உண்மை தான் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களே !
இப்படிப்பட்ட ஒருவர் ( நம் மக்கள் திலகத்த்தின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான அற்புதமான மனிதர்) நமக்கு வாய்க்கவில்லையே என்று கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை ஏங்க வைத்த அருமை பெரியவர் திரு. ஆர். எம். வி. அவர்கள் மேலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, பொன்மனசெம்மலின் நூற்ற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்டு அவரின் பெருமைகளை இப்பூவுலகிற்கு பறை சாற்றிட வேண்டும் என்று, புரட்சிததலைவரின் இலட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பில் விரும்பி வாழ்த்துகிறேன்.
காலத்தின் கட்டாயத்தால், செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான கழகத்துக்கு சென்று, உரிய அங்கீகாரம் கிடைக்காமையால், (முதலில் இணை பொது செயலாளர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டு) பின்னர் மனம் வெதும்பி, வேறு வழியில்லாமல் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் தஞ்சமடைந்தார். அருமை பெரியவர் ஆர். எம். வி. உட்பட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட களப்பணியாளர்கள் திருவாளர்கள் முத்துசாமி, கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், எச். வி. ஹண்டே, க. லியாகத் அலி கான் போன்ற பலருக்கும் இவ்வாறு அங்கீகாரம் மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டமே !
என் போன்ற அக்காலத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்குத்தான் தெரியும், அருமைப் பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் ஆற்றல். உலகிலேயே, அந்த காலத்திலேயே அதிக அளவுக்கு, ரசிகர் மன்றங்கள் (சுமார் 20,000க்கும் மேல்) கொண்டவர் நம் கலைச்சுடர், பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. அவ்வளவு மன்றங்களையும் ஒருங்கிணைத்து, நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களையே மலைக்க வைத்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் திரு. ஆர். எம். வி. அவர்கள். திராவிட இயக்கத்தில் பெரும் பங்காற்றி பின் நம் தமிழகத்து தங்கம், ஆண்டிப்பட்டி சிங்கம் எம். ஜி. ஆர். அவர்களிடம் இணைந்தார். அவரது ஆற்றல் அளப்பரியது. சாதனைகளின் சிகரம் நம் மன்னவன் அடைந்த வெற்றிகளுக்கு பின்னணியாய் திகழ்ந்தவர் அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்கள்.
http://i60.tinypic.com/dy82hc.jpg
1984ல். புரட்சித்தலைவர் அமெரிக்காவில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வேளையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழகம் பெற்ற வெற்றிக்கு அடிகோலியது அவரது ராஜ தந்திரமே என்று சொன்னால், அது மிகையாகாது. ஆர். எம். வி. அவர்கள், "என் கண் போன்றவர், எனது நிழல்" என நம் ஒப்பற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களால் பாராட்டப்பட்டவர்.
புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளில், அருமை பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பங்கு மகத்தானது. இதை மறுப்பவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், என்று இந்த உலகம் பழிக்கும்.
மொத்தத்தில், திரு. ஆர். எம். வி. அவர்கள் நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.
அருமைப்பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, செய்திகளை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !
http://i62.tinypic.com/10rvnme.jpg
27-05-2010 அன்று பெரியவர் ஆர். எம். வி. அவர்கள் இல்லத்திருமண விழா, (ஆர். எம். வி. அவர்கள் புதல்வன் - மணமகன் வி. தங்கராஜ் மணமகள் எம். தாரிணி) அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றாலும், விழா மேடை பின்னணியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் பிரம்மாண்டமான பதாகை தோற்றமளிக்கும் காட்சி இதற்கு பெயர் தான், உண்மையான எஜமான விசுவாசம்.