Originally Posted by
Murali Srinivas
படிக்காத மேதை பதிவுகளைப் பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றி! குறிப்பாக படத்தின் சிறப்பு காட்சிகளை பற்றிய இரண்டாவது பதிவிற்கு அமோக பாராட்டுகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி! அதில் ஒரு சில விஷயங்களை ஒப்பீட்டு முறையில் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த சாரதிக்கும் நன்றி!
சாரதி அந்த பதிவைப் படித்து விட்டு மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டு அதை நீங்கள் எழுதியிருக்கலாமே என்றார். அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போகிறது என்று சொன்னேன்.
அவர் சொன்னது என்னவென்றால் ஒரு சில வினாடி அல்லது நிமிட நேரங்களில் பல வித உணர்வுகளை முகத்தில் காட்டுவதில் நடிகர் திலகம் சமர்த்தர். ஆனால் வெகு சில படங்களில் மட்டுமே ஒரே நேரத்தில் விதவிதமான உணர்வுகளை ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார். அந்த வெகு சிலவற்றில் படிக்காத மேதை படத்தில் ரங்காராவ் மறைவிற்கு பின் வரும் அந்த காட்சியும் ஒன்று. ஒரே நேரத்தில் திகைப்பு, மறுதலிப்பு, அதிர்ச்சி, சோகம், அழுகை ஆகிய அனைத்தும் அந்த நிமிட நேரத்தில் முகத்தில் வந்து போகும். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் இந்தக் காட்சிக்காக காத்திருப்பேன் என்றார் சாரதி.
உண்மைதான்! நடிகர் திலகத்தைத்தான் எப்படி எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்பதற்கு நமது ரசிகர்களுடன் பேசினாலே புரிந்துக் கொள்ளலாம்!
நன்றி சாரதி!
அன்புடன்