'சொல்லத்தான் நினைக்கிறேன்'. ஓ! சொல்லி விட்டேனா?
http://i.ytimg.com/vi/za5l0dexNgA/0.jpg
வயதான பூர்ணம் விஸ்வநாதன், அவர் இளம் மனைவி ஜெயசுதா திருமண வைபவத்தில் 'பிளே பாய்' கமல் கல்யாணத்தைக் கிண்டல் செய்து ஆடிப்பாட, அதற்கு கோண வாய் ஜெயச்த்ரா (ஜெயச்த்ரா ரசிகர்கள் மன்னிக்க) கல்யாணம் பற்றிப் புகழ்ந்து பாடி அவனுக்கு பதிலடி கொடுக்க, நமக்குக் கிடைத்தது அற்புதமான 'மெல்லிசை மன்னரி'ன் அருமையான பாடல் மற்றும் கமலின் உற்சாகமான ஆடல்.
உடம்பை வில்லாக வளைத்து ஆடும் கமல், அலட்சிய நடிப்பில் அசத்தும் ஜெயசித்ரா, கமலை 'ஜொள்' விட்டுப் பார்க்கும் பூர்ணம் மனைவி ஜெயசுதா என்று எல்லாமே அசத்தல்.
அதைவிட அசத்தல் பாலாவின் இளமை துள்ளும் குறும்பு கொப்பளிக்கும் குதூகலக் குரல்.
அதைவிடவும் அசத்தல் படு லட்சியமாக ஆங்கில வார்த்தைகளுடன் கலந்து இந்தப் பாடலைப் பாடும் என் ராட்சஸி.
அருமையான இசைப் பின்னணி. அட்டகாசமான காட்சியமைப்பு கதையை ஒட்டி. பாடல் மகா இனிமை.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படப் பாடல். பாலச்சந்தரின் அருமையான இயக்கத்தில்.
https://i.ytimg.com/vi/Bd3j1yeOOYc/mqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
oh, marriage marriage marriage
take it easy
why equal as so crazy
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
ஆஹ் வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
take it easy
you teenage teenage teenage
don't be silly
sing about it nicely
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
ஹ... வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy
take it easy
கோவில் காளை போலே திரிந்தால்
கல்யாணம் புரியாது
அது காவல் தாண்டி மேயும்
அங்கே கால்கட்டு கிடையாது
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy
நாள்தோறும் நாம் காணும்
கல்யாணம் என்பது இந்நாளில்
தெருவோரம் தீர்மானம் செய்வது
நாள்தோறும் நாம் காணும்
கல்யாணம் என்பது இந்நாளில்
தெருவோரம் தீர்மானம் செய்வது
now a days you know
marriages are made in street corner ஹ ஹா
foolish! you don't know
marriages are made in heaven.. nnu :)
தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே சொர்க்கம் தனிலே நிச்சயம் ஆகிறது
தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே சொர்க்கம் தனிலே நிச்சயம் ஆகிறது
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
don't be crazy
ஹே.. ஹேஹேஹே...
யா... யாயாயாயா...
அம்மாடி கல்யாணம்
ஆண்களுக்கோர் சிறைச்சாலை
பெண்டாட்டி பிள்ளைகள்
உண்டாக்கும் தொழிற்சாலை
marriage! don't dare
மாலைகள் சூடும் மணவறைக்
கோலம் மங்கையின் லட்சியமே
அதைக் கேலிகள் செய்யும் வாலிபர்
பேச்சு எங்களுக்கலட்சியமே
we don'r care
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு ஹா ஹா
அதில் வேறென்ன இருக்கு ஹா ஹா
take it easy
don't be crazy
ஹா
take it easy
don't be crazy
http://www.youtube.com/watch?v=KX7g6...yer_detailpage

