காத்து கொண்டு இருக்கிறேன் sss சார்
Printable View
Mr Vasu JI
Expecting a jem of a post from you about Acting God.
I am waiting.
Regards
அடக் கடவுளே !
கடைசியில் திருஷ்டி பட்டே விட்டதா ?
ஊரு கண்ணு உறவு கண்ணுன்னு சொல்லி மடக் மடக்னு திருஷ்டி கழிக்கிறேன்.. சஷ்மே பத் தூர்...
ஜெயபாரதி ஒரு நல்ல நடிகை. ஆனால் அந்தக் காலத்து மலையாள முண்டு உடுத்தி வந்ததால் நம்ம ஊர் லேடீஸ் முகம் திருப்பு... ஆண்களோ விருப்பு..
அயலாத்தே சுந்தரின்னு ஒரு படத்தில் பிரேம் நசீர் ஜேசுதாஸ் குரலில் சங்கர் கணேஷ் இசையில் பாடிய "லக்ஷார்ச்சன கண்டு மடங்கும்போளொரு லஜ்ஜையில் முங்கிய முகம் கண்டு" பாட்டைக் கேளுங்க
http://youtu.be/AmaYzCApmac
இதே பாட்டு தமிழில் எஸ்.பி.பி, வாணி ஜெயராம் குரல்களில் "பொன்னோவியம் ஒன்று" என்று பாக்கியராஜ் ராதிகாவை வர்ணிக்கும் "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" படப் பாடல்
http://youtu.be/co-sM74FaPY
இது படு படு அபத்தமான வாதம். நான் 1984 வரை மாணவ பருவத்தில் இருந்தவன். 1976- 1981- பீ.டெக்.1982-1984- எம்.டெக் .முழுக்க முழுக்க ஹாஸ்டல்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள். நானோ எல்லோரிடமும் சரளமாக உரையாடி ரசனை அறிபவன். கிட்டத்தட்ட 90% ஜானகியின் முழு வெறுப்பாளர்கள். இளைய ராஜாவின் அற்புதமான இசையால் , வேறு வழியில்லாமல் பல்லை கடித்து அந்த மிமிக்ரி சகித்தோம்.
பல நண்பர்கள் ராகத்துடன் ஒலி குறிப்பை கொடுப்பது சிறந்தது என்று சொன்னதால் முதல் பத்திற்கு .
பக்கம் 8-178ஆம் பதிவு-சிந்துபைரவி
http://www.ragasurabhi.com/carnatic-...-bhairavi.html
பக்கம்-20- 192 ஆம் பதிவு-சுபபந்துவராளி
http://www.ragasurabhi.com/carnatic-...ntuvarali.html
பக்கம்-27- 270 ஆம் பதிவு -மாயா மாளவ கௌளை
http://www.ragasurabhi.com/carnatic-...avagowlai.html
பக்கம்-28- 276 ஆம் பதிவு -சாருகேசி
http://www.ragasurabhi.com/carnatic-...charukesi.html
பக்கம்-37- 368 ஆம் பதிவு-நடபைரவி
http://www.ragasurabhi.com/carnatic-...abhairavi.html
பக்கம்-44- 439 ஆம் பதிவு- பாகேஸ்வரி
http://www.ragasurabhi.com/carnatic-...-bageshri.html
பக்கம்-57- 570 ஆம் பதிவு- ஆபேரி .
http://www.ragasurabhi.com/carnatic-...a--abheri.html
பக்கம்-59-583 ஆம் பதிவு கல்யாணி
http://www.ragasurabhi.com/carnatic-...--kalyani.html
பக்கம்-68- 675 ஆம் பதிவு- மோகனம்.
http://www.ragasurabhi.com/carnatic-...--mohanam.html
பக்கம்-69- 687 ஆம் பதிவு- பிருந்தாவன சாரங்கா
http://www.ragasurabhi.com/carnatic-...a-saranga.html
Ragendu Kiranangal
https://www.youtube.com/watch?featur...&v=3IGdGI2tv58
சீமாவுக்கு இசையரசி இதோ சில கானங்கள்
https://www.youtube.com/watch?v=XIgDUkNaQLA
https://www.youtube.com/watch?v=wvNVn78CEV8
இன்னும் நல்ல நல்ல பாடல்கள் உண்டு. ஜெ.பியை போலவே சீமாவும் நல்ல நடிகை, நிறைய பெண்மை போற்றும் புரட்சி வேடங்கள் செய்துள்ளார்
இருந்தாலும் அவளுடே ராவுகள் இமேஜ் இவரை விட்டு போகவில்லை பாவம்
என்னுள் கலந்த கானங்கள் 6
ஊறும் இளமை உணர்வுகளைச் சித்திரமாய்
கூறும் பலகவிதை காண்.. என ஆன்றோர்(?!) வாக்கு…
இளமை கொலுவிருக்கும் இயற்கை துணையிருக்கும்
இனிமை மணம் பரப்பும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமிலை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
இளமை எனும் பூங்காற்று பாடுவது ஓர் பாட்டு
ஒரு பொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே..
இதெல்லாம் திரைபாடல்கள்..
இந்த மிஸ்டர் பட்டினத்தார் என்ன சொல்கிறார்..
சீயுங்குருதிச் செழுங்கழு நீர்பாயும்புடவை ஒன்றிலாதபோது
பகலிரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்றவற்றுக்குள்
மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே
.
அது சரி..அதுக்காக
இளமையில அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்கக் கூடாதா என்ன
கணுக்காலும் கண்ணிமையும் கொட்டியே சொல்லும்
அனுபவத்தில் தான்வருமே ஆம்..
எஸ்..எல்லாம் அனுபவம் தான்..எது..இளமைப்பருவம்..கண்ணதாசன் சொல்வதென்ன..அனுபவத்தால் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்..ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நான் எனச் சொன்னான்....
எனில் இந்த இளமைப் பருவம் இருக்கிறதே.. ஒருமுறை தான் வரும் .. பதில் சொல்லக் கூடும் உல்லாசஏம் உற்சாகம் காட்டும் இளமை டாண்ட்டாண்டா டட டாடா…என அந்தக் காலத்தில் வந்தபாட்டைப் போலவே தான்..எல்லாருக்கும் மறக்காது (குறிப்பாய் எனக்கு..இன்னும் இளமைப் பருவத்தில் தான் இருக்கிறேன்!
)
ஆணோ பெண்ணோ எல்லாமே விசித்திரமாய் இருக்கும்..
ஆணென்றால் :எதைப் பற்றியும் கவலைப் படாத வயது..
எழுந்தோமா அம்மா வச்ச டிஃபனை சாப்பிட்டோமா காலேஜ் போனோமா..என்னாச்சு..ஓ அந்தப் பொண்ணப் பார்த்ததும் என்னாகிறது..அதுவும் பட்டாம் பூச்சிக் கண்ணிமைகள் படக் படக் என அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இதயம் தடக் தடக் என்கிறதே..
இதுவே பெண் என்றால்.. அவளுக்கும் அப்படித் தான்..ஆனால் ஆணைப் போல் வெளிக்காட்டிக் கொள்வதில்லை..கொய்ங்க் கொய்ங்க் என்று எதிரணி அவஸ்தைப் படுவதை உள்ளத் தாமரையில் உவகை கொப்பளிக்க ஏதும் தெரியாதது போல் அன்ன நடை பயின்று சென்று கொண்டிருப்பாள்..
காரணம்..கெமிஸ்ட்ரியா பருவம் செய்யும் வேலையா..
அதுவும் கல்லூரிப் படிப்பு முடிந்தால் –ஆணுக்கு வேலை அவசியமாகிறது..இந்தக் காலத்தில் பெண்ணுக்கும் வேலை அவசியமாகிறது..
//டாட்.. யூ ஸீ என்னோட படிப்புக்கேத்த வேலை பாக்கறேனே..அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணி வைக்கற வரைக்கு்ம்..
அடிப்பாவி ஒன்னச் சின்னப் பொண்ணுன்னுல்ல நினச்சுண்டிருக்கேன்..
நோ டாட்.. சி.பொண் லாம் சொல்லாதீங்க.. நான் வளர்கிறேனே டாடி..வேலை பாக்கட்டா..
உன் இஷ்டம் போல செய்டா கண்ணா..//
அந்தக் காலத்தில் அதுவும் வசதி வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருக்கும் இந்த கிராமத்துப் பெண்ணுக்கு..கல்யாணம் பற்றிய கனவு தான்..அதுவும் வெகு அழகாகப் பாடுகிறாள்..அவளுக்கு ஒரே ஒரு உறவு..தந்தையின் தம்பி..வீட்டில் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டவுடன் அவரும் தொடர்ந்து பாடுகிறார்….
கேக்கலாமா..
படம்.. கல்யாண ஊர்வலம்.. பாடியவர் எஸ்.ஜானகி கேஜேஜேசுதாஸ்.. படத்தில் வெகு ஸ்லிம் மணிமாலா.. சித்தப்பாவாக நாகேஷ்.. படம்
பார்த்ததில்லை..ஆனால் பாட்டு வளர இஷ்டம்…லிரிக்ஸ்.. வாலிபக் கவிஞர் வாலி...
நல்ல படமா.என்ன..
*
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும் - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது
மனையில் புகுந்து மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ?
சித்தப்பா...
ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
நல்ல பாடல் தானே..
சீமா பாட்டுக்கு நன்றி ராஜேஷ்..இன்னும்பாக்கலை ..வைரமுத்துவின் இந்தக்கால வரிகளில் ஒன்று..உதட்டின் மேலேபடுத்துக்கலாமா.அந்தக்காலத்தில் அந்த உதட்டழகால் புகழப்பட்டவர் அவர்..எப்படியாகினும் நல்ல நடிப்பு என்பது அவரிடம்..ம்ஹீம் இல்லவே இலலை..மஹாலிங்கபுரத்தில் ஐவிசசியின் வீடு இருக்கிறதுஅதுவே இவரின் வீடும் கூட.. இவர் பெண்கள் அப்படியே அம்மாவை ஜெராக்ஸ் எடுத்தது போல் இருப்பார்கள்..இந்த சந்தர்ப்பத்தில் முக நூல் ஜோக் நினைவுக்கு வருகிறது..
//டார்லிங்.. என்னுடைய செல்ஃபோனை மறந்து எங்கோ விட்டுவிட்டேன்..
டியர்..இட்ஸ் இன் யுவர் ஜீன்ஸ்..
யோவ்..உன் அப்பா அம்மவும் தான் ஞாபக மறதிக் காரர்கள்..என் பரம்பரையைப் பழிக்காதே..
ஓஹ்..மை ஸ்வீட் ஹார்ட் இட்ஸ் இன் யுவர் ஜீன்ஸ் பாண்ட்..மறந்துவிட்டாயா.. :)//
எனில் சீமாவின் குழந்தைகள் அவர் மாதிரி இருப்பதற்குக் காரணம் ஜீன்ஸ் :) வரட்டா நாளை பாக்கலாம் குட் நைட் :)