வாசு,
நம்புவியோ மாட்டியோ, இன்றோ நாளையோ உன்னுடன் பேசும் போது,விளையாட்டு பிள்ளை,லட்சுமி கல்யாணம் சண்டைகளை குறிப்பிட நினைத்தேன். டெலிபதி. அமர்க்களம்.
Printable View
வாசு,
நம்புவியோ மாட்டியோ, இன்றோ நாளையோ உன்னுடன் பேசும் போது,விளையாட்டு பிள்ளை,லட்சுமி கல்யாணம் சண்டைகளை குறிப்பிட நினைத்தேன். டெலிபதி. அமர்க்களம்.
ஹ்ம்ம்ம்.. கனியிருப்பக் காய் கவர்ந்தற்றுங்கறது தான் நினைவுக்கு வருது..ஹீம் என்.விக்கு எப்படிப் புரியும்..அதெல்லாம் சொல்லாமல் தெரிய வேண்டுமே :)
டியர் கோபால் சார்,
நீங்கள் தோண்டிஎடுத்த "புதையல்" காதல் அருமை. அதை நீங்கள் வர்ணிக்கும் அழகில் கூடுதல் இனிமை பெறுகிறது. அந்தப்படத்தின் வெளிப்புற காட்சிகள் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம், மனோரா, சேதுபாவா சத்திரம் பகுதிகளில் எடுக்கப்பட்டவை. புதையல் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சால்வநாயக்கன் பாலம் இப்போதும் இருக்கிறதாம். ஆனால் படத்தில் இடம்பெறும் பாலம் ஸ்டுடியோ செட்.
உன்னோடு இருந்தவன் யார் என்று பாலையா அதட்ட 'துரை' (சிவாஜி) என்று சொல்ல வாய்திறந்து 'து' மட்டும் சொல்லி சட்டென்று 'துக்காராம்' (சந்திரபாபு) என்று பத்மினி சமாளிக்கும் சீன்தான், பின்னாளில் வந்த 'சு... சுந்தரி' க்கு இன்ஸ்பிரேஷனோ.
தெருக்கூத்து சீனை மட்டும் வெட்டியெறிந்தால் புதையல் அருமையான விறுவிறுப்பான படம். என்றைக்கும் விண்ணோடும் முகிலோடும் நிலைத்து நிற்கும் படம்.....
டியர் வாசுதேவன் சார்,
அதிகம் பேர் பார்த்திராத, மறுவெளியீடுகளைக் காணாத, தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பப் படாத 'விளையாட்டுப்பிள்ளை' திரைப்படத்தின் இரண்டு அற்புதமான சண்டைக்காட்சிகளை அளித்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும். உண்மையில் இவை சண்டைக்காட்சிகள் அல்ல, வீர சாகசக்காட்சிகள். பார்க்கப் பார்க்க எவ்வளவு உணர்ச்சி மேலிடுகிறது. புல்லரிக்க வைக்கும் சாகசங்கள். பல இடங்களில் தலைவர் ரொம்ப, ரொம்பவே ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்.
'விளையாட்டுப்பிள்ளை' திரைப்படம் 1970-ல் எங்க மாமா படத்துக்கும், வியட்நாம் வீடு படத்துக்கும் இடையில் வந்தது. தமிழகத்தில் பரவலாக 12 வாரங்கள் ஓடிய இப்படம் மதுரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல் உண்டு. முரளி சார் மற்றும் பம்மலார் சார் கன்பர்ம் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன்.
விகடனில் வெளியான 'ராவ்பகதூர் சிங்காரம்' தொடர்கதை 50-களில் படமாக வந்திருக்க வேண்டிய ஒன்று. 70-ல் ட்ரெண்ட் மாறிவிட்டது. தில்லானாவின் பெருவெற்றியைப் பார்த்து வாசன், நடிகர்திலகம், ஏ.பி.என். கூட்டணி விளையாட்டுப்பிள்ளை எடுக்க முடிவெடுத்தது. ஓகோ என்று பேசப்படாவிட்டாலும், விளையாட்டுப்பிள்ளை வெற்றிப்படமே.
அரிய வீடியோ பதிவுக்கு மிக்க நன்றி.......
மதுரையில் நிறைய நாட்கள் ஓடிய படம் விளையாட்டுப்பிள்ளை எனப் படித்த நினைவு..ராவ் பகதூர் சிங்காரம்படித்திருக்கிறேன்..சேவற்கொடியோன் - ஆ.வி ஆசிரியர்.. சமீபத்தில் போன வருடம் டிவிடி வாங்கிப்பார்த்த போது ரொம்ப இம்ப்ரஸ் செய்யவில்லை - மொத்தப்படம் எனப்பார்க்கும் போது..ஏதோ ஒன்று மிஸ்ஸிங்..காஞ்சனாவின் குளியல் சொல்லாமல் தெரியவேண்டுமே பாடல் எல்லாம் பாக்ஸ் ஆஃபீஸிற்காகச் சேர்க்கப்பட்டதுபோல செயற்கை..ஈவன் ராஜாராணி ஜோடி இங்கும் ஜோடியாய் இருந்தாலும் ஏ.ஒ.மி.
அந்த சமயம் வந்த வேறொரு படத்தில் வளையல் காட்சி வந்ததால் இந்தப் படத்தில் கதையில் உள்ள வளையல்காரர் காட்சியை மாற்றியிருந்தனர் எனப் படித்த நினைவு..
கே.எஸ்(கார்த்திக் சார்) நன்றி :) தேங்காய் மனோரமா நினைவிலில்லை..ம்ம் அது நாட்டு நடப்பு தானே :)
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய ஐட்டம் நடிகையர் தொடர் - சினேகலதா பற்றிய பதிவு அருமை. பதிவுகளில் தங்களுக்குப் பிடித்தது தியேட்டர்களில் முதல் நாள் அனுபவம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எங்களுக்கும்தான். ஆனாலும், ஒரு முழுநீளத் திரைப்படத்தில், கதை, காதல், நகைச்சுவை என்று பல காட்சிகள் இருந்தாலும், ஐட்டம் பாடல் காட்சிக்கு ஒரு கிக் இருக்கும்தானே? அதுபோல தங்களுடைய ஐட்டம் நடிகையர் தொடரிலும் ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது. தொடருங்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும்.. நன்றி.
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களுடைய வித்தியாசமான நடையில் திருவருட்செல்வர் பதிவு சிறப்பு. நன்றி. பாராட்டுக்கள்.