மக்கள் திலகம் - அடிமைப்பெண் - கொம்பன்
Please watch from 1:47 onwards:
http://www.runtamil.com/komban-movie-online
Printable View
மக்கள் திலகம் - அடிமைப்பெண் - கொம்பன்
Please watch from 1:47 onwards:
http://www.runtamil.com/komban-movie-online
இனிய நண்பர் திரு ரவிகுமார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திருநாமத்தை அனு தினமும் உச்சரிக்கும் பக்தர்களாகிய எங்களுக்கு உங்கள விரிவான பதிவு தேன் அமுது .புதுமையாக சிந்தித்து , எம்ஜிஆருக்கு பெருமை சேர்த்த உங்களை பாராட்ட் வார்த்தைகள் இல்லை நன்றி
இனிய நண்பர் திரு சைதை ராஜ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
http://i59.tinypic.com/1zlgm4o.jpg
இன்று இரவு 7மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"எங்கள் தங்கம் " ஒளிபரப்பாக உள்ளது
சரித்திர படத்தில் நடித்து சரித்திர புகழ் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் . 1947-1978
மன்னனாக , தளபதியாக , சக்ரவர்த்தியாக , நாட்டை காப்பாற்றும் புரட்சி வீரராக , இஸ்லாமிய கதைகளின் நாயகனாக ,காஞ்சி தலைவனாக ,சேர சோழ பாண்டியராக நடித்து வரலாற்றைஉருவாக்கிவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
ராஜகுமாரி
ரத்னகுமார்
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
மரமயோகி
சர்வதிகாரி
குமாரி
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
ராஜராஜன்
புதுமைபித்தன்
மகாதேவி
நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
அரசிளங்குமரி
ராணி சம்யுக்தா
விக்கிரமாதித்தன்
காஞ்சித்தலைவன்
அரசகட்டளை
அடிமைப்பெண்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மேற்கண்ட 25 படங்களும் பல சரித்திர சான்றுகளையும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின்ஆளுமைகளையும் எடுத்து கூறிய காவியங்கள்.விரைவில் இந்த படங்களின் தொகுப்பைதொடருகிறேன் .
அன்புக்குரிய திரு.ரவி சார் அவர்களுக்கு,
மன்னிக்கவும் சார். இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன்.
தாங்கள் நல்ல ரசிகர். நன்கு கற்றறிந்தவர். உங்கள் கண்ணியமிகு வார்த்தைகளைப் பார்க்கும்போது உயர்ந்த பண்பாளர் என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆன்மிகத்திலும் தாங்கள் பக்குவமடைந்தவர் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். மக்கள் திலகத்தைப் பற்றி உங்கள் கருத்தும் விளக்கமும் நிச்சயம் disconnect இல்லை சார். அருமையான connection. மக்கள் திலகத்தின் பெயரை இதுபோன்ற ஆன்மிக கோணத்தில் சிந்தித்து விளக்கம் அளித்த உங்களுக்கு எங்கள் அனைவரின் பாராட்டுகளும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ராம நாமத்தின் பெருமையை ஈஸ்வரன் கூறுகிறார்.
ஈஸ்வர உவாச:
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம - தத்துல்யம் ராமநாம வரானனே
ஸ்ரீராம நாம வரானன ஓம் நம இதி
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிறது இந்த சுலோகம். இதன் பொருள்:
பார்வதியைப் பார்த்து பரமேஸ்வரன் கூறுகிறார்.
‘‘ஸ்ரீ ராம ராம ராம என்று மனதிற்கு இனியவனான ராமனிடத்தில் ரமிக்கின்றேன் (அழகில் மயங்குகிறேன்). அந்த ராம நாமம் சஹஸ்ரநாமத்துக்கு (ஆயிரம் நாமத்துக்கு) அந்த ராம நாமத்துக்கு ஓம் நமஸ்காரம்.
நீங்கள் கூறுவது போல நாம்தான் மதங்களால் பிளவுபட்டு நிற்கிறோம். இஸ்லாமியப் பெயரான ரகுமான்கானுக்கும் ராமாயணத்துக்கும் கூட தொடர்பும் ஒற்றுமையும் உண்டு.
ரகு..... மான்.... கான்....
‘ரகு’வாகிய ராமன் மாரீசன் என்ற மாய‘மான்’ தேடி ‘கான்’ஆகிய கானகம் செல்லாவிட்டால் ராமாயணம் ஏது? இறைவன் ஒன்றே என்பதை உணர்ந்தால் நாம் பிளவுபட மாட்டோம்.
பத்ராசல ராமதாஸர் கூட தனது கீர்த்தனையில் ‘ஓ ராமா நி நாமம், ஏமி ருசீரா...’
ராமா... உன் நாமம் எவ்வளவு ருசியாக உள்ளது என்று அதன் சுவையில் அமிழ்கிறார்.
சீதாதேவியை மீட்கும் முயற்சியாக, இலங்கைக்கு அனுமன் கடலைக் கடந்து சென்றார். ராம நாமத்தைக் கூறி விஸ்வரூபமெடுத்து கடலை கடந்தார். இது எப்படி சாத்தியம் என்றபோது, ராம நாமத்தின் மகிமையையும் பெருமையையும் விளக்கி கூறுகிறார்.
அதுபோல, இப்போதும் கூட தேர்தல் என்ற கடலைக் கடக்க, கட்சிகளுக்கு மக்கள் திலகத்தின் நாமம்தான் பயன்படுகிறது. மக்கள் திலகத்தின், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து நாம மகிமைதான் வெற்றிகளை குவிக்கிறது. மக்கள் திலகத்தின் அழகிலும் அவரது நாமத்திலும் மயங்கி, மெய்மறந்து நாம் நிற்கிறோம்.
உங்கள் வித்தியாசமான உயர்ந்த கருத்துக்கள் அருமை. மிக்க நன்றி சார். தொடருங்கள்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கி ஜே!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்