-
ஹாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் அட்டகாசமான ஸ்டைல், நெஞ்சைப் பிழியும் உருக்கமான காட்சிகள், உறவுகளுக்குள் ஏற்படும் உணர்ச்சி மிக்க மோதல் காட்சிகள், கலையுணர்வை வெளிப்படுத்தும் ஓரங்க நாடகக் காட்சிகள், காதலின் மேன்மையை உணர்த்தும் உன்னதமான பாடல் காட்சி, பக்திப்பரவசமூட்டும் பாடல் காட்சி, என அனைத்து விதமான உணர்வுகளுக்கும் பங்களித்திருக்கும் உன்னதத் திரைக்காவியம் அன்னையின் ஆணை. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைத்துப் போற்றப்பட வேண்டிய மிகச் சிறந்த நடிப்பில், நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மற்றுமோர் வைரக்கல்லாக மின்னும் அன்னையின் ஆணை திரைக்காவியத்தில் மக்கள் தலைவரின் எழில் மிகு தோற்றங்கொண்ட கண் கவரும் நிழற்படங்களின் அணிவகுப்பில் திரியின் பக்கங்கள் ஜொலிக்கின்றன.
அபூர்வமான தொகுப்புக்கு உளமார்ந்த நன்றி சிவா.
தங்களுடைய ஆர்வமான கடினமான உழைப்பின் எதிரொலியாகவே இத்தொகுப்பு விளங்குகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
சிவா தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்..தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்கிறேன் ..
http://i60.tinypic.com/2lwt542.jpg[/QUOTE]
-
1 Attachment(s)
அகில இந்திய சிவாஜி மன்றம், திருச்சி மாவட்ட சிவாஜி மன்றம் நடத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 87வது பிறந்த நாள் விழா, திருச்சி தமிழ்ச்சங்க கட்டிடத்தில் 11.10.2015 ஞாயிறு மாலை நடைபெற்றது. கவிஞர் பொன்னடியான், நடிகர் பாண்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நிழற்படங்கள் நம் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...psuxtoxsqb.jpg
-
-
-
-
-
-
-